ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்

திக்விஜய் சிங் என்பவருக்கு “ஆர்.எஸ்.எஸ்ஸோஃபோபியா” என்கிற வியாதி போல இருக்கிறது. சிறு குழந்தைகளை மிரட்டுவதற்குச் சில பெரியவர்கள், பூச்சாண்டி என்பார்கள் அதுபோல அடிக்கடி அண்ணா ஹசாரே ஆர்.எஸ்.எஸ்.ஆள் என்கிறார். இருக்கட்டுமே. ஒருவர் ஊழலை எதிர்த்துப் போராடுகிறார், அப்படிப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்லது அனுதாபி என்றால் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஊழலை எதிர்க்கிறது என்பது பொருள். அல்லது ஊழலை எதிர்ப்பவரை ஆதரிக்கிறது என்று போருள். இவருக்கு ஏன் இப்படி அடிவயிறு கலங்குகிறது. ஊழலில் ஊறித்திளைத்த இந்தக் கும்பல் அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டிவிட்டால், அடடா! என்ன இது? இந்த ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு பயங்கரவாத தேசவிரோதக் கும்பல் என்று மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இவர் எண்ணுகிறார்போல் இருக்கிறது.

View More ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்

சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!

View More சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்

1995-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 4 உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வென்றது காங்கிரஸ். அதனை அன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பாஜக தலைவர் வாஜ்பாய்…. பல மந்த நிலைகளைத் தாண்டி ஊர்ந்து வந்த வழக்கின் இறுதியில், அமர்சிங்,  இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்…காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, ‘திருவாளர் புனிதர்’  மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர்….

View More திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்

லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?

இப்போது அரசு பம்பிப் பதுங்கும் நிலையை சாதகமாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை ஒன்றிணைத்து, ஊழலுக்கு எதிரான போரை முனை மழுங்காமல் காத்தால் தான் இறுதி வெற்றி கிடைக்கும். இதையே அண்ணா ஹசாரேவிடம் நாடு எதிர்பார்க்கிறது….

View More லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?

தர்ம யுத்தம் வென்றது!

‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஹசாரே. உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்யப் பட்டார். அரசு வேறு வழியின்றி பணிந்த பின் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் [..] ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும் [..]

View More தர்ம யுத்தம் வென்றது!

ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….

View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…

View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?

View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்

நான் யாரையும் மிரட்டவில்லை எனத் தொடர் பல்லவி பாடும் தயாநிதி மாறன், தொலை தொடர்பு இலாகா பெற்ற கதை [..] சன் டிவியின் வளர்ச்சியில் மிரட்டல் படலம் எவ்வாறு நடைபெற்றது [..] சேனலில் தனது ஆதிக்கம் எவ்வாறு ஏற்பட்டது [..] தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் தான் தவறு செய்யவில்லை எனச் சில சான்றுகளைக் காட்டி வாதாடுவதில் தயாநிதி மாறன் கில்லாடிதான். நியாயமாக எழும் சந்தேகங்களுக்குக் கூட இது வரை தயாநிதி மாறனோ அல்லது திமுகவின் தலைவர் கலைஞரோ முறையான விளக்கங்கள் கொடுக்கவில்லை.

View More தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்

ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது [..]

View More ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்