எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிஞர் அழ.வள்ளியப்பா தான். அவர் பாடல்கள் தொகுப்புகளை படித்தால் ஒன்று தெரியும். அவருக்கு கண்ணனிடம் அலாதி அன்பு. கண்ணனை பரம்பொருளாக, தோழனாக, கீதை அளித்த நல்லாசிரியனாக குழந்தை பருவத்தில் நமக்குள் கோவில் கொள்ள செய்தவர்களில் அழ.வள்ளியப்பா முக்கியமானவர். முதன்மையானவர்… அவரது சில அற்புதமான கண்ணன் பாட்டுக்கள் அவை புத்தகத்தில் வெளிவந்த அதே வடிவில் கீழே..
View More அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்Tag: பால லீலை
சிவபிரான் சிதைத்த சிற்றில்
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…
View More சிவபிரான் சிதைத்த சிற்றில்குழவி மருங்கினும் கிழவதாகும் – 4
குழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள்… தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘நன்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும்…. அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருநிலைநாயகி! கொட்டுக சப்பாணி….கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா? ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே?….
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 4