ஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல… திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்… ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து அதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது?’ என அறைகூவலிடும் சித்தாந்தவாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்…. ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்….
View More ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…Tag: ஜெயமோகன்
பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1
கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….
View More பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்
இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே……”இந்து அடையாளம்” என்கிற அடிப்படையான விஷயம் குறித்து தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பதாக உள்ளது. இந்துமதத்தின் ஒருமை – பன்முகத் தன்மை, முரண்கள் – இசைவுகள் ஆகியவற்றை அதன் முழுமையான வீச்சுடனும், நடைமுறையில் காணும் உதாரணங்களூடனும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும்…..
View More இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்திருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்
அறம் அறக்கட்டளை, திருப்பூர் நடத்தும் நிகழ்ச்சிகள்: காலை – எழுத்தறித்தவில் (வித்யாரம்பம்) விழா. மாலை – சொற்பொழிவுகள். ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பேரா. கனகசபாபதி, ஏ.பார்த்திபன் மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் .. அழைப்பிதழ் கீழே. அனைவரும் வருக!
View More திருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்கரங்கள் [சிறுகதை]
“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே”… அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது… நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்…
View More கரங்கள் [சிறுகதை]அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2
அவரது உரைநடை எவ்வகையிலும் அடங்காதது. கவிதை, சங்கீதம், ஓவியம், சிற்பம் எல்லாமாகவும் தோற்றமளிக்க்க் கூடிய மாயத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது… நவீன இலக்கிய பிரதிகளுக்கு இருந்தாக வேண்டிய வரலாற்று பிரக்ஞை, சமூக பிரக்ஞை, கலாசார பிரக்ஞை ஆகியவை லாசரா எழுத்தில் மிகக் குறைவாக இருக்கிறது, சமயங்களில் இல்லாமலே போய்விடுகிறது…கண்கள் பிரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாமிருதம் நம்மைக் கேட்கக் கூடும் – ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா?…ஒரு கலைஞர் என்ற வகையில், லா சராவின் இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்…
View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்
போய்விட்டனர் முன்னாள்களில் உஷையின் உதயம் கண்ட மானிடர்.. நாம், இன்று வாழும் நாம், அவளது நல்லொளி காண்கிறோம்… வரும் நாள்களில் அவளைக் காண நமது பின்னோர் வருகிறார்கள்.. மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக, புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக, ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி! அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட… வசன கவிதைகளில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார்… வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எடுத்துச் செல்கிறார்..
View More உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்படிவங்கள் எப்படியோ?
வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்… இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்… ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்… “பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்…”
View More படிவங்கள் எப்படியோ?கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா
விஷ்ணுபுரம் இலககிய வட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது (2011) மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி கோவையில் நடக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது ஜெயமோகன் எழுதிய “பூக்கும் கருவேலம்” (பூமணி படைப்புகள் குறித்த விமர்சன நூல்) நூல் வெளியீடும் நடைபெறும்…
View More கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாஹிந்து என்னும் சொல்
பொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல….ஹரிஹரர், புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது…சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு…
View More ஹிந்து என்னும் சொல்