எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ண ராயரின் படைகளைத் தாக்கிய முஸ்லிம் படைகள், கிருஷ்ண ராயரின் 10,000 படைவீரர்களைக் கொன்றார்கள். அதன்பிறகும் ரத்தம் குடிக்கும் வெறியடங்காத சுல்தான், விஜய நகரத்திலிருக்கும் அத்தனை குடிமக்களையும் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். இதனைக் கேள்விப்பட்டுப் பதறிய கிருஷ்ண ராயர், சுல்தானுடன் சமாதானம் பேச தூதுவர்களை அனுப்பி வைக்கிறார். அதனை ஃபெரிஸ்டா இவ்வாறு பதிகிறார் – “அரசர் தவறு செய்தால் ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்கள் என்ன செய்வாரகள்? என்று தூதுவர்கள் கேட்கிறார்கள். அதற்கு சுல்தான், அல்லா எல்லா சிலைவழிபாட்டார்களையும் கொன்றழிக்கச் சொல்லி (குரான் 9:5) உத்தரவிட்டிருக்கிறான். எனவே அதன்படி செய்யவேண்டியது எதுவோ அது செய்யப்படும். உலகின் எந்த சக்தியாலும் அதனை மாற்ற முடியாது என்று பதிலளித்தான்.”…
View More வன்முறையே வரலாறாய்… – 14Tag: விஜயநகரம்
ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)
எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…
View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்
அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு… தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்.
View More வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்