மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். முருகா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் வரும் அழகிய பாடல்கள் இவை. இவற்றில் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது….
View More இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்Tag: சிற்றிலக்கியங்கள்
குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்
காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: “அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் – ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”… குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி பன்றி மாடன், பிடாரி வரை அனைத்து தெய்வங்களையும் துதிக்கிறாள். வரலாறு, சமூகவியல், பண்பாடு குறித்த எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் சிறுதெய்வம் பெருந்தெய்வம் அது இது என்று தமிழ்நாட்டு “ஆய்வாளர்கள்” கூறும் ஆதாரமற்ற கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்குவதாக உள்ளது அவளது துதிப்பாடல்…
View More குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்காசி[நன்னகர்]க் கலம்பகம்
முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன… குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை (அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள்)…
View More காசி[நன்னகர்]க் கலம்பகம்குழவி மருங்கினும் கிழவதாகும் -2
செங்கீரைப் பருவம்… தவழ்ந்த குழந்தை எழுந்து இருகைகளையும் ஊன்றிக்கொண்டு உட்காரத் தொடங்கும். தவழும்போதும் இருமுழங்கால்களையும் இருகரங்களையும் ஊன்றித் தலையை இருமருங்கும் ஆட்டும். வாயில் எச்சில் ஒழுக இனிய ஒலியெழுப்பத் தொடங்கும். தன்னுடைய தாய் எப்படியெல்லாம் தலையசைத்துப் பேசுகின்றாளோ அதைப்போல அதுவும் தலையை அசைத்து ஏதோ ஒலியை எழுப்ப முயற்சியைச் செய்யும். போலச் செய்தல் குழந்தையின் இயல்பு… இவ்வாறு தாம் பெற்ற குழந்தைகளுடன் உரையாடி மகிழ்தலையே தெய்வானுபவமாக மடைமாற்றம் செய்துகொள்ளும் வித்தகத்தினைப் பிள்ளைத்தமிழ் நூல்கள் கற்பிக்கின்றன…
View More குழவி மருங்கினும் கிழவதாகும் -2குழவி மருங்கினும் கிழவதாகும்
திருமால் தம் மார்பில் காடுபோல் துழாய்மாலையை அணிந்துள்ளார். அதிலிருந்து வழியும் தேன் வெள்ளம் பாய்தலால் வழியெல்லாம் சேறாய் கழனிபோலாக,. அத்தகைய சேறான வழியில், கமலத்தணங்காகிய திருமகளின் கை தன் கையாகிய அணையை முகந்து செல்ல ( திருமால் தம் கையை அணையாகக் கொண்டுதான் பள்ளி கொள்கிறார். அதனால் அது தலையணை போல் கையணை ஆயிற்று. திருமாலின் கைக்குள் திருமகள் தன் கையை நுழைத்துத் தழுவிச் செல்வதால் அது முகந்து செல்வதாயிற்று) காதலர்கள் கைகோத்துதுச் செல்வதை மனக் கண்ணில் காண்க…
View More குழவி மருங்கினும் கிழவதாகும்தலபுராணம் என்னும் கருவூலம் – 1
பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்…. தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்…
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 1