அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..
View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்Tag: தலைவர்
அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?
உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…
View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2
தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியைத் தாண்டி, அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்… கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார்… தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு” தலைமை அடிமை”யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்…. கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது என்பதே நிதர்சனம்..
View More தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்
பாஜக மேல்தட்டு வர்க்கத்தின் கட்சி என்ற அடையாளத்தை மாற்றி கீழ் தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பரிணமிக்க செய்தவர் கோபி நாத் முண்டே. எளிமையாக அணுகக்கூடியவராகவும், தேர்ந்த செயல்பாட்டாளராகவும் . தூய்மையான பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் இருந்த இந்து ஆன்மா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக , மராத்வாடா பகுதியின் பிரதிநிதியாக இந்து சமூகத்தின் தொண்டனாக துடித்து கொண்டிருந்த இதயம் அமைதியில் ஆழ்ந்து விட்டது…. மோடியின் மந்திரிகள் முக்கியமானவர்கள். அவர்களை இவ்வளவு அலட்சியமாக இழப்பது தவறு. மந்திரிகள் எளிமையாக இருப்பது அவசியம் தான் ஆனால் அவர்களின் உயிர் பாதுகாப்பு அதை விட முக்கியம். ஒவ்வொரு மந்திரியின் உயிருக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆபத்து நேரிடலாம்…..
View More அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….
View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்
எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…
View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்எழுமின் விழிமின் – 29
சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம். மிக அற்புதமான தர்க்க வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம். எல்லாம் மறந்து போகிறது. வேறு சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம். அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன. நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன. நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது. ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல், வாங்கல் பொதிந்துள்ளது. ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான். ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்.
View More எழுமின் விழிமின் – 29வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!
குஜராத் மாபெரும் தலைவருக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி மாலை சூட்டியிருக்கிறது. நாளைய இந்தியா 2014-ல் தில்லியில் அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது…. நரேந்திர மோடியைப் போன்றதொரு தலைவர் நமக்கு அடிக்கடி வாய்ப்பதில்லை. ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில், அதன் கொந்தளிப்புகளின் ஊடாக, மக்களின் கனவுகளையும் அபேட்சைகளையும் சுமந்து, தங்கள் சுய உழைப்பாலும் தியாகத்தாலும் இலட்சியவாதத்தாலும் மேலேறி வருகிறார்கள் அவர்கள். அந்தத் தருணத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றுகிறார்கள். கனவுகளை விதைத்து, அவற்றை மெய்ப்படச் செய்கிறார்கள்…
View More வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!எழுமின் விழிமின் – 28
‘மகத்தான பணி ஒன்றைச் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்தும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பிவிடும்… பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனதுடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப்படாமல் இருக்க நாம் எப்போது தான் கற்றுக் கொள்வோமோ?….
View More எழுமின் விழிமின் – 28