ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?Tag: வளர்ச்சி
நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா
எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமிஜியின் கனவே என் கனவும்… விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். அதில் என்ன தவறு?…. கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. ..காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான்… அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே…
View More நரேந்திரர் வழியில் நாளைய இந்தியாஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1
கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1ஒரு தேசம், இரு உரைகள்
அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்… ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக…’
View More ஒரு தேசம், இரு உரைகள்வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?
உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?
View More வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?