பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள். இதைச் இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. அது பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று. தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து ‘கவிராஜன் கதை’யில் எழுதியிருக்கிறார். அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு…
View More ஓடிப் போனானா பாரதி? – 02Tag: patriotism
ஓடிப் போனானா பாரதி? – 01
பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுவதற்கே இந்த முயற்சி. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆதாரபூர்வமான மிகப்பல ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பதிவை அளிக்கிறேன்.
View More ஓடிப் போனானா பாரதி? – 01ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3
செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3