எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்… பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்… அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ, ‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்…
View More இராமநுச கதிTag: பக்தர்கள்
நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்
காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்… இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும். நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதையும் இந்த சித்திரம் நமக்கு நினைவுறுத்தும்…
View More நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்
அரசுத் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்துக் கோவில்களில் சாமி கும்பிடக் கட்டணம் வசூலிப்பது இந்துக் கோவில்களை அழிக்கும் செயலாகும். இதனை எதிர்த்து ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை இந்து முன்னணி தொடங்கியுள்ளது. இதற்கான கையெழுத்துப் படிவம் ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள ஒன்றியங்களிலும் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் கிடைக்கும். ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் பேரவை மற்றும் தெய்வபக்தி கொண்ட அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது…
View More கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்
கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார்… நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாசத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாசம்… இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடு சேர்ந்து வாசலைக் காப்பார்….
View More பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2
“திடீர்னு ஒரு வயசான பெரியவரு பண்டாரம் மாதிரி வந்து எதிர நிப்பாரு………டேய் அப்பா………சாப்பிட்டு நாலு நாளாவுது ஏதாச்சும் சாப்பிட வெச்சிருக்கியான்னு கேப்பாரு………இந்த ஆள இதுக்கு முன்னாடி இந்த மலைல பாத்ததில்லயே………என்ன ஏதுன்னு விசாரிச்சா சரியா பதில் சொல்ல மாட்டாரு………சரின்னு சாப்பிட ஏதாச்சும் கொடுத்தா.……கைல வச்சு சாப்டுக்கிட்டே அப்டியே நாலு அடி நடந்து பொகையா மறஞ்சுடுவாரு………இங்க இருக்கற நாய் மட்டும் கத்தி ஊளையிடும்………அந்த மாதிரி விதவிதமா சித்தருங்க நடமாடிட்டே இருப்பாங்க………” அவர் சொல்லச்சொல்ல சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டே இருந்தேன்..[..]
View More சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1
இந்த மலைக்கு செல்ல மதுரைக்கு அருகேயிருக்கும் வத்திராயிருப்பில் இருந்து ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள மலையின் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையிலிருந்து போவதுதான் கடினம் குறைந்த பாதை [..] சதுரகிரியில் இருந்து அருள்பாலிக்கும் சுந்தரலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் ஆகிய லிங்கத்திருமேனியனை தரிசிக்க அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் குறைந்தது 10000 முதல் 70000 பக்தர்கள் வரை இந்த மலைக்கு வருகிறார்கள் [..]
View More சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்
பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்… ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா?
View More சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்… இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்… மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்?
View More ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்குதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை
தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார்… மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ… வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர். பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன…
View More தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வைபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4
பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4