“ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன: ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: தாதாபாயீ கோபபந்து: திலகோ…
View More எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…Tag: சித்பவானந்தர்
சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது…
View More சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு
அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.
[பாகம் 22] அமுதாக மாறிய மது
ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொருத்து உருவாகின்றது… தான் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதை மனிதன் தெரிந்து கொள்ளுவதில்லை. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம்… காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான்… கிரீச சந்திரகோஷரிடம், “நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு” என்றார் ராமகிருஷ்ணர்…
View More [பாகம் 22] அமுதாக மாறிய மது[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்
பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள்… உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று… வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் கிடைத்த ஞானத்தைவிட குருவிடம் உபதேசம் பெறுவதே சிறந்ததாக நினைத்தான்… அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்…
View More [பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்
அவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் கரையேற்றுவர். சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயல் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்… நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது… அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்?
View More [பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்ஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)
ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கம் 30-செப் ஞாயிறு அன்று ஒரு நாள் அந்தர்யோக…
View More ஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி
தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!… ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது… தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்… ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை… திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்…
View More [பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்
‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’ என்ற வாசகம் பட்டினத்தாரை மாபெரும் துறவியாக்கியது. ‘சும்மாயிரு!’ என்ற மந்திரத்தால் ஞானியானவர்கள் தாயுமானவரும் அருணகிரியும். ‘செத்துத்தொலை!’ என்ற வார்த்தை வேங்கடராமனை ரமணமகரிஷி ஆக்கியது. இந்தக் கொங்கு நாட்டு இளைஞனை, சாலையோரக் கடையில் கண்டெடுத்த விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள் என்ற புத்தகம் தென்னாட்டு விவேகானந்தராக்கியது… “நீங்கள் கூறுவது உண்மையானால் ஒருவேளை ஒரு குழந்தையானது கருப்பையிலேயே அழிந்தாலோ, அழிக்கப்பட்டாலோ அது ஜீவன் முக்தி அடைந்து விடுமோ?”
View More [பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்
“இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!”… நீங்கள் உயிர்வாழ அவசியம் என மருத்துவரின் கட்டாயம் இருக்குமேயானால் அசைவ உணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்… ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது… தர்மச் சக்கரம் பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும்.
View More [பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்