பாரதம் இப்பொழுதும் உயிர் வாழ்கிறது. ஏனெனில் உலக நாகரிகமாகிற பொதுநிதிக்குப் பாரதம் தனது சொந்தப் பங்கினைத் தர வேண்டியிருக்கிறது…தர்மம் முக்தியுடன் சேர்ந்து பொருந்தி வாழ்ந்த ஒரு காலம் பாரத நாட்டில் இருந்தது. யுதிஷ்டிரன், அர்ஜுனன். துரியோதனன், பீஷ்மன் போன்று தர்மத்தை வழிபட்டவர்கள் இருந்தனர். அவர்களுடன் கூடவே முக்திக்காக விழைந்த வியாசர், சுகர், ஜனகர் போன்றோரும் இருந்தனர். புத்த மதம் தோன்றியபோது தர்மமானது அடியோடு புறக்கணிக்கப்பட்டு, மோட்சப் பாதை மட்டுமே செல்வாக்குப் பெறுவதாயிற்று.
View More எழுமின் விழிமின் – 4Tag: vivekananda
எழுமின் விழிமின் – 1
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக 2013ம் ஆண்டு மலரவிருக்கிறது. இந்தப் புனித தருணத்தில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிகு சிந்தனைகளை இந்தப் புதிய தொடரில் தொகுத்து வழங்குவதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இத் தொடர் அடுத்த 10 மாதங்களுக்கு சுவாமிஜியின் சிந்தனை அமுதத்தைத் தாங்கி வரும்… தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறுகிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும், அற்பத் தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உருவாக்குகிறது…
View More எழுமின் விழிமின் – 1தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்
நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா?
View More தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4
“இந்த மரத்தில் ஒரு பிரம்மராட்சசன் வசிக்கிறான். இரவு நேரத்தில் காலோடு தலை வெள்ளைவெளேரென்று உடையணிந்து வருவான். பார்க்கவே பயங்கரமாய் இருக்கும்” என்றார். பெரியவர். நரேந்திரனுக்கு இது புதுச் செய்தி. பிரம்ம ராட்சதன் இரவில் உலாவருவதைத் தவிர வேறென்ன செய்வான் என்று கேட்டான்.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3
செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்
ஒரு தலைமுறை முந்தைய பொதுவுடைமையாளர்கள் சுவாமி விவேகானந்தரை ‘வீரத்துறவி’ என்று புகழ்ந்து பேசுவர், எழுதுவர். “சூறாவளித் துறவி” (The cyclonic saint) என அமெரிக்கத் தாளிகைகள் அவனை வர்ணித்து மகிழ்ந்தன. அடிமைப்பட்டுத் தன்னம்பிக்கை இழந்து கிடந்த பாரதத்தின் முதுகெலும்பில் மின்னற் சாரமேற்றி நிமிர்ந்து நிற்கவைத்த தீரன் அவன். அவனுடைய வாழ்க்கை அவனுடைய தோற்றத்தைப் போலவே வசீகரமானது. அவனுடைய சொற்கள் அவனுடைய கண்களைப் போன்றே ஒளிவீசுவன. அவனுடைய அறிவு அவனுடைய தோள்களைப் போல விசாலமானது. அவனுடைய சிந்தனை அவனுடைய பார்வையைப் போன்றே ஆழமானது.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்