ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள இந்த நூல் பல விதங்களில் முக்கியமானது. மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. பிரபத்தி நெறியை “அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். தமது தரப்பிற்கு அடுக்கடுக்காக ஆதாரங்களைத் தருகிறார். “வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாமே மேல்விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே”.. ஆசார்யன் என்ற சொல் இராமானுசன் ஒருவனையே குறிக்கும், இராமானுசனைக் கைகாட்டும் பணியைச் செய்பவர்களே மற்ற அனைத்து ஆசாரியர்களும்…
View More ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்Tag: வியாக்யானங்கள்
மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்
விஶ்வாமித்ரரும் ஸ்ரீராமரை எழுப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டிய காரியம் முக்கியமாயிருக்க, அதை விடுத்து , “இப்படி அழகிய பிள்ளையைப் பெற்ற கௌசல்யாதேவி என்ன நோன்பு நோற்றாள் கொலோ ! “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்?… தழிஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்றாம். போரில் அழிவுதரும், பகைவர் படைக்கலங்களை மார்பிலேற்று விழுப்புண் பெற்ற மறவரை மார்புறத் தழுவிக் கொள்ளுதல் என்பது இதில் அடங்கும்.. சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்து – செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்…
View More மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2
பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்… பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்” என்று உருகுகின்றார் சடகோபர்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1
க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்… இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1சில ஆழ்வார் பாடல்கள் – 1
ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்… நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது… நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை… (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது).
View More சில ஆழ்வார் பாடல்கள் – 1