சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது… கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூஜாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். சில பிராமண பூஜாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். வேறு சிலரோ காலகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை மாற்றக்கூடாதென்று சொல்கிறார்கள்… இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் சுவாமி அம்பேத்கர். பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கலாம் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் என்று முடிவு செய்கிறார்கள்….

View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். “அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது… இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க”…பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, “எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்”. பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது… “உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே. உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க?” தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார். “தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா… அது மாதிரி நம்ம தாய் மதமும் தயாராவே இருக்கு”.. மடத்துக்கு சொந்தமான நிலங்களை அறங்காவலர்கள் தம்முடைய பினாமிகளுக்குக் கொடுத்து அந்த நிலத்தின் வருவாயை அவர்களே அனுபவிப்பது தெரியவருகிறது…

View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

மக்களின் நம்பிக்கை, வழிபாடு, சமயம் சார்ந்த செயல்பாடுகள் இவற்றில் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு மடத்துக்கு எந்த குற்றச்சாட்டோ அல்லது குறைபாடுகளோ இல்லாத நபர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்… சிவ தீட்சை பெற்ற சிலர் அவர்கள் ஆதீன கோயில்களில் கட்டளைத் தம்பிரான்களாகப் பல காலம் பணியாற்றித் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு அவர்களில் தகுதி அடிப்படையில் அந்த ஆதீனத் தலைமை பண்டாரமாக நியமிக்கப் பெறுகின்றனர், முதிய வயதில் கூட அந்தத் தலைமை கிடைக்காமல் போனவர்களும் உண்டு… பல சடங்குகள் இருக்க திடீர் சாம்பார் போல திடீர் மடாதிபதியாக ஆவது எப்படி என்பது புரியாத புதிராக இருக்கிறது…

View More மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

மலருங்கள் மடாதிபதிகளே…

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது […] தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. […] பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.

[…] அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை?

View More மலருங்கள் மடாதிபதிகளே…