“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…
View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்Tag: வேத ஆராய்ச்சி
ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்
ரிக்வேதத்தில் அறம் என்னும் சொல் 35 இடங்களில் கீழ்க்கண்டவாறு வருகிறது. இச்சொல்லின் முக்கிய பொருள் – போதும் என்ற நிலை, த்ருப்தி, நிறைந்த நிலை. ரிக்வேத சொல்லை அரம் என்று கூறாமல் வேண்டுமென்றே அறம் என்று கூறக் காரணம் என்ன? என்று கேட்கலாம். புறம் என்னும் சொல்லிற்கு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஊர், மதில், உடல் என்றெல்லாம் பொருள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறன் என்ற சொல்லும் இவ்வாறே… அறம், ருதம் இரண்டு சொற்களும் ‘ரு’ என்னும் தாதுவில் (வேர்) இருந்து வருகின்றன. ருதம் என்றால் உண்மை, இயற்கையின் நியதி என்று பொருள்.. ஆரியன் என்னும் சொல்லுக்கும் இதே வேர் தான்.. தமிழில் உள்ள “அறம்” எனும் சொல், இந்த ரிக் வேத சொல் “அறம்” என்பதுடன் தொடர்புடையதா?..
View More ரிக்வேதத்தில் அறம் எனும் சொல்வேதங்களில் விதவை மறுமணம்
உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள்…
View More வேதங்களில் விதவை மறுமணம்தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்
இதே மந்திரத்தைத்தான் பிராமணர்களும் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சூத்திரனை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது இந்த மந்திரம் கேவலமாக இருந்தால் பிராமணர்கள் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துவார்களா? சூத்திரனைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் சூத்திரனுக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதே மந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது…காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லாத ஒன்றை காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்தானே! இப்படி திரிபுவாதம் செய்பவர்கள்தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள்….
View More தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்சோமபானம் என்னும் மர்மம்
இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.
View More சோமபானம் என்னும் மர்மம்திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்
சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும்… தமிழ் கற்பித்த அகத்தியர் திலோத்தமை என்ற நடன மாதுவின் மகன் என்ற வேதகால வர்ணனையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்…
View More திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …
… இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த “குற்றவாளியின்” வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் சுதந்திர கோஷத்தை இந்த தேசத்துக்குத் தந்த மகான்…. அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கிய ஜின்னா, அவரது மறைவு வரை அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார், அதன் பின்னரே பாதை தடுமாறி பிரிவினை வாதியானார்….
View More வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …