மீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை

மதிப்பிற்குரிய திரு.ராம.கோபாலன், நிறுவன தலைவர் இந்து முன்னணி அறிக்கை:

திரு.ஜீவராஜ்
திரு.ஜீவராஜ்

சங்கரன் கோயில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை அளிக்கிறது.

கொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும் காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும் உடனடி நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே கொலைகளைத் தடுக்க முடியும். குற்றம் செய்ய பயம் வரும். ஆனால் தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு வேலை செய்கிறதா என்பதே தெரியவில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமா இருக்கிறது.

இப்படிப்பட்ட கொடூர குற்ற செயல்கள் தமிழக முதல்வரின் பார்வைக்குச் செல்கிறதா என்பதை ஊடகங்கள் தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் காவல்துறை முதல்வரின் கீழ் உள்ளது. முதல்வரின் கண் அசைவிற்காக காவல்துறை காத்து நிற்கிறதா? அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனது கடமையிலிருந்து தவறுகிறதா காவல்துறை? என்ற கேள்விகள் எழுகின்றன.

கடந்த சில வருடங்களில் நடந்த படுகொலைகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் தமிழகத்திலா இப்படிப்பட்ட நிலையா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழும்! இதற்கு காவல்துறையோ, தமிழக முதல்வரோ பதில் சொல்லாமல் இருக்கலாம்? காலம் பதில் சொல்லும். என்பதை மறக்க வேண்டாம்! ஜனநாயகத்தில் மக்கள் தங்களது பதிலையும் ஆட்சியாளர்களுக்கு எதிராக தக்க நேரத்தில் பதிவு செய்வார்கள்!

காவல்துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாடும் இடங்கள் இவற்றில் படுகொலைகளை பகிரங்கமாக நிறைவேற்றிவிட்டு, நிதானமாக கொலையாளிகள் தப்பிக்கிறார்கள்.
இந்து முன்னணி இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்துகொள்வது எதனால்? காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டால் அது பேராபத்தாகவிடும் என எச்சரிக்கிறோம்.

rama_gopalanசாதாரணமாக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யும் பெண்களிடம் கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்களே ஏன்? மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்காக! ஆனால் நமது அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்! எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

சமுதாய சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

– இராம கோபாலன்

53 Replies to “மீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை”

 1. தமிழ் நாடு ஒரு காலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. இப்போது, படுகொலைகள் இப்படி அடிக்கடி நடப்பது கண்டால், பயமாக உள்ளது. கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 2. //காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டால் அது பேராபத்தாகவிடும் என எச்சரிக்கிறோம்.//
  உங்கள் எச்சரிக்கை ஆட்சியாளர்களை ஒன்றும் செய்யாது. கொலை புரியும் சட்டத்தை ஒருபகுதி மக்கள்தானே கையில் வைத்திருக்கின்றார்கள். எனவே உங்களை பாதுகாக்கும் சட்டத்தை கையில் எடுக்க நீங்ககள் ஏன் தயங்கவேண்டும். ஜீவராஜ் குடும்பத்தினருக்கு பிரயோசனமற்ற ஆனால் மனம் நொந்த இரங்கல்களும் அன்னாரின் ஆத்மா அமைதி அடைய பிரார்த்தனைகளும்.
  சுப்ரமணியம் லோகன்.

 3. உண்மை கொலையாளிகள் யார் என்று கண்டு பிடிக்கும் வரை அமைதி காப்போம். அதற்குள் இதை முசுலீம், கிறித்துவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று யாரும் உடனே பின்னூட்ட CBI ஆகி விட வேண்டாம் …

 4. உயர்திரு தாயுமானவன்,

  //உண்மை கொலையாளிகள் யார் என்று கண்டு பிடிக்கும் வரை அமைதி காப்போம். //

  0. நீங்கள் எழுதியிருப்பது சரிதான்!!!??? தொள்ளாயிரம் ஆண்டுகளாக அடிமை வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் இந்துக்களால் வேறு என்னதான் செய்ய இயலும்?

  கடந்த சில வாரங்களாக இந்து முன்னணி ஊழியர்கள் (பிரமுகர்கள், தொண்டர்கள்) வெட்டிச் சாய்க்கப் படுகிறார்களே? இவர்கள்மீது யாருக்கு இவ்வளவு காழ்ப்புணர்வு இருக்கக்கூடும்? தமிழ் இந்து ஆசியர் குழு முன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது என்று எனக்குப் படுகிறது. அது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து இந்துக்களும் எச்சரிக்கையாக இருப்பது நலம்; அல்லது வேறு சமயத்திற்கு மாறிவிடலாம். இல்லை, வெளிநாட்டிற்கு புலன்பெயர்ந்து விடலாம். இல்லாவிட்டால், இந்துக்கள் உயிருக்கு புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் உத்திரவாதம் இல்லை.

  உண்மைக் கொலையாளிகள் (கவனிக்கவும், பொய்க் கொலையாளிகள் அல்ல) தானாக முன்வந்து ஒப்புக் கொள்ளும்வரை அமைதி காப்போம் என்று உயிர் பிழைத்திருக்கும் இந்துக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் — கடைசி இந்துவும் வெட்டிச் சாய்க்கப்படும் வரை.

  மன்னித்துவிடுங்கள், தாயுமானவன்! என் வயிற்றெரிச்சலும், ஆற்றாமையும் தாங்காமல் புலம்பித்தள்ளி விட்டேன்!

  (Nothing personal. It is the anger arising out of impotence to save innocent Hindu martyrs, who are falling victims to …….!!!!!?????)

  தேவசேனாபதி முருகன்தான் இப்படிப்பட்ட “உண்மைக்” கொலையாளிகளிடமிருந்து “பாவப்பட்ட” இந்துக்களைக் காத்தருள வேண்டும்!

 5. தமிழகத்தில் காவல்துறை கை நீட்டி காசு வாங்குவதை மட்டுமே தனது பிரதான கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் .
  ரோடு ரோடாக இரு சக்கர , நான்கு சக்கர , மற்றும் லாரி,ட்ராவல்ஸ் பஸ்கள் இவர்களிடம் கையேந்திப் பிச்சை எடுப்பது மட்டுமே இவர்களது கண்ணும் கருத்துமான வேலையாக இருக்கிறது.
  கொலை கொள்ளை எல்லாம் நடந்து முடிந்த பின்னால் எவனாவது ஒரு பிக் பாக்கட் ஆசாமியைப் பிடித்து அவன் மேல் அந்தக் கேசைத் திணித்து அலைய விட்டு விடுவார்கள்.
  இந்து முன்னணி பிரமுகர்கள் என்றாலே அது முஸ்லிம் பயங்கரவாதிகளின் வேலைதான் என்பது அனைவருக்குமே தெரியும்.அவர்களைப் பிடித்து கேசைப் போட்டால் அப்புறம் இந்தக் காசு வாங்கும் காவல்துறைக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
  ஏதோ நாலு காசை வாங்கினோமா ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்போமா என்று இருப்பதை விடுத்து இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க தயாரில்லை நமது காவல் துறை.அதற்குத் தகுந்த தில்லான அதிகாரிகளும் இல்லை இங்கே.
  ரொம்ப வற்ப்புறுத்தினால் உயிரை இழந்த தலைவரைப் பற்றி இவர்களே இல்லாததும் பொல்லாததுமான சந்தேகங்களை பரப்பி விட்டு கேசையே திசை திருப்பி விடுவார்கள்.இதுதான் இதுவரை நடந்துள்ளது.
  தமிழகக் காவல்துறை சர்வதேச ரேஞ்சில் இருப்பதெல்லாம் விஜயகாந்த்,சூர்யா படங்களில்தான்.அதைப் பார்த்து விட்டு நம்மூர் காவல்துறையை நினைத்துக் கொண்டிருந்தாள் அது நமது அறியாமையைத் தவிர வேறில்லை………தாமரை.

 6. இந்து முன்னணி ஜீவராஜைக் கொன்றது அவரது மனைவியே!

  சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்

  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவா என்ற ஜீவராஜ் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடினார்கள். இந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட ஜீவாவின் மனைவி அய்யம்மாளை (31) நேற்று இரவில் போலீசார் கைது செய்தனர்.

  பரபரப்பு தகவல்கள்

  அவரிடம் நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

  இந்து முன்னணி பிரமுகர் ஜீவாவும், அவருடைய மனைவி அய்யம்மாளும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி என்பவரை, ஜீவா 2–வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்புதான் ஜீவாவுக்கும், அய்யம்மாளுக்கும் இடையே வாழ்க்கையில் புயல் வீசியது. கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் அய்யம்மாள், ஷர்மிளாதேவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் ஜீவா வசித்து வந்தார்.

  சமீப காலமாக 2–வது மனைவி ஷர்மிளாதேவியுடன் சேர்ந்து அய்யம்மாளை ஜீவா துன்புறுத்தி வந்தாராம். இதனால் உள்ளூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு அய்யம்மாள் சென்றுவிட்டார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

  கழுத்துஅறுத்துக்கொலை

  நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு வெளியே ஜீவா படுத்து இருந்தார். அவருடைய 2–வது மனைவி ஷர்மிளாதேவி வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர்.

  நள்ளிரவில் அங்கு வந்த அய்யம்மாள், கணவர் படுத்து இருந்த படுக்கையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவியதுடன், ஜீவாவின் முகத்திலும் மிளகாய் பொடியை வீசியுள்ளார். பின்னர் அரிவாள்மனையால் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கிடையே சற்று நேரத்தில் ரத்தவெள்ளத்தில் ஜீவா பிணமானார்.
  நாடகமாடினார்

  அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று காலையில் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல் கணவரின் வீட்டுக்கு வந்த அய்யம்மாள், கணவரின் உடலை பார்த்து கதறி அழுது நாடகமாடினார்.
  போலீசார் விசாரணைக்கு பின்பு அய்யம்மாள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், கணவரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது.

  2–வது மனைவியுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக அய்யம்மாள் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

  தகவலுக்கு நன்றி
  newsalai.com

  நல்லவேளையாக குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இல்லை என்றால் கண், காது, மூக்கெல்லாம் வைத்து பல அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார்கள். பல அரசு பஸ்கள் உடைக்கப்பட்டிருக்கும். ஜீவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  இனி இந்து முன்னணி இராம கோபாலன் பண்ணும் காமெடியை பார்ப்போம்.

  சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு வேலை செய்கிறதா? என்ற சந்தேகத்தை இந்தக் கொலை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட கொடூர குற்றச் செயல்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குச் செல்கிறதா? என்பதும் தெரியவில்லை.

  தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த படுகொலைகளில் காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது.

  இதற்கு காவல் துறையும், அரசும் பதில் சொல்லாமல் இருக்கலாம், ஆனால், மக்கள் தங்களது எதிர்ப்பை உரிய நேரத்தில் பதிவு செய்வார்கள்.இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்கிறது.

  காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் அது பேராபத்தாகிவிடும்.அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்பதற்காக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்பவர்களிடம்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்தும்கூட நமது அரசியல்வாதிகள் வாய் மூடி மெளனியாக இருக்கிறார்கள்.

  இனியும் இது தொடர்ந்தால் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

  சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

  -தினமணி

  சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டவராம். கட்டிய மனைவிக்கு துரோகம் பண்ணி விட்டு வேறொரு பெண்ணோடு சல்லாபித்துக் கொண்டு குடி போதையில் இருப்பது தான் இராம கோபாலனின் அகராதியில் சமுதாய சேவை போலும்.

  Posted by சுவனப் பிரியன் at 4:29 AM
  Labels: இந்துத்வா, சமூகம், தமிழர்கள், தமிழ்நாடு, தீவிரவாதம்

  https://suvanappiriyan.blogspot.com/2014/07/blog-post_6.html

 7. தாமரை!

  //தமிழகத்தில் காவல்துறை கை நீட்டி காசு வாங்குவதை மட்டுமே தனது பிரதான கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் .
  ரோடு ரோடாக இரு சக்கர , நான்கு சக்கர , மற்றும் லாரி,ட்ராவல்ஸ் பஸ்கள் இவர்களிடம் கையேந்திப் பிச்சை எடுப்பது மட்டுமே இவர்களது கண்ணும் கருத்துமான வேலையாக இருக்கிறது.
  கொலை கொள்ளை எல்லாம் நடந்து முடிந்த பின்னால் எவனாவது ஒரு பிக் பாக்கட் ஆசாமியைப் பிடித்து அவன் மேல் அந்தக் கேசைத் திணித்து அலைய விட்டு விடுவார்கள்.
  இந்து முன்னணி பிரமுகர்கள் என்றாலே அது முஸ்லிம் பயங்கரவாதிகளின் வேலைதான் என்பது அனைவருக்குமே தெரியும்.அவர்களைப் பிடித்து கேசைப் போட்டால் அப்புறம் இந்தக் காசு வாங்கும் காவல்துறைக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
  ஏதோ நாலு காசை வாங்கினோமா ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்போமா என்று இருப்பதை விடுத்து இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க தயாரில்லை நமது காவல் துறை.அதற்குத் தகுந்த தில்லான அதிகாரிகளும் இல்லை இங்கே.//

  அழகிய மலரின் பெயரை வைத்துக் கொண்டு இப்படி அபாண்டமாக பொய்களை பின்னூட்டங்களாக இடலாமா?

  குடிகாரர்: மனைவி குழந்தைகள் இருக்க வேறொரு பெண்ணை சின்ன வீடாக செட்அப் செய்து கொண்டு சொந்த மனைவியை அடித்து துன்புறுத்தியவர்: இதனால் கோபமடைந்த முதல் மனைவி அறுவாளை எடுத்து குடி போதையில் இருக்கும் போது கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறார். இது அவரது முதல் மனைவி பொலீஸாரிடம் கொடுத்த வாக்கு மூலம். இவ்வளவு தெளிவாக தெரிந்தும் முஸ்லிம்களின் மீது பழி போடுவதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும்.

  இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்.

 8. விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஜீவராஜை அவரது முதல் மனைவியே அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முதல் மனைவியான அய்யம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
  வராஜுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பெயர் அய்யம்மாள். 2வது மனைவி பெயர் ஷர்மிளா. இவர்களிடம் விசாரித்தபோது அய்யம்மாள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் கொலை செய்தார் என்பது உறுதியானது.
  னது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினசரி குடித்து விட்டு என்னிடம் சண்டை பிடிப்பார்.
  இந்து முன்னணி means drank & munk boys basically ramagopalan his big fan of vijaya kanth

 9. சுவனப்பிரியன் அவர்களே,

  இந்து முன்னணி ஜீவராஜ் கொலையை அவர் மனைவி செய்துள்ளார் என்பது சரி. இப்போது ஈராக்கில் கணக்கற்ற மசூதிகளை வெடி வைத்தும், புல்டோசர் வைத்து இடித்தும் தரை மட்டமாக்கும் பணியை செய்யும் தீவிரவாதிகள் யாருங்க ? இந்த காலித்தனத்தை செய்யும் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளைப் பற்றி வாய்மூடி மவுனம் காப்பது தான் அமைதி வழியாக்கும் ? கேவலம்.

 10. சுவனப்பிரியன்

  அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் இஸ்லாம் தழைக்கட்டும் என்று பொருள்.
  அலைக்கும் அஸ்ஸலாம் என்றால் அப்படியே, தழைக்கட்டும் இஸ்லாம் என்று பொருள் என்ற உண்மையை நான் போட்டுடைத்தற்கு, அரபி இலக்கணம் பேசிய நீங்கள் அதற்கப்புறம் காணவே இல்லையே !

  ////பாரத முஸ்லீம்கள் விஷயத்தில் இஸ்ரேல் தலையிடக்கூடாது தெரிகிறது. இவ்வாறு மறுமுனையிலிருந்து பயங்கரவாதிகளுக்கு மறுமுனை பாகிஸ்தான் வகுப்பு நடத்தியது. உரையாடலில் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொன்னார்கள். இம்முனையில் இருந்த பயங்கரவாதியும் சரி, சரி, செய்கிறோம் என்று பதிலளித்தார்கள். சலாம் ஆலேகும், ஆலேகும் சலாம் மரியாதைகளுடன் இந்த நரிமான் ஹவுஸ் உரையாடல் முடிகிறது.///

  மேற்கூறிய உரையாடல் மும்பையில் தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட தாக்குதல்கள், யூத ரப்பி மீது தாக்குதல், ஆகியனவற்றை கசாப் குழுவினர் நடத்திக் கொண்டிருக்கையில் பாகிஸ்தானிலிருந்த அவர்களது தலைவர்களிடம் பேசிய பேச்சுக்களின் பதிவுகள். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்கள், இதில் அரபி இலக்கணம் கூறி உங்களால் திசை திருப்ப முடியாது.

  நீங்கள் சொல்வது போல “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றால் “அமைதி உண்டாகட்டும்” என்பது உண்மையாகவே பொருளாக இருந்தால் படுகொலை செய்து கொண்டிருக்கும்போது எவராவது “அமைதி உண்டாகட்டும்” என்று சொல்வாரா? உண்மையை பலகாலம் மறைத்து விடமுடியாது. பரஸ்பர வாழ்த்தே இஸ்லாமியர்கள் மத்தியில் மதம் சார்ந்தது மட்டுமே. இந்த உண்மையை வெளிப்படையாக ஏற்கும் நேர்மைத் திறன் இப்போது இருக்கும் எந்த முஸ்லிமிடமும் இல்லை.

  இல்லை அமைதி என்ற சொல்லுக்கே உங்கள் அரபி அகராதி இலக்கணத்தில் குண்டு வெடிப்பும் கொலைகளும் என்ற பொருள் இருக்கிறதா?

 11. உயர்திரு ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

  தகவலுக்கு மிக்க நன்றி.
  என் உணர்ச்சிப்பெருக்கின் காரணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
  தமிழ் இந்து இணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.
  நீங்கள் செய்தியை வெளியிட்ட ஆதங்கம் புரிகிறது. அடுத்தடுத்து நடந்த கொலைகள் நம்மை நிதானம் இழக்கச் செய்தது ஒரு அவலமே!

  உயர்திரு தாயுமானவன் அவர்களே,
  எனது எள்ளல் (sarcasm )தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக மிகவும் வருந்துகிறேன். தங்களின் நிதானம் தேவையான ஒன்றுதான்!

 12. திரு கதிரவன்!

  //இப்போது ஈராக்கில் கணக்கற்ற மசூதிகளை வெடி வைத்தும், புல்டோசர் வைத்து இடித்தும் தரை மட்டமாக்கும் பணியை செய்யும் தீவிரவாதிகள் யாருங்க ? இந்த காலித்தனத்தை செய்யும் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளைப் பற்றி வாய்மூடி மவுனம் காப்பது தான் அமைதி வழியாக்கும் ? கேவலம்.//

  இந்த பதிவானது ஈராக் தீவிரவாதத்தைப் பற்றியது அல்ல. ஜீவராஜை கொன்றது அவரது மனைவி என்ற உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

  அடுத்து ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய போராளிகள் தங்கள் நாட்டுக்குள் புகுந்த அந்நிய சக்திகளை விரட்ட களத்தில் உள்ளார்கள். நமது நாட்டிலும் வெள்ளையர்களை விரட்ட ஆயுதம் ஏந்தியவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்றுதான் சொல்லுவோம்.

  அதிலும் 42 செவிலியர்களை அவர்களின் கற்புக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் நமது இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்த அந்த மனிதாபிமானத்தை சற்று இங்கு நினைவு கூறுங்கள்.

  ‘அந்த போராளிகள் நோன்பிருந்தார்கள். நாங்கள் இந்துக்கள் என்று தெரிந்து கொண்டு அந்த இக்கட்டான நிலையிலும் எங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். எங்களை சகோதரிகள் என்றே அழைத்தார்கள். எந்த குறையும் இல்லாமல் எங்களைக் கவனித்துக் கொண்டார்கள்’ என்று அந்த செவிலியர்கள் டிவியில் பேட்டி கொடுத்ததை பார்க்கவில்லையா?

  அந்த போராளிகள் இடிப்பது தர்ஹாக்களைத்தான். இஸ்லாமிய நம்பிக்கைப் படி யாருக்கும் உயரமான சமாதிகளை கட்டி வழிபாடு நடத்துவது பெரும் குற்றமாகும். ஷியாக்கள் அதனை அதிகமாக செய்வார்கள். இது குர்ஆனுக்கு மாற்றமானது. முகமது நபிக்கு கூட உயரமாக சமாதி எழுப்பப்படவில்லை. எனவே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தர்ஹாக்களைத்தான் இடித்தார்கள். இஸ்லாமிய பார்வையில் அது தவறில்லை. குர்ஆனை நன்கு விளங்கிய ஷியாக்கள் இதனை வரவேற்கவே செய்வார்கள். நமது நாட்டிலும் தர்ஹாக்களில் நடைபெறும் மூடப் பழக்கங்களை இன்று வரை கண்டித்தே வருகிறோம்.

 13. //////நாங்கள் இந்துக்கள் என்று தெரிந்து கொண்டு அந்த ////// அவர்களாது பெயர்களைப் பார்த்தால் ஆவர்கள் இந்துக்களாக தெரியவில்லையே! அனைவரும் கிறிஸ்தவர்கள் தானே!
  //////அவர்களின் கற்புக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் நமது இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்த அந்த மனிதாபிமானத்தை சற்று இங்கு நினைவு கூறுங்கள்//////. முஸ்லிம்கள் மனிதாபிமானத்தை பற்றி பேசுவது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நைஜீரியாவில் இளம் பள்ளி மாணவிகளை (320) யாரும் கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் அடைத்துவைத்தும் தினம் தினம் குண்டு வைத்து குறைந்தபட்சம் 10 பேரையாவது கொல்லும் (செய்தித்தாளை பாருங்கள்) தீவிர வாதிகள் உண்மையில் இறக்க குணம் படைத்தவர்கள்தான்.சந்தேகமே இல்லை.

  ஜீவராஜ் விவகாரம் உண்மையாக இருக்கலாம். மறுக்கவில்லை. அதற்காக (((ஆனைக்கு அர் என்றால் பூனைக்கு புர் என்பது போல ))) சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையை கூட அவரது மனைவிதான் கொன்றார் என்று கூறபோகிறீர்களா? எதோ ஒன்று தப்பு ஆகிவிட்டால் வானத்திற்கும் பூமிக்கும் எகிறி எகிறி குதிக்கிறீர்களே!.

  ///////இஸ்லாமிய பார்வையில் அது தவறில்லை.//////// ஆமாம். உங்கள் மதத்தின் பார்வையில் நீங்கள் செய்யும் எதுவுமே தப்பில்லை. எதையுமே இவர்கள் குண்டு மூலம்தான் பேசுவார்கள். வாய்மூலம் பேசவே மாட்டார்கள்.

 14. //////குறைந்தபட்சம் 10 பேரையாவது கொல்லும் (செய்தித்தாளை பாருங்கள்) தீவிர வாதிகள் உண்மையில் இறக்க குணம் படைத்தவர்கள்தான்.சந்தேகமே இல்லை//// –சிறு விளக்கம்::—. குறைந்தபட்சம் 10 பேர் என்பது மாணவிகளை அல்ல. அந்த நாட்டிலுள்ள மற்றவர்களை.

 15. தாயுமானவன் சொல்வதை நான் ஆதரிக்கிறேன். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எடுத்த எடுப்பிலேயே கொலையாளிகள் இன்னாராகத்தான் இருக்கமுடியும் என்று நமது யூகங்களை பரப்பிவிட்டு இல்லையென்று நிரூபணமானால் தலைகுனிய நேரும் அவலம் வேண்டாம். கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று கண்டனத்தை பதிவு செய்வதோடு முதலில் நிறுத்திக்கொள்வோம். யாரென்று நிரூபணமானால் மேற்கொண்டு பேசலாம்.

  இன்னொரு வேண்டுகோள் : கட்டுரைக்கு தொடர்பில்லாதவற்றை இங்கே உரையாடவேண்டாமே !

 16. திரு .அரிசோனன் ……

  நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பது முறையாகாது… இங்கு வெளியாகும் தங்களின் கட்டுரைகளில் இருக்கும் தமிழுக்கு என்றுமே நான் ரசிகன். உணர்ச்சி மேலிடு என்பது எல்லோருக்கும் இருப்பது தானே. ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்து முன்னணியிலும், ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்கள் யாரும் தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டவர்கள் கிடையாது. அனைவரும் கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் போன்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் தான். உண்மையான சேவகர்கள் அனைவரும் எழுபதுகளிலேயே காலவதி ஆகி விட்டார்கள்.

  தொழில் போட்டியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, எதிர் தரப்பில் இருந்து தன்னை காத்து கொள்ள இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். அவர்கள் செய்யும் அட்டுழியங்களை பற்றி மேற்படி அமைப்பின் தலைவர்களும் கண்டுகொள்ளவதில்லை. அவர்களுக்கு புரவலர்களாக இருந்து புரந்து காப்பதற்கு பணம் கொடுத்தால் போதும். நகரில் ஒரு முக்கிய பொறுப்பையும், பதவியையும் கொடுத்து விடுவார்கள். எதார்த்தத்தில், மேற்படி இந்து முன்னணி.ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன.

 17. தாயுமானவன்

  அரிசோனன் எழுதியது அனைத்தையும் விட்டு விட்டு நீங்கள் உணர்ச்சி மேலீட்டால் மன்னிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டீர்களே! அண்மையில் கூட நான் எழுதியதை நீங்கள் முழுமையாகப் படித்துப் பொருள் கொள்ள வில்லை.

  உங்கள் தமிழ்ப் பற்றுக்கும், சிவபக்திக்கும் என்று உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆயினும் கூட ஒரு வித முன்-தீர்மானத்துடனே (pre-determined mind, pre-judged mind- bias as to what the other person’s view would be) நீங்கள் இங்கே சொல்லப்படும் கருத்துக்களை அணுகுகிறீர்கள், அதனால்தான் எனது உள்பட்ட சில மறுமொழிகள் மீது ஒருவித வேகத்துடனே பதில்மொழி பதிகிறீர்கள் என்ற தோற்றம் எனக்குப் படுகிறது. அது தவறாக இருப்பின் பெரிதும் மகிழ்வேன்.

  ///இப்போது இந்து முன்னணியிலும், ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்கள் யாரும் தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டவர்கள் கிடையாது. அனைவரும் கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் போன்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் தான். உண்மையான சேவகர்கள் அனைவரும் எழுபதுகளிலேயே காலவதி ஆகி விட்டார்கள்.///

  உங்களது இந்தக் கருதுகோளில் அப்பட்டமான முன்-தீர்மானம், பாரபட்சம் தெரிகிறது. உங்களால் எப்படி இந்த அளவுக்கு அத்தனைப் பேரையும் ஒதுக்கித் தள்ள முடியும்? லட்சக்கணக்கான பேரின் தகுதி, நேர்மை குறித்து ஒரே வரியில் தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நீங்கள் என்ன இறைவனா ?

  இவர்களில் எத்தனைப் பேரை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்? நேருக்குநேர் எத்தனைப் பேரைச் சந்தித்திருப்பீர்கள்? எத்தனைப் பேருடன் அவர்தம் பண்பு, நேர்மை குறித்து அறியும் அளவுக்கு நேரடித் தொடர்பு கொண்டிருப்பீர்கள்?

  நான் அறிந்த எந்த ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினரும் நீங்கள் சொன்ன கட்டப் பஞ்சாயத்து, இன்னபிற வரையறைக்குள் இல்லை.

  பெரியவர் ராம கோபாலனை நீங்கள் சந்தித்டிருக்கிறீர்களா? அவர் கட்டப் பஞ்சாயத்து செய்பவரா? நீங்கள் விரும்பினால் அவரிடம் அழைத்துச் செல்கிறேன். சந்தியுங்கள். பிறகு சங்கம், முன்னணி குறித்த உங்கள் பார்வை மாறும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

  ஏன் சொல்கிறேன் என்றால், சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன்னர் அவர் வரும்போது உடனிருந்தவர்கள் ஜெய்காளி கோஷம் அதிர வந்து புகை வண்டியில் ஏறினார். அவரிடம் சென்று அவரது நடவ்டிக்கைகளை காரசாரமாக எதிர்த்து ஒன்றரை மணி நேரம் வாதிட்டேன். அன்று எங்கள் வாதம் முடியவில்லை, ஏனெனில் உடன் இருந்த எஸ். எஸ். ஆருக்கு ( அவரும் அருகில் இருந்த இருக்கையில் இருந்தார்) தூங்க வேண்டும்.

  பிறகு பத்தாண்டுகள் அவர் அன்று சொன்ன கருத்துக்க்ளை நடைமுறை வாழ்வில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் செய்வதைக் கவனித்தேன். அவர் சொன்னவை அனைத்தும் அனுபவ பூர்வமான உண்மை என்பதை உணர்ந்தேன். மீண்டும் அவரைச் சந்திக்க இறைவன் அமைத்த ஒரு வாய்ப்பு வந்தது. அவரிடம் முன்போலவே வலியச் சென்று முன்னர் அவர் சொன்ன அவரது கருத்துக்களை ஏற்கிறேன் என்றேன்.

  இரு கேள்விகள்:

  1. ஆடிட்டர் ரமேஷை இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் கொன்றார்கள் என்பது விசாரனையில் தெரிந்து விட்டது. ஆடிட்டர் ரமேஷ் அப்பழுக்கில்லாதவர். அவர் குறித்து மனச்சாட்சியுடன் உங்கள் கருத்து ரவுடி என்பதுதானா?

  2. சங்கரன் கோவில் கொலையில் கொன்றவர் இன்னர் என்பதை விசாரணைக்கும் முன்னால் எழுதி சி.பி.ஐ. ஆக வேண்டாம் என்றீர்களே? கொலையுண்டவர் குறித்து செத்த செய்தி வரும் அதே நாளிதழில் அவர் தீயவர் என்பது போன்ற செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிடலாமா? அவர்கள் சி.பி.ஐ ஆகலாமா?

 18. சுவனப்பிரியன்

  எதையாவது எழுதிவிட்டு உணமையை இங்கே ஒருவர் சொல்லி நீங்கள் மாட்டிக் கொண்டால் அந்த விஷயத்திலிருந்து ஓடி விடுகிறீர்களே? இது குறித்து குரான் எதுவும் சொல்லி இருந்தால் அதைச் சொல்லுங்களேன்?

 19. சுவனப் பிரியன்

  ///அதிலும் 42 செவிலியர்களை அவர்களின் கற்புக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் நமது இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்த அந்த மனிதாபிமானத்தை சற்று இங்கு நினைவு கூறுங்கள்.///

  போகோ ஹராம் கடத்திப் போன நூற்றுக் கணக்கான இளம்பெண்களின் கற்பு குறித்து உங்கள் சர்டிபிகேட் என்ன?

 20. //////அனைவரும் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் போன்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் தான்//////.

  நீரென்றால் நுரை என்ற குறை உண்டு நெல்லென்றால் புல் என்ற குறை உண்டு. அதற்காக நீரும் நெல்லும் முழுக்க முழுக்க ஒதுக்கப் படவேண்டியவை என்று சொல்வீர்களா? நெல்லிலிருந்து புல் அகற்றப்படவேண்டும் என்று சொல்லுங்கள் அதனை ஏற்று கொள்கிறேன். ஆனால் நெல்லே அழிக்கப்படவேண்டும் என்று நியாயமானவன் sorry தாயுமானவன் சொல்வது சரியல்ல.

  ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று கூறுவதும் தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கூறுவதும் ஒன்று ஆகும். நித்தியானந்த சாமி ஒரு மோசமானவர் என்பதால் சாமிகளே (விவேகானந்தர் உட்பட) மோசமானவர்கள் என்று கூற முடியுமா? தலித் இனத்தில் ஒருவர் வசதியாக இருந்தால் தலித்துகள் அவர்கள் அனைவரும் வசதியானவர்கள் என்று முடிவு கட்ட முடியுமா? அல்லது முஸ்லிம்களில் ஒருவர் மசூதி அருகில் பிச்சை எடுப்பதால் அவர்கள் அனைவரும் பிச்சைகாரர்கள்தான் என்று முடிவு கட்ட முடியுமா? ஆகவே ஒன்றை வைத்து ஒரு குழுவை பற்றி கருத்து சொல்லக் கூடாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கே எடுபடாது.

 21. அப்பட்டமாக கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் கருத்துக்கள் இங்கு தேவையா? பாங்கை கொள்ளை அடிப்பவர்களும், பெண்களைக் கடத்திக்கொண்டு போகிறவர்க்ளும் சுந்தந்திரப் போராட்ட வீரர்களாம். அவர்கள் எவ்வளவு பேரைக் கொன்றாலும் தவறில்லை. இதில் கற்பிற்கு வேறு சர்டிபிகேட். மாற்றுக் கருத்துக்களை வரவேற்பதில் தவறில்லை. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே தீங்கு விளைவிப்பவர்களின் நஞ்சுக் கருத்து இங்கு தேவையா?

 22. அன்புள்ள சுவனப்பிரியன்,

  பிறர் வழிபடும் இடங்களை வெடிவைத்து தகர்ப்பது ஒரு காட்டுமிராண்டித்தனம், மேலும் உங்கள் பதிலில் , வசதியாக ,மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன, வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன என்பதை மூடி மறைக்கிறீர்கள். இதுவரை ஆறு பெரிய மசூதிகள் ஈராக்கில் புல்டோசரைக் கொண்டு இடிக்கப்பட்டும், புல்டோசரால் இடிக்க முடியாத பெரிய கட்டிடமாக உள்ள மசூதிகள் வெடிமருந்து வைத்தும் தகர்த்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன என்று செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன..

  இந்தியாவில் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற தர்கா உள்ளது. அங்கு சென்று தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் மாதம் ஒருமுறை சென்று வழிபடுகிறார். மக்கள் புனிதமாக கருதி வழிபடும் தர்காக்களை இடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? கொடுஞ்செயலை நியாயப்படுத்தி எழுதும் கேவலத்தை நீங்கள் செய்யலாமா ? 10-க்கும் மேற்பட்ட தர்காக்கள் இடிக்கப்பட்டதை நியாயப் படுத்தி எழுதியுள்ளீர்கள். உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார். நீங்கள் வழிபடும் மசூதியை வேறு நம்பிக்கை உடைய ஷியா அல்லது பிற பிரிவினர் இடித்தால், இப்படி ஆதரித்துக் கொண்டிருப்பீர்களா ? நீங்கள் சொல்வது உண்மையான இஸ்லாம் அல்ல என்றே நான் நினைக்கிறேன். சன்னிக்கள் இஸ்லாத்தில் ஒரு பகுதியே. ஷியாக்கள், அஹமதியாக்கள், சுபிக்கள், போஹ்ராக்கள் எல்லாம் சேர்ந்தது தான் இஸ்லாம். காலம் உங்களுக்கு தக்க பதில் வழங்கும்.

 23. திரு அடியவன்!

  //1. ஆடிட்டர் ரமேஷை இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் கொன்றார்கள் என்பது விசாரனையில் தெரிந்து விட்டது. ஆடிட்டர் ரமேஷ் அப்பழுக்கில்லாதவர். அவர் குறித்து மனச்சாட்சியுடன் உங்கள் கருத்து ரவுடி என்பதுதானா?//

  ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களே. கோர்ட்டில் கைதானவர்கள் ‘குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி போலீஸார் துன்புறுத்துகின்றனர்’ என்று கூறியதை மறந்து விட்டீர்களா? அவர்கள் இன்றும் விசாரணை கைதிகளே! இன்னும் குற்றம் நிரூபிக்க முடியாமல் காவல் துறை கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. எனவே ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் வெளி வரட்டும். அதற்குள் நீங்களே அந்த வழக்குக்கு நீதிபதியாகி விட வேண்டாம்.

  //பெரியவர் ராம கோபாலனை நீங்கள் சந்தித்டிருக்கிறீர்களா? அவர் கட்டப் பஞ்சாயத்து செய்பவரா? நீங்கள் விரும்பினால் அவரிடம் அழைத்துச் செல்கிறேன். சந்தியுங்கள். பிறகு சங்கம், முன்னணி குறித்த உங்கள் பார்வை மாறும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.//

  நீங்கள் பெரியவராக மதிக்கும் ராம கோபாலனின் மேடைப் பேச்சுக்களை நீங்கள் கேட்டதுண்டா? அனைத்தும் வன்முறையை தூண்டக் கூடிய பேச்சுக்கள். ஆபாசமான அர்ச்சனைகள். முழு பேச்சும் இஸ்லாத்தையும், கிறித்தவத்தையும் தாக்கும் பேச்சுக்களாக இருக்கும். அவர் பேச்சில் இந்து மதத்தின் பெருமைகள் எதுவும் இருக்காது. வெறும் வசை மொழிகளே! விவேகானந்தரும், கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும், மறைந்த காஞ்சிப் பெரியவரும் இந்து மத மேன்மைக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளனர். அவர்களை இன்றும் நான் மதிக்கிறேன். அவர்களோடு ராம கோபாலனை சேர்க்க வேண்டாம். ராம கோபாலன் போன்றவர்களால் இந்து மதத்துக்கு இழுக்கே!

 24. உயர் திரு அரிசோனன் அவர்களே!

  //உயர்திரு ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,
  தகவலுக்கு மிக்க நன்றி.
  என் உணர்ச்சிப்பெருக்கின் காரணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

  இதில் தவறாக நினைக்க ஒன்றுமேயில்லை சகோதரரே! உங்கள் நிலையில் நான் இருந்தாலும் அவ்வாறுதான் பின்னூட்டமிட்டிருப்பேன். ஏனெனில் ஆரம்பத்திலிருந்து இந்து முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டால் உடனே காவல் துறை முதற் கொண்டு நமது பத்திரிக்கைகள் வரை கையை காட்டுவது இஸ்லாமிய இளைஞர்களை நோக்கித்தான். எனவே தான் உங்களுக்கும் முதலில் இஸ்லாமியர்கள் மேல் சந்தேகம் வந்தது. அந்த சந்தேகம் தற்போது நிவர்த்தியானது கண்டு மகிழ்ச்சி. உங்களின் பல கட்டுரைகளும், பின்னூட்டங்களும் நடுநிலையாக இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி.

  இனி திரு தாயுமானவன் எழுதிய பின்னூட்டத்தையும் பார்ப்போம்.

  //ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்து முன்னணியிலும், ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்கள் யாரும் தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டவர்கள் கிடையாது. அனைவரும் கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் போன்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் தான். உண்மையான சேவகர்கள் அனைவரும் எழுபதுகளிலேயே காலவதி ஆகி விட்டார்கள்.
  தொழில் போட்டியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, எதிர் தரப்பில் இருந்து தன்னை காத்து கொள்ள இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். அவர்கள் செய்யும் அட்டுழியங்களை பற்றி மேற்படி அமைப்பின் தலைவர்களும் கண்டுகொள்ளவதில்லை. அவர்களுக்கு புரவலர்களாக இருந்து புரந்து காப்பதற்கு பணம் கொடுத்தால் போதும். நகரில் ஒரு முக்கிய பொறுப்பையும், பதவியையும் கொடுத்து விடுவார்கள். எதார்த்தத்தில், மேற்படி இந்து முன்னணி.ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன.//

  திரு தாயுமானவனின் கருத்துக்களோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன். ஒரு சில நல்லவர்கள் இந்து முன்னணியிலும், ஆர்எஸ்எஸிலும் இருக்கலாம். ஆனால் இன்று பெரும்பாலனவர்கள் தங்களின் தொழிற் போட்டியை சமாளிக்கவும், தங்களின் எதிரிகளை சமாளிக்கவும், சமூக விரோத செயல்களிலிருந்து தற்காத்துக் தற்காத்துக் கொள்ளவும் ஒரு புகலிடமாக இந்து முன்னணியை தேர்ந்தெடுக்கின்றனர். இதுதான் யதார்த்தம். கோபத்தில் எதிர் தரப்பினர் இந்த தலைவர்களின் மேல் கை வைத்தால் ஒட்டு மொத்த பழியும் இஸ்லாமியர்கள் மேல் விழுகிறது. முக்கிய குற்றவாளிகள் இதனால் தைரியமாக வெளியில் உலவுகின்றனர்.

  ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன்னிடம் எதிராளி கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாதவன்தான் ஆயுதத்தை கையிலெடுப்பான். குர்ஆனைப் பற்றியோ நபி மொழிகளைப் பற்றியோ எந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கான பதில் இஸ்லாமியர்களிடத்தில் உண்டு. எனவே இந்து முன்னணியோ ராம கோபாலனோ அல்லது அவரது தொண்டர்களோ முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்துக்களிலும் 80 சதமான பேர் ராமகோபாலனை புறக்கணித்தே வருகின்றனர். அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக உறவு முறை சொல்லிக் கொண்டு சகோதர வாஞ்சையோடுதான் இந்துக்களும், முஸ்லிம்களும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்து முன்னணி தலைவர்களை கொல்ல வேண்டும் என்பது எந்த முஸ்லிமின் நோக்கமும் அன்று. எங்காவது ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தால் அது தொழில் போட்டியால் வந்ததாகத்தான் இருக்கும். மதத்தின் நோக்கத்தில் இது போன்ற கொலைகளை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இஸ்லாமியர்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

  எங்காவது தீவிரவாத செயல்களில் எந்த முஸ்லிமாவது ஈடுபட்டால் அவனை முதலில் காவல் துறையிடம் ஒப்படைப்பதும் முஸ்லிம்களாகத்தான் இருக்கும். கோயம்புத்தூர் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட போது அந்த முஸ்லிம் இளைஞர்களை பிடித்து காவல் துறை வசம் ஒப்படைத்ததும் முஸ்லிம்கள்தான் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

  எனவே அமைதிப் பூங்காவான தமிழகத்தை மேலும் சிறப்புற செய்து இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக மாற்ற இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஒன்றிணைந்து போராடுவோம்.

 25. அன்புள்ள கதிரவன்!

  // அன்புள்ள சுவனப்பிரியன்,
  இந்தியாவில் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற தர்கா உள்ளது. அங்கு சென்று தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் மாதம் ஒருமுறை சென்று வழிபடுகிறார்.//

  அதே ஏ ஆர் ரஹ்மான் ஐந்து வேளை தொழுகையையும் நேரத்தோடு நிறைவேற்றுகிறார். அதை மறந்து விட்டீர்களே! அவர் தர்ஹா மீது கொண்ட பிரியத்தை குர்ஆனை உண்மையாக விளங்கியவுடன் விட்டு விடுவார் என்றே நினைக்கிறேன். இது பற்றி அவருக்கு பல மடல்களும் எழுதியுள்ளேன்.

  //மக்கள் புனிதமாக கருதி வழிபடும் தர்காக்களை இடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? கொடுஞ்செயலை நியாயப்படுத்தி எழுதும் கேவலத்தை நீங்கள் செய்யலாமா ? 10-க்கும் மேற்பட்ட தர்காக்கள் இடிக்கப்பட்டதை நியாயப் படுத்தி எழுதியுள்ளீர்கள். உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார்.//

  தர்ஹாக்களை இடிக்க எனக்கு குர்ஆனும் நபி மொழிகளும் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அதனை தர்ஹாக்களை வணங்கும் அந்த மக்களே உணர்ந்து அதனை அப்புறப்படுத்தும் வரை நாங்கள் பொறுமை காப்போம். இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது! இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம்.

  குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)

  பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

  குர்ஆன் 72:18

  ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

  (ஸஹீஹ் முஸ்லிம்:1662)

  “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
  (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)

  ‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
  (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)

  மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் தர்ஹாக்கள் கட்டுவதையும் அங்கு விழாக்கள் நடத்துவதையும் தடை செய்கின்றன. மக்கள் அறியாமையில் செய்தால் அதனை குர்ஆன், நபி மொழிகளோடு விவாதித்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறோம். இஸ்லாத்தில் தர்ஹாக்களுக்கு இடமில்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி தனி மதமாக அறிவித்துக் கொண்டு அவர்கள் வழிபட்டால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.

  எனவே தர்ஹா விஷயமாக இறைவன் என்னை குற்றம் பிடிக்க மாட்டான் என்று உறுதியாக நான் சொல்கிறேன்.

 26. \\ எனவே ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் வெளி வரட்டும். அதற்குள் நீங்களே அந்த வழக்குக்கு நீதிபதியாகி விட வேண்டாம். \\

  ஜெனாப்-ஏ-அலி

  ஆமாம். சில வாரங்களுக்கு முன்னர் ஹிந்து ஹ்ருதய சாம்ராட் நரேந்த்ரபாய் மோதி அவர்களை நீங்கள் குற்றவாளி என்று சொன்னபோது உங்களுக்கு மனசாக்ஷி கூசவில்லை?

  இது வரை நரேந்த்ரபாய் மோதி மீது குஜராத் கலஹத்திற்காக ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை.

  அனால் அவரை குற்றவாளியாகத் தீர்ப்பளிப்பதற்கு நீங்களே நீதிபதியாகவும் ஆகி தண்டனையை நிறைவேற்றும் போலீஸாகவும் ஆகி விடுவீர்கள்.

  சபாஷ்.

  ப்ராக்யா சிங்க் தாகூர் அவரை குற்றவாளியாக எந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது? அவரை குற்றவாளியாக நீங்கள் சொல்லியுள்ளீர்களா என்று யோசித்துப்பார்க்கவும்?

 27. சுவனப்பிரியன்

  நான் தாயுமானவனுக்கு எழுதியதற்கு நீங்கள் பதில் சொல்கிறீர்கள், இதில் ஒற்றுமை குறித்துப் (அதிகப்) பிரசங்கம் வேறு!

  மும்பையில் இஸ்லாமியக் கசாப் குழுவினர் அப்பாவி மக்களைக் கொன்றுகொண்டிருக்கும் அதே நேரத்தில் தமது பாகிஸ்தான் எஜமான்களிடம் தொலைபேசியில் “அஸ்ஸலாமு அலைக்கும், அலைக்கும் அஸ்ஸலாம்” என்று சொல்லக் காரணம் அதன் பொருள் “இஸ்லாம் தழைக்கட்டும், அப்படியே, தழைக்கட்டும் இஸ்லாம்” என்பதால்தான் என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டேனே?

  நீங்கள் அதை ஏன் கண்டுகொள்ளவே இல்லை? உண்மையை ஒப்புக் கொள்ள நேர்மைத் திறம் வேண்டும். அது உங்களிடம் இல்லை. உங்களுக்கு ஒற்றுமை பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

 28. தாயுமானவன்

  எனது நேரடிக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நேர்மைத் திறம் அற்ற சுவனப்பிரியன் நான் தங்கள் கருத்துக்களுக்குப் பதில் சொன்ன உடன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவதாகவும், இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான் என்று அன்புடன் பழகுவதாகவும் எழுதி இருக்கிறார். அது என்ன அண்ணன் தம்பி உறவு ஆகாது போல, அவர்களுக்கு மாமன் மச்சான் உறவுதான் வேண்டுமாம். என்ன உள் நோக்கமோ, அல்லாவுக்கே வெளிச்சம்!

  இதை நான் உங்களுக்கு ஏன் சொல்கிறேன் என்றால், முஸ்லிம்கள் இப்படித்தான், தாங்கள் செய்யும் அனியாயங்களும் அக்கிரமங்களும் வெளிப்பட்டு விட்டால், கட்டிப் பிடித்து உறவு சொல்வார்கள். தக்கியா என்பது இதுதான். இப்படித்தான் பெர்சியாவிலிருந்து வந்தவர்கள் நமது முன்னோர்களை ஏமாற்றி நாட்டைப் பிடித்துக் கொள்ளை அடித்தார்கள். நாம் ஏமாறக் கூடாது.

  எனக்கும் உங்களுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளில் சுவன்ப் பிரியன் உங்களுக்கு ஆதரவு தருவது போல நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதை உங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.

 29. சுவனப்பிரியன்

  இங்கே வந்து அரிசோனன் தாயுமானவனுக்கு எழுதியது குறித்து என்னென்னவோ சொல்லி, ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மத்தியஸ்தம் செய்வது போன்ற மாய்மாலம் வேண்டாம். நானும் இன்னும் சிலரும், இங்கே உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு நேரிடையாகப் பதில் சொல்லுங்கள்.

 30. திரு. அடியவன்..

  //உங்களது இந்தக் கருதுகோளில் அப்பட்டமான முன்-தீர்மானம், பாரபட்சம் தெரிகிறது. உங்களால் எப்படி இந்த அளவுக்கு அத்தனைப் பேரையும் ஒதுக்கித் தள்ள முடியும்? லட்சக்கணக்கான பேரின் தகுதி, நேர்மை குறித்து ஒரே வரியில் தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நீங்கள் என்ன இறைவனா ?//

  இதற்க்கு இறைவனாகவெல்லாம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர இந்து அமைப்புகளின் செயல்ப்பாடுகளை கூர்ந்து நோக்கினாலே இந்த உண்மை நன்கு புரியும்.

  //லட்சக்கணக்கான பேரின் தகுதி, நேர்மை குறித்து ஒரே வரியில் தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நீங்கள் என்ன இறைவனா ?//

  அடியவரே,இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனியில் முழுவதுமாக சில ஆயிரம் பேர் கூட இருக்க மாட்டார்கள். நீங்கள் இப்படி சொல்வதை மட்டும் மோகன் பகவத் கேள்வி பட்டால் அவ்வளவு தான் உடனே ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை நாக்பூரில் இருந்து சென்னைக்கு மாற்றி விடுவார். அப்புறம் எங்களுக்கு தான் தேவை இல்லாத தலைவலி ஆகி விடும்.

  இறுதியாக ஒன்றை மட்டும் கூறுகிறேன், இந்துத்துவத்தையோ அல்லது இந்துத்துவ அடிப்படை வாத இயக்கங்களையோ விமர்சித்து பேசுவதால் என்னை நீங்கள் ஒரு இந்து அல்லவென்று நினைக்கிறீர்கள் போலும். மன்னிக்கவும் இந்து மதத்தை என் மனதார நேசிக்கிறேன். வடமொழி, தென்மொழி என்கிற பாகுபாடில்லாமல் அதன் அனைத்து இலக்கியங்களையும் நான் மனதார நேசிக்கின்றேன். எம்பெருமான் ஈசனையன்றி பிறிதொரு தெய்வத்தை என் மனதாலும் நினைத்து கூட பார்க்க இயலாது. ஆனால், அதே சமயத்தில் அறநெறி பிறழ்ந்து பிழைப்பு வாதத்தில் முழக்கி திளைக்கும் கூட்டங்களுக்கு எல்லாம் என்னால் “ஜே” போட்டு கொண்டிருக்க முடியாது.

 31. இங்கே கருத்துத் தெரிவித்திருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் தெரிவிப்பது இதுதான்.இந்தக் கொலையில் இவரது உறவினர்களே ஈடுபட்டிருப்பதால் உடனடியாகக் கண்டுபிடித்தது நமது காவல்துறை.இந்தக் குடும்ப விவகாரம் ஊரறிந்ததாக இருந்ததால் கண்டுபிடித்து விட்டார்கள்.ஆனால் பயங்கரவாதிகளால் ஏற்படுகிற உயிரிழப்புகளை எற்படுத்தியவர்களை நம்மூர் காவல்துறை கண்டுபிடித்த செய்தி ஏதாவது உண்டா? ஹிந்து ஹிந்து முன்னணித் தலைவருக்கு (திரு ராமகோபாலன் ) …தங்களது இயக்கத்திற்கு வழிகாட்ட மிகவும் ஒழுக்கமும் போராட்ட குணமும் மிகுந்தவர்களை தேர்ந்தெடுத்து பொறுப்பு வழங்குமாறு வேண்டுகிறேன்.தாமரை.

 32. திரு அடியவன்!

  //மும்பையில் இஸ்லாமியக் கசாப் குழுவினர் அப்பாவி மக்களைக் கொன்றுகொண்டிருக்கும் அதே நேரத்தில் தமது பாகிஸ்தான் எஜமான்களிடம் தொலைபேசியில் “அஸ்ஸலாமு அலைக்கும், அலைக்கும் அஸ்ஸலாம்” என்று சொல்லக் காரணம் அதன் பொருள் “இஸ்லாம் தழைக்கட்டும், அப்படியே, தழைக்கட்டும் இஸ்லாம்” என்பதால்தான் என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டேனே?//

  மும்பை தாக்குதலே அன்றைய அரசியல் சூழலில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசியல் வாதிகளால் செய்யப்பட்ட ஒன்று என்று அரசு அதிகாரி ஒருவர் சமீபத்தில் பெரும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். குஜராத்தில் கசாப் குழுவினர் கடற்கரை மார்க்கமாக வந்த போது அவர்களை அனுமதித்தது யார்? எத்தனையோ வழிகள் இருக்க கசாப் கும்பல் குஜராத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? கடற்கரையை காவல் காக்கும் நம்மவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கசாப்புக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் என்ன பிரச்னை? குறிப்பாக அவரை தீர்த்துக் கட்டியது ஏன்? மோடி கொடுத்த பணமுடிப்பை ஹேமந்த் கர்கரேயின் மனைவி வாங்க மறுத்ததன் பின்னணி என்ன? இதை எல்லாம் ஆராய்ந்து பாருங்கள் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

  இஸ்லாம் என்றாலும் அமைதி என்ற பொருள் வரும் என்று நான் முன்பே சொல்லியுள்ளேன். இதில் மறுக்க என்ன இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே புகலிடம் இன்று இஸ்லாம்தானே! அதையும் வாழ்த்துவதில் என்ன தவறு?

 33. சுவனப் பிரியன்

  திருப்பித் திருப்பி அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். கேள்விக்கு நேரடி பதில் தேவை.

  ஒருபக்கம் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டே தொலைபேசியில் எவனாவது அமைதி உண்டாகட்டும் என்று கூறுவானா? கூறத்தான் முடியுமா? அப்படியானால் அஸ்ஸலாமு அழைக்கும் என்பதன் பொருள் அமைத் உண்டாகட்டும் என்பது அல்ல என்பது நிரூபணம் ஆகிறது. இதை ஒப்புக்க கொள்ள உங்களுக்கு நேர்மைத் திறன் இல்லை.

  குண்டு வைத்தல், படுகொலை செய்தல் இவற்றோடு சேர்ந்த அமைதியின் பொருள் இஸ்லாம் என்பதை நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றால் அது வெட்கக் கேடு.

  மற்றபடி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை, இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அமைதி வழியில் பாகிஸ்தான் முஸ்லிம்களுடன் சேர்ந்து மும்பை குண்டு வெடிப்பு, படுகொலை ஆகிய சதிகளை நடத்தி உள்ளனர்.

 34. தாயுமானவன்

  உங்களை இந்து அல்ல என்று ஒருபோதும் கருதியதில்லை, காரணம் உங்களிடம் நான் காணும் நேர்மைத் திறம். நீங்கள் தமிழ்ப் பற்றாளர், சிவபக்தர் என்பதால் எனக்கு உங்கள் பேரில் மிக்க மரியாதை உண்டென்பதை முன்னரே கூறி இருக்கிறேன். உங்களைப்போலவே எனக்கும் தமிழ் மீது பற்றும், சிவபக்தியும் உண்டு. (உங்களிடமிருந்தி சிறு வேறுபாடு – எனக்குப் பெருமாள், அம்பாள், விநாயகர், முருகன் என்று அத்தனை இறைப் பரிமாணங்களும் ஒன்றே, அனைவர் மீதும் பக்தி உண்டு) உங்களைப் போலவே தமிழ் எனக்கு முதல், பின்னரே சமஸ்கிருதம், இன்ன பிற. எனக்கும் மொழிக் கலப்பில் உரையாடுதல் அவ்வளவு சிறப்பில்லை என்ற சிந்தனை உண்டு. எனக்கும் பிறப்பால் உயர்ச்சி தாழ்த்தல் செய்தலை வெறுக்கும் சிந்தனையும் செயல்பாடும் உண்டு. நமக்குள் வெகு சில எண்ணங்களில் மட்டுமே வேறுபாடு. அவற்றுள் முதன்மையானது, அந்நிய மதச் சதிகார்களின் பரப்புரைக்கு ஏதுவாக ஆர்.எஸ்.எஸ் முதலானவர்களை நீங்கள் ஒட்டு மொத்தமாகச் சாடுவது. எங்கும் எதிலும் குறை நிறை உண்டு. முஸ்லிம்களிலும், கிறிஸ்தவர்களிலும் கூட மிகவும் உத்தமமானவர்கள் நிறையவே பேர் உண்டு. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் தீயவர்கள் என்ற கருத்து எனக்கு இல்லை. ஏதோ சில முஸ்லிம்கள் ஆர்வக் கோளாறாலும், பண ஆசையாலும், தீயோர் பேச்சைக் கேட்பதாலும் இந்த நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதே எனது கருத்தும் ஆகும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய உதவுவது குர்ஆனில் இருக்கும் சில பகுதிகள். சுவனப்பிரியன் போன்ற நமது பாரதச் சகோதர முஸ்லிம்கள் ஆர்வக் கோளாறால் இப்படிப் பேசுகின்றனர் என்பதே எனது கருத்து.

  எப்படி நாம் நமது மறை நூல்களில் இருக்கும் தீண்டாமை/ பிறப்பில் உயர்வு தாழ்ச்சி சொல்லல் கருத்துக்களை புறம் தள்ளி வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்கிறோமோ அப்படி அவர்களும் குர்ஆனில் இருக்கும் “முஸ்லிம் அல்லாதோரைக் கொல்” என்பது போன்ற கருதுகோள்களை நிராகரித்து/ புறம் தள்ளி அறிவிக்கைகளைச் செய்ய வேண்டும். அது நடக்கா விட்டால் தீவிரவாதம் உலகெங்கும் தொடரும்.

  ஒருபுறம் கொன்றுகொண்டே, ஒருபுறம் நூற்றுக் கணக்கான அப்பாவி இளபெண்களைக் கடத்திப் போய்க் கட்டாய மணம் செய்துகொண்டே அஸ்ஸலாமு அழைக்கும், அழைக்கும் அஸ்ஸலாம் என்று முழங்கிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்ளவும் செய்வார்கள்.

 35. தாயுமானவன்
  // எம்பெருமான் ஈசனையன்றி பிறிதொரு தெய்வத்தை என் மனதாலும் நினைத்து கூட பார்க்க இயலாது. //
  அனுதினமும் விழித்ததும், மனமாற, வாயார உரக்கக் கூறும் திருவைந்தெழுத்தே என்வாயில் இருந்து வருகின்ற முதல் சொல் ஆகும்.
  திருச்சிற்றம்பலம்.

 36. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

  //ஒரு சில நல்லவர்கள் இந்து முன்னணியிலும், ஆர்எஸ்எஸிலும் இருக்கலாம். ஆனால் இன்று பெரும்பாலனவர்கள் தங்களின் தொழிற் போட்டியை சமாளிக்கவும், தங்களின் எதிரிகளை சமாளிக்கவும், சமூக விரோத செயல்களிலிருந்து தற்காத்துக் தற்காத்துக் கொள்ளவும் ஒரு புகலிடமாக இந்து முன்னணியை தேர்ந்தெடுக்கின்றனர். //

  நான் இதுவரை முஸ்லிம் சமய நிறுவனங்களைப் பற்றி எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும், அவரது சமயம் உயிருக்கு நிகரானது. மற்ற சமயத்தார் சொல்லும் மாறான கருத்துக்கள் தேவையில்லாத பூசல்களை வளர்க்கும்.

  எனவே, மாற்று சமயத்தினரான தாங்களும் இந்து சமய நிறுவனங்களைப்(ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி) பற்றி கருத்துக் கூறாதீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரண்டும் அரசியல் கட்சிகள் அல்ல.

  அரசியல் கட்சிகளைப் பற்றி நாம் நமது கருத்தை முன்வைக்கலாம், தவறில்லை. நீங்கள் பி.ஜே.பியைப் பற்றி கருத்து தெரிவிக்கலாம், நான் அகில இந்திய முஸ்லீம் லீகைப் பற்றி கருத்து எழுதலாம். அது அரசியல் கருத்தாக இருக்கும்வரை சரிதான்.

  வணக்கம்.

 37. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  \\ எம்பெருமான் ஈசனையன்றி பிறிதொரு தெய்வத்தை என் மனதாலும் நினைத்து கூட பார்க்க இயலாது. ஆனால், அதே சமயத்தில் அறநெறி பிறழ்ந்து பிழைப்பு வாதத்தில் முழக்கி திளைக்கும் கூட்டங்களுக்கு எல்லாம் என்னால் “ஜே” போட்டு கொண்டிருக்க முடியாது. \\

  ஒரு வருஷம் இரு வருஷம் இல்லை கடந்த நாற்பது வருஷங்களுக்கும் மேலாக ஆர் எஸ் எஸ் இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறேன். நான் பிழைப்பு வாதி. சர்வ ஸ்ரீமான்கள் இராம கோபாலன், ஷண்முகநாதன், வன்னியராஜன், வீரபாஹு, பீஷ்மாசார்யா, போன்ற சான்றோர்கள் தமிழகத்தில் பணியாற்றி வருவது ஹிந்துத்வ இயக்கங்களில். எமது வயதொத்த எமது தோழரான……………. எமது குடும்ப நண்பரான …………. இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீ ரமேஷ் ஜி…….. ஸ்ரீ அ.நீ, ஜடாயு போன்றோர் பணியாற்றும் இயக்கம் ஹிந்துத்வ இயக்கம்.

  தீண்டாமைக்கொடுமைக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை செய்து வரும் இயக்கங்கள் ஹிந்து முன்னணி மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கங்கள் மட்டிலுமே. உத்தபுரத்தில் இந்த இயக்கங்களின் அயராத பணியினால் தான் சமூஹ நல்லிணக்கமும் ஹிந்து ஒற்றுமையும் சாத்யமாயிற்று. இதை ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் அறநெறி பிறழ்ந்து பிழைப்பு வாதத்தில் முழுகித் திளைக்கும் செயல்பாடு என்று எண்ணினாலும் கூட சமூஹத்திற்கும் ஹிந்து ஒற்றுமைக்கும் பணியாற்ற வேண்டிய ஹிந்து இயக்கங்கள் இந்தப் பணிகளை நிச்சயமாகச் செய்து வரும். நீங்கள் இக்கொடுமைகளுக்கு எதிராக பணியாற்றி இருக்க மாட்டீர்கள் என்று நாக்கூசாமல் நான் விஷயம் தெரியாமல் சொல்ல மாட்டேன். ஆனால் சமூஹ நல்லிணக்கப்பணிகளில் ஈடுபடுபவர்களை ஒட்டு மொத்தமாக நாக்கில் நரம்பில்லாமல் ஒட்டுமொத்தமாகப் பிழைப்பு வாதிகள் என்று ஆரோபிப்பது சிவகுருநாதப்பெருமானுக்கும் அடுக்காது சிவப்பரம் பொருளுக்கும் அடுக்காது.

  இந்தப் பணிகளுக்கு ஸ்ரீ தாயுமானவன் போன்ற அன்பர்களிடமிருந்து “ஜே” பெற வேண்டும் என்பதற்காக ஹிந்து இயக்கங்ளில் நாங்கள் பணியாற்றவில்லை. இவை எமது சமூஹக் கடமை என்பதற்காகவே நாங்கள் ஹிந்து இயக்கங்களில் பணியாற்றுகிறொம். இந்த அவலங்கள் ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்படும் வரை தொடர்ந்து பணியாற்றி வருவோம். ஹிந்துஸ்தானம் முழுதும் பற்பல இடங்களில் செய்யும் பணிகளில் சமூஹ நல்லிணக்கம் கண்டு ஆங்காங்கு வெற்றியும் பெற்றுள்ளோம்.

  தங்கள் வீடு வாசல்களைத் துறந்து பொறியியலாளர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டெண்டுகள் போன்ற கல்வித்திறம் பெற்ற இளைஞர் சமுதாயத்தினர் தம் முழு வாழ்க்கையும் தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வாய்ப்புத் தரும் இயக்கங்கள் ஹிந்துத்வ இயக்கங்களான ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து முன்னணி போன்றவை. குறிப்பிட்ட நபர்களின் மீது குற்றமிருந்து குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கதே. ஆனால் தேச ஒற்றுமைக்கும் ஹிந்து ஒற்றுமைக்கும் அயராது பாடுபடும் இயக்கங்களின் மீது ஆதாரமில்லா அத்யாரோபங்களை அள்ளி வீசும் போக்கை எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமானின் வெற்றிவேல் கருவறுக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  தமிழின் மீதும் சைவத்தின் மீதும் உங்களுக்கு உள்ள பற்றில் பெருமதிப்பு உள்ளவன் சிறியேன். ஆனால் சமீப காலங்களாக நான் வாசித்து வரும் உங்களது உத்தரங்களில் தமிழின் மீதும் சைவத்தின் மீதும் அக்கறையின்மையையும் அப்பட்டமான தேச விரோதத்தின் பாற்பட்ட பிரிவினைவாதப் போக்கையும் உணர்ந்து வருகிறேன். ஓரிரு வரிகளில் கடாக்ஷம் செய்யப்பட வேண்டிய விஷயம் இல்லை. விரிவாகப் பகிர வேண்டிய விஷயம். தமிழ் மீதும் சைவத்தின் மீதும் அக்கறையற்ற போக்கு சம்பந்தமான வ்யாசம் நிறைவு பெற்று விட்டது. அதில் பிரிவினைவாத அவலப்போக்கும் பேசப்பட்டுள்ளது. இரண்டும் தனித்தனியே விரிவாகப் பேசப்பட வேண்டிய விஷயமாதலால் இரண்டு வ்யாசங்களாக சமர்ப்பிக்கும் முயற்சியில் உள்ளேன்.

  வேலும் மயிலும் சேவலும் துணை

 38. சுவனப்பிரியன்

  குர்ஆன் 72:18 சொல்படி எப்போது தாஜ் மகாலை – பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற கப்ரை – அதன் மீது கட்டப் பட்ட கட்டடத்தை – சமப்படுத்தப் போகிறீர்கள்? அதற்கான திட்டம் என்ன?

 39. \\ எனவே அமைதிப் பூங்காவான தமிழகத்தை மேலும் சிறப்புற செய்து இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக மாற்ற இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஒன்றிணைந்து போராடுவோம். \\

  ஜெனாப் சுவனப்ரியன்,

  முஸ்லீம் மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்களில் மிகப்பெரும்பான்மையோர் ஹிந்துக்களொடு கரம் கோர்த்து தேசப்பணியாற்றுவதில் மிகுந்த ஊக்கம் கொண்டுள்ளனர். ஹிந்துத்வத்தின் ஆதாரமே பன்முகத்தன்மை.பன்முகத்தன்மை ஹிந்துஸ்தானத்தில் நிலவுவதன் காரணம் ஹிந்துத்வம்.

  ஹிந்துஸ்தானத்தின் ஒற்றுமையில் , சமூஹ நல்லிணக்கத்தில் மற்றும் பன்முகத்துவத்தில் நாட்டமுள்ள ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் க்றைஸ்தவர்கள் ஒன்றாகவே தான் உள்ளோம். வஹாபிய அடிப்படைவாதம் / பயங்கரவாதம் இஸ்லாத்தின் பன்முகத்துவத்துக்கு அபாயகரமானதா ஹிந்துஸ்தானத்தின் தேச ஒற்றுமைக்கும் சமய ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதா என்பது கவலையளிக்கும் விஷயம்.

  ஷியா, பரேல்வி சுன்னி மற்றும் அஹ்மதியா முஸ்லீம்களுக்கு வஹாபிய சுன்னி பயங்கரவாதத்திலிருந்து அபாயம் வராமலிருக்க ஹிந்துஸ்தானத்தில் சட்ட ரீதியாக வழிவகை உண்டு. ஹிந்து இயக்கத்தைச் சார்ந்தவர்களின் தார்மீக ஆதரவும் உண்டு. வஹாபிய சுன்னி இஸ்லாம் ஹிந்து, க்றைஸ்தவ மற்றும் இஸ்லாத்தின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்காத வரை அதுவும் இஸ்லாமிய மற்றும் ஹிந்துஸ்தானத்தின் பன்முகத்தின் ஒரு கூறாகவே கருதப்படும்.

  \\ இஸ்லாத்தில் தர்ஹாக்களுக்கு இடமில்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி தனி மதமாக அறிவித்துக் கொண்டு அவர்கள் வழிபட்டால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை. எனவே தர்ஹா விஷயமாக இறைவன் என்னை குற்றம் பிடிக்க மாட்டான் என்று உறுதியாக நான் சொல்கிறேன். \\

  அரேபிய தேசங்களில் ஷியா முஸ்லீம்கள் வழிபடும் மஸ்ஜிதுகளை வெடி வைத்துத் தகர்க்க எந்த அரக்கன் அனுமதி கொடுத்துள்ளான்?

  ஜெனாப் சுவனப்ரியன் வாழ்வது சவூதியாக இருக்கலாம். அந்த ப்ரதேசங்களில் வஹபிய சுன்னிகள் அல்லாதோரது மஸ்ஜிதுகள் வெடி வைத்துத் தகர்க்கப்படலாம். பாகிஸ்தானத்தில் அஹ்மதியாக்கள் இஸ்லாமியர் அல்ல என்று சட்டம் இருக்கலாம்.

  \\ தர்ஹாக்களை இடிக்க எனக்கு குர்ஆனும் நபி மொழிகளும் அனுமதி கொடுத்துள்ளது \\

  இது ஹிந்துஸ்தானம். இங்கு தர்க்கா ஷெரீஃபுகளில் வழிபடும் பரேல்வி சுன்னி முஸ்லீம்களும் இஸ்லாமியர்களே. அஹ்மதியாக்களும் இஸ்லாமியர்களே. போஹ்ரா முஸ்லீம்களும் இஸ்லாமியர்களே. இவர்கள் வழிபாடு முறைகளில் வேறுபடுவதால் இஸ்லாமியர்கள் இல்லை என்று வஹாபிய சுன்னி அடிப்படைவாதப்படியோ வஹாபிய சுன்னி பயங்கரவாதப்படி ஒப்புக்கு கருதிக்கொள்ளலாம். ஆனால் இப்படிப்பட்ட அடிப்படை பயங்கரவாதம் ஹிந்துஸ்தானத்தின் சட்டதிட்டங்களுக்கு ஒத்து வராத விஷயம். ஹிந்துஸ்தானத்தின் சட்டத்திற்கு ஒத்து வராத மற்றும் இஸ்லாமிய சமூஹத்தினரின் இடையே கலஹத்தை உண்டு பண்ணும் வஹாபிய சுன்னி பயங்கரவாதம் அத்து மீறி ஷியா, பரேல்வி சுன்னி மற்றும் அஹ்மதியாக்களை இஸ்லாமியர் இல்லை என்று துஷ் ப்ரசாரம் செய்தால் ஹிந்துஸ்தானமுழுதும் அது களையறுக்கப்படும்.

  அஹ்மத் ராஜா கான் பரேல்வி சாஹேப் ஸ்வதந்த்ரத்துக்கு முன் வஹாபிய சுன்னி இஸ்லாத்திற்கு எதிராக மக்காவின் உலமாக்களிடமிருந்து ஃபத்வா வாங்கியதைப் பற்றி வாசித்திருக்கிறேன்.

  என்னுடன் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதம் பகிரும் பரேல்வி சுன்னி முஸ்லீம்கள் தாங்கள் முஸ்லீம்களே இல்லை என்ற படிக்கு வஹாபிய சுன்னி அடிப்படைவாதிகள் இகழ்வதை காட்டமாக மறுத்துள்ளனர்.

  எமது ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் வஹாபிய சுன்னி முஸ்லீம்களுக்கு மட்டிலும் இல்லை. ஷியா, பரேல்வி சுன்னி, அஹ்மதியா,போஹ்ரா (ஷியா) என்று அனைத்து இஸ்லாமிய சஹோதரர்களுக்கும் உரித்தானது. ஹிந்துஸ்தானத்தில் சட்டப்படி அமைந்த சர்க்காரின் படி இஸ்லாத்தின் அனைத்து பிரிவினரும் இஸ்லாமியரே. இதை மறுக்க முயன்று துஷ்ப்ரசாரம் செய்வது சமூஹ நல்லிணக்கத்துக்கு குந்தகம் செய்யும் செயற்பாடு..

  குதா ஹாஃபீஸ்

 40. தர்காவை வழிபடுவோர் முஸ்லிம்கள் அல்ல என்று கூறுகிறார். மார்க்க அறிவு இல்லாதவர்கள் மற்றும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் என்று எல்லாரையும் கழித்து பார்த்தால் கடைசியில் இந்த “புண்ணியவான்” ஒருவர்தான் உண்மையான முஸ்லிமாக இருப்பார் போல தெரிகிறது.

  இந்துமதத்தில் சாமியையே செருப்பால் அடித்தார் ஒரு சின்ன புத்திகொண்ட “பெரியார்(??!!!)” ஆனாலும் அவரை எந்த இந்துவும் கொலை செய்யவேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தர்காவை வழிபடுகிறார்களாம்! அது ஒரு பெரிய மன்னிக்கமுடியாத பாவம் என்று அவர்களை குண்டுவைத்து கொல்வது என்பது ஒரு அமைதி மதத்திற்கு அடையாளமா?

  அது சரி, உங்கள் கடவுள் “””சர்வ வல்லமை படைத்தவர்””” என்று சொல்லுகிறீர்கள். அவரிடம் சொல்லி அந்த தர்காவை வழிபடுவோர் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதுதானே! அதைவிட்டு அவர்களை கொன்று குவிப்பது என்ன நியாயம்? உங்கள் குர்ஆனில் தர்கா வழிபடுவோரை கொல்லுங்கள் என்று எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது வசனத்தில் கூறப்பட்டுள்ளது என்று கூறமுடியுமா?

 41. அன்புள்ள ஹாநெஸ்ட் மேன்,

  கடவுள் சர்வ சக்தி படைத்தவர் என்றோ, எங்கும் நிறைந்தவர் என்றோ அவர்கள் கருதுவதில்லை. கடவுளை நம்பாததால் தான், கத்தி வெடிகுண்டு என்று தூக்கிக் கொண்டு பிறரை கொல்ல அலைகிறார்கள். தர்காவில் வழிபடுவது ஒரு உயர்நிலை தியானம் ஆகும். இந்த மடையர்களுக்கு எங்கே புரியப்போகிறது ?

  இவர்கள் சொல்லும் முக்கியப் பொய் என்ன தெரியுமா ? கடவுள் உலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்தான் என்பது தான். அது உண்மையானால், வஹாபி தீவிரவாத இஸ்லாம் இல்லாத மற்ற மதங்களையும், கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஏன் கடவுள் படைக்கவேண்டும் ? அதற்கு இவர்களிடம் எவ்வித பதிலும் இல்லை. ரெபெக்கா நினான் எழுதிய இஸ்லாம் ஒரு மதமல்ல என்ற நூலின் மதிப்புரை alisina.org தளத்தில் உள்ளது . அதனைப் படித்தால் இவர்களைப் போன்ற குழப்பவாதிகளுக்கு தெளிவு பிறக்கும். கூமட்டைகள் திருந்தாது.

 42. //அது உண்மையானால், வஹாபி தீவிரவாத இஸ்லாம் இல்லாத மற்ற மதங்களையும், கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஏன் கடவுள் படைக்கவேண்டும் ? //

  இக்கேள்வியை பொதுவாக எல்லா மதங்களுக்கும் வைக்கலாம். ஏன் இராமனைப்படைத்த கடவுள் இராவணனையும் படைத்தான்? ஏன் இயேசுவைப்படைத்த கட்வுள் யூதாசையும் படைத்தான்? ஏன் சுன்னிகளைப்படைத்த கடவுள் வஹாபிகளையும் படைத்தான்?

  கடவுள் படைக்கவில்லை இருவரையுமே. இருவரும் – இந்துமதக்கருத்தின்படி – தங்கள் தங்கள் கர்மவினைப்படி தோன்றி மறைகிறார்கள் எனலாம். இறைவன் மனிதனைப் படைத்தான். மனிதன் தன்னை உருவாக்கிக்கொள்கிறான்: நல்லவனாக கெட்டவனாக அவன் தன்னை உருவாக்கிகொள்கிறான். பிஹெவியரிஸ்ட்ஸ் சொல்வது: ஒரு மனிதன் எப்படி உருவாகிறான் என்பது அவன் சூழலைப்பொறுத்தது. ஜெனிட்டிக்ஸ் சொலவது: அவனிடம் வந்த ஜீன்ஸ்களினால். இதை இந்துமதமும் – நால்வகை வருணமாக்கி பிறப்போடு இணைக்கிறது.

  இப்படி விஞ்ஞானமும் மதமும் இணைந்து பேசி, கடவுள் செய்யவில்லை என்கிறது.

  என்னைப்பொறுத்தவரை: கடவுளுக்கும் க்ரடிட் கொடுக்கலாம். அதாகப்பட்டது, யுனிஃபார்மிட்டி என்பது கடவுளின் திட்டமன்று. வெரைட்டிதான் அவர் வைத்தது. அதன் படி நல்லவர்கள் மட்டுமே அல்லது தீயவ்ர்கள் மட்டுமே இருக்கக்கூடாது என்பது இறைவன் திட்டம்.

  இராவணன் இல்லாவிட்டால், இராமன் ஒரு மனித குல விளக்கு எனபதற்கு தேவையில்லை. இராமாயணமே கிடையாது நல்லதும் கெட்டதும் ஒப்பீடுகளினால் மட்டுமே வரும். இராமன் மட்டுமே இருந்திருந்தால், அவன் குல விளக்கா, குலக் கோடாரியா என்பதை எப்படி சொல்லமுடியும்?

  மனிதன் உலகில் இருக்கும் வரை நன்மையும் தீமையும் அவனால் விளைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். The struggle between Good and Evil is eternal. Both are equally powerful.

 43. திரு. கிருஷ்ண குமார் அவர்களுக்கு…

  தாங்கள் 40 வருடமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து சேவை செய்து வருவதாக கூறி இருக்கிறீர்கள். ஆகவே,எதற்காக இல்லை என்றாலும் உங்களின் 40 ஆண்டுக்கால உழைப்பை கருதியாவது நான் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

  //தீண்டாமைக்கொடுமைக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை செய்து வரும் இயக்கங்கள் ஹிந்து முன்னணி மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கங்கள் மட்டிலுமே..//

  அப்படி எத்தனை கொடுமைகளுக்காக உங்களுடைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அயராது போராடியது என்று கூற முடியுமா? ஏனென்றால், நீங்கள் சொல்வது போல் போராடி இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் சாதிகளே இல்லாத சமுதாயம் உருவாகி இருக்கும். இன்னும் தமிழ் நாட்டில் எத்தனை கிராமங்களில் இரட்டை குவளை முறை இருக்கிறது என்றாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தெரியுமா? இன்னும் எத்தனை ஊர்களில் கோவில் திருவிழாவின் தேரோட்டத்தின் போது ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களால் தாழ்த்த பட்டவர்களின் தெருக்களுக்குள் தேர் போவதை தவிர்ப்பதவாது தெரியுமா? இதெல்லாம் தலைவர் மானனிய மோகன் பகவத்ஜிக்கு தெரியாது என்றால் ராமகோபலனிடம் கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள்.

  உத்தபுரம் தீண்டாமை சுவர் விவகாரம் என்பது நாடு முழுவதும் கொந்தளித்து பேசப்பட்ட ஒன்று. அதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும், தலித்திய இயக்கங்களும், மனித உரிமைகள் நல அமைப்புகளும், போராடி பெற்ற ஒரு வெற்றி அது. இந்த வெற்றிக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அடிப்படை வாத இயக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

  //ஆனால் சமூஹ நல்லிணக்கப்பணிகளில் ஈடுபடுபவர்களை ஒட்டு மொத்தமாக நாக்கில் நரம்பில்லாமல் ஒட்டுமொத்தமாகப் பிழைப்பு வாதிகள் என்று ஆரோபிப்பது …………..//

  ஆர்.எஸ்,எஸின் சமுக நல்லிணக்கத்தை தான் நாங்கள் தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த சாதி கலவரத்திலேயே பார்த்தோமே.. இரு வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக தாழ்த்த பட்டவர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்க பட்ட பொழுது தாங்கள் கூறும் சமுக நல்லிணக்க அமைப்புகள் அனைத்தும் எங்கே சென்றன? ஒரு வேளை, அதன் நிர்வாகிகள் பொறியியலாளர்களாகவும், பட்டய கணக்காளர்களாகவும் இருப்பதால் தங்கள் பணிகளை கவனிக்க சென்று விட்டார்களோ!!! இழவு வீட்டிற்க்கு துக்கம் விசாரிக்க கூட சென்று வரவில்லை.

  இதை எல்லாம் விடுங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற விடயத்தில் தங்களின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன? அதை முதலில் கூறுங்கள். அர்ச்சகர் பயிற்சியை முடித்த அந்த 206 மாணவர்களின் நிலை இனி என்ன.

  அவர்களும் தமிழ்நாடு அரசின் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்க பட வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு என்றால், அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற தீர்மானத்தை எதிர்த்து நீதி மன்றத்திற்கு சென்று தடை வாங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாசாரியார்களையும், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தையும் பிடரியில் அறைந்து முதலில் வழக்கை திரும்ப பெற சொல்லி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க முன் வர சொல்லுங்கள்.

  //ஒரு வருஷம் இரு வருஷம் இல்லை கடந்த நாற்பது வருஷங்களுக்கும் மேலாக ஆர் எஸ் எஸ் இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறேன். நான் பிழைப்பு வாதி//

  நிச்சயமாக இல்லை. உங்களை பிழைப்பு வாதி என்று கூறினால் ஏழேழு பிறவிக்கும் எனக்கு நற்பேறு கிடைக்காது.. ஒன்றை மட்டும் என்னால் உறுதி பட கூற முடியும் “தவறான இடத்தில் இருக்கும் மிகச் சரியான(நல்ல) மனிதர்” தாங்கள்.

  ஐயன்மீர், தங்களிடம் இது போன்று தர்க்கம் செய்வதற்கு எனக்கு மனம் வரவில்லை. தங்களின் வழிக்காட்டுதல் எப்போதும் எனக்கு தேவை. நீங்களோ வள்ளிக்கு வாய்த்த பெருமான் என்னை கருவறுக்க வேண்டும் என்று சாபம் இடுகிறீர்கள். நான் என்ன ராஜபட்சேவை போன்று வேலவனின் மக்களான தமிழர்களையா கருவறுத்தேன். அல்லது கருவறுத்தவனுக்கு பதவி ஏற்ப்பு விழாவில் ராஜோபசாரம் கொடுத்து விருந்து வைத்தேனா. என்ன செய்வது, என்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த வேறு எனக்கு வழி தெரியவில்லை. மன்னிக்கவும். இன்று பிரதோஷ நன்னாள் எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்க வேண்டும். என் பிரார்த்தனையும் அதுவே. திருச்சிற்றம்பலம்.

 44. திரு. அரிசோனன்

  //எனவே, மாற்று சமயத்தினரான தாங்களும் இந்து சமய நிறுவனங்களைப்(ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி) பற்றி கருத்துக் கூறாதீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரண்டும் அரசியல் கட்சிகள் அல்ல.//

  சுவனப்ரியனிடம் தாங்கள் இது போன்று கூறுவது ஜனநாயக பண்பிற்கு விரோதமான ஒன்று. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அடிப்படை வாத அமைப்புகள் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. அதே போன்று தங்களுக்கும் இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் இருக்கிறது. இங்கு மட்டுமில்லை, திரு.சுவனப்பிரியன் அவர்களின் வலை தளதிர்க்கே சென்று கூட இசுலாமிய அமைப்புகளின் மீதான தங்களின் விமர்சனங்களை நீங்கள் கடுமையாக முன்வைக்கலாம். நிச்சயம் அதற்க்கு அவர் பதில் சொல்வார்.

  ஒருவேளை மாற்று மதத்தை சேர்ந்தவர் மற்ற மதத்தின் இயக்கங்களை பற்றி கருத்து தெரிவிக்க கூடாது என்று நினைத்தால், நீங்கள் முதலில் வலியுறுத்த வேண்டியது சுவனப்ப்ரியனுக்கு அல்ல தமிழ்ஹிந்து தளத்தின் கட்டுரையாளர்களுக்கு தான். ஏனெனில் அவர்கள் தான் வகை தொகை இல்லாமல் இசுலாத்தின் அனைத்து கூறுகளையும் விமரிசித்து தள்ளி இருக்கிறார்கள். ஒரு சின்ன வேறுப்பாடு அவர்கள் கட்டுரையின் வாயிலாக கூறி இருக்கிறார்கள், சுவனப்பிரியன் மறுமொழியின் மூலமாக கூறுகிறார் அவ்வளவே. ஆகவே, சுவனப்ரியன் விமர்சிப்பதில் தவறில்லை. அது அவரின் ஜனநாயக உரிமை.

 45. தாயுமாநவன் போன்றோர் உண்மையை உணர வேண்டாம் என தீர்மானம் எடுத்துள்ளதை போல் தெரிகிறது

  ஊசி மூஞ்சி மூட கதை ஞாபகம் வருகிறது

  தனஞ்சயன்

 46. நெற்றிப் பொட்டில் அறைந்தமாதிரி நன்றாக சொன்னீர்கள் கதிரவன் well said . இவைகளுக்கு ஸ்ரீமான் க்ருஷ்ணகுமார் போன்றவர்கலால்கூட புரியவைக்க முடியாது. ஒரேயடியாக தீர்ப்புதான் வழங்கமுடியும். . இந்த தளத்தில் பதியப்படும் செய்தி சாராத சனாதன மத உண்மைகளை திரு சுவனப்பிரியன் வாசித்து புரிந்துகொள்வார் என்றால் மீண்டும் அவர் தனது தாய் மதத்திற்கு வந்துவிடுவார். ஆனால் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 47. BALA SUNDARAM KRISHNA on July 10, 2014 at 6:21 pm

  ” இக்கேள்வியை பொதுவாக எல்லா மதங்களுக்கும் வைக்கலாம் “-

  இந்த கேள்வியை எல்லா மதங்களுக்கும் பொதுவாக வைக்க முடியாது திரு பாலசுந்தரம் அவர்களே. ஏனெனில் ‘ வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் ” -இறைவனே இருக்கிறான் என்பது இந்துமதம். ஆனால் இவை வேறு , இறைவன் என்பவன் வேறு என்பது பிறமதங்களின் கருத்தாக உள்ளது.

  எனவே குறிப்பிட்ட சில மதங்களுக்கு மட்டுமே இந்த கேள்வியை வைக்க முடியும்.

  இந்து என்றால் all inclusive ஆகும். சைத்தானைப் படைத்தவனும் அல்லது சைத்தானாக இருப்பவனும் கடவுள் தான். இராமனாக இருந்தவனும், இராவணனாக இருந்தவனும் அவனே என்பது தான் உண்மையின் சிறப்பு.

 48. பேரன்பிற்குரிய ஸ்ரீ தாயுமானவன்,

  சம்வாதம் என்பது ஆழ்ந்த கருத்துக்களின் பரிமாற்றம் என்பது என் புரிதல். ஒருவரது கருத்துக்கு ஏட்டிக்குப் போட்டியான பதில் கருத்துப் பகிர்தல் என்ற படிக்கு அல்ல.

  தாங்கள் பகிர்ந்த பல விஷயங்களில் சங்கம் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களின் நிலைப்பாடு என்ன என்பது இந்த தளத்தில் விவரமாகப் பகிரப்பட்டுள்ளது.

  தமிழகம் மட்டிலும் என்ன முழு ஹிந்துஸ்தானத்திலும் ஹிந்து ஒற்றுமை மற்றும் மதங்களைக் கடந்து மனிதர்களை கலாசார ரீதியில் இணைக்கும் பணி இன்னமும் துரிதமாகவும் இன்னமும் முனைப்புடனும் செய்யப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

  தமிழகத்தில் இன்னமும் இந்தப்பணி சிறக்க வேண்டும் என்பது என் அவா. வயிற்றுப்பாட்டுக்காக தமிழகத்தை விட்டு ப்ரதேசாந்திரம் போன எனக்கு thamizhagaththil இப்பணியில் அயராது ஈடுபடும் ஹிந்துத்வ இயக்க சஹோதரர்களிடம் விக்ஞாபனம் செய்யக்கூட அருகதை இல்லை என அறிவேன்.

  அன்பரே. கருவறுக்கப்பட வேண்டியது என்பது பிழையான கருத்துக்கள் மட்டிலும் தான். எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமான் கருணையே உருவானவன் என்பது தாங்கள் அறியாததா.

  பின்னிட்டும் ……

  அமிர்தகவித் தொடை பாட அடிமையெனக்கருள்வாயே…………..

  என்று சம்பந்தப்பெருமானைப்போலக் கவிபாட கயிலைநாதனை இறைஞ்சும் எங்கள் வள்ளல்பெருமான் சொன்ன சொல் என்ன பொய்யாகியும் போய்விடுமோ?

  சிவனடியார்கள் தம்மை சுடுசொல் சொல்வோரிடமும் கூட வினம்ரதையுடனேயே பழக விழைவார்கள்……. அப்படித்தான் நாமும் பழக வேண்டும்…….என்று உங்கள் உத்தரம் பதிவு செய்கிறதே

  \\ இன்று பிரதோஷ நன்னாள் எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்க வேண்டும். என் பிரார்த்தனையும் அதுவே. திருச்சிற்றம்பலம். \\

  உத்தரபாரதத்தில் ஒரு மூலையில் இருக்கும் எனக்கு…….. தமிழகத்தில் இருந்த போது……. ப்ரதோஷத்தில் சாயரக்ஷையில் சிவாலயம் சென்று வேதமந்த்ரங்களையும் திருமுறையும் திருப்புகழும் கேட்ட நினைவும் ஆயாசப்பெருமூச்சும் வருகிறது. ஆனால் சிவனடியார்களின் பெருங்கருணையால் மனதாற சிவாலய வைபவங்களை நினைக்க வைப்பது எங்கள் வள்ளல் பெருமானின் அசீம க்ருபை போலும்.

  (பி.கு : ஸ்ரீ தாயுமானவன் அவர்களின் தமிழில் கலப்பு காணப்பட்டால் அதை விட்டு விடுவோம் என்று நினைக்கலாகாது. மண்டகப்படி தொடரும். ஆனால் என்ன கொஞ்சம் பக்ஷபாதத்துடன். இலவம் பஞ்சால் செய்த கழியால் ஓங்கி அடிக்க நிச்சயம் முனைவேன் 🙂 )

 49. இன்னும் எத்தனை கொலைகள் ? ஸ்ரீ,விவ்கனந்த சுவாமிஜியின் கனவு எப்போது நிறைவேறும்? கொலையாளிகளின் லட்சியம் நிறைவேறுமா? கடவுள் வேடிக்கை பார்கிறார? வேதனையாக உள்ளது ,,,,,,, ஆன்ம சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்…. தேச பக்தர்களுக்கு அச்சுறுதால்,,,,,,இதே தேர்தல் சமயத்தில் நடந்தால்,,,,,, இப்போ சாவு செய்பவர்களுக்கு எந்த தலைவர்களும் இவர்களை பார்க்க ,,, துக்கம் விசாரிக்க ,,, குடும்ப ஆறுதல் சொல்ல யார் ? உடகம் எங்கே? எல்லோரும் ஔர் நிறை ,,,, ஒஅர் விலை ?

 50. உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கு,

  ////எனவே, மாற்று சமயத்தினரான தாங்களும் இந்து சமய நிறுவனங்களைப்(ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி) பற்றி கருத்துக் கூறாதீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரண்டும் அரசியல் கட்சிகள் அல்ல.//

  சுவனப்ரியனிடம் தாங்கள் இது போன்று கூறுவது ஜனநாயக பண்பிற்கு விரோதமான ஒன்று. //

  நான் ஜனாப் சுவனப்பிரியனிடம் அப்படிக் கேட்டுக்கொள்வதை ஜனநாயகப் பண்பிற்கு விரோதமான ஒன்றாக நினைக்கவில்லை. அவர் ஒன்றைச் செய்யக்கூடாது என்று ஆணை இடுவதுதான் ஜனநாயகப் பண்பிற்கு விரோதமானது.

  நாம் யாரிடம், என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு சம்மதிப்பதும், மறுதலிப்பதும் அவர்கள் விருப்பம்.

  அதே மாதிரி மற்ற சமயங்களைப் பற்றி நாம் இகழ்வதும் சரியானதாக எனக்குப் படவில்லை. அவ்வாறு செய்வது தேவை இல்லாத காழ்ப்பு உணர்ச்சியைத்தான் வளர்க்கும். நம் சமயத்திற்கு எதிராக நடக்கும் செயல்களைக் கண்டிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
  அதனால்தான் உண்மை தெரியுமுன்னர் நான் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய சொற்களுக்காகத் தங்களிடமும், ஜனாப் சுவனப்பிரியனிடமும், என் அவசரத்திற்கு வருந்தி எழுதினேன்.

  //அதே போன்று தங்களுக்கும் இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் இருக்கிறது. இங்கு மட்டுமில்லை, திரு.சுவனப்பிரியன் அவர்களின் வலை தளதிர்க்கே சென்று கூட இசுலாமிய அமைப்புகளின் மீதான தங்களின் விமர்சனங்களை நீங்கள் கடுமையாக முன்வைக்கலாம். //

  இஸ்லாமிய சமய அமைப்புகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் இஸ்லாமைப் பற்றி அறிந்தவன் அல்ல. அது எனக்குத் தேவையும் இல்லை, அதற்கான நேரமும் எனக்கு இல்லை.

  அதேபோன்று, இந்து சமயத்தைப்பற்றி அறிய முற்படாது, இந்து சமய அமைப்புகளை மற்ற சமயத்தார் தேவை இல்லாத கருத்துக்களைக் கூறி, சமயச் சண்டைகள் வளரும் வாய்ப்பினை உருவாக்குவதும் எனக்கு உடன்பாடில்லை.

  உமையொருபாகனின் அருள் தங்களுக்கு நிறைவதாக!

 51. உயர்திரு தாயுமானவன்,

  நீங்கள் விரும்பியவண்ணம் ஜனாப் சுவனப்பிரியனிடம் ஒரு கோரிக்கை எழுப்ப ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. இது உலக நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி அவரது கருத்தை அறிந்து கொள்வதுதான்.

  ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

  இன்று CNN செய்தியில் ஒன்று சொல்லப்பட்டது.
  ஈராக் நாட்டின் வட எல்லையில் இருக்கும் மோசூல் என்ற நகரில் உள்ள கிறித்தவர்களுக்கு ISIS என்ற ஒரு அமைப்பு ஒரு இறுதி எச்சரிக்கை செய்துள்ளது. அந்த எச்சரிக்கை இதுதான்:

  1. கிறித்தவர்கள் இஸ்லாம் சமயத்தைத் தழுவ வேண்டும். ஒரு வரியையும் கட்ட வேண்டும்.
  2. இல்லாவிட்டால் மோசூல் நகரத்தைவிட்டு வெளியேறவேண்டும்.
  3. மேற்கொண்ட இரண்டில் ஒன்றைச் செய்யாவிட்டால் வாளுக்குப் பதில் சொல்லவேண்டும் (will have to answer the sword),

  “வன்முறையே வரலாறாய்” என்ற வரலாற்றுக் கட்டுரையை, ஜனாப், நீங்கள் மருதளித்தீர்கள்.. இஸ்லாம் கத்தி முனையில் மதமாற்றம் செய்யவில்லை என்றீர்கள். மேற்கண்ட செய்தி பற்றி உங்கள் கருத்து என்ன? வரலாறு தொடர்கிறதா? அருள்கூர்ந்து அவர்கள் இஸ்லாமின் வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறாதீர்கள். உங்கள் வலையத்தில் ISIS அமைப்பின் செயலைக் கண்டனம் செய்யுங்கள் என்று முஸ்லிம் உடன்பிறப்பான உங்களை, இந்து உடன்பிறப்பாக — மத நல்லிணக்கத்தைக் குறிக்கோளாகக்கொண்டு — தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

  வணக்கம்.

 52. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் மீது கண்டனம் தெரிவிப்பதாக இருந்தால், ஜனாப் சுவனப்பிரியனின் தலை இருக்குமோ இருக்காதோ என்ற அச்சம் இருக்காதா ? ஏனெனில் ஐ எஸ் ஐ எஸ் என்பது அமெரிக்கர்களின் பாக்கெட்டில் இருக்கும் சவூதி அரேபிய அரசின் உதவியுடன் மறைமுகமாக வளர்க்கப்பட்ட திருட்டுப் பிள்ளை தான் இந்த வன்முறை தீவிரவாத வெறிக்கும்பல். அந்த வெறிக்கும்பலை நமது ஜனாப் சுவனப்பிரியன் அவர்கள் கண்டித்து அறிக்கைவெளியிட்டால், இங்குள்ள பல பல தவ்ஹீதுக்களுக்கும் பதில் சொல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் மவுண்ட் ரோடில் புகுந்து போனவன் வந்தவனுடைய டூ வீலர்களையும், போர் வீலர்களையும் கொளுத்தும் காட்டுமிராண்டிகள்.

  எனவே , ஜனாப் சுவனப்பிரியன் அவர்களிடம் தாங்கள் விடுத்த கோரிக்கை அவரால் நிறைவேற்ற முடியாத ஒன்று. அவர் போன்ற நிலையில் தான், கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். பாவம் அவர்களை நினைத்து தலையில் அடித்துக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை. எங்கோ இருக்கும் அவர்களின் கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

 53. உயர்திரு கதிரவன் அவர்களுக்கு,

  //ஐ எஸ் ஐ எஸ் என்பது அமெரிக்கர்களின் பாக்கெட்டில் இருக்கும் சவூதி அரேபிய அரசின் உதவியுடன் மறைமுகமாக வளர்க்கப்பட்ட திருட்டுப் பிள்ளை //

  சவூதி அரேபியா ulakmuzஹுவதையும், அமெரிக்காவையும் சேர்த்து, அவர் பிரிவு சமயத்திற்கு மாற்ற விரும்புவது உண்மைதான். ஆனால், ISIS மாதிரி ஒரு அமைப்பை சவூதி அரேபியாவில் செயல்பட விடமாட்டார்கள். எந்த முஸ்லிம் நாட்டில் வேண்டுமானாலும் புரட்சி நடக்கலாம். ஆனால், சவூதி அரேபியாவில், அரசை எதிர்த்து மூச்சு விட்டாலும், தலை காணாமல் போய்விடும்.

  ISISஐ அமெரிக்காவில் யாருக்குமே பிடிக்காது. ஈராக்கில் இருக்கும் கிறித்தவர்களுக்கு ஆபத்து என்றால், அமெரிக்கா ISISஐ ஆதரிக்குமா?

  தமிழ் இந்துவில் ISISஐப் பற்றி கண்டனம் செய்தால், அவர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. அப்படி இருக்க, ஜனாப் சு.பி. செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்கள்?

  ஜனாப்புக்கே ISISஐக் கண்டனம் செய்ய விருப்பம் இல்லை, அவ்வளவுதான்! அவரால் முடிந்தது இதுதான்: “அப்படிச் செய்பவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது?!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *