(புனித தோமையாரின் வாழ்க்கையை 50 கோடி ரூபாய் செலவில் எல்லா மொழிகளிலும் படமாகத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். இதன் தமிழ்த் திரைக்கதை வசனப் பிரதியைத் தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. புனித தோமா இந்தியாவுக்கு வந்ததே வரலாறுபூர்வமான உண்மையா என்பது உட்படச் சிந்திக்கப் பல விஷயங்கள் உள்ளன. மேலே படியுங்கள்…)
இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது. இது குறித்துச் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன:
தென் அமெரிக்காவில், அங்கு சென்ற ஸ்பானிய-கத்தோலிக்க சபையினர், அங்கிருந்த பூர்விகக்குடிகளின் புராதனப் பண்பாட்டையும் அவர்களது மூதாதையக் கடவுளரையும் தோமா அங்கே கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் கூறுகள் என்று சொல்லிச் சொல்லித்தான் அவர்களை மதமாற்றம் செய்திருக்கிறார்கள். எனவே கிறிஸ்தவமல்லாத பண்பாட்டுச் செழுமைகள் எல்லாம் கிறிஸ்தவத்தால்தான் உருவானது எனக் கூறும் இதே காலனிய-மதமாற்ற மனப்போக்கின் வெளிப்பாடாகத்தான் இந்தியாவிலும் திருக்குறள், சைவசித்தாந்தம் என எல்லாமே தோமா கொண்டுவந்த கிறிஸ்தவத்தால் விளைந்தது எனச் சொல்லும் இன்றைய கத்தோலிக்க சபையின் முயற்சியாகத் தோன்றுகிறது.
கிறிஸ்தவம் தொடங்கிச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகே சிலுவை கிறிஸ்தவ மதச்சின்னமாகக் கருதப்பட்டது. நால்வர் சொல்லும் ஏசு காதைகள் (synoptic gospels) சிலுவைச் சின்னத்தைக் குறிப்பிடவில்லை என்பதுடன் சிலுவை கிறிஸ்தவத்துக்கு முந்தைய பாகனிய (pagan) சூரிய வழிபாட்டுச் சின்னமாகவும் இருந்து வந்தது. மக்களிடம் பிரபலமான சிலுவைச் சின்னம், நிறுவனக் கிறிஸ்தவத்தால் மூன்றாம் நூற்றாண்டில்தான் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், தாமஸ் பொதுசகாப்தம் (C.E.) 50களில் எவ்வாறு சிலுவையைக் கல்லில் செதுக்கியிருக்க முடியும்? தோமாவால் செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு கல் சிலுவையைத்தான் தோமா தமிழகத்துக்கு வந்ததற்கான ‘வரலாற்றுச் சான்றாக’ கத்தோலிக்க சர்ச் காட்டிவருகிறது, என்பதனாலேயே இந்தக் கேள்வி மிக முக்கியமானதாக இருக்கிறது.
மூன்றாவதாக, மார்க்கோ போலோவும் சரி, பின்னர் அவரை அடியொற்றி எழுதியவர்களும் சரி, ஒரு வனவாசியால் தவறுதலாக தாமஸ் கொல்லப்பட்டதாகவே கூறுகின்றனர். அதுவும்கூட ஆதாரமற்ற செவிவழிக்கதைதான். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இன்றுவரையாக கத்தோலிக்க சபையின் பிரசாரத்தில் தோமாவைக் கொன்றவர்கள் அந்தணர்கள் எனச் சொல்லப்படுவதைக் காண்கிறோம். தமிழ்நாட்டில் ஆரிய-திராவிட இனவாதப்புரளி மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது உருவாக்கப்பட்டுள்ள வெறுப்பியல் பிரசாரத்தை தங்கள் மத-பிரசார நோக்கத்துக்காக கத்தோலிக்க சபை பயன்படுத்த விழைவதாகவே தெரிகிறது. அதன் விரிவாக்கம்தான் இன்று பலகோடி ரூபாயில் எடுக்கவிருக்கும் செயிண்ட் தாமஸ் திரைப்படம்.
ருவாண்டாவில் அண்மையில் டட்ஸீக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையில் கிறிஸ்தவ மதப்பிரசாரகர்கள் உருவாக்கிய இனவாதக் கோட்பாடுகளின் பங்களிப்பைக் குறித்து சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விவாதங்களை நோக்கும்போது தமிழகத்திலும் இனவாதக் கோட்பாடுகளை மத-பிரசாரத்துக்குக் கத்தோலிக்க சபை பயன்படுத்துவது தார்மீகமானதா என்பதையும் கத்தோலிக்கப் பெருமக்கள் சிந்திக்க வேண்டும்.
Hi Arvind,
this should be viewed in perspective with Govt. of TamilNadu declaring Tiruvalluvar day as Tamil New year. St. Thomas came to Tamil nadu & met Tiruvalluvar and exchanged views –> Tiruvalluvar inspired by Christianity –> so Thirukural is Christian inspired book —> All Tamils take pride of Kural as part of their culture —> Christianity nothing new to tamils —> In fact, Christianity itself was/is and ever Tamil people’s religion….
this is what Catholic christians want to achieve…
regards,
a tamil hindu,
Muthu
நன்றாக எழுதியுள்ளீர்கள் அரவிந்தன். பாராட்டுகள்.
இனவாதக் கோட்பாடுகளை மத மாற்றப் பிரசாரத்திற்கு பயன் படுத்துவதே கிறிஸ்துவத்தின் அழுக்கான வரலாறு நமக்கு கூறும் செய்தி. அதே வழியைத்தான் கிறிஸ்துவர்கள் இந்தியாவிலும் பின்பற்றி வருகின்றனர். இந்த யுக்தியின் ஒரு பகுதி தான் தாமஸ் கட்டுக்கதை.
இந்த தாமஸ் கட்டுக்கதை தமிழகத்தில் இந்துக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஏற்கனவே திராவிட இனவெறிக் கும்பலால் தமிழ் இந்துக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூளைச் சலவை செய்யப்பட்டு இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று நம்பக்கூடிய சூழலுக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். ஆரியன்-திராவிடன் இன வேற்றுமை எனகிற சிறிதும் ஆதாரமில்லாத புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, ஒற்றுமையாய் வாழும் இந்துக்களின் மனதில் இன வேற்றுமையை வளர்த்து விட்டு, தமிழர்களை இந்துக்களிடமிருந்து பிரித்து ஆளும் திராவிட இன வெறியர்கள் கிறிஸ்துவ மிஷனரிகளிடமும் சர்ச்சுகளிடமும் கூட்டு வைத்துக் கொண்டு அவர்களின் மத மாற்றக் கொள்கைகளுக்கும் துணை போகின்றனர்.
கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாத இந்த திராவிட இன வெறியர்கள் சைவத்தையும், வைணவத்தையும், கிறிஸ்துவத்தின் அங்கங்களாக காண்பிக்கத் துடிக்கும் கிறிஸ்துவ மிஷனரிகளின் பிரசாரத்திற்கு வழி வகுத்து கொடுக்கிறார்கள். திருவள்ளுவரை கிறிஸ்துவராக்கும் முயற்சியும் இந்தத் திட்டத்தில் ஒரு பகுதி தான். திருக்குறளில் உள்ள செய்திகள் அனைத்தும் தாமஸ் திருவள்ளுவருக்கு சொல்லிக் கொடுத்ததும், பைபிளிலிருந்து எடுத்ததும் தான் என்றும் கூறி வருகின்றனர்.
இந்தக் கட்டுக் கதைகள் எல்லாவற்றையும் நிலை நிறுத்தத்தான் தாமஸ் பற்றிய திரைப் பட தயாரிப்பும், அதை துவக்கி வைத்த கருணாநிதியின் எண்ணமும். இந்தப் பெரும் ஆபத்தை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கான ஒரே வழி தாமஸ் பற்றிய அனைத்து கட்டுக் கதைகளையும் ஆதாரமற்ற புனைச்சுருட்டுக்கள் என்று தமிழ் இந்துக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது தான்.
இந்தக் காரியத்தை சிரமேற்கொண்டு “தமிழ் இந்து” அரவிந்தன் போன்றவர்கள் மூலமாக தொடர்ந்து இந்த அழகான இணைய தளத்தில் ஆதாரங்களுடன் கூடிய பல கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
தமிழ்செல்வன்.
I am sad to know such attacks on our hindhu community. We should unite irrespective of our castes and unitedly fight to liberate tamilnadu and tamil people from such foreign theories and ideologies. They want to finish off tamil culture and create a poor imitation of christian culture.
Jai Hind! Vazhga Thamiz!
Dear Mr Aravindhan
I have read some of your other articles in blogspot-thanks to this website.
Well said.We have to do our bit to curb these wrong ideas at the bud.These are dangerous ideas as you point out.
Will the concerned realise their folly?
Will the average Tamilian wake up?
He or she will, if we continue to sound the alarm.
Congrats on a well written article.
இது எதோ இன்னொரு சினிமா என்று நினைத்திருந்தோம். இதற்குப்பின்னால் இவ்வளவு இருக்கிறதா! தொடர்ந்து சிறந்த கட்டுரைகளை தந்துகொண்டிருக்கும் உங்கள் பணி தொடரட்டும்.
சகோதரர் அரவிந்தன் அவர்களே,
தோமையர் இந்தியா வந்ததும், அவரால் இங்கேயிருந்த காட்டுமிராண்டி சமுதாயமான திராவிடர்கள் கலாச்சாரம் அடைந்து தோமா திராவிடர்களாக மாறியதும், ஆண்டவனுக்கு பிரியமானவர்களானதும் வரலாற்று உண்மை.
அவர்களை ஆரிய வந்தேறி பார்ப்பனர்கள் கெடுத்து பெண் விடுதலை, ஆண்டவனுக்கு அஞ்ச வேண்டாம், நீயும் ஆண்டவனும் ஒன்றுதான், உலகம் முழுவதும் ஆண்டவனின் வேறு வடிவங்கள், நரகம் சுவர்க்கம் என்பவை கீழான நம்பிக்கைகள், ஆண்டவன் கட்டளைகள் என்று ஒன்றும் கிடையாது என்று சாத்தானின் போதனைகளைப் பரப்பி அடிமைப்படுத்தியதையும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியார் ஈவேராவே அம்பலப்படுத்தியுள்ளார். இதை உங்களால் மறுக்க முடியாது.
கிபி 3ல் கிருத்துவ மதம் சிலுவையை அங்கீகரித்தது என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். இதன் பொருள் என்ன? புனிதமான சிலுவை அதுவரை பாட்டாளி மக்களாலும், பகுத்தறிவுவாதிகளாலும் ஆண்டவனின் அடையாளமாக வழிபடப்பட்டது. அது கிபி 3ம் நூற்றாண்டில் கிருத்துவ அமைப்புக்களாலும் அங்கீகரிக்கப்பட்டது என்பதே.
ஆண்டவராகிய யேசுவின் வருகைக்கு முன்னரே அவரது வருகை அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அடையாளங்களும் வழங்கப்பட்டன. யேசு பிறந்தபோது, அவரைக் காணவந்த மூன்று ஞானிகளில் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்ததாக வரலாறு சொல்லுகிறது.
எனவே, சிலுவை என்கிற புனித அடையாளம் கிருத்துவ அமைப்புக்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு இருந்தே ஆண்டவராகிய யேசுவின் புனிதத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கருதப்பட்டது என்பது தெளிவு.
தோமஸ் மவுண்டில் உள்ள சிலுவை புனித தோமையாரால் செதுக்கப்படவில்லை என்பதற்கு நீங்கள் எந்த உறுதியான ஆதாரங்களையும் காட்டவில்லை. இந்த சிலுவை, காட்டுமிராண்டி இந்துக்களால் செதுக்கப்பட்டது என்பது உங்கள் வாதமாக இருக்குமானால், காட்டுமிராண்டிகளான உங்களது வழிபாட்டுத் தலங்கள் எதிலும் சிலுவையானது புனித அடையாளங்களில் ஒன்றாகக் காணப்படுவதில்லையே. அது ஏன்?
இந்த சிலுவை தோமையாரால் வடிவமைக்கப்பட்டது என்பதற்கு இந்த ஒரு ஆதாரமே போதுமானது.
சகோதரரே, நீங்கள் சாத்தானின் பாதையில் அவனது கொள்கைகளைப் பரப்புவதற்குப் பதில், ஆண்டவராகிய யேசுவே உண்மையானவர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அவரை நம்பியவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களைக் காணுங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லா சுகங்களும் பெறுகிறார்கள்.
நல்ல கட்டுரை அரவிந்தன். நன்றி.
இந்த விஷயத்தை நான் இஸ்லாமிய கருத்தியலில் கண்டிருக்கின்றேன். அவர்களது கருத்துப்படி, இஸ்லாத்தைத் தவிர வேறெங்கும் எந்தவிதமான நல்லதோ, நீதியோ, நியாயமோ, அறிவோ, கலாச்சாரமோ கிடையாது. இஸ்லாத்துக்கு ஒரு சமுதாயம் மாறுவதற்கு முன்பாக எவ்வளவுதான் கலாச்சாரத்தில், பண்பாட்டில் உயர்ந்திருந்தாலும் அதை ஜஹிலியா காலாம் – இருண்ட, அறியாமைக் காலம் என்று புறந்தள்ளிவிடுவர், இகழ்வர், அழித்திட எண்ணுவர்.
வேறு வழியின்றி, ஜஹிலியா காலத்தில் கலாச்சாரம், அறிவியல், பண்பாடு ஆகியன சிறந்துவிளங்கியிருப்பதை ஒப்புக்கொள்ள நேர்ந்தால், அதெல்லாம் இஸ்லாத்தின் விளைவு, அப்பிரதேசங்களில் முஹம்மதுக்கு முந்தய இஸ்லாமிய நபிகள் வந்து இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தார்கள் என்று சொல்லி கூடவே ஆனால், அது இஸ்லாத்தின் திரிந்த வடிவம், எனவே ஒரிஜினல் இஸ்லாமிய நிலைக்கு மாறாதவரை அந்த சமுதாயத்தின் மீது ஜிஹாத் தொடுத்து அதை அழிப்பதே முறையானது என்று வாதிடுவர்.
அதே உளப்பாங்கு கிறிஸ்துவத்திலும் இருப்பது அதிர்ச்சியாயிருக்கிறது. ஆபிரகாமிய மதங்கள் எல்லாத்திலுமே ஏக இறைக்கோட்பாட்டால் இப்படிப்பட்ட அசுரத்தனம், எப்பாடுபட்டாலும் தனது தூதரை/இறைமகனை முன்னிறுத்தவேண்டும், அதற்கு மாறானவற்றை அழித்திட வேண்டும் என்ற கருத்தியல் தோன்றிவிடுகிறது. இத்தனைக்கும் முஹமதுவைக் காட்டிலும், இயேசு அன்பானவராக, பழைய ஏற்பாட்டுக்கடவுளின் தூதர்களிடமிருந்து வித்தியாசமானவராக சித்தரிக்கப்படுகிறார். அப்படி ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே இன்னொருபுறம், பழைய யூதக்கோட்பாடுகளை விடாமல் போகுமிடமெல்லாம் பூர்வகுடிகளையும், கலாச்சாரங்களையும் இஸ்லாத்தைப் போலவே கிறித்துவமும் அழித்துவருகிறது.
அழித்தபிறகு, அந்தக்கலாச்சாரங்கள், சமுதாயங்கள் மிகவும் மோசமானவை என்ற சித்தரிப்பை இந்த ஆபிரகாமிய மதங்கள் செய்யும். பாகிஸ்தானில் இருந்த இந்து மன்னன் தனது சகோதரியை திருமணம் செய்துகொண்டான் என்று முகமதியர்கள் எழுதுவதைப் போல, குண்டு வைத்துவிட்டு ‘உங்களது சமுதாயம் ஒழுக்கக்கேடானது’ என்று குஜராத்தில் ஓலமிடுவது போல, மெல் ஜிப்சனின் அபோகலிப்டோவில் தென்னமரிக்க பூர்வகுடிகளை கொடூரர்களாக சித்தரித்து வெள்ளை கிறித்துவர்கள் வந்தபின்பே அவர்கள் பண்பட்டார்கள் என்று காட்டுவதைப் போல – இது ஒரு ஆபிரகாமிய அடிப்படை யுக்தி. அதாவது தங்களது காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் நியாயப்படுத்த, முன்பிருந்த சமுதாயங்களை அழித்தது சரியே என்று நியாயப்படுத்த விழையும் ஆபிரகாமிய மூர்க்கத்தனம் அது.
திருக்குறளும், திருவாசகமும் கிறித்துவத்தின் விளைவாக எழுந்தவை என்பது எப்பேர்ப்பட்ட புரட்டு, திருட்டு வேலை. இதை தமிழார்வலர்களும், அறிஞர்களும் எதிர்க்காமல் மவுனம் காப்பது அதிர்ச்சியாயிருக்கிறது. மிகவும் நுணுக்கமாக ஆபிரகாமிய மதங்கள் தமிழ், தமிழ் என்று கோஷம் போட்டுக்கொண்டே தமிழ் சமுதாயத்தை எந்த அளவுக்கு இழிவாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவுக்கு சித்தரிக்க ஆரம்பித்துவிட்டன, தங்களின் அடிப்படை கருத்தியலுக்கேத்தவாறு.
சமீபத்தில் இந்த தோமா புரட்டு குறித்து ஜெயமோகனும் எழுதியிருக்கிறார். ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் நல்ல கட்டுரை அது. அவரிடம் அனுமதி பெற்று அதையும் பதியுங்கள். தமிழர்களுக்கு ஜாதி, மத வித்தியாசமில்லாமல் இந்த கருத்தியல் புரிந்தால் சரி. பல கிறித்துவர்களுக்கே இந்த கருத்தியல் புரியுமா என்பது சந்தேகம்தான். எதோ தங்களது மதத்தால் விளைந்த நன்மை என்று இப்படிப்பட்ட புரட்டுகளையெல்லாம் நம்பி, மற்றவர்களிடமும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
திருக்குறள் கிருத்துவத்தை தான் போதிக்கிறது, தாமஸ் தான் சொல்லிக்கொடுத்தார் என்ற கதையை நம்ப வைத்து மதமாற்ற அறுவடை செய்வது தான் இவர்கள் வேலை. இதை தான் உலகம் முழுவதும் நடக்கிறது. இதற்கு தமிழக முதல்வர் போன்றவர்களும் துணை போவது தான் வேதனை. இது ஒரு வரலாற்று பிழை என்பதை அவர் உணரமாட்டார். காரணம் ‘ஓட்டு’.
இதுவும் உண்மை என்று நம்பவைத்துவிட்டால், பின் தமிழனுக்கென்று சுய அடையாளமே கிடையாதா? அவ்வளவு அறிவுகெட்டவனா தமிழன்?
Nesakumar,
It is interesting to note the similarities. Can you elaborate this further? I had always felt that all religions except our Hindhu Dharma are violent and predatory. These authentic views prove that.
பாராட்டுக்கள்.
ஹிந்து மதமும் தமிழர் பண்பாடும் வெவ்வேறானவை என்ற ப்ரச்சாரம் வெகு நாளாக நடந்து வரும் ஒன்று.
தமிழ் ஹிந்துக்களாகிய நாம் “நமக்கென்ன வந்தது ?” என்றோ “நம்மால் என்ன செய்ய முடியும் ?” என்றோ சும்மா இறாமல், இந்த மாதிரி எதிர்ப்பு முயற்ச்சிகளுக்கு நம் ஆதரவை தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
“சத்யமேவ ஜெயதே” – முண்டக உபனிஷதம்.
இதையே “வாய்மையே வெல்லும்” என்று தமிழில் சொல்கிறோம்.
சத்தியம் வெல்லட்டும் ! ஜெய் ஹிந்த் ! வாழ்க தமிழ் !
நல்ல கட்டுரை. 1970களில் கத்தோலிக்கர்கள் ஒரு பொய்யான ஆதாரத்தை உருவாக்கி இந்த கட்டுக்கதையை பரப்பினார்கள் என்றும் பின்னர் அந்த ஆதாரம் பொய் என நிறுபிக்கப்பட்டதும் ஆர்ச் பிஷப் மான்னிப்பு கேட்டார் என்றும் ஒரு செய்தி உள்ளது. இயேசுவின் புத்திரர்களுக்கு இப்படிப்பட்ட புரட்டு வேலைகள் செய்யும் அளவிற்கு அப்படியென்ன அவசியம் வந்துவிட்டது? கர்த்தரே இவர்களை மன்னிக்க மாட்டார்.
Mr Itrudaya raj,
Do you know Vatican does not accept that thomas ever visited india? These fools try to make others fool.
Mr Irudayaraj,
Please go through Arun Shourie’s book “harvesting souls”.
Please answer the queries raised in that book.
You will know that bible is not word of god but satanic verses.
Go through the dead sea scrolls.You will know the truth.
But you stupid christians will not allow you people to know all these by your church fathers.
//திருக்குறளும், திருவாசகமும் கிறித்துவத்தின் விளைவாக எழுந்தவை //
திருக்குறள் இந்திரன், ஸ்ரீதேவி, மூதேவி முதலியோர்களை நேரடியாகவே சுட்டுகிறது. மேலும் கர்மவினை, ஊழ்வினை, மறுபிறப்பு, வேள்வி முதலியவற்றை குறித்தும் கருத்துகளை இயம்புகிறது. சாதாரண பாமரனுக்குக்கூட இவை அனைத்தும் இந்திய மதக்கூறுகள் என்பது விளங்கும்.
இதை கிறிஸ்தவ நூல் எனக்கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கதை.
கேட்பவன் கேனயனாக இருந்தால் ஒட்டகம் கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம் 🙂
இப்படிக்கு,
கேனயன் ஆக விரும்பாத “வினோத் ராஜன்” 🙂
Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept LOYALA College Chennai, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.
கிறிஸ்துவை முன்னிட்டு வரும் 2008 வருடஙகள் கழித்தும் அரசியல் அதிகாரத்தால் கிறித்துவ மதத்தைப் பரப்ப முயற்சிப்பதிலிருந்தே, இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.
Christianity in a different Light – Face behind the Mask [5th Ed 348-pg … – Page 155
by Maanoj Rakhit – 2008 – 348 pages
I have one questions. Kamathupal is also included in the thirukural. As per their concept, did he preach those things also?
காமம் என்பது ஆதி பாவம் (ஒரிஜினல் சின்) ஆயிற்றே. அதனால்தானே மனிதர்கள் துன்பத்துக்காளாகிச் சாகவேண்டும் என்று இறைவன் சபித்ததாக பைபிள் சொல்கிறது. தாமஸ் திருவள்ளுவருக்குக் காமத்தை போதித்திருக்க சான்ஸே இல்லை :)
அய்யா நல்லதொரு தர்க்கம்.
என்போன்றோற்கு ஒரு சந்தேகம் அல்லது கேள்வி,
ஏசு கிறிஸ்து மக்களின் மத்தியில் தந்து 13 வயது வரை உலவியுள்ளார். அதன் பிறகு அவர் தமது 30ஆம் வயதில்தான் மீண்டும் மக்கள் முன் தோன்றுகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எங்கிருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமிருப்பின் தெரியப்படுத்தவும்.
மேலும் ”மதம்” என்ற சொல்லே இந்தியாவில் தோன்றியதுதான் என்று உலகமே ஒப்புக்கொண்டதாகவும் கேள்வி.இதனைக் கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன் சொற்பொழிவு மூலம் கேட்டுள்ளேன்.
நன்றி.
நதிமூலம்.
திரு ஸ்டான்லி,
//தோமையர் இந்தியா வந்ததும், அவரால் இங்கேயிருந்த காட்டுமிராண்டி சமுதாயமான திராவிடர்கள் கலாச்சாரம் அடைந்து தோமா திராவிடர்களாக மாறியதும், ஆண்டவனுக்கு பிரியமானவர்களானதும் வரலாற்று உண்மை.//.
வரலாற்று ஆதாரத்தை காட்ட முடியுமா??
//அவர்களை ஆரிய வந்தேறி பார்ப்பனர்கள் கெடுத்து பெண் விடுதலை, ஆண்டவனுக்கு அஞ்ச வேண்டாம், நீயும் ஆண்டவனும் ஒன்றுதான், உலகம் முழுவதும் ஆண்டவனின் வேறு வடிவங்கள், நரகம் சுவர்க்கம் என்பவை கீழான நம்பிக்கைகள், ஆண்டவன் கட்டளைகள் என்று ஒன்றும் கிடையாது என்று சாத்தானின் போதனைகளைப் பரப்பி அடிமைப்படுத்தியதையும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியார் ஈவேராவே அம்பலப்படுத்தியுள்ளார். இதை உங்களால் மறுக்க முடியாது.//
நாத்திக வாதம் பேசிய பெரியாரை உங்கள் ஆத்திக கருத்திற்கு பயன்படுத்துகிறீர்கள். அவரே கிறிஸ்தவத்தையும் எதிர்த்து பின்னர் பல்டி அடித்து விட்டார். இந்த தளத்திலேயே வரும் தொடரைப் பாருங்கள்.
//பாட்டாளி மக்களாலும், பகுத்தறிவுவாதிகளாலும் // என்ன ஒரு காமெடி ??? தாங்க முடியவில்லை 🙂
//தோமஸ் மவுண்டில் உள்ள சிலுவை புனித தோமையாரால் செதுக்கப்படவில்லை என்பதற்கு நீங்கள் எந்த உறுதியான ஆதாரங்களையும் காட்டவில்லை.//
ஹிந்துக்கள் இந்த சிலுவையை செதுக்க வில்லை. அதற்க்கு தேவையும் இல்லை.
//இந்த சிலுவை, காட்டுமிராண்டி இந்துக்களால் செதுக்கப்பட்டது என்பது உங்கள் வாதமாக இருக்குமானால், காட்டுமிராண்டிகளான உங்களது வழிபாட்டுத் தலங்கள் எதிலும் சிலுவையானது புனித அடையாளங்களில் ஒன்றாகக் காணப்படுவதில்லையே. அது ஏன்? //
ஹிந்துக்கள் kaattumiraandigalaa ??
கிறிஸ்தவத்தின் பெயரால் அறிவியலாளர்கள், மற்றும் பெண்களை எரித்தது மற்றும் ஆபிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடிகளை அழித்தது போன்றதெல்லாம் நாகரீகமோ ??
//தோமையர் இந்தியா வந்ததும், அவரால் இங்கேயிருந்த காட்டுமிராண்டி சமுதாயமான திராவிடர்கள் கலாச்சாரம் அடைந்து தோமா திராவிடர்களாக மாறியதும், ஆண்டவனுக்கு பிரியமானவர்களானதும் வரலாற்று உண்மை.//
—————————————
Migachhirandha karpanai Rev.Stanley avargalae!!
Shri.Arvaindan, is there no other way to stop this hate-movie?
ஸ்டான்லி இருதயராஜ்,
பெரியார் சொன்ன கட்டுக்கதைகளும் அவர் ‘அம்பலப்படுத்தியதாக’ சொல்லப்படும் ‘உண்மைகளும்’ உண்மையில் எவ்வளவு பொய்யானவை என்பது தக்க ஆதாரங்களோடு நிர்ரோபிக்கப்பட்டுள்ளன. சரி, இந்து மதத்தினர் காட்டுமிராண்டிகள் என்று சொல்கிறீரே, அதே சமயம் இந்து மதம் விவிலியத்திலிருந்து தோன்றியது என்று சொல்கிரிரே, அப்படியானால் கிறித்தவம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமான மதமாக இருக்கவேண்டும்??
உங்களுக்கு ஒரு சவால்! நீங்கள் ‘ஜெபம்’ செய்யும்போது, முதலில் நெற்றியிலும், அடுத்து மார்பிலும், பிறகு இடது தோளிலும், இறுதியில் வலது தோளையும் தொட்டுக்கொள்கிரீரே. எங்கள் வேதங்களில் வரும் “ஆசமனம்” என்னும் பகுதியில், இந்துக்கள் இறைவனின் பெயரைசொல்லி பின்வருமாறு தங்கள் அங்க உறுப்புகளை தொட்டுக்கொள்கிறார்கள்:-
கேசவா-> வலது கன்னம்.
நாராயணா->இடது கன்னம்
மாதவா->வலது கண்
கோவிந்தா->இடது கண்
விஷ்ணு->வலது காது
மதுசூதனா->இடது காது
திருவிக்ரமா->வலது தொடை
வாமனா->இடது தொடை
ஸ்ரீதரா->வலது தோள்
ரிஷிகேஷா->இடது தோள்
பத்மநாபா->வயிறு/மார்பு
தாமோதரா->நெற்றி/தலை.
கடைசி நான்கை கவனிக்கவும். வலது தோள், இடது தோள், மார்பு, நெற்றி. அதாவது இது நீங்கள் செய்வதை அப்படியே உல்டாவாக இருக்கிறது. இதைவைத்து இயேசு கிறிஸ்து வேதங்களிலிருந்து காபி அடித்தார் என்று நான் சொல்கிறேன்…. மறுக்க முடியுமா?????
ஆரிய/திராவிட இனபேதம் ஒப்புக்கொள்வார்க்கு ஆளின்றித் தவிக்கிறது. உங்களைப் போன்ற சகிப்புத் தன்மையற்ற கிறித்தவர்களும், உங்களால் மூளைசலவை செய்யப்பட வெங்காயதாசர்கள் மட்டும்தான் இன்னமும் இதை தொற்றிக்கொண்டு இருக்கிறீர்! நாங்கள் நரகத்திற்கு செல்கிறோமா? உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் பார்த்துவிட்டு வந்தீர்களா? உங்களைப் போன்ற கிறித்தவர்களோ, முகமதீயர்களோ பெரியாரை இந்துமதத்தை எதிர்த்துப் பேசினார் என்று கூறும்போது நான் கேட்கும் ஒரே வார்த்தை:- “தோழரே, வோல்டேர் போன்ற உண்மையான அறிஞர் உங்கள் மதத்தைப் பற்றி என்ன கூறினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா”.
உதாரணம்:- Christianity is the most absurd and bloodthirsty religion!!
தோமையார் இந்தியாவிற்கு வந்தார் என்பது குறித்து பலர் ஆய்வு நூல்களை எழுதி முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இன்னும் அதுகுறித்த ஆய்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவர் இந்தியாவிற்கு வந்தார் என்பதை பாப்பரசர் அறிவிக்க வேண்டுமென கேரளாவிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனை பல பாப்பரசர்கள் நிராகரித்துவிட்டார்கள். வத்திகானின் அறிவுப்பூர்வமான தகவல் இவ்வாறாகவே பேசுகிறது: “கத்தோலிக்கப் பாரம்பரியத்தின்படி தோமையார் விபத்தில் உயிரிழந்தார். அதாவது, ஒரு வேட்டைக்காரன் மயில் ஒன்றினை சுடும்போது, அதற்கு பதிலாக தோமையாரை தாக்கியது. அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது சில நினைவுச் சின்னங்கள் எடேசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ளவை இந்தியாவில் உள்ளன. அவை, சென்னை மைலாப்பூரிலுள்ள சாந்தோம் பேராலயத்தில் காணப்படுகிறது. எடேசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நினைவுச் சின்னங்கள் 1258இல் இத்தாலிக்கு மாற்றப்பட்டன. அங்கு அவை இத்தாலியின் ஓர்டோனாவிலுள்ள திருத்தூதர் புனித தோமையார் பேராலயத்தில் வைக்கப்படுள்ளன. இருப்பினும், புனித தோமையாரின் மண்டை ஓடு கிரேக்க தீவில் அமைந்துள்ள பாட்மோசில் புனித அருளப்பர் இறையியலாளர் மடாலயத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.” ஏனெனில், தோமையாரின் உண்மையான வாழ்க்கை வரலாறு வத்திக்கானில் இல்லை. அவர் பயணித்த இடங்களை குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளதால் “நம்பப்படுகிறது”, “பாரம்பரியத்தின்படி” என்பதோடு கத்தோலிக்க தலைமைபீடம் நிறுத்திக் கொள்கிறது. கத்தோலிக்க சமயத்திற்கு மாறிய இந்தியர்களால் அதனை ஏற்க இயலவில்லை என்பதே உண்மை.