காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்… இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும். நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதையும் இந்த சித்திரம் நமக்கு நினைவுறுத்தும்…
View More நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்Tag: ஹிந்து குருமார்கள்
சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்
அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி – பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்… வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன… தீ எரியும் அசைய முடியாது – காற்று அசைய முடியும் எரியாது – தீ காற்றைச் சேரும் வரை – ஓரசைவும் இல்லை – தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது – மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா (தேவர தாசிமையா)… எனது மனமோ அத்திப் பழம் பாரையா ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை.. (பசவண்ணர்).. பொறி பறந்தால் – என் வேட்கையும் பசியும் தீர்க்கப் பட்டதாக எண்ணுவேன் – வானம் திறந்தால் என் குளியலுக்காகத்தான் என எண்ணுவேன் – தலைவனே என் தலை தோளில் சாயும் போது உன்னையே எண்ணுவேன் (அக்கா மகாதேவி)….
View More சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்
அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது உண்மையிலேயே பரபரப்பு செய்தி தான்.. பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்….
View More அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்!
கிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள்….. ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்…. ‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது.. (மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே, தமிழில்: ல. ரோகிணி)
View More ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்!