மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம். [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4Tag: சிலப்பதிகாரம்
கோவை புத்தகக் கண்காட்சி 2010
இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது… கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம்…
View More கோவை புத்தகக் கண்காட்சி 2010இம்மைச் செய்தது
பொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்’….
… கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து.
View More இம்மைச் செய்ததுசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4
அந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்….
….பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், “பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு ‘சார் ஒண்ணுக்கு!’ என்று அனுமதி கேட்பதாக இருக்கும்,” என்று எழுதியிருந்தார்.
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2
பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்… மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?… சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1
தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை…சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை…
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1அற்றவர்க்கு அற்ற சிவன்
‘புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன்’ என்று கலைஞர் ஒருகாலத்தில் எழுதிய திரைப்பட வசனம் இந்த இயற்கை நியதி உலக நியதியாகும் போக்கினை எடுத்துக் காட்டுகின்றது….
…கம்யூனிசம், கேபிடலிசம் முதலிய இசங்களின் வளர்ச்சியை இந்த இயற்கை நியதியின் அடிப்படையில் காண முடியும். இயற்கையான தன்னலம் பேணுதலுக்கு இந்த ‘இசங்கள்’ தத்துவார்த்தங்கள் கற்பிக்கின்றன.
View More அற்றவர்க்கு அற்ற சிவன்யார் நப்பின்னை ?
தமிழ் பக்தி உலகிலும் , இலக்கிய உலகிலும் , தனியிடத்தைப் பெற்ற மர்மப் பெண் நப்பின்னை … கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.. மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.
View More யார் நப்பின்னை ?இசைக்கூறுகள் – 4 : மேளகர்த்தா ராகங்கள்
எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன. அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த ராகங்களாகும் …
View More இசைக்கூறுகள் – 4 : மேளகர்த்தா ராகங்கள்வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3
சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.
View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3