நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…
View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்Tag: மதமாற்ற எதிர்ப்பு
ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்
ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை
கொலைக்கு முன்பு, தங்களது பகுதிக்குள் வந்து இஸ்லாமிய மதப்பிரசாரம் செய்ய முயன்ற முஸ்லிம் மதவெறியர்களிடம் இந்தியன் என்ற உணர்வுடனும் இயல்பான நட்புடனும் அவர் பேசி வாதம் செய்ததன் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நியாயமான, அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்காக ஒருவர் கொலைசெய்யப் படலாம் என்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. இந்தக் கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, விசாரணை நடத்தி உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்…
View More மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலைதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி அனைத்து திக்கிலும் சுற்றி வளைத்தது போல சர்ச்சுகள் வந்துவிட்டன என்று கூகிள் வரைபடத்தைப் பல நண்பர்கள் பகிர்ந்து ஆவேசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது திடீரென்று நடந்து விட்ட ஒன்றா என்ன? தமிழகத்தின் ஒவ்வொரு சிறு/பெரு நகரத்திலும் ஊர்களிலும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு துல்லியமாக திட்டமிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்துக்கள் ஒன்றிணைந்து அங்கங்கு நிகழும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைத் தம்மளவில் தடுத்து நிறுத்த இப்போதே முனைந்து செயல்படாவிட்டால்…? உங்களுடன் இப்போது இளித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சந்ததிகள் வெறிபிடித்து வந்து உங்கள் கோயில்களை இடிப்பார்கள், சிதைப்பார்கள், இந்துவாக நீங்கள் வாழவே முடியாது என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்…
View More தமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?… அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை… மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான்…
View More வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்தாய்மதம் திரும்புதலும் சாதியும்
இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…
View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் கடந்த 67 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்… கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக சமூக அமைதி குலைவதையும், கலவரங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் – இது வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை… சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம். வாக்கு வங்கி அரசியலை மறந்து விட்டு, தேசிய சிந்தனையோடு இப்பிரச்சனையை அனுக வேண்டும்…
View More மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்திருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு கிறிஸ்துவ குடும்பம் கூட கிடையாது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கிறிஸ்துவ சர்ச் ஒன்றை மாணிக்கவாசகர் கோயில் அருகிலேயே அமைத்துள்ளனர். சர்ச் (கிறிஸ்துவ வழிபாட்டுக்கூடம்) கட்ட அரசு அனுமதி ஏதும் பெறவில்லை. கிராமத்தில் வசித்து வரும் அப்பாவி பொது மக்களை பிரார்த்தனை கூட்டங்களுக்கு அழைத்து கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்துள்ளனர். மோசடி மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஊர்ப்பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்களுக்கு தகவல் கொடுத்தனர்… இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கிறிஸ்துவ மதப்பிரச்சார கூட்டங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சர்ச் அப்படியே உள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துவர்கள் தொடர்ந்து மோசடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது… .
View More திருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்
2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மானிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே..
View More உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்
பேஸ்புக்கில் இந்து தர்மத்தின் பெருமைகள், இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி…
View More DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்