பகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது… செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.
Tag: லலிதா சகஸ்ரநாமம்
எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்
சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்… அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது. நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு…
View More எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்மீனாட்சி என்னும் இன்பமாகடல்
அன்னைக்குப் பூஜை முடிந்ததும் தீபாராதனை எடுக்க வைத்திருந்த கற்பூரத்திலிருந்து இரு கட்டிகளை எடுத்தார். தனது கண்களில் வைத்துக் கொண்டு அதில் நெருப்புச் சுடரையும் வைத்தார். ஆஹா! கண்கள் பொசுங்கின! பார்வை பறிபோயிற்று! “அம்மா, தாயே, மீனாட்சி,” எனப் புலம்பினார் தீக்ஷிதர்… வீரர்கள் சொன்ன செய்தியால் ஆச்சரியம் அடைந்தார் மன்னர் திருமலை நாயக்கர். திரை மறைவில் இதைக் கேட்டபடி இருந்த மகாராணி, இப்போது தைரியமாக மன்னர் முன் வந்தாள்… . தீக்ஷிதருக்குக் கண்கள் பொசுங்கியதால் தாம் படும் வருத்தத்தையும் வலியையும் விட, மன்னர் படும் துயரம் தாங்கொணாததாக இருந்தது. அடுத்து 61-வது ஸ்லோகத்தைப் பாடுகிறார் “இயற்கை அழகு வாய்ந்ததும், எல்லாவற்றிற்கும் மேலானதும், அறிவுக்கு எட்டாததும், பரம மங்களமானதுமான உனது அழகிய தாமரை மலர் போன்ற பாதத்தை நீ என்மீது இரங்கி எனக்குக் காண்பிப்பாய் என்றாலும், அதைத் தரிசிக்க எனக்கு (புறக்)கண்கள் இல்லையே தாயே!… “
View More மீனாட்சி என்னும் இன்பமாகடல்அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1
இந்தப் பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன, காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல… கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து… மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன… உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்…
View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி
தன் சிறு வயது முதல் தெய்வீக இசை பாடியும், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும்…
View More அஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மிவள்ளிச் சன்மார்க்கம்
முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது… நற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்…அவரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது… கந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி..
View More வள்ளிச் சன்மார்க்கம்நிர்வாண சுகதாயினி
தொடர்ந்து உச்சரிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் நல்லதொரு சூழலை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல சொற்களாக வெளிப்படுகின்றன. நல்ல செயலாகப் பரிணமிக்கின்றன. தீயவை அகலுகின்றன. நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற பிரபஞ்ச அதிர்வுகள் (கடவுளரும்) அப்படியே ஆகட்டும் என வாழ்த்துகின்றன… வெட்டுண்ட கரம் வீதியில் (மண்ணில்) துடிதுடிக்கிறது. ஆனால் விரைந்து செல்லுகிறார் துறவி. அவர் யார்?
View More நிர்வாண சுகதாயினி