மலருங்கள் மடாதிபதிகளே…

மஹாகவி பாரதியார்

christian_pontiffஇந்தியா முழுவதிலுமுள்ள ஹிந்துக்களின் அனுகூலத்திற்குப் பாடுபட்டு வரும் ‘அகண்ட பாரத ஹிந்து சபை’யின் காரியதரிசியான ஸ்ரீ ரத்னசாமு என்பவர் தேராதூன் பட்டணத்தில் இருந்து ‘ஹிந்து’ பத்திரிக்கைக்கு எழுதியிருக்கும் லிகிதமொன்றில் பின்வருமாறு சொல்லுகிறார்:

‘இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.’

ஆம்; ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவு பட்டு வருகிறது.

கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போதே பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போதே தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.

பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்து சபையின் காரியதரிசி ஸ்ரீ ரத்னசாமு என்பவருக்கு ஸ்ரீ காசி ஹிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ஸ்ரீமான் பகவான் தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யோஜனை சொல்லுகிறார்:

“பறையர்களுடைய தீண்டாமையை உடனே நீக்கிவிட வேண்டும். காசி, நவத்வீபம், பிருந்தாவனம் என்ற ஸ்தலங்களில் உள்ள பண்டிதர்களும் இவ்விஷயமாக உடனே உத்தரவு கொடுக்க வேண்டும்”.

separated_diningபஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது மேற்படி ரத்ன சாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. ஹிந்துக்களுக்கு இதர வகுப்பினர் பந்தி போஜனம், சம்பந்தங்கள் இல்லாதிருக்கும் வரை பஞ்சமரும் அப்படியே இருக்கலாமென்று ஸ்ரீ ரத்னசாமு சொல்லுகிறார்.

ஆனால், பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிமார்கள் பள்ளிக் கூடங்கள் முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும் கடமை யாரைச் சேர்ந்தது?

அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை?

ஹிந்து தர்மத்தின் மஹிமையை நன்றாக அறிந்தோர் இஹலோக வாழ்க்கையில் எத்தனை கொடூரமான கஷ்ட நிஷ்டூரங்கள் நேரிட்டாலும் இந்து தர்மத்தைக் கைவிட மாட்டார்கள்.

உலகத்தில் நிகரற்றதாகிய வறுமையானது நமது தேசத்தை வந்து பிடித்துக் கொண்ட கால முதலாக நமது நாட்டார் பசியாலும், அதனாலேற்படும் நோய்களாலும் லக்‌ஷக்கணக்காக அகால மரணத்துக்கு இரையாகி வருகிறார்கள். பசித் துன்பம் எல்லாருக்கும் பொதுவாக இருந்தாலும் கீழ் வகுப்பினருள் அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம் நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பினர் அதிகமாகச் சாகிறார்கள்.

caste___rig_veda___krsna_dvaipayana_vyasadevaபறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.

 “அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய்
     ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
  கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராகில்
     அவர்கண்டீர் யாம்வணங்குங் கடவுளாரே”

என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோர் அதன் பொருளை தெரிந்து கொள்ளவில்லை.

“ஒக்கத் தொழுகிற்றி ராயின் கலியுகம் ஒன்றுமில்லை” என்ற திருவாய்மொழிக் கருத்தை அநேகர் அறியாதிருக்கிறார்கள். ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதனால் நாம் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம்.

ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரியதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும்; இருந்தாலும், நமக்கு ஸர்வ நாசம் ஏற்படாது.

ஆனால், ஹிந்து தர்மத்தைக் கவனிக்காமல் அசிரத்தையாக இருப்போமானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும்; அதில் சந்தேகமில்லை.

caste_sankaracharya_ஹிந்து மதம் ஒன்று. சைவம் வைஷ்ணவம் முதலிய ஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள். இதை தேசத்து ஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், குருக்கள், மடாதிகாரிகள் முதலிய சிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

 “திரமென்று தந்தம் மதத்தையே தம் மதச்
    செய்கை கொடுமுறை அறிவாரார்?
  ஆறு சமயங்கள் தொறும் வேறு வேறாகி
    விளையாடும் உனை யாவரறிவார்?”

என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்து மஹாஜனங்களுக்கன்று. மஹாஜனங்கள் இவ்வுண்மையை நன்றாகத் தெரிந்து நடக்கிறார்கள்.

20 Replies to “மலருங்கள் மடாதிபதிகளே…”

  1. நல்ல நேரத்தில் மகாகவியின் கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறீர்கள். நம் நாட்டில் மத மாற்றம் ஏற்பட காரணிகளில் ஒன்று தீண்டாமை. செய்யும் தொழிலின் அடிப்படையில் சாதிப் பிரிவுகள் உண்டாயின. மகாகவியின் பாப்பா பாடலில் இப்போது காணப்படும் வரிகள் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்பது. அவரது பாடலில் இருந்தது “ஜாதிப் பிரிவுகள் இல்லையடி பாப்பா, அதில் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்” என்பதுதான். தமிழக அரசு சுதந்திரத்துக்குப் பிறகு மாற்றி எழுதியது. ஜாதிப் பிரிவினைகள் இருந்தது என்பது உண்மை, அதில் உயர்வு தாழ்வு கிடையாது என்பதுதான் அவன் கருத்து. ஜாதிகளே இல்லை என்றால் அதில் உயர்வு தாழ்வு எப்படி வரும்? “ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்” எனத் தொடங்கும் முரசு பாடலில் பாரதி சொல்லும் கருத்துக்களும், அவன் கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களும், ஜாதிகள் செய்யும் தொழிலால் வந்ததே தவிர பிறப்பினால் அல்ல என்பதில் அவன் அழுத்தமாக நின்றான். சரி, நம் முன்னோர்கள், சில ஜாதியாரை ஊரை விட்டு ஒதுக்கி சேரிகளில் வாழ வைத்தார்கள். அவர்களைத் தீண்டாதாராக வைத்திருந்தார்கள். இந்த நிலைமைதான் வெள்ளைக்காரன், அவர்களை அணுகி மதமாற்றம் செய்ய காரணிகளாக இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். இராமநாதபுரம் சமஸ்தானத்தில் கிழவன் சேதுபதி எனும் மன்னன் இருந்த காலத்தில் ஜான் பிரிட்டோ எனும் பாதிரியார் கடற்கரைப் பிரதேசத்தில் தங்களுக்கு ஒரு கோயில் (சர்ச்) கட்டிக் கொள்ள அனுமதி கேட்டார். மன்னன் சம்மதித்தார். பின்னர் அவர் அந்தப் பிரதேச மீனவர்களை மதமாற்றம் செய்தார். மன்னன் பொறுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அரண்மனைக்குள்ளேயே வந்து அவர் மைத்துனன் ஒருவனையும் மதமாற்றம் செய்தார். மன்னன் பாதிரியைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டான். அங்கு அவர் இறந்தார். இதெல்லாம் நடக்காமல் இருந்திருக்க வேண்டுமானால், நம்மவர்கள் ஜாதி பேதம் பார்த்துப் பிரிவினைகள் சொல்லி, உயர்வு தாழ்வு பார்த்திருக்கக் கூடாது. அன்று நம் முன்னோர் செய்த வினைகள் இன்று மதமாற்றம் எனும் கொடிய வியாதி நம் சமுதாயத்தில் வந்து விட்டது. இந்து மதத் தலைவர்களும், மடாதிபதிகளும் சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் புகுந்து புறப்பட்டு, அனைவருக்கும் போதுவானவர்களாக மாற வேண்டும். கேரளத்தில் ஈழவர்களுக்காகப் பாடுபட்ட நாராயண குரு, ஈழவர்கள் வழிபட பல சிவன் கோவில்களைக் கட்டிக் கொடுத்தார். ஒரு முறை இவர் ரயிலில் பயணம் போனபோது, ஒரு நம்பூதிரியும் அவருடன் பயணம் செய்தார். நாராயண குருவைப் பார்த்துத் தன சுண்டு விரலை நீட்டி, ஈழவர்களுக்குக் கோவில் கட்டிக் கொடுக்கும் துறவி நீர்தானோ என்றார். அதற்கு நாராயண குரு, ஆம் அது நான் தான் என்றார். பிராமணர் செய்ய வேண்டிய அந்தப் பணியைச் செய்ய உமக்கு யார் உரிமை கொடுத்தார்கள் என்றார் நம்பூத்திரி . அதற்கு நாராயண குரு சொன்னார், அடியேன் ஈழவர்களின் சிவனுக்குத்தான் கோயில் கட்டினேன், உங்கள் சிவன் பக்கம் வரவே இல்லையே, உங்களுக்கு ஏன் வருத்தம் என்றாராம். மனிதர்களுக்கிடையே பிரிவினைகள் ஒழிந்தாலே மதமாற்றம் ஒழிந்து போகும். அதற்கு நமது மதத் தலைவர்களும், மடாதிபதிகளும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  2. நமது மடாதிபதிகள் எப்போது இதை எல்லாம் செய்து இருக்கிறார்கள்? காஞ்சி மா முனிவரும், கிருபானந்த வாரியாரும்,கம்பன் அடிப்பொடி சா கணேசனும் செய்த மகத்தான சாதனைகளை எந்த மடாதிபதி செய்கிறார்? ராம கிருஷ்ணா மடத் துறவிகள் எந்த பட்டமும் இன்றி செய்வதும், ஆயக்குடி அமர் சேவை சங்க ராமகிரிஷ்ணனும் செய்வதெல்லாம் இவர்களால் செய்ய முடியாது.

    சொல்லப்போனால் ௨ மணி நேரம் உட்கார்ந்து பூஜை கூட இப்போதேல்லாம் செய்ய முடிவதில்லை.

    செய்பவர்களையும் குழப்பி விடுவதுதான் இவர்கள் வேலை

  3. The picture of the woman with the mouth band saying ‘Say no to caste based reservations’ and the contents of the article are not connect.

    The woman is agitating not against castes, but against caste based reservations.

    According to the anti-reservationists, castes should not be the criteria for giving reservations in jobs. So they are against OBC/SC./ST reservations.

    At the same time, the anti-reservationists are not against castes in Hindu religion. They are selfish to the extent that

    they want castes in religion because being a forward caste has a premium in it ! and

    do not want castes in reservations because being a forward caste is a disadvantage !!

    Please remember the agitation was spearheaded, and continued, albeit unsuccessfully, by the forward caste members of society only, who are the students and their parents.

    Hindu religion comprises mostly the OBCs/SCs/STs, and only a small fraction in it is the FC hindus like Brahmins and others.

    Therefore, please remove the picture and replace with yet another one fitting to the contents of the article, cant you ?

    If you don’t do, I will accuse you of going against the contents of the article – of hypocrisy !

  4. This is exactly what Pujyasri Kanchi Periyava Jayendra Saraswathi Swamigal has been doing for several decades. He has been personally visiting several villages where no politician has ever visited and imbibed a sense of belonging and citizenship of Bharat among all. Few other religious leaders come very close to His service to the humanity.

    While the western evangelists spend more money in publicizing their so-called “social services” , consistent with our age-old traditional Sanatana Dharmic injunctions, Pujyasri Kanchi Swamigal’s services are barely known even among His close followers.

    The foisting of a false criminal case on Him was a direct consequence of the same fanatical evangelical forces who could not tolerate His true social services to the entire humanity.

    Great souls from the days of Sri Adi Shankara in 509 BC till today’s Pujyasri Kanchi Periyava Jayendra Saraswathi Swamigal continue to work at such programs all over Bharat.

    Bharat Mata ki Jai!

  5. ஆனால், பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிமார்கள் பள்ளிக் கூடங்கள் முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும் கடமை யாரைச் சேர்ந்தது?

    I like this statement.

    The essay is not simply about caste divisions and untouchability. Much more than that.

    The seers, the jeers and the atheenams never venture into dalit habitations, the so called Cheris.

    Reason is that, according to them, the contact with such habitation brings religious pollution.

    Your reply, or Subramania Bharati’s reply should be ‘No…according to Hindu religion, such contact wont bring religious pollution’.

    But, as I understand, the untouchability lobby can cite slokas and theology to prove their point that there is Pollution.

    The brahmins believed for millennia that contact, not only with panchamars, but all others down below in caste hierarch, should be avoided, as otherwise, brahminical achaarams could be observed. Therefore, the Brahmins treated all others lower to them in every respect. Thus, they incurred the annoyance of other castes, which brought forth many religious reformers.

    We cant say the Brahmins were wrong to believe so. Nothing was their creation, they argue. Everything is in sastras, they affirm.

    If they believe so, and if you believe otherwise, I would only say, there is different schools of thoughts within the religion.

    Be that as it may. Lets come to the quote

    The seers, the jeeyars, the aatheenams dont want to venture into such habitations, for another reason also namely, incurring the wrath of the orthodox lobby in the religion.

    So, you cant argue that all that they did, and do still, was and is of their own volition. Please remember they are there, not to destroy the ancient heritage of the sastras, but to preserve them.

    They are therefore correct in their way.

    Your concern is proselytisation by Christians as alleged in the article by the poet, isnt ?

    Then, this is what I would say.

    Today, no dalit is asking for equality. It is already there, both on paper and in practical life. A few aberrations of dalits being denied entries – are acts stage managed by political interests, or, making mountains out of molehills.

    Untouchability is passe. Out of fashion. Dalits are earnig well and enoying a lot of political priviilges and protection. So, they dont bother about polltion theology of the religion.

    What they do bother is about amenities, like every one of us. If someone gives that, they are for them, like a baby jumping to the arms of anyone extending a candy to it.

    As Bharatiar said, build hospitals and schools in their habitations. When Christians can do, why not you?

    The poet.

    A N S W E R !

  6. There is many a grammatical errors in my post. I typed past, hence walked without looking down.

    Bear with all. and read the post correcting the errors yourself please.

  7. என்னுடைய தந்தை, பாட்டி மதுரை ஆதினத்தின் சீடர்கள். முந்தைய குருமகா சந்நிதானத்திடம் இருந்து முறையாக கர்ண திட்சை பெற்றவர்கள். பாட்டி நன்றாக இயங்கிய வரையிலும் முறையாக சிவபூஜை செய்து விட்டு தான் காலை உணவு உண்பார்.

    தந்தை இப்போதும் தீட்சா மந்திரத்தின் மூலம் பலவித உடல் உபாதைகளை நீக்குகிறார்.

    தற்போதுள்ள குருமகா சந்நிதானம் தீட்சை தருவதில்லை. அதாவது மதமாற்றம் செய்வதில்லை. ஆதினத்தின் வாசல் எப்போதும் பூட்டியே இருக்கும். அதே போல பூஜை செய்வைதப் பார்க்கக் கொடுரமாக இருக்கும். கொஞ்சம் கூட உணர்வு பூர்வமாக இருக்காது. மேலும், அரசியல் மற்றும் ஒரே விதமாக மேடையில் பேசுவது என்று செய்து கொண்டிருக்கிறார்.

    என்ன, நாயன்மார்களில் திருஞான சம்பந்தர் மிகவும் சிறப்பரக அலங்காரம் செய்து கொண்டிருப்பார். அதன் தொடர்ச்சியோ என்னவோ…. அந்த பகுதி முழுவதும் நகைக்கடைகளாக மாறி இருக்கிறது.

  8. Mr. Kariamaanickam,

    I do not agree with you. The picture for this post is very correct and very much in alliance with the content of the article.

    Some people are against the “caste based reservation” only in the government posts, schools, and colleges. But, what about the “caste based reservation” in temples, veda padashala, agama training, and other places?

    Is it ever possible for a person born in Kavundar caste to become the Sankarachariyar?

    Is it ever possible for a person born in Iyer caste to become the Madurai Adhinam?

    Is it ever possible for a dalit to become headmaster in the schools run by other caste Hindus?

    Is it ever possible for people other than brahmins to dine in Mantralaya with brahmins?

    No. All of them are “caste based reservation”, to which the great poet Bharati is against. Bharati demands that these madathipathis should remove all these caste based reservation in the institutions that they are running.

    The picture exposes the hypocracy in our opposition to the caste based reservation.

  9. பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது

    Bharati is asking the Madathipathis to support inter-caste marriage with dalits.

    Will they do it?

    Or, have they ever done it?

  10. அன்புள்ள கரிய மாணிக்கம்,

    கோயிலில் பூஜை செய்யும் உரிமை எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அதற்கான பயிற்சி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இன்னமும் நியமன ஆணை கொடுக்கப்படாமல் உள்ளது. யார் காரணம்? உண்மையான சீர்திருத்த வாதியான ஆட்சியாளர் இருந்தால் , இது நடக்கும். பாட்னாவில் உள்ள ஒரு கோயிலில் தலித் வகுப்பை சேர்ந்த ஒருவரை பூஜகராக நியமித்து , பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆணையிட்டுள்ளார். தமிழ் நாட்டில் பயிற்சி கொடுத்தும் இன்னமும் வேலை நியமனம் செய்யவில்லை.

    தமிழ் நாட்டில் அதே போல, கோயில்களில் எல்லா சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க எந்த தடையும் இல்லை. முக்கியமாக பிராமண ஜாதி என்று சொல்லப்படும் ஐயர் மற்றும் ஐயங்கார்களில் வேதம் படித்தோரும் , ஆகம சாஸ்திரம் படித்தோரும் மிகவும் குறைந்து போய்விட்ட படியால், கோயில்களில் நியமப்படி பூஜை செய்ய பல ஊர்களில் ஆள் கிடையாது.

    ரிசர்வேஷன் என்பது எல்லா இடங்களிலும் ஒழிக்கப்படவேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன்.கோயில்களிலும், அரசு மற்றும் பொதுத்துறை மற்றும் அரசு மூலம் கொடுக்கப்படும் எல்லா வேலை வாய்ப்பிலும் இதனை ஒழித்து, கலப்பு திருமணம் செய்தோருக்கு எல்லா இடத்திலும் முன்னுரிமை கொடுத்தால் பத்து வருடத்தில் ஜாதியே ஒழிந்துவிடும்.

    ஆனால் ஜாதி சங்கங்களை அழைத்து தேர்தல் பேரம் பேசும் கலைஞர் போன்ற பிற்போக்காளர்கள் இருக்கும்வரை ( கலைஞர் மட்டுமல்ல, கலைஞர் போன்ற பிறரும் உள்ளனர் ) இதுபோன்ற உண்மையான சீர்திருத்தம் நிறைவேறாது.

    ஜாதியை வைத்து அரசியல் செய்துவரும் கழகங்களும் காணாமல் போய்விடும்.

    மந்திராலயம் மட்டுமல்ல எல்லா கோயில்கள் மற்றும் இதர புனித தலங்களில் , வேதம் படித்தோருக்கு மட்டுமே அன்னதானம் செய்யும் பழக்கம் இருந்தது. வேதம் படிக்காத அதே இனத்தை சேர்ந்தோருக்கு அன்னதானம் செய்ய இடம் கிடையாது. வேதம் படிக்காத பிராமணர்கள் தொண்ணூற்று ஐந்து சதவீதம். வேதம் படித்தோர் ஐந்து சதவீதத்துக்கும் குறைவு. வேதம் படிக்காதோர் வேறு வெளித்துறைகளில் வேலைவாய்ப்பை நாடி சென்றுவிடுகின்றனர்.வேதம் படிக்காதவர் அன்னதானம் பெறுவது தவறு.

    இக்காலத்தில், எல்லா கோயில்களிலும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அன்னதானம் சமபந்தி போஜனமாக செய்யப்பட்டு வந்தது. கலைஞர் ஆட்சியில் பல கோயில்களில் இது நிறுத்தப்பட்டு விட்டதாக புகார்கள் ஏராளம் வந்துள்ளது.

    நம் அரசியல் வாதிகள் நல்ல சீர்திருத்தங்கள் செய்ய தயாராக இருந்தால் , மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜாதி அடிப்படையிலான ரிசர்வேஷனும், மத அடிப்படையிலான ரிசர்வேஷனும் ஒழிந்தால் தான் ( எல்லா துறையிலும்) இந்த நாடு உருப்படும்.

  11. கிராமங்களின் வளரச்சி குன்றி இன்று சிறு நகரங்களும் பெரு நகரங்களும் பெருக்கொண்டு தான் வருகிறது. பொது இடங்களில் சாதி வேற்றுமை பார்பது முற்றிலும் குறைந்துவிட்டது. நாம் கண்ட சுதந்திரத்தால் இன்று நாட்டில் பணம்படைத்தவன் மேலம் பணகாரனாகிறான் ஏழ்மையில உள்ளவன் மேலும் ஏழையாக மாறிவருகிறான் என்பதே யதார்த நிலைமை. தீண்டாமை கொடுமை சில கிராமங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைமுறயில் கடைபிடிக்கிறார்கள். அதுவும் காலபோக்கில் மாறக்கூடியதே. ஆனால் அதை நமது அரசியல் தலைவர்களும் கிருஸ்துவர்களும் விரும்புவதில்லை. இந்த சில சம்பவங்களை அரசியல் காரணங்களுக்காக ஊதி பெரிது செய்து தேசிய ஏன் உலகளவில் இந்தியாவில் மணித உரிமையே பரிபோய்கொண்டிருக்கிறது என்ற ஒரு மாய தோற்றத்தை சித்தரித்து வருகிறார்கள். மேலும் மத மாறுபவர்கள் 99 சதவிகிதம் ஏழ்மையிலிருந்து விடுபட பணம் பொருள் ஆசையால்தான் மதம் மாறுகிறார்கள்.

    மதம் மாற்றி பிரிவினை ஏற்படுத்தி நாட்டை துண்டுபோட கிருஸ்துவர்களுக்கு கோடி கோடியாக பணம் நாம் வாயைபிளந்து “ஆ” என்று சொல்லும் அளவுக்கு இங்கே வருகிறது. அதை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதற்கு நமது அரசாங்கத்தில் எந்த கட்டுபாடும் கிடையாது. போதாகுறையாக நமது அரசாங்கமே அவர்களது பிரிவினை ஏற்படுத்தும் செயல்களுக்கு துணைபோகிறது. இதில் மடாதிபதிகள் தலையிட்டு மதமாற்றத்தை தடுக்க தங்களால் முயன்ற அளவு காரியங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இதை தொடர்ந்து செய்விடாமல் கிருஸதுவர்கள் உள்ளே புகுந்து வேண்டும் என்றே பல கெட்ட பழிகளைசுமத்தி அவர்களை மேலும் எதுவும் செய்யாமல் செயல்இழக்க செய்துவருகிறார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். மடாதிபதிகள் மலரத்தான் செயல் படுகிறார்கள் ஆனால் நமது அரசும் கிருஸதுவர்களும் பல இடஞ்சல்கள்ளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை. சாது மிராண்டால் காடு கொள்ளாது என்பது நிச்சயம் இங்கே நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை !!!

  12. நீங்கள் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறீர்கள். தமிழ்நாடு, கேரளா ( பழைய சேர நாடு) கர்நாடக மற்றும் தென் ஆந்திரவில தன இந்தப் பிரச்சினை. பேசாமல் எல்லாருமே வஅட நாட்டில் இருப்பதுபோல் கோவிலில் சாமியை தொட்டு வழிபட்டுக் கொள்ளலாமே. எதற்கு இந்த அர்ச்சகர் பிரச்சினை? காசி விஸ்வநாதரை எல்லாரும் தொடலாம் அனால் ராமேஸ்வரத்தில் தொடக்கூடாதா?

    ஏன்? ஏன்? ஏன்?

    இங்கு மட்டும் ஏன் குருக்கள்?

    சிந்தியுங்கள் புலப்படும். கோவிலில் பூஜை செய்ததால் பிராமணன் இழந்டடுதான் அதிகம். அனால் கோவில் பெற்றதோ அதிகம். திருவரங்கன் உலா, அல்லது இங்கே வரும் திருவரங்கம் பற்றிய கதை போன்றவற்றைப் படியுங்கள். கிராமங்களுக்குச் சென்று எதனை குருக்களை 75 வயதனாலும், அவர்களை கெஞ்சி, சம்பளமும் கொடுக்காமல் அறநிலையத் துறை கெஞ்சி வலையில் வைத்து இருக்கிறது.

    அவர்களுக்கு காஞ்சி மடம்தான் சம்பளம் கொடுக்கிறது.

    நோ armchair analysis . ப்ளீஸ் கோ அண்ட் சி யுவர் ஸெல்ப்.

  13. சங்கராசாரியாரை இழிவு படத்தியதைபோல் யாரையும் இந்தியாவில் இழிவுபடுத்தியதாக சரித்திரம் கிடையாது. இதை தூண்டிவிட்டவள் ஒரு பிராமிண பெண் என்பது கொடுமையிலும் கொடுமை. இதையும் இந்துக்கள் சகித்துக்கொண்டிருந்தார்கள். மஞ்சள் பத்திரிகைபோல் ஒருபத்திரிகைவிடாமல் தாறுமாறாக அவதூறுகளை பரப்பியது. ஏன் இந்த காழ்பு உணர்வு என்பது கடவுளுக்குதான் தெரியும். குருவாக மதிக்கும் ஒருவரை (தமிழ்நாட்டில் உள்ள திராவிட மாயையால் மதி இழந்தவர்கள் தூற்றினார்கள்). தன்னுடைய சொந்த பகைமையை (சட்டவிரோதமான செயல்களுக்கு துணைபோகாததால்) தீர்துக்கொள்ளவும் தான் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளிலிருந்து விடுபடவும் தான் தங்கதாரகை என்று (கிருஸ்துவர்களால்) பட்டம் பெறவும் தூண்டப்பட்டு இக்காரியங்களை செய்தார்.

    சங்கரமடம் செய்து வரும் தொண்டு கணக்கிலடங்கா. ஆச்சாரியார் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பலமுறை சுற்றுபயணம் செய்து இந்துகளின் ஒற்றுமைகாக பாடுபட்டு வந்தார். என்.டி.ஏ அரசுக்கு முக்கிய ஆலோசகராகவும் தலித் முன்னேற்றத்தில் அக்கரையுள்ளவராகவும் தலித்துகள் கிருஸ்துவர்களால் கட்டாய மதமாற்றம் செய்வதை தடுப்பதற்காகவும் பல முயற்ச்சிகளை மேற்கொண்டார். பலமுறை இஸ்லாமியர்களுடன் பேச்சு வார்தை நடத்தி சமாதனமுறையில் அயோதியில் இராமர் கோவில் கட்ட முயற்சிகள் செய்தார். ஆனால் அந்த முயற்சியை நமது அரசியல்வாதிகள் தடுத்தார்கள். அவருக்கே இந்த நாட்டில் இப்படிபட்ட நிலை என்றால் பாமரன் படும் அவலத்தை என்னவென்று சொல்லுவது.

  14. பல விதமான கருத்துக்கள். நன்றி! அனைவரும் பூஜைகள் செய்ய வேண்டும், ஆசாரங்களைக் கடைபிடிக்கச் செய்ய வேண்டும் என்றால் முதலில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றே தெரியாமல் ஆரம்பிக்கக் கூடாது! மடங்கள் அதிக அளவில் ஹிந்து மதத்தின் பெருமையை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். எல்லா மடங்களும் ஒன்று பட வேண்டும். அவரவர் வழியில் பூஜைகளும் ஆசாரங்களும் கடைபிடிக்கப் படலாம் ஆனால் யாரும் தனக்கு நிகரில்லை என்ற ஆணவத்திற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
    தாங்கள் செய்வது தான் சரி என்றோ, மற்றவை அனைத்தும் தவறு என்றோ வாதம் புரிவதிலேயே வருடங்கள் கழிந்து விடுகிறது.
    பகவத் கீதை அர்ஜுனனுக்கு கிருஷ்ணனால் தன் கடமையை செய்ய வலியுறுத்தப் படுவதற்காக சொல்லப் பட்டது, ஆனால் இன்றோ அது இங்கு பல மனிதர்களின் வாழ்வாதாரமாக உபயோகிக்கப் படுகிறது, தங்களுடைய கடமைகளை சரியாக செய்யாத பல மனிதர்கள் அடுத்தவர்களுக்கு கீதையையும் அதன் விளக்கத்தையும் பற்றி விளக்கி வருகிறார்கள்.
    நன்றி!

  15. ஜேம்ஸ் விட் ஜேம்ஸ் ஸ்டிபன் என்ற பிரிட்டிஷ் கிருஸ்துவ அதிகாரி 1871 ஆம் ஆண்டு ஒரு கீழ்தரமான சட்டத்தை அமூல்படுத்தினார் (Criminal Tribe Act – குற்றபரம்பரை) இது ஒரு நாகரிகமில்லாத ஏழைமக்களை அனாதைகளாக ஆக்கும் சட்டம். அன்று இந்தியாவின் ஜனதொகை 26 கோடி அதில் 6 கோடி மக்களை இந்த குற்றபரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவந்தார்கள் (அதாவது சுமாராக 30 சதவிகித மக்களை) போர் வீரர்களாக இருந்த பல விவசாய குடிமக்கள் வனவாசிகள் மலைவாழ்மக்கள் என்று 160 ஜாதிகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் இன்று நாம் காணும் தலித் சமுகமாகும். இவர்களை பரம்பரை குற்றவாளிகள் என்றும் அந்தபரம்பரை தொடர்ந்து திருடுதல், கொள்ளை அடித்தல், வீட்டை உடைத்து திருடுதல், கடத்தல், போலி நாணயங்களை அச்சிடல் போன்ற குற்றங்களை செய்பவர்கள் என்று பழி சுமத்தினார்கள். போர்வீர்ர்களின் ஆயுதங்களை பரிமுதல் செய்தார்கள். அவர்களை ஒரு தனி இடத்தில் குடி அமர்தி அவர்களது நடவடிக்கைகளை கண்காணிப்பது தினம் தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்று பல தடைகளை விதித்து அவர்களையும் அவர்களது சந்ததியினரையும் ஒரு நூற்றாண்டுகளுக்கு மேல் கல்வியும் கற்க விடாமல் கொடுமை படுத்தினார்கள்.

    இதே மனபோக்கு இஸ்லாமிய ஆட்சியிலும் இருந்தது. கீழ் நிலையில் இருந்த பலரை கத்திமுனையில் மதம் மாற்றினார்கள். இவ்வாறு மாறதவர்களுக்கு ஜிசா போன்று வரிவசூலித்து கொடுமை படுத்தினார்கள். மணித மலத்தை மணிதனே அள்ளும் கொடிய வழக்கமும் இவர்கள் காலத்தில் தான் ஏற்ப்பட்டது. அடிமை வியாபாரத்தில் பேர்போன இவர்கள் மக்களை ஒதுக்கிவைத்து தீண்டகூடாதவர் என்ற முத்திரையை குத்தினார்கள். சரித்திரத்தை படித்தால் அடிமைகள் எப்படி நடத்தப்பட்டனர் என்பது எல்லோருக்கு தெரியும். அவர்கள் கற்றுதந்த பாடத்தைதான் ஜாதி இந்துகள் இன்றும் பின்பற்றுகிறார்கள்.

    இந்த சட்டத்தை 1955இல்தான் விலக்கினார்கள். இந்து மதத்திற்கும் தீண்டாமை கொடுமைக்கும் எந்த சம்பந்துமும் கிடையாது.

  16. உள்ள சுத்தம், உடல் சுத்தம், உடை சுத்தம், உரை சுத்தம், உணவு சுத்தம்,
    உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். இப்படி வாழ்கை நடத்துவது நாகரிக வளர்சி பெற்ற இந்த காலத்தில் மிகவும் அரிது. சூழ்நிலை சகவாசம் நிச்சயம் ஒருவரது மனதை மாற்றும் சக்தி படைத்தது. இதிலிருந்து ஒருவர் தம்மை காத்துக்கொள்ள சமுகத்திலிருந்து பல நிலைகளில் ஒதுங்கி இருந்தே ஆகவேண்டும். இப்படி ஒதுங்கி வாழ்பவர்களை சமூகம் நிச்சயம் எப்பொழுதுமே சந்தேக கண்கொண்டு பார்பது இயற்கை. எனவேதான் ஒழுக்கமாக ஒதிங்கி வாழ்பவர்களை சுமூகம் அவன் ஒரு சுயநலவாதி சமூகத்தை ஒதிக்கி வைத்துவிட்டான் என்றுதான் தூற்றும்.

    இந்தியாவில் இப்படி ஒதுங்கி பலவற்றை ஒதிக்கி வாழ்ந்தவனையே சமூகம் ஒதிக்கிவைத்தது. இப்படி சமூகம் ஒதிங்கி இருந்தவனையே ஒதிக்கிவைத்ததால் ஒழுக்கமானவன் வாழ்வு ஆதாரத்தை தேடி சூழ்நிலைகேற்ப சமூக ஜோதியில் கலந்துவிட்டான். சுயநலம்தான் பொதுநலம் என்று நாகரிக வாழ்கை நமக்கு பாடம் கற்றுதந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சமூக சீர்கேட்டை இன்று நாம் கண்கூட காண்கிறோம். கிடைத்தவரையில் ஆதாயம் என்றுதான் இன்று ஒவ்வொரு இந்தியனும் சிந்திகிறான். நாட்டின் முன்னேற்றம் பற்றியோ இந்திய பண்பாடு சீர்புலைவைகபற்றியோ வருங்கால சந்ததிகள் பற்றியோ எள்ளவும் சிந்திப்பதில்லை

    மேலே சொன்ன சுத்தங்களை ஒருவன் வாழ்கையில் கடைபிடித்தால் அவன் வேதம் கற்பதற்கும் கோவில் பூஜை செய்வதற்கும் எந்த தடையும் இல்லை. உடனே இப்பொழுது இதை செய்பவர்கள் ஒழுக்கசீலர்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கையே. அது களை எடுக்கபடவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஜாதிபெயர்களை தங்கள் பெயருடன் இணைக்கும் வியாதியை ஏற்படுத்தியவன் கிருஸ்துவ வெள்ளையர்களே என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றவரை அடிமைபடுத்தி கீழ்தரமாக நடத்தும் கிருஸ்துவ பரம்பரைபுத்தி (ஆப்பிரிக்க பழங்குடி மணிதர்களை மிருக காட்சி சாலையில் கூண்டில் அடைத்து வேடிகை பார்த புத்தி கருப்பர்களை மரத்தில் தூக்கிலிட்டு வேடிகை பார்த புத்தி நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் வெள்ளயர்கள் கூடும் இடங்களில் அனுமதி இல்லை என்று போர்ட்டு போடும் புத்தி டிராம் ரயில் போன்றவற்றில் அவர்கள் மட்டும் பயனம் செய்ய தனி இடம் – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) இந்த புத்திதான் பரவலாக பல ஜாதி இந்துகளிடம் தொற்றிக்கொண்டுவிட்டது.

    அடிமை புத்தியை புகட்டிய வெள்ளையர்களால் படித்தவனுக்கு மரியாதை செய்து வந்த கீழ்நிலை மக்களை மிரட்டி ஜமிந்தார்களும் மிட்டா மீராசுதார்ர்களும் செயற்கை மரியாதையை பெற்றார்கள் என்பதுதானே உண்மை (கட்டாயம் வணகம் சொல்ல வேண்டும் துண்டை இடுப்பில் கட்டவேண்டும் செருப்புடன் எதிரே நடக்ககூடாது). இன்று இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பிராமிணனை தீண்டதகாதவனாகதான் பாவிக்கிறார்கள். ஆனால் அன்றிலிருந்து அவனுக்கு அளித்த இயற்கையான மரியாதை இன்னும் பாமரமக்களிடம் ஒட்டிகொண்டிருக்கிறது என்பதை கடைவீதிக்கு சென்றால் அவனைமட்டும் அடையாளம் கண்டு வாங் சாமி எடுத்துகங்கசாமி என்றுதான் கூறுகிறார்கள். இதைபோல் வடமாநிலங்களிலும் பண்டிஜி, ஆகயே, நமஸகார் என்கிறார்கள்.

  17. This article does depics a true picture that existed during Mahakavi Bharathiyar period. Most of the contents though, are not applicable during these times. May be inter-caste marriages is one of the reasons. This has become a reality even in the so-called devout Hindu Brahmin communities. Many of the Brahmin Priests do not discriminate between Brahmins and others. In fact majority of the the worshippers going inside the sanctorum and respected are not brahmins but others. Even the Assistants helping the Brahminsinside the Sanctorum in many temples are of other communities or vice-versa. What is important is the sanctity at the Sanctorum where the Almighty is worshipped. In many of the North Indian temples, the rituals followed in South India are not followed and devotees are allowed to touch the idols. But the devotees are in no way inferior to others. In churches worshippers are allowed to wear foot-wear. Does that amount to Hindus demanding worship in the same fashion? Times will change and time changes practices and customs. Let all religious communities follow their customs as per the practice followed respectively giving respect to other religions but at the same time not falling prey to the Politicians’ various Schemes of ill-will planned with ulterior motives. Then, India and Indians can get their lost glory .

  18. புரோஹிதர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அவர்களால் பாதிரியார்களை போல் பள்ளிக்கூடம் வைத்து நடத்த இயலாது, அது அவர்கள் வேலையும் இல்லை. பாதிரியார்கள் அமைப்பும் இந்து புரோஹிதர் மற்றும் புசாரிகள் அமைப்பும் ஒன்று இல்லை. சர்ச் அமைப்பையும் ஹிந்து மட அமைப்பையும் ஒன்றாக பார்பது தவறு. சர்ச் களை போல் எல்லா கோவில்களும் இந்துக்களின் கட்டுப்பாட்டில் வந்தால் இது எல்லாம் சாத்தியம். மடங்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வீண் அடிப்பதில்லை. அவைகளும் சமூகத்திற்கே போகின்றன. ஆனால் ஹிந்துக்களின் எண்ணிக்கைக்கு அது பற்றாது. கிருத்தவர்கள் எண்ணிக்கைக்கு அவர்கள் வெளிநாட்டு நன்கொடை மிகவும் அதிகம். எல்லாவற்றிகும் மூலமாக நாத்திக அரசியலில் இருந்து ஹிந்துக்கள் விடுதலை பெற வேண்டும். எனவே ஹிந்துக்கள் நமது மடங்களையே மொத்தமாக குற்றம் சொல்வதை விட்டு நமது விடுதலைக்கு ஒன்று பட்டு போராடுவோம். நமது மடங்களை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்காமல் போராடுவோம்.
    ஜெய் ஹிந்த்

  19. Athu sari thandiya vechutu odinavarku kedaitha parisu than athu.. manasatchi thottu sollunkal vedamgopal maha periyarvarku appuram ippothu ullavarkal yokiyarkala… Maha periyavar yani.. ivar madaithai manage seium oru asami..

  20. Is it ever possible for a person born in Kavundar caste to become the Sankarachariyar?

    Is it ever possible for a person born in Iyer caste to become the Madurai Adhinam?

    Swami Chidbhavananda – a brilliant star of Gounder caste became the President of Sri Ramakrishna Tapovanam.
    Let Sankaraa Mutt decide who should be the President of it . It is no important.
    If the Antharyogam is popularised among Non-brahmins great personalities may appear in all castes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *