இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே! வேற நீ என்னடா பண்ணுவே! அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழைபெய்யுமாடா? நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம். அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா. இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?
View More “காமாச்சியைக் கரையேத்தணும்!”Tag: சம்பிரதாயம்
ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை
வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை”, “கால பின் வரையறை” என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்… பௌத்த நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.. தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.
View More ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வைமூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்
மதமாற்ற மதங்களின் தொடர்ச்சியான பணபலமும், அதிகார பலமும் மிக்க தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் மூவகை இந்துத்துவர்களும்தான். ஆனால் இந்த சக்திகளை எதிர்கொள்ளும் நுட்பமான அறிவுத் தெளிவும், செயல் திட்பமும் அரசியல் இந்துத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது… சடங்கு இந்துக்களும் அரசியல் இந்துக்களும் அறிவின் தளங்களில் திரள்வதும், ஆன்மீக இந்துத்துவம் விரிந்து பரவி வலுவடைவதும் இதன் மூலமே சாத்தியமாகும்.
View More மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4
பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4ஹரித்துவார்: கடவுளின் காலடியில்…
கங்கையில் இறங்க எல்லோரும் காத்திருக்கிறார்கள். எப்போதும் பலர் குளித்துக்கொண்டிருக்கும் அந்தப் புனித நதி அந்தப் பொழுதில் யாருமில்லாமலிருக்கிறது. கங்கை மிகப் பெரும் ஓசையுடன் வேகமாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அறுந்து தொங்கும் பாதுகாப்புச் சங்கிலிகள் தன் அசைவில், நதியின் வேகத்தைச் சொல்லுகின்றன. நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் பைனாகுலர்களுடனும், நதியில் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும் லைஃப் ஜாக்கெட்களுடனும் காவலர்கள். ஓயாது தினசரி பலரைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் அந்த நதிக்கு இது ஒரு நல்ல ஓய்வாகயிருக்குமோ என்று தோன்றுகிறது…
View More ஹரித்துவார்: கடவுளின் காலடியில்…