பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்… பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்” என்று உருகுகின்றார் சடகோபர்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2Tag: லக்ஷ்மி
ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1
க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்… இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
இடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.
View More பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்தமிழர் கண்ட நீளா தேவி
தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது … மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.
View More தமிழர் கண்ட நீளா தேவிதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3
சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை இன்றைய தமிழ் நாவல் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு.
இப்பெண்ணியக் கவிஞர்களின் ஆணாதிக்கச் சீற்றம் உண்மைதானா அல்லது வெறும் பாவனையா, என்று சந்தேகப்படும் காரணங்கள் முன்னெழுகின்றன, இவர்கள் பிராபல்யம் நாடி, பதவி நாடி, அரசியல் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளுவதைப் பார்த்தால்…
View More தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3