ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..
View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்Tag: சொல்லாராய்ச்சி
பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்
ஆக, பல்லக்கு தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாகி விட்டது. அச்சொல் பர்யங்க – பல்லங்க என்ற சம்ஸ்கிருத மூலம் கொண்டது. அதற்கான பழைய சொல் சிவிகை. சம்பந்தர் அழகிய சிவிகையில் அமர்ந்து காட்சி தருவதையும், ஏறி இறங்குவதையும் ஏகப்பட்ட இடங்களில் சேக்கிழார் பரவசத்துடன் வர்ணித்துச் செல்கிறார். அறத்தின் பயன் இது என்று நீட்டி முழக்கிச் சொல்லவேண்டாம்; சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் தூக்குபவனையும் பார்த்தாலே போதுமே என்கிறது குறள்…
View More பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு
காட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம்.. முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது…
View More காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு