(சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூலிலிருந்து): நந்துதல் என்றால் முடிவுறுதல் எனப் பொருள்படுகிறது. எது நந்தாது இருக்கிறதோ அதற்கு முடிவில்லை. சந்திரனுடைய வெளிச்சம் அமாவாசையன்று முடிவுறுகின்றது. சூரியப் பிரகாசம் அத்தகையதன்று. அது ஓயாது பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது… உள்ளிருக்கும் அந்தராத்மா புறத்திலிருக்கும் சூரியன் போன்று யாண்டும் சுயம் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மப் பிரகாசத்திற்கு உதயமில்லை, அஸ்தமனமிலை, மறைத்தலில்லை, புதியதாகக் காட்சிக்குக் கொண்டு வருதல் என்பதும் இல்லை. நந்தா விளக்காக சர்வகாலமும் அது ஜொலித்துக் கொண்டிருக்கிறது…தூண்டப் படுவதாலேயே உயிர்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. பொரித்த குஞ்சு, போட்ட குட்டி, பிறந்த சிசு ஆகியவைகள் முதலில் பசியால் தூண்டப் படுகின்றன. உள்ளிருக்கிற பேரறிவுப் பொருளே அத்தூண்டுதலை உண்டுபண்ணுகிறது.
View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3Tag: பிரபஞ்சம்
காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2
ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும் … புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது.
View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி கேலக்ஸி எப்படி இயங்குகிறது?
வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” — கிரேக்க மேதை பிளாடோ.
View More பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி கேலக்ஸி எப்படி இயங்குகிறது?சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்
”சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை… மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத்தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் …..
View More சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்
அமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் – எப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்…
View More மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்