ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..
View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்Tag: வடமொழி
தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை
சில சம்ஸ்க்ருதச் சொற்கள் தமிழில் வருகையில் வேறு பொருளில் கையாளப்படுகின்றன. “தனது” என்ற பொருள் கொண்ட “நிஜம்” என்ற சம்ஸ்கிருதச் சொல்லை “உண்மை” என்பதற்குத் தமிழன் கையாள்கிறானே, அவன் ஆன்மாவையே உண்மை என்று புரிந்துக்கொண்டவன் என்று தெரிகிறது.. அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பேடிகள் தோழிகளாய் இருந்ததால் “அலி ” (சம்ஸ்கிருதத்தில் தோழி) என்ற சொல்லாடல். அதீதக் காம விகாரத்தை வெறும் புரத்தோற்றமாகக் கருதியதால் “ஆபாஸம்” (தோற்றம்). தமிழகத்தின் வைதீகர்களுக்கிடையே சில பரிபாஷைகள் உள்ளன. “த்ராபை” என்றால் வீணானவன் என்று பொருள். இது வேதமந்திரத்திலிருந்து வருகிறது..
View More தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வைதமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்
தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, வருடப் பெயர் சுபக்ருது ப்லவ அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?” – என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல அற்பத்தனமான பதிவுகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.. வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு உரை எழுதும் மயிலை நாதர் என்ன கூறுகிறார்?.. தை மாதப்பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையைத் தர முடியுமா என்று நேற்று ஒரு நண்பர் கேட்டார். அடித்துத் துவைத்து நொறுக்கப்பட்ட பொய் வரலாறுகளும் திரிபுகளும் தமிழ்நாட்டில் சாவதே இல்லை என்று தோன்றுகிறது…
View More தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்
சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..
View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்
வடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழியிலும் வல்லவரே போற்றற்குரியவர். தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்.
View More சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல… வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை…மொத்தத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எந்த பிரசினையையும் குற்றச்சாட்டையும் கிளப்ப முடியவில்லையே என்ற புகைச்சலும் நமைச்சலும் மட்டுமே இதில் தெரிகிறது….
View More சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு
சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது…
View More புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவுஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்
நந்திதேவருக்கும், ப்ருங்கி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் கொம்புகளும் கால்களும் உண்டு… ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம். பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்.. அதன் படியே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்…
View More ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்
இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்
ஜெயதேவர் அபசாரம் என்று கருதி எழுதாமல் விட்ட வரிகளை அவர் வடிவில் வந்த கண்ணனே எழுதி, இராதையின் பாதம் தன் சிரசின் மேற்படுவதாகப் பாடி, அது அபசாரமன்று, அதுவே தனக்கு உவப்பானது எனக் குறிப்பால் உணர்த்தினான் என்பது வரலாறு […] உமைஅம்மையின் திருவடியில் ஐயன் விழுந்து வணங்கினான் என்று வெளிப்படையாகக் கூறாமல், அவன் சென்னியிலே இருந்தனவெல்லாம் அவள் திருவடியிலே மணந்தன என்று கூறுயது ஒரு நயம். [..] தமிழ்ச்சைவப் புலவர்கள் இத்தகைய அகப்பொருள் பாடல்கள் சிவபரத்துவத்தை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை என்றறிந்து கவியின்பத்தில் திளைக்கின்றனர் [..]
View More கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்