மூலம்: எஸ்.குருமூர்த்தி (ஏப்ரல் 17, 2004 – இந்தியன் எக்ஸ்பிரஸ்)
தமிழில்: சேஷாத்ரி ராஜகோபாலன்
”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”.
புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை.
உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள்.
சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Winci) தான் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உபயோகத்திற்காக,குண்டு துளைக்க முடியாத மோட்டார் வண்டியை ஜெர்மனி கார் தொழிற்சாலையில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தவர். இந்த ஏற்பாட்டிற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை செய்தவர்.
இது உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? சற்றுப் பொறுங்கள்.
இதே வால்டர் வின்சியேதான், இந்திய சிறப்புப் பாதுகாப்புப்பணிக் குழுவின் அதிர்ச்சித் தாக்குதல் படைக்கு (SPG – Special Protection Group -commandos) இத்தாலிய பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தவர். இத்தாலிய பயிற்சியாளர்கள், இந்திய SPG பயிற்சி பெறுபவர்களிடம் பலமுறை மரியாதையின்றி முரட்டுத்தனாக நடந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி உங்களுக்கு திகைப்பூட்டுகிறதா?
1985இல், ராஜீவ், சோனியாவுடன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புக்கு வந்த SPG இந்திய பாதுகாப்பு அமைப்புக்குக் கூடத் தெரியாமல், இத்தாலிய, ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ராகுல், பிரியாங்கா ஆகியோருக்கு இத்தாலிய வெளியுறவு அலுவலகத்திலிருந்து நேரிடையாக பாதுகாப்பு அளிக்கச் செய்தார் சோனியா.
உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா?
இதே சோனியா மேடம்தான், இன்று தேர்தல் மேடைகளிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் ஒரு நாள்விடாமல், “என் தாய் நாட்டுக்காக என் இன்னுயிரையும் தரத் தயார்” என உணர்ச்சி பொங்க முழங்குகிறார். இந்திய அரசு அமைப்பு முழுவதையுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கையில் வைத்திருக்கிறார்.
சோனியா இந்தியர்களை நம்பாதது மேலை நாடுகள் முழுவதுக்கும் தெரியும். இது உலகப் பிரசித்தம். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் சோனியாவின் உண்மை ஸ்வரூபம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை!
இந்த திடுக்கிடும் ரகசிய வாக்குமூலங்கள், பாதுகாப்புப் பணி-பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து கிடைத்தவை (இதில் RAW அதிகாரிகளும் அடக்கம்). அவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது.
மேலே படியுங்கள்..
* * * * * * *
துணைக் காட்சிகளுக்கோ, அல்லது மறைமுகமாகவோ எதையும் காண்பிக்க இது நேரமல்ல. இனி நாம் நேரே விஷயத்துக்கே வருவோம்.
1968ல், இந்திய உளவுத்துறை RAW (Research & Analysis Wing) நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, வெவ்வேறு நாடுகளில் உள்ள இதே அலுவலில் இருக்கும் உளவுத்துறை வலைப் பின்னல்களுடன் (spy network) இரகசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு.
இதில் இந்திய RAW என்றுமே இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை.
1980ல் சஞ்ஜய் காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி சுறுசுறுப்பாக அரசியலில் திடீரென பிரவேசம் செய்தார். அப்போது, ஆரம்ப காலத்தில் ராஜீவ் RAW வின் பொதுவான கூட்டங்களில் (classified briefings) மட்டுமே பங்கேற்றார். ஏனெனில் அன்று அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும், பதவியும் இருக்கவில்லை. இக் கூட்டங்களில் அவருக்கு நெருக்கமான அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அவருடன் கூட பங்கு கொள்ள வேண்டுமென ராஜீவ் விரும்பினார். ராஜீவுக்கோ அல்லது அவர் சகாக்களுக்கோ இவ்வமைப்புகளில் பங்கேற்க அதிகார பூர்வ பதவி இல்லை என சம்பந்தப்பட்ட RAW அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இச்சமயத்தில் பிரதம மந்திரி என்ற பதவி கொடுத்த அதிகாரத்தாலும், பிரத்யேக சலுகைகளாலும், இந்திரா காந்தி ராஜீவுக்கு நெருங்கிய அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அக்குழுவில் பங்கேற்க RAW அதிகாரிகளை நிர்ப்பந்தமாக உடன்பட வைத்தார். இந்த ஏற்பாட்டிற்கு RAW அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் ஒப்புகொண்டார்கள் ஆனால் இந்தக் கூட்டங்களில் ராஜீவ், அருண் நேரு, அருண் சிங் சொல்வது எதையும் அதிகாரபூர்வமான குறிப்பேடுகளில் (இவர்கள் பெயர்களால்) இணைக்கக் கூடாது என்று கறாராக RAW அதிகாரிகள் கூறிவிட்டனர்.
ராஜீவ் அன்று வகித்த பதவி காங்கிரஸின் பொதுக் காரியதரிசி என மட்டுமே இருந்தது. இருப்பினும், அரசாங்கத்திலோ அல்லது RAWவிலோ எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், இத்தாலிய ஒற்றர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய RAW அதிகாரிகள் செயலாற்றியாக வேண்டுமென ராஜீவ் நிர்ப்பந்தித்தார். இத்தாலியர்களை இந்திய உளவுத் துறையுடன் இணைக்க ராஜீவ் ஏன் இவ்வாறு நிர்ப்பந்திக்க வேண்டும்? இதில் இத்தாலியர்களின் ஒத்துழைப்பு எதற்காக, அதன் வரம்புகள் என்ன என கொஞ்சமும் ஆராயாமல், அல்லது ஒன்றுமே கண்டுகொள்ளாமல், கண்டபடி இக்காரியத்தில் வலுக்கட்டாயமாக ஏன் முனைய வேண்டும்?
காரணம், சாக்ஷாத் சோனியா தான். ராஜீவ் 1968லேயே சோனியா மைனோவை கடிமணம் புரிந்திருந்தார்.
இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் செயல், வேண்டாம் என RAW அதிகாரிகள் பரிந்துரைத்தும் ராஜீவ் கேட்கவில்லை. கடைசியில் RAW அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஒன்றுக்குமே லாயக்கில்லாத உளவுக் கூட்டாளிகள் என பல பத்தாண்டுகளாக இந்திய RAW அதிகாரிகள் எவர்களை ஒதுக்கி வைத்திருந்தனரோ, அதே இத்தாலிய உளவுத்துறையுடன் பலவந்தமாக ஒத்துழைப்பு தர நிப்பந்திக்கப் பட்டனர்.
குறிப்பாக நாம் இதில் அறிய வேண்டியது, சோனியா தான் இரு உளவு அமைப்புகளுக்கும் இடையே உறவுப் பாலம் அமைக்க அரும்பாடுபட்டவர் என்பது.
சோனியா மேடம் இத்தாலிய ஒற்றர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எந்தவித ஐயமுமின்றி, தெள்ளத் தெளிவாகிறது. அப்போது அவர் இந்திய அரசியலிலோ அல்லது அரசாங்கத்திலோ எந்த ஈடுபாடும் இல்லாத, பழிபாவமற்ற பதி-பக்தியுள்ள சாதாரண இந்திய குடும்பத் தலைவி எனக் காண்பித்துக் கொண்டிருந்தவர். ஆனால், அச்சமயத்திலும், சோனியா இத்தாலிய நாட்டின் குடி மகள். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பத்தைக் கூட அந்த நேரத்தில் கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் குடிமையை வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் பின்னர் கோர நேர்ந்தது. சோனியா பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இல்லத்தில், அக்குடும்பத்தின் அங்கமாக இருப்பவர்; இந்திய அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருப்பவர்; ஆனால், இத்தாலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்!
உண்மையில் இத்தாலிய உளவு அமைப்புகளை RAW திரும்பிப் பார்க்காததற்குக் காரணமே, பிரதமரின் வீட்டில், குடும்பத்தில் சோனியா இருந்தது தான். இந்திய-இத்தாலிய உளவு அமைப்புகள் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளிக்கப் பட்டால், அது வெறும் RAWவுடன் நின்றுவிடாது, பிரதம மந்திரி வீடு வரை நீளும்; விபரீத விளைவுகளை பின்னர் ஏற்படுத்தக் கூடும் ; தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு RAWவுக்கு இருந்தது.
பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி குண்டு துளைக்க முடியாத மோட்டார் வாகனத்தில் தான் எந்தப் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ஆலோசனை தந்தனர். இந்திரா காந்தி இந்தியத் தயாரிப்பான அம்பாசிடர் காரையே குண்டு துளைக்க முடியாத வாகனமாக மாற்றி விட விரும்பினார். ஆனால் அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அப்போது இல்லை (1985ல் தான் இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானது). எனவே, ஒரு ஜெர்மன் நிறுவனத்திடம் அச்சமயத்தில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
அந்தக் குறிப்பிட்ட ஜெர்மன் நிறுவனத்திடம் இந்த காண்டிராக்டை பேசி முடித்தது யார் தெரியுமா? வால்டர் வின்சி என்பவர். இவர் சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர். இதற்கு வெகுமதியாக, வால்டர் வின்சிக்கு சிறிய கமிஷன் கிடைத்திருக்கலாமென RAW வுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை விட கவனிக்கவேண்டிய விஷயம் – பிரதமரின் பாதுகாப்பு என்ற அதி-ரகசியமான முக்கிய விஷயம் சோனியாவின் உறவினர் மூலமாகக் கொடுக்கப் பட்டது என்பது.
1984ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக SPG commandos என்கிற அதிரடித் தாக்குதல் படை இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. 1986ல், சோனியாவின் பரிந்துரைக்குப் பின்னர், இதே வால்டர் வின்சி மூலமாகத்தான், இத்தாலிய பாதுகாப்பு அமைப்பினால் SPGக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க அளிக்கப்பட்டது. இதற்காக வால்டர் வின்சிக்கு ரொக்கமாக, ஆம், ரொக்கப் பணமாக, கணிசமான தரகுக் கூலியும் (கமிஷன்) கட்டாயமாகக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டு, அப்படியே கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது!
இந்த கணிசமான அளவு ரொக்கப் பணத்தை ஜெனீவாவில் இருந்த RAW அதிகாரி மூலமாகவே பட்டுவாடா செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், வால்டர் வின்சி இந்த ஏற்பாட்டுக்கு உடன்படாமல், இத்தாலியில் உள்ள மிலானில் கொண்டுவந்து நேராகத் தன்னிடம் கொடுக்க வேண்டுமென விரும்பினார். ஏனெனில், தனக்கு ஸ்விஸ் – இத்தாலி எல்லை சுங்க அதிகாரிகளிடம் ’நல்லுறவு’ இருப்பதாகவும், ஆகவே, தனக்காக வரும் எவரையும் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்ய மாட்டார்கள் எனவும் RAW அதிகாரிகளுக்கு வின்சி உறுதியளித்தார்.
ஆனால் இதற்கு RAW அதிகாரி அசைந்து கொடுப்பதாக இல்லை. பிடிவாதமாக RAW அதிகாரி இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாததால், Operation Cancelled என்று வால்டர் வின்சிக்கு அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அந்த ரொக்கத் தொகை பின்னர் இத்தாலியின் ரோம் நகரத்திலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகவே வால்டர் வின்சிக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.
இம்மாதிரி ரொக்கப் பணமாக கொடுப்பததற்காக அதிகாரபூர்வமாக சொல்லப் பட்ட ரகசிய காரணம் என்ன தெரியுமா? இந்திய SPG commandos-அதிரடித் தாக்குதல் படைக்கு பயிற்சி அளிப்பதற்காக, இத்தாலிய பாதுகாப்பு அதிகாரிகளின் வருகைக்கான பயணச் செலவுக்காகக் கொடுக்கப்பட்டது என்பது தான் அது. இதைப்பற்றி, அப்போது அமைச்சரவைக் கூட்ட காரியதரிசியாக இருந்த பி.ஜி. தேஷ்முக் சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
இந்தப் பயிற்சி படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். இத்தாலியிலிருந்து இந்தியா வந்த பயிற்சியாளர் இந்தியப் படையைச் சேர்ந்த ஒருவரைக் கன்னத்தில் பளாரென அறைந்தார். இத்தாலியர்கள் இதே போல பல தடவை SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது. இதன் விளவாக SPG commandos படைக்கு ராஜீவ் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியும், மனக் கசப்பும் ஏற்பட்டு விடும் எனவும், இது ராஜீவின் பாதுபாப்புக்கே குந்தகம் விளைவிக்கக் கூடியது எனவும் எச்சரிக்கப் பட்டது; ராஜீவும் உஷாராகி வால்டர் வின்சி ஏற்பாடு செய்த பயிற்சி முகாமுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார். இந்த திடீர் முடிவின் விளைவு, படைகளுக்கு குறிப்பிட்ட பயிற்சியும் கிடைக்காமல், கணிசமான ரொக்கப் பணமும் பறிபோனது. இதெல்லாம் சோனியா-இத்தாலிய கைங்கரியம்!
1985ல் ராஜீவ் சோனியாவுடன் பாரிஸ் நகருக்கு பயணம் சென்ற போது, பாதுகாப்புக் கருதி வழக்கமான SPG அதிகாரிகளோடு கூட, பிரெஞ்சு மொழி அறிந்த RAW அதிகாரி ஒருவரும் (பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்புடன் உரையாடுவதில் உதவ) கூட பிரான்ஸுக்கு அனுப்பப் பட்டார். பிரான்ஸில் உள்ள லியோன் (Leon) நகரில், திடீரென்று ராகுலும், பிரியாங்காவும் காணாமல் போய் விட்டனர். இதை அறிந்த SPG அதிகாரிகள் மிகவும் கலவரமடைந்தனர். ஆனால், “கலவரமடையத் தேவையில்லை; ராகுலும், பிரியாங்காவும் சோனியாவின் மற்றொரு சகோதரி, நாடியாவின் கணவன், ஜோஸ் வால்டிமாரோவுடன் (Jose Valdemaro) பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று வால்டர் வின்சி தெரிவித்தார். மேலும், ராகுலும், பிரியாங்காவும் வால்டிமாரோவுடன் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு ரயில் மூலமாக சென்று விட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ஸ்பெயின் அதிகாரிகள் முன்னரே ஏற்பாடு செய்து விட்டதாகவும் வின்சி கூறினார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியாமல் இவர்கள் இப்படி பயணம் செய்தது இத்தாலிய பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொடுத்த வசதி என அறிந்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறி கலங்கிப் போனார்கள்.
அப்போது இந்திய பிரதமராக நரசிம்ம ராவ் இருந்தார். இந்த மாட்ரிட் பயணத் திட்டத்தில் நரசிம்மராவின் ஆதரவையோ, அல்லது உதவியையோ கொஞ்சமும் எதிர்பார்க்காது மட்டுமல்ல, இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சோனியா இப்படி செய்ததாக எவரும் தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம். இதன் மூல காரணம் சோனியாவுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் கொஞ்சமும் நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை என்பது தான். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? வேறு சில விஷயங்களையும் தெரிந்து கொண்டால் இது தெளிவாகப் புரியும்.
1986ல் ஒருநாள் ஜெனிவா நகரத்தில் இருந்த RAW அதிகாரிக்கு ஒரு செய்தி வந்தது – “இத்தாலியில் இருந்து வந்த பிரபலஸ்தர்களான வி.ஐ.பி குழந்தைகள் பத்திரமாக ஜெனிவாவிலிருந்து மறுபடி இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர்”. செய்தி அளித்தவர் ஜாக் குன்ஸி, ஜெனிவா நகரக் காவல் ஆணையர். யார் இந்த வி.ஐ.பி குழந்தைகள், எங்கு போகிறார்கள் எதுவுமே இந்திய அதிகாரிகளுக்குப் புலப்பட வில்லை. இந்திய வி.ஐ.பி குழந்தைகளின் பயணத்தைப்பற்றியும் RAW அதிகாரி களுக்கு ஒன்றுமே தெரியாது.
ராகுலும், பிரியாங்காவும் வால்டர் வின்சியுடன் காரில் ஜெனீவா வந்தடைந்ததாக RAW அதிகாரியின் நல்ல நண்பரான ஸ்விஸ் காவல் அதிகாரி விவரமாக எல்லாவற்றையும் சொன்னர். இதன் பின்னணியில் RAW அதிகாரிக்குத் தெரிவிக்காமல் இத்தாலிய வெளியுறவு அலுவலக அதிகாரிகளுடன் ஸ்விஸ் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதோடு விடவில்லை காவல் ஆணையர் ஜாக் குன்ஸி. இந்திய RAW அதிகாரியைப் பார்த்து, படு நக்கலாகக் கேட்டாராம் – “ உங்கள் பிரதமரின் மனைவிக்கு உங்கள் மீதோ அல்லது இந்திய தூதரகத்தின் மீதோ சற்றும் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இத்தாலியர்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்கிறார் போலிருக்கிறது”.
இதனால் தனக்கு ஏற்பட்ட அவமரியாதை மற்றும் மதிப்புக் குறைவு பற்றி இந்திய RAW அதிகாரி தன் மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கிறார். அவரும் அவர் கடமைக்காக தன் மேலதிகாரி களுக்கும் இதே புகாரை அனுப்பியும் இருக்கிறார். அத்துடன் இந்திய RAW அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவு பற்றிய விஷயம் அங்கேயே முடிவவைந்து விடுகிறது. அவ்வளவுதான்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி தகவல்கள் காட்டுத் தீபோன்று உலகளவில் உள்ள உளவு வலைப் பின்னல்கள் அனைத்திலும் உடனுக்குடன் பரவி விடுகிறது. இந்திய அதிகாரிகள், இந்திய தூதரகங்கள், இந்திய பாதுகாப்புப் படையினர் ஆகியவை மீது சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை என்கிற விஷயம், உலக அரசியல்-உளவு வட்டங்களில் இன்று சகலரும் அறிந்த தகவல்.
இதற்கு மேலும் இவ்விஷயத்தைப் பற்றித் தெரிய வெண்டுமா? மேலும் படியுங்கள்.
ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, சோனியா, ராகுல், ப்ரியங்கா ஆகியோர் வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, SPG பாதுகாப்பு ஏற்பாடுகளுப்புப் பொறுப்பேற்றிருந்த RAW அதிகாரிக்கு, இவர்கள் பயண விவரங்கள் ஒன்றுமே தெரிவிக்கப் படவில்லை. ஆனால், மேலை நாட்டு உளவு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய அதிகாரிகளுக்குத் தெரியுமுன்பாகவே எல்லாமே தெரிந்திருந்தது. இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏதோ கொஞசம் தான் தெரியும்; பல சமயங்களில் அதுவும் வேற்று நாட்டு உளவு அமைப்புகள் மூலமாகத் தான் தெரியவரும். இதனால் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எவ்வளவு பாதகம், அவமதிப்பு, மதிப்புக் குறைவு, தலை குனிவு ஏற்பட்டது என இந்த இத்தாலிய பெண்மணி சோனியாவுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா?
சோனியாவின் பிரத்யேக காரியதரிசி ஜார்ஜ், டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் மூலமாக, ரோமில் உள்ள இத்தாலிய வெளியுறவு அலுவலகத்துடனும், மேலை நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடனும் நேரடியாகவே வழக்கமாகத் தொடர்பு கொள்வாராம்.
மேற்குறிப்பிட்ட நேர்மையான RAW அதிகாரி, தன் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் சமயத்தில் மேற்கூறிய விஷயங்களை தலைமை அதிகாரியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த முறையீடு அப்போது பிரதம மந்திரியாக இருந்த நரசிம்ம ராவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் (அதாவது சோனியா) மிக முக்கியமான பாதுகாப்பு விஷயஙகளைக் கூட இந்திய அமைப்புகளை நம்பாமல் அல்லது கலந்து கொள்ளாமல், நேராக இத்தாலிய தூதரகத்தின் மூலமாக செயல்படுத்துவது பற்றி அறிந்து ராவ் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், இதில் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.
இப்போது கேட்டாலும் அவர் உண்மையை நமக்கு சொல்லப்போவதில்லை, (இக்கட்டுரை 2004ல் எழுதப் பட்டது. அன்று நரசிம்ம ராவ் உயிருடன் இருந்தார்). ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்ற RAW அதிகாரி *எப்போதும்* உண்மையைத் தான் சொல்வார்.
எனவே, 1980களிலேயே, சோனியா இத்தாலிய உளவாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்; பற்பல அபாயங்களும், திகில்களும் நிரம்பிய உளவு அமைப்புகளின் வேலைகளில் பின்னல்களை உருவாக்கும் அளவு செயல்திறன் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. ஆனால், வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் போதே மிக முக்கியத்துவமான இந்திய பாதுகாப்பு விஷயங்களில் சோனியா தன் இத்தாலியக் குடும்பத்தை ஈடுபடுத்தி உள்ளார்; ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும் போதே, இத்தாலியப் பாதுகாப்பை இந்தியாவின் மீது சோனியா திணித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைப்புகள் மீது தன் அவநம்பிக்கையை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட அளவில் தன் பாதுகாப்புக்காக இத்தாலிய அமைப்புகளுடன் உடன்படிக்கையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். இத்தகைய செயல்களை இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உயிருடன் இருக்கும் போதே, காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ எந்த பதவியிலும் இல்லாத போதே சோனியா செய்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் கையில் உண்மையிலேயே அதிகாரபூர்வமாக அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்?
அல்லது என்ன தான் செய்ய மாட்டார்?
இருப்பினும், இன்று இந்தியாவுக்காக தன் உயிரையும் தரத் தயார் என்று சோனியா பாசாங்கு செய்கிறார். இப்போது நாம் காணும் சோனியா, அசல் சோனியாவே அல்ல. இந்திய நாட்டுடன் அவ்வளவாகத் தோழமை கொள்ளாத மேலை நாடுகளுக்கும் கூட இவரைப் பற்றி சரியாகத் தெரியும். நாம், அதாவது, இந்திய மக்கள் தான் இன்னமும் இவரை இனம் கண்டு கொள்ளவில்லை.
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
https://www.thalaivan.com
Hello
you can register in our website https://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information https://www.thalaivan.com
என்னதான் கத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலதான். இந்த செய்திகள் எத்தனை ஊடகங்களில் வெளி வந்தது, எத்தனை பேர் படித்தார்கள், விரல் விட்டு எண்ண கூடியவர்களைதான் இந்த செய்தி சென்றடைந்திருக்கும். நம்பகத்தன்மை அற்ற எதிர் கட்சி தலைவர், வயதானாலும் பதவியை விட தயாராக இல்லாமல், காங்கிரஸ் ஐ எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் தவிக்கும் அத்வானி போன்ற தலைவர்கள் இந்து சமுதாயத்தை காக்கப்போவதில்லை, சுறுசுறுப்பான மோடி போன்ற தலைவர்களுக்கு வழி விட்டு அத்வானி ஓய்வெடுப்பது நாட்டுக்கும் இந்து சமுதாயத்திற்கும் நல்லது. சோனியா போன்ற வெளிநாட்டு தீய சக்திகளை கட்டுபடுத்தி விரட்ட வருண் காந்தி போன்ற இளைய தலைவர்கள் முன் வர வேண்டும்.. ஜெய் ஹிந்த்…..
6 .4 .2010 அன்று சத்திஸ்கரில் நடந்த cprf படுகொலைகள், மாவோயிஸ்டுகளால் நடந்தது என்று சோனியாவின் வீட்டு மந்திரி சிதம்பரம் கூறுவது, இந்திய துணை ராணுவத்தின் பெயரை தூளாக்கி , இத்தாலிய ராணுவத்தை இந்தியாவில் நுழயவிடுவதுதான்;
இந்திய சாமானியர்கள் என்றுமே எதிரியுடன் போராடுவதைவிட, சரணடைவதில்தான் புத்திசாலிகள்; அந்த முறையில், இம்மாதிரியான அந்நிய மற்றும் இத்தாலிய எதிரிகளுக்கு சரணடையும் விதமாக, வோட்டளித்து , தங்கள் சரணடையும் திறனைக் காண்பித்துள்ளர்கள்;
எனவே இந்தியர்கள் என்றுமே எதிரிகளின் அடிமைகள்தான்.
(edited and published)
முதலில் கோரமான திருமதி. காந்தியின் படத்தைப் பார்த்தவுடன் இது தேவைதானா என தோன்றியது ஆனால் கட்டுரையை கடைசி வரை படித்தப்பின் இந்த படமே பரவாயில்லையென தோன்றுகிறது.
யார் துரோகி சோனியாவா? ஹா ஹா ஹா
முட்டாள் ஹிந்துவே? அவர்களை ஆட்சியில் வைத்திருக்கும் நான் துரோகி நீ துரோகி.
ராஜிவ்வுக்கு இந்தியாவில் பெண் இல்லையா? .இந்தியாவில் அழகிய பெண் இல்லையா ?அறிவுள்ள பெண் இல்லையா? கற்புள்ள பெண் இல்லையா? எப்படி இந்தியாவின் முதன்மை குடும்பம் என்ன்று பீற்றும்
ஒருவன் எதை செய்யலாம்.
ஜெய் ஹிந்துஸ்தான்
திரு. சுப்பிரமணியன் சுவாமியின் வலைத்தளத்திற்கு சென்று பார்த்தீர்களானால் இதை விட இன்னும் கூர்மையான குற்றச்சாட்டுகளை காணலாம். இப்போதெல்லாம் மக்களுக்கு அரசியல் உணர்வுகள் மரத்து விட்டன போலும்!
sir elloradah original perum innum muslim mathathai sarnthathu enru oru orkut communityla padithen..
சும்மா பினாத்தாதீங்க சார்…….
சுபிரமணியன் சாமியும் நீங்களும் ஒன்றுதான் …..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கோமாளிகள் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா …………………………
நம் மக்களுக்கு தோல் சிகப்பாக இருந்தாலே ஒரு பிரமிப்புதான். Beauty is skin deep என்று தெரியாமலா சொன்னார்கள்!
என்னவென்று சொல்வது இந்தியர்களின் தலை எழுத்தை?
இந்தியாவில் தலைவர்களே இல்லையா?இல்லை, தலைமைக்கு உண்டான தகுதிதான் இல்லையா?காங்கிரசுக்கு தலைவரும் இந்தியாவில் இல்லையா?
இந்தியாவையும்,இந்திய பாதுகாப்பையும் நம்பாத சோனியா இந்தியாவில் இருக்கக் கூடாது,உடனே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
சோனியாவின் உண்மை முகம்
(Deport Sonia to Italy)
1. பொய்யின் மொத்த உருவம்
2. ரஷ்யாவின் உளவாளிகள் குடும்ப வாரிசு இப்பொழுது வேறு கம்ழூனிஸ்ட் நாட்டு உளவாளியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்
3. கதோலிக கிருஸ்துவமும் போபின் ஆணையும் உயிர் ழூச்சு
4. படிப்புவாசனை துளியும் இல்லாதவர். பார்ரில் பணிபெண்ணாக வேலைபார்த்தவர். எழுதிகொடுத்து அரைகுறை ஆங்லத்திலும் இந்தியிலும் பேசுவார்
5. இந்தியாவின் மீது எள்ளவும் பற்று இல்லாதவர்
6. பதவிக்காக கொலைசெய்யவும் துணிந்தவர்
7. குடும்பத்தோடு ஊரை கொள்ளையடிப்பதில் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்
8. ஊமை (அப்பாவி போல்) நடித்து ஊரை கெடுக்கும் கோட்டான்
9. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்று இந்தியாவையே விலைபேசும் அளவிற்கு செல்வம் கொழித்தவர்
10. எட்டப்பன் பரம்பரையில் பிறந்த போலி செக்யூலரிஸம் பேசும் அரசியல் பேடிகளுக்கெல்லாம் அன்னை
வாழ்க போலி செக்யூலரிஸம் !! வளர்க அன்னை அடி வருடல் தொண்டு !!!!
There are reports that sonia is opposing aerial action on the naxalites even though Home Minister Pana Cheena has recommended the same.
The reason is that the church is very active in the naxalite belts – converting them, arming them ,creating hatred in their minds about Hinduism etc .
During the elections the church persuaded the tribals to vote for Samuel Reddy In Andhra
Note that the defence minister AK Antony is also opposed to that.
I need not tell you the reason.The secret is in his name!
It is a shame that we Hindus elect such leaders who do not care whether our ancestral Nation is broken into hundred or thousand pieces and the bodies of our brave sons in the security forces who defend us are torn to pieces.
We are happy with the TVs, Cinemas,the Khans and the IPLs
R.Sridharan
R.Sridharan
பாரத தேசம் இதுபோன்ற எத்தனை பிறவிகளை பார்த்து வந்துள்ளது.இந்திய
மண்ணின் சாரத்தை உண்டு,இந்தபுன்னியபூமியின் காற்றை சுவாசித்து,வாழும்
சோனியாவிற்கு நம்நாட்டின் தெய்வீகம் தெரியாதது அவரது அறிவின்குறைபாடு.வெட்கப்படவேண்டியது இத்தாலிநாட்டு
மகளை
இந்திய மகளாய் கொண்டாடும் சுயநல அரசியல்போரிக்கிகளே….
இடலிய அந்தோனியா மைனோ என்கிற சோனியா, ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவிற்கு வரமுடியாது என்றும் அதற்கு காரணம், பக்தர்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை என்று ஒரு போடு போட்டதாகவும் ஒரு புது செய்தி; அப்படியானால், இந்தியாவில் இந்துக்களுக்கு தொல்லை கொடுக்கும் அவர் சீக்கிரமே சொந்த நாடு திரும்பினால் அவருடைய கும்பமேளா நல்லெண்ணத்தை நம்பும்படியாக ஆக்கமுடியும்.
இதெல்லாம் 2004 தேர்தல் சமயத்தில் எடுத்து விட்ட ஆதாரமில்லாத தகவல்கள். இதில் ஒன்றாவது உருப்படியான ஆதாரமான தகவல் இல்லை – சோனியா மீதுள்ள காழ்ப்புதான் தெரிகிறது. .
சரவணன்,
எதை காழ்ப்பு என்கிறீர்கள். திருமணாமாகி 25 வருடங்களாக பாஸ்போர்ட் கூட எடுக்க மனமில்லாமல் இருப்பதை காழ்ப்புனர்ச்சி என்கிறிர்களா? பின் இப்பொழுது நாட்டை ஆள்வதற்கு மட்டும் எதற்கு வந்தார்களாம்? இவர்களை போன்ற ஆட்களை நம்பி தான் முகலாயர்களிடம் 400 வருடங்களும், வெள்ளைக்காரர்களிடம் 300 ஆண்டுகளும் அடிமைகளாய் இருந்தோம். இன்னும் இருக்க வேண்டும் என்கிறீர்களா? உங்களாஇ போன்றவர்கள் துணை நிற்பதால் தான் நமக்கு இந்த நிலமையே…
//அந்தக் குறிப்பிட்ட ஜெர்மன் நிறுவனத்திடம் இந்த காண்டிராக்டை பேசி முடித்தது யார் தெரியுமா? வால்டர் வின்சி//
வின்சி என்பது அவர்களுடைய குடும்ப பெயரா? ராகுல் காந்தி என்று நான் முறிப்பிடும் நபரின் பெயர் ராவுல் வின்சி (Raul Vinci) என்பது. https://en.wikipedia.org/wiki/Rahul_Gandhi
பிரியங்கா என்பது இந்திய பேர் மாதிரி தெரிந்தாலும், அவருடைய பெயர் பியாங்கா (Biyanka).
Raul and Biyanka are pure Italic names. இங்கே எந்த நாட்டு பெயர் வைக்கிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. வெளிப்படையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறேன். எதற்கு தேவைப்படும் போது பிரியங்கா என்றும் பியங்கா என்றும் வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்?
திரு சரவணன் அவர்களே
ஆதாரங்கள் நிறையவே கொட்டிக்கிடக்கிறது. இது சர்வாதிகாரர்கள் ஆளும் நாடு! சோனியாவின் ஊழலில் சிகரம் போல் 10 வருடம் நாடே நாரிய போபர்ஸ் ஊழல் கமிஷன் கொள்ளை 36.5 மில்லியன். தகுந்த நடவடிக்கை எடுக்க நாதியில்லை. நீதீ நேர்மை செத்து பல காலம் ஆகிவிட்டது.
1. சோனியாவிற்கு இந்தியாவில் சொந்த வீடு இல்லை ஆனால் இத்தாலியில் உள்ளது. ராஜீவை மணந்து 18 ஆண்டுகளுக்கு பின் தான் இந்திய பிராஜா உரிமையைப்பெற்றார். ஆனாலும் இத்தாலியின் வம்சாவளி பிறப்புரிமையும் வைத்துள்ளார். இத்தாலிய நாட்டு சட்டப்படி அப்படி சான்றிதழ் வைத்துள்ள ஒருவர் மீது அந்தநாட்டின் அனுமதி பெற்று பின்தான் வழக்கு தொடரலாம். ஏன் இந்த போலி வேஷம் ? 10 ஜன்பத் மாளிகை 100 கோடி செலவில் கட்டப்பட்டடது. இந்த ராஜதர்பார் ஒரு அரசியல் தலைவருக்கு தேவைதானா ?
2. 1971 ல் இந்திய பாகிஸ்தான் யுத்ததின் போது ராஜிவையும் அழைத்துக்கொண்டு இத்தாலிக்கு ஓடிவிட்டார். இவரா தேசபற்று உள்ளவர் ?
3. 1977 ல் இந்திரா தேர்தலில் தோற்றவுடன் இத்தாலிய தூதரகத்திற்க்கு சென்று தஞ்சம் புகுந்தார். ஏன் ?
4. 2004ல் மே மாதம் சோனியா தனக்கு 340 எம்பிகள் பலம் உள்ளது என்றும் 3000 பேர் கலந்துகொள்ள பதவிபிராமாண ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று ஜனாதிபதியிடம் பொய் கூறினார். இவரா பதவி ஆசையில்லாதவர்!
5. இரண்டு முறை நடந்த பொது தேர்தல்களிலும் தனது விண்ணப்பபடிவத்தில் அல்பத்தனமான பொய்களை கூறியுள்ளார். ஏன் ?
6. தான் பிறந்த வருடம் 1944 என்று கூறியுள்ளார் ஆனால் அவரது தந்தை ரஷ்ஷிய சிறையில் பிணை கைதியாக 1942 முதல் 1945 வரை அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஒர் ரஷ்ஷிய உளவாளி நாசிமுசோலினி தீவிரவாத தொடர்பு உடையவர்
7. முழுபள்ளிப்படிப்பையே முடிக்காதவர் ரேபெரிலி தேர்தல் விண்ணப்பத்தில் டிப்ளமோ இன் இங்லீஷ் – கேம்பிரிட்ஜ் பல்கலை கழகம் என்று பொய் கூறினார். ஏன்? ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைகழக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பணிபெண்ணாக வேலை பார்த்தவர். இன்று அவரது சொத்தின் மதிப்பு 2 பில்லியன். இது எங்கேகொள்ளையடித்தது ?
8. இயற்பெயர் அண்டோனியா – அப்பா ஸ்டிபனோ மேனியா – சோனியா என்பது ரஷ்ய பெயர்.
9. பிறந்த இடம் லுசியானா – பிறப்புசான்றிதழில் உள்ளது – இது இத்தாலிய ரஷ்ய எல்லையில் உள்ளது – ஆனால் தேர்தல் படிவத்தில் சொன்ன ஊர் ஓர்பாசானோ
10. திரு சுப்பிரமணிசாமி பலமுறை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டபின் இவை எல்லாம் தவறுதலாக டைப் செய்யப்பட்டுவிட்டது என்று கூறி அண்டபுழுகை ஆகாசபுழுகாக மாற்றினார்.
11. ரஷ்ஷிய உளவுதுறை சம்பளபட்டியலில் இடம்பெற்றவர் சோனியா – 1991ல் ரஷ்ஷயாபிரிந்ததும் இப்பொழுது வேறுஒரு கம்யூனீஸ்ட் நாட்டிற்க்கு விஸ்வாசத்தை மாற்றிக்கொண்டுள்ளார்
12. சமிபத்தில் பெல்ஜியம் நாட்டின் ” லியோ போல்ட்டு” என்ற கௌரவ பட்டம் பெற்றார். லியோ போல்ட்டு என்பவன் ஒரு கொடுங்கோல் அரசன். அவன் சைரி என்ற பழங்குடியினரை கொன்றுகுவித்தவன். அவன் பெயரில் வருடா வருடம் நாட்டின் விசுவாசிகளுக்கு மட்டுமே அளிக்கும் பட்டமாகும் இது. இப்படி நம்நாட்டில் சோற்றை தின்றுகொண்டு அந்நியநாட்டிற்க்கு விசுவாசியாக இருப்பவரை இந்த நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டாமா ?
13. MP பதவியில் இருப்பவர் இம்மாதிரி வெளிநாட்டின் விருதை சட்டப்படி பெறக்கூடாது. இதுகுறித்து பலமுறை தேர்தல் ஆணையத்தில் பலர் இவரது எம்பி பதவியை பறிக்கவேண்டும் என்று முறையீடுசெய்தார்கள். திரு கோபால்சாமி இதுகுறித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் மற்ற இரு காங்கிரஸ் ஆதரவு தேர்தல் ஆணையர்கள் கையெழுத்துயிட மறுத்தார்கள். இதுதான் சர்வாதிகாரம் !! சர்வ அதிகாரம் என்பதா ?
14. சோனியாவும் அவரது தாய் மாமன் ஓடாவா குட்ரோச்சியும் சேர்ந்து அடித்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் 36.5 மில்லியன். குட்ரோச்சி ஒரு (International illegal arms trader )
15. சதாம்உசேன் – உணவுக்கு பெட்டிரோல் – ஊழலில்பங்கு – இதில் பலிகடா ஆனவர் நட்வர்சிங். பாலஸ்தீனத்தின் – அபாஷ் குரூப் –ஊழலில் பங்கு. (KGB – Volker ) – ஊழலில்பங்கு. (Spectrum) – ஊழலில்பங்கு இப்படி கொள்ளை பட்டியல் கேட்பாற் இல்லாமல் நீண்டுகொண்டே போகிறது. வாழ்க ஸெக்யூலரிஸம் !!!
16. 29 ஆம் தேதி செப்டம்பர் 2001 ல் ராகுல் காந்தியும் அவரது காதலி வரோனிகா கார்டீலியும் பாஸ்டன் விமானநிலயத்தில் கணக்கில்வராமல் கையில் 16000 டாலர்கள் வைத்திறுந்தற்காக எப்பிஐயால் கைதுசெய்யப்பட்டு 9 மணீ நேரம் காவலில் வைக்கப்பட்டார்கள். பின்பு கண்டோலிஸா ரயிஸ் தலையிட்டு அவர்களை விடுதலைசெய்தார்கள். வரோனிகா கார்டீலி குடும்பம்(International illegal drug mafia group )சேர்ந்தவர்கள். இப்படிபட்டவர்களே பரிசுத்தமானவர்கள் நாட்டைஆள தகுதி படைத்தவர்கள். வளர்க ஸெக்யூலரிஸம்
17. தாயை போலவே ராகுலும் சமிபத்தில் நடந்த தேர்தல் படிவத்தில் தான் ஒரு (Mechanical Engineering Graduate ) என்று பொய் கூறிஉள்ளார். இவர் ழூன்று வருடபடிப்போடு நிறுத்திவிட்டவர்.
18. போப் ஜான் பால் மரணத்திற்க்கு இத்தாலியும் கனடா அரசாங்கமும்தான் இறுதி மரியாதை செலுத்தியது. நம் இந்தியா ழூன்றாவது நாடாக இறுதி மரியாதை செலுத்திற்று. என்னே ஸெக்யூலரிஸத்தின் மகிமை !!!
19. சோனியாவின் அரசு எல்லா அரசாங்க உயர்பதவிகளிலும் கிருஸ்துவர்களையே நியமிக்கிறது. வின்சென்ட் ஜார்ஜ் மார்கிரேட் ஆல்வா ஓமன் சான்டி ஆஸ்கர் பெர்நான்டெஸ் ராஜசேகர ரெட்டி ஏ.கே.அந்தோனி அம்பிகா சோனி இந்தபட்டியல் இன்று 100 எண்ணிக்கையை தாண்டிவிட்டது.
20. தேவைஇல்லாமல் அமிதாபின் மனைவி ஜயா பச்சன் ஆதாயம் தரும் பதவிகளிலும் உள்ளார் என கூறி அவரது எம்.பி. பதவியை பறிக்க நினைத்தது அவர்களுக்கே எதிர்மறையாக போய் சோனியா தாம் வகித்து வந்த எல்லா ஆதாயம் தரும் பதவிகளையும் இழக்கநேர்ந்தது. ஆனால் மறுபடியும் சில ஆதாயம் தரும் பதவிகளை தற்பொழுது பெற்றுள்ளார். ஏன்எனில் தற்பொழுது தனக்கு வேண்டியவர்கள் தேர்தல் கமிஷனர்களாக உள்ளனர்.
21. குஜராத் கலவரம் பற்றி இன்னமும் மோடியை வம்புக்கு இழுக்கிறார்கள் ஆனால் இந்திரா காந்தி கொலை வழக்கில் ஏன் சோனியா காந்தியை விசாரணைக்கு அழைக்கவில்லை. கொலை நடந்த அன்று அவர்தான் அந்தஇல்லத்தில் இருந்துள்ளார் – அன்று ஒரு டி.வி. நிகழ்ச்சிக்கு இந்திரா ஒதுக்கிய நேரத்தை மாற்றியது யார் ? – கடைசி நிமிடத்தில் ஸெக்யூரிடிகளை மாற்றியது யார் ? – குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தால் கடைசி வாக்முலம் பெற்று இறுக்கலாம் – அதற்கு வாய்பு தராமல் ஏன் சோனியா மருத்துவமனைகளை மாற்றி மாற்றி அழைத்துச்சென்றார்? கேட்பார் இல்லை ?
22. சோனியா மாதவராவ் சிந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து பின்நாட்களில் அவருடன் மனஸ்தாபம் கொண்டார். சிந்தியா 2001ல் வினோதமான விதத்தில் விமானவிபத்தில் இறந்தார். அன்று மணிசங்கர அய்யரும் ஷீலாதீக்க்ஷீத்தும் அவருடன் பயணம் செல்வதாக இருந்ததை மாற்றியது யார் ?
23. தன்கணவரையே கொன்ற கொலையாளியுடன் கூட்டு வைத்திருந்த ஆயுள்கைதியை மகளை அனுப்பி ரகசியமாக பார்துவிட்டு வரசொன்னதின் மர்மம் என்ன ? மணிதாபிமானம் என்று காதில் பூ சுற்றுவதை ஏற்பவர்கள் மடையர்களே
24. காந்தி டிரேட்மார்கு நேருகுடும்பத்திற்கு என்று ஒதுக்கியதால் எல்லோரும் காந்தி ஆகமுடியாது. ஆனால் சோனியாவை காங்கிரஸ் காந்தியை பற்றி உரையாற்ற ஐ.நா. சபைக்கு அனுப்பியது. இவர் இதற்க்கு லாயக்கியற்றவர் என்று சில அமெரிக்க இந்துக்கள் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் சோனியாவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்தியது. இதனால் வெகுண்டுஎழுந்த சில அமெரிக்க காங்கிரஸ் காரர்கள் ழூன்று நகரங்களில் உள்ள கோர்டில் லாசூட் போட்டு மானநஷ்டதொகையை கோரினர். ஆனால் ழூன்று கோர்டுகளிலும் மானப்பட்டவர் எழுத்துழூலம் மறுப்பு தெரிவிக்கவேண்டும் என்றும் விசாரணைக்கு வேண்டும் என்றால் நேரில் வந்து வாக்குழூலம் தரவேண்டும் என்று கூறிவிட்டது. நாட்களை கடத்தி அமெரிக்க காங்கிரஸ்காரர்கள் எல்லா கேஸையும் வாபஸ் வாங்கினார்கள். அமெரிக்க இந்துக்கள் இப்பொழுது பொய்வழக்கு போட்டதற்க்கு நஷ்டஈடு கோரியுள்ளனர். இப்படி சோனியாவின் மானம் நாடுகடந்து சென்றுள்ளது. உணர்சியில்லாத காங்கிரஸ் சந்துக்களுக்கு இது உரைக்காது
25. அந்நியநாட்டில் பிறந்தவரை பிரதமர்ராக அமர்த்தகூடாது என்ற சாஸனத்தில் 1999 ஆம் ஆண்டு கருணாநிதி வைகோ கைஒப்பம் இட்டனர். இன்று கருணாநிதி நிழல் பிரதம மந்திரி சோனியாவை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்
26. இந்திய நாணயங்களில் சோனியாவின் வற்புறுத்தலுக்கு இனங்கி கை சின்னமும் சிலுவை சின்னமும் பொரித்து வெளியிட்டார்கள். இதையும் யாரும் ஏன் எதற்க்கு என்று கேட்கவில்லை
27. மும்பை அரசாங்கம் டான்ஸ் பார்களை தடைசெய்தது. இந்த டான்ஸர்கள் சோனியாவிடம் சென்று மனுகொடுத்துள்ளார்கள். அதை ஆவலுடம் பெற்று ஆவன செய்வதாக உருதிஅளித்தார். பழகிய தோஷம்!!!
28. இமாசலபிரதேசத்தில் அங்குஉள்ளவர் மட்டுமே நிலங்களை வாங்கலாம் என்பது மாநில சட்டம். ஆனால் அங்கு எவ்வாறு பிரியங்கா 4.5 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கியுள்ளார்
29. செ 7ல் 2006 ஆம் வருடம் வந்தேமாத்திரம் 100 ஆண்டு விழாவில் அழைத்தும் கலந்துகொள்ளாதது ஏன் ?
30. ராஜிவுடன் சோனியா காட்மாண்டுவிற்க்கு சென்றபொழுது மண்னரிடம் சிறையில் கட்டாய மதமாற்ற பிரசாரம் செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்ட 90 பாதரிமார்களை விடுவிக்க சொன்னது ஏன் ? கிருஸ்துவர்கள் மேல் அவ்வளவு கரிசனம். இவர் ஏன் நம்நாட்டை அன்னியர்களுக்கு காட்டிகொடுக்கமாட்டார் ?
31. இலங்கை இன படுகொலைகளுக்கு சோனியா முழு உதவிசெய்தார் என்று வெளிப்படையாக தெரிந்தும் பச்சை தெலுங்கு தமிழர் கருணாநிதி காங்கிரஸ் ஆதிரவை ஏன் விலக்கிகொள்ளவி்ல்லை
32. சோனியாவின் வருகைக்குபின் தான் மதமாற்றம் இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளது.
எனவே சோனியாவை அவர்கள் குடும்பத்துடன் நாடுகடத்துவது இந்திய இறையாண்மைக்கு மிகவும் அவசியம் ஆகும்.
Under the reciprocity proviso to Section 5 of the Citizenship Act, Ms.Sonia Gandhi is ineligible for the post of Prime Minister of India because in Italy Indian taking Italian citizenship cannot become the Prime Minister and hence on reciprocity, Italians becoming Indian citizens cannot become Prime Minister of India. It was this proviso which was responsible for the somersault of Ms.Sonia Gandhi, from staking the claim for Prime Ministership on 16th May, 2004, and then withdrawing the same in favour of Dr.Manmohan Singh on May 18th, 2004. Although this proviso has since been deleted by the then outgoing NDA Government, it is however illegal because the said deletion was carried out on an Act passed in January 2004 for NRIs. Under the Objects and Reasons of the Bill moved in Parliament to enact this law does not empower the Government to delete the said proviso to Section 5 of the Citizenship Act. Hence if Ms.Sonia Gandhi stakes her claim to the Prime Ministership of India it is subject to challenge in court along with the challenge to the deletion of the said proviso to the Citizenship Act.
As far as Mr.Rahul Gandhi is concerned, he was born when his mother was still an Italian citizen and hence his name was under Italian Citizenship Act automatically entered in the Citizenship Register maintained by the Italian Government and the Italian Embassy in New Delhi. Mr.Gandhi has never renounced his Italian citizenship and hence the legality of his Indian citizenship can also be challenged since India does not recognize dual citizenship.
(SUBRAMANIAN SWAMY)
சோனியா சோனியா சொக்கவைக்கும் சோனியா
ஊழலில் எந்த வகை கூறு……
When the parliament was in session, neither Sonia nor Rahul were present. When the opposition was protesting against the inaction of the UPA govt. against the price rise, madam was absent. Mr.Cameroon, visiting PM of UK wanted an appointment with Sonia but his request was denied. Nobody knew the whereabouts of Sonia, Rahul or Priyanka. Congress party was tight lipped. Later it was announced that Sonia went to US to visit her ailing mother. Where in US she went, how she traveled, where she stayed, what was the ailment of her mother, how she returned back are all secrets and no information was available with the media. Her secret ways are a puzzle to everyone.
திரு ராமசந்திரமேனன் சரியாகத்தான் கூறியுள்ளார். மேலும் இந்த கட்டுரையிலேயே சோனியா அண்டு கம்பெனி நாட்டு ரகசியங்களை விற்று நாட்டை காட்டி கொடுக்கும் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை ஊர்சிதம் செய்வதுபோல் சோனியா அண்டு கம்பெனியின் ஒரு வார தலைமறைவு சந்தேகத்தை மேலும் வலுபடுத்தியுள்ளது. தாயை பார்க்க போனாரா அல்லது மேலும் பல சதி வேலைகளுக்கு திட்டம் போட்டுள்ளாரா என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்
vedamgopal சோனியா உண்மை முகம் உண்மையிலேயே தலை சுற்றுகிறது ………..
என்னே இன்றைய காங்கிரஸ் காரர்களின் தேச பக்தி ……
இந்தக் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்குமாறு தோற்க வேண்டும். இந்தியர்கள் ஒன்றுபட வேண்டும். இஸ்லாமிய சகோதரர்களே, உங்களுக்கும் ஒரு வேண்டுகோள், நீங்கள் உங்களுடைய மூலம் வேறெங்கோ உள்ளதென்ற நினைவை சற்றே மறு பரிசீலனை பண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை தொழுதாலும் இந்தியர் என்பதை மறக்கவியலாது. மேலும் பாகிஸ்தான் பிரிவினையின் போது எவ்வளவு இந்துக்கள் அங்கிருந்தனர், இப்போது எவ்வளவு பேர் என்பதையும் இந்தியாவில் அதே சமயம் எவ்வளவு இஸ்லாமியர் மிக மிக சுதந்திரமாகத் தங்கள் மத கோட்பாடுகளைப் பின்பற்ற முடிகிறது என்பதைப் பாருங்கள். உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் யாரும் நன்கு வாழ்ந்ததாய் சரித்திரமில்லை. எனவே இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, இந்த கிராதகியையும் இந்தத் திருட்டுக் கூட்டத்தையும் தலை முழுகி வெளியே அனுப்ப வேண்டும்.
please publish this aricle again in front page.