குருதேவர் சொன்னார் ‘ஆத்ம சாதனத்துக்கு தாயுமானவர் பாடல்கள் பெரிது. பொருள் விளக்கத்துக்கு திருவாசகம். ஒரு முனிவரே வந்து பிரம்மதத்துவத்தை தமிழில் சொன்னது திருவாசகம். ’ ஸ்ரீ நாராயண குருதேவர் இதை சொன்னது சுவாமி சித்பவானந்தர் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1928-29 இல் இந்த மகான்களின் சந்திப்பு நிகழ்ந்தது. 1960 இல் சுவாமி சித்பவானந்தரின் ‘திருவாசகம்’ விளக்க உரை நூல் வெளியானது… மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் காலம் மொழி எல்லைகளை கடந்து அந்த ஆன்மநேய ஒற்றுமையை நம் தேசத்திலே வெளிக்காட்டியது…
View More மாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடுTag: தேச ஒற்றுமை
இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்
இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றுமை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்…. ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும்… இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?…
View More இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்எழுமின் விழிமின் – 17
முதன்முதலில் நமது இளைஞர்கள் பலம் உடையவர்கள் ஆக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலம் உள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.
View More எழுமின் விழிமின் – 17காமராஜர் என்கிற தேசியவாதி
கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்…. அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை… தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசியல்வாதி காமராஜர் கருதியிருக்கக் கூடும்.
View More காமராஜர் என்கிற தேசியவாதி