ஆரிய நாகரீகத்தின் தத்துவங்கள் என்ன? பல்வேறு வேத சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள சனாதன தர்மத்தின்…
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 3Tag: பகவத் கீதை
சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?
இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..
View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.
View More ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்
பாரதியாரின் பகவத்கீதை மொழியாக்கத்தை எனது குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன். கீதா ஜெயந்தியும் வைகுண்ட ஏகாதசியும் ஆகிய இப்புனித நாளில் இந்த ஒலிப்பதிவை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். 18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன. அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்…. கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதும், கேட்பதும், மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பதும், கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும் எப்பொழுதுமே கைக் கொண்டு வந்துள்ள ஒரு முறையாகும். கீதையின் மூல சுலோகங்களை நேரடியாக சம்ஸ்கிருதம் மூலம் பயின்றவர்கள் அவ்வாறே வாசித்தும், கேட்டும் தியானிப்பார்கள். அவ்வாறு பயிலாதவர்களும் தாங்கள் பயின்ற மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் இதனை மேற்கொள்ளலாம். காத்திருக்கும்போதோ, பயணம் செய்யும் போதோ கூட கவனத்தைச் செலுத்தி இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதன் மூலம் கீதையின் உட்பொருளைச் சிந்திக்கலாம்….
View More பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2
இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்… ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்… தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்… நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்
“இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!”… நீங்கள் உயிர்வாழ அவசியம் என மருத்துவரின் கட்டாயம் இருக்குமேயானால் அசைவ உணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்… ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது… தர்மச் சக்கரம் பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும்.
View More [பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)
இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…
View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?
View More புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலைஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள்… நிலவைச் சுட்டும் விரல்களே வேதங்கள். சுட்டுபவரின் வர்ணனை விரல் பற்றியதே. அவர் நோக்கம் நிலவு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது. அவர் நடத்தை அவரது அனுபவத்தை மற்றவரும் அடைந்தால் ஆனந்தம் கொள்வது… இங்ஙனம் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லுவது, இருப்பவற்றைத் தவறாகத் திரிப்பது, தேர்ந்தெடுத்த வரிகளை மட்டும் எடுத்தாள்வது போன்றவை மதத்தன்மைக்கு எதிரானவை. ஆனால், மதத் தலைமைப் பீடாதிபதிகளுக்குப் பிரியமானவை…
View More இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?ரமணரின் கீதாசாரம் – 13
எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]
View More ரமணரின் கீதாசாரம் – 13