அப்படிப்பட்டவன், ஒருவர் சொல்லை, அது அவனை வாழ்த்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ எப்படி இருந்தாலும், கேட்டுக் கொண்டிருப்பானே தவிர, அது தன்னை மிகவும் பாதிக்கும் அளவு அதை பொருட்படுத்த மாட்டான்… ஞானிக்கு அத்வைதம் என்பது அனுபவமாய் இருக்கிறது; சாதகனுக்கோ அத்வைதம் தியானப் பயிற்சிக்கு உதவுகிறது… நம்மை அறியாது இறைவனுக்கு நாம் செய்யும் பாபங்களை குருவின் அருளினால் கழுவிக்கொள்ள முடியும். ஆனால் குருவிடம் நாம் செய்யும் அபசாரத்தை இறைவனாலும் மாற்ற முடியாது…
View More அறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]Tag: உள்ளது நாற்பது
அறியும் அறிவே அறிவு – 8
மதங்கள் பல விதம். ஆத்மா உண்டென்கிறது ஆஸ்திகம், இல்லை என்கிறது நாஸ்திகம். உருவம் உண்டு என்கிறது சகுண உபாசனா மார்க்கம், நிர்குண உபாசனை ஒன்றே என்பது அத்துவித உண்மை. இரண்டென்பது துவிதம். பலவிதம் என்கிறது விசிஷ்டாத்வைதம். இங்கு அத்துவிதமென்றது மதத்தின் அடிப்படையில் அல்ல. அனுபவ உண்மையே சொல்லப்பட்டது. அத்துவிதம் மதம் அல்ல, அது அனுபவமே.
View More அறியும் அறிவே அறிவு – 8அறியும் அறிவே அறிவு – 6
ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர்.
View More அறியும் அறிவே அறிவு – 6அறியும் அறிவே அறிவு – 2
பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.
View More அறியும் அறிவே அறிவு – 2