சலுகைகளுக்காக அரசாங்கச் சான்றிதழ்களில் இந்துவாக வேடம் அணிந்துகொண்டு மறைவாக கிறிஸ்தவ-முஸ்லீமாக இருப்பவர்கள் மிக அதிகம். எதற்காக இந்த இரட்டை வேடம். இன்றைய இந்து அரசு தரும் சலுகைகள் வேண்டும். அதே நேரம் இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகள் பக்கமும் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு அடிப்படையில் மிகவும் இழிவானது. அபாயகரமானது… சீர்திருத்தக் கருத்துகள் எல்லாம் நவீன காலத்துக்குத் தேவை என்றும் சரி என்றும் கருதுபவர்கள் நவீன கோவில்களைக் கட்டி அவற்றில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால மரபில் மாற்றம் செய்ய விரும்புவதென்பது தேசியக் கொடியின் நிறத்தை மாற்ற முன்வருவதற்குச் சமம்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 20Tag: சிறுதெய்வ வழிபாடு
சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை
‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…
View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினைமுருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்
சொற்பொழிவாளர் சுகி சிவம் அண்மையில் தெரிவித்த சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களுக்கு அ.நீயின் எதிர்வினை; தொடரும் விவாதம்.. ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது… தவத்திரு காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் வைதிகம் வேறு. சுகி.சிவம் பேசும் பிராம்மணியம் வேறு. பின்னது காலனிய கருத்தாக்கம். அதன் படி பிராம்மணிய கடவுள் குறமகளை மணம் செய்ய முடியாது. ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வைதீக தெய்வம் குறமகளை மணமுடிக்க முடியும்…
View More முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்சுமைதாங்கி [சிறுகதை]
என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்… நீங்க ‘சுடலை மோட்சம்’ சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?… ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்…
View More சுமைதாங்கி [சிறுகதை]ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்… இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்… மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்?
View More ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்குதலபுராணம் என்னும் கருவூலம் – 6
வெளித்தோற்றத்தில் இந்த இரட்டைகளிடையே வேறுபாடு உள்ளதுபோலக் காணப்பட்டாலும், அவை ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. பாமரம், வைதிகத்தை நோக்கி முன்னேற, வைதிகம் பாமரத்தைத் தழுவி அணைத்துக் கொள்வதை, இந்துப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகிய இசை, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திலும் காணலாம்…. சிறுதெய்வங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்றம் தந்து விடுகின்றன. நாளடைவில் சிறுதெய்வங்களும் வைதிகக் கடவுளராகி வேதநெறியில் வழிபடத் தக்கோராக மாற்றம் அடைந்துவிடுகின்றனர்.
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 6