கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

பாலகாண்டம்

03. நகரப் படலம் – Canto of the City. (01 – 05)

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும் – Ayodhya, the City most desired

செவ்விய மதுரம் சேர்ந்தநல் பொருளின்

சீரிய கூரிய தீம்சொல்

வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல்

முனிவரும், புகழ்ந்தது; வரம்புஇல்

எவ்உலகத் தோர் யாவரும், தவம்செய்து

ஏறுவான் ஆதரிக் கின்ற

அவ்உலகத்தோர், இழிவதற்கு அருத்தி

புரிகின்றது அயோத்திமா நகரம். 1

சொற்பொருள்: கூரிய நுட்பமான. அருத்தி ஆவல்

செம்மையான, இனிமையான, பொருட் சிறப்பால் உயர்ந்த, நுட்பங்கள் நிறைந்த சொற்சித்திரங்களைத் தீட்டுவதில் வல்லவர்களான கவிஞர்களாலும், வடமொழியில் புலமைபெற்ற முனிவர்களாலும் அயோத்தி நகரம் புகழ்ந்து பேசப்பட்டிருக்கிறது, எல்லையற்ற உலகங்கள் பலவற்றில், எந்த உலகைச் சேர்ந்தவர்களும், தவங்களை மேற்கொண்டு அடைய விரும்புவதான சொர்கலோகத்தில் வாழ்பவர்களும் அங்கிருந்து இறங்கிவந்து வசிக்கும் ஆவலை உடையவர்களாக இருப்பதாகத் திகழ்கிறது அயோத்தி மாநகரம்.

Translation: The city of Ayodhya has been praised by such poets who are endowed with sweet, crisp rich expressions. Many Munis well-versed in Sanskrit have sung its glory. Anyone living in the numberless worlds (out there in the universe) would perform penances to reach the land of celestials, Swarga. But those who live in Swarga are full of desire to descend down (to this earth) and live here, in Ayodhya.

Elucidation:

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!

நிறைநெடு மங்கல நாணோ!

இலகுபூண் முலைமேல் ஆரமோ! உயிரின்

இருக்கையோ! திருமகட்கு இனிய

மலர்கொலோ மாயோன் மார்பில்நன் மணிகள்வைத்த

பொற்பெட்டியோ! வானோர்

உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி

உறையுளோ! யாது என உரைப்பாம்? 2

சொற்பொருள்: ஊழியின் இறுதி உறையுள் ஊழியின் இறுதியில் எல்லா உயிர்களும் சென்று தங்குவதாகிய திருமாலின் திருவயிறு,

(அயோத்தி எப்படிப்பட்ட சிறப்பை உடையது என்று நான் எவ்வாறு கூறுவேன்!) அயோத்திதான் இந்த நிலத்துக்கு எல்லாம் முகமா, அல்லது நிலமகளின் திலகமா, அல்லது அவளுடைய கண் இதுதான் என்பேனா! இல்லை, அவளுடைய மார்பகத்தின்மேல் விளங்கும் மணிமாலை என்பதா, நிலமகளின் உயிர்நிலையே இதுதான் என்று சொல்வதா! திருமகள் வீற்றிருப்பதாகிய தாமரையே இதுதானோ, அல்லது திருமாலுடைய மார்பில் விளங்குவதாகிய கௌஸ்துபம் போன்ற மணிகளை நிறைத்து வைத்திருக்கும் பொன்னால் ஆன பெட்டி இதுவோ! வானவர் வாழும் உலகத்துக்கும் மேற்பட்ட உலகம் என்பதா! அல்லது ஊழியின் இறுதிக் காலத்தில் எல்லா உயிர்களையும் தன்னுள் வைத்துக் காப்பதாகிய திருமாலின் திருவயிறு என்று சொல்வதா! எப்படிச் சொல்வேன்!

Translation: (How am I to describe the glories of this Ayodhya!) Shall I call it as the face of this mother earth, or shall I say that it is the tilaka on her forehead, or should I call it as the very eye of mother earth, or the priceless ornament on her breast, or do I say that this is where her very soul resides, sprouts from and spreads all over! Or, is it that Lotus on which Lakshmi is seated, or is this the treasure trove that contains priceless gems such as the Kaustuba that our Lord Vishnu bears on his chest! Is this the land that is superior to the land of celestials! Or do I say that it is the Bowel of Vishnu that preserves all (kinds of) lives on the day of the final deluge! O, how am I to describe!

Elucidation:

உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு

ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்

கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை

கண்டிலா நகர்அது காண்பான்,

அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த,

அந்தரம், சந்திராதித்தர்

இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு

இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ! 3

சொற்பொருள்: கமை பொறுமை. அமைப்பு அரும் காதல் அடக்க முடியாத ஆவல். அந்தரம் ஆகாயம்

இந்த அயோத்தி நகருக்கு ஈடான, உவமையாகச் சொல்லும்படியான இன்னொரு நகரத்தை, உமையைத் தன் இடபாகத்தில் வைத்திருக்கும் இறைவனும், ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருடைய நாயகனான விஷ்ணுவும், பொறுமையின் திருவுருவாக விளங்கும் பிரமனும்கூடக் கண்டதில்லை. (சொல்லப் போனால்) அயோத்தி மாநகரத்துக்கு உவமையாகச் சொல்லக் கூடிய நகரம் எது என்பதைக் கண்டறியும் அடக்கமுடியாத ஆவலால் அல்லவா சந்திரனும் சூரியனும் வானத்தில் கண்ணை இமைக்காமல் திரிந்து கொண்டிருக்கிறார்கள்! இதைத் தவிர அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது!

Translation: Neither Shiva, who shares the left half of his body with his consort Uma, nor Vishnu with his two consorts, nor even the very embodiment of forbearance, Brahma, have ever known a city that would (at least) match (if not excel) Ayodhya. (In fact, the reason why) Sun and Moon are wandering all over the sky without batting an eyelid, not winking at all, (is) only to find a city that matches Ayodhya in all respects! Is that not enough! What is there more for me to say!

Elucidation:

அயில்முகக் குலிசத்து அமரர்கோன் நகரும்,

அளகையும் என்றுஇவை, அயனார்

பயிலுறவுஉற்ற படி,பெரும் பான்மை

பகர்திரு நகரிது படைப்பான்;

மயன்முதல் தெய்வத் தச்சரும் தம்தம்

மனத்தொழில் நாணினர் மறந்தார்;

புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து

இந்நகர் புகலுமாறு எவனோ? 4

சொற்பொருள்: அயில் கூர்மை குலிசம் வஜ்ராயுதம். அளகை அளகாபுரி எனப்படும் குபேரபுரி. குபேரனுக்கு அளகேசன் என்றொரு பெயர் உண்டு. புயல் மேகம்.

பிரம்மா, அயோத்தி நகரத்தைப் படைப்பதற்கு முன்னால் கூர்மையான வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனுடைய நகரத்தையும், குபேரனுடைய அளகாபுரியையும் படைத்து பயிற்சி செய்துகொண்டான். (அப்படிப் பழகிக்கொண்டதன் பின்னர் படைத்த இந்த அயோத்தியின் பூரணத் தன்மையைக் கண்டு நாணி) மயன், விஸ்வகர்மா போன்ற தெய்வத் தச்சர்கள் எல்லாம் ‘மனத்தால் நினைத்து நினைத்ததை உருவாக்குவதான தங்களுடைய தொழிலையே மறந்துவிட்டார்கள். மேகங்களைத் தொடும் அளவுக்கு உயரத்தை உடைய மாடங்கள் அமைந்த இந்த நகரத்தின் சிறப்பை யாரால்தான் சொல்ல முடியும்.

இந்திர லோகத்தையும் அளகாபுரியையும் பிரம்மா அயோத்தியைப் படைப்பதற்கு முன்னால் படைத்தார் என்றால், அது சும்மா பயிற்சிக்காகச் செய்ததாம். அயோத்தியில்தான் அவருக்கு perfection வந்ததாம்!

Translation: If Brahma created the land of the wielder of Vajra, Indraloka, and the land of Kubera, it was only that he was practising and training his hand (at creation). He created Ayodhya after training himself on those divine cities. After seeing the kind of perfection that prevails in the architecture of Ayodhya, the celestial Architects Maya and Viswakarma have forgotten their art of creation with the power of thought.

Elucidation: If Ayodhya wears a picture of perfection, it is all because Brahma trained himself by creating those celestial towns first. That was only a trial run, and this is His real job!

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்

என்னும் ஈது அருமறைப் பொருளே;

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி

மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?

எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இவ்

ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,

ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம்

உறைவு இடம் உண்டு என உரைத்தல்? 5

சொற்பொருள்: துறக்கம் – சொர்க்கம்

இந்தப் பிறவியில் புண்ணியங்களைச் செய்பவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று அரியதான வேதங்கள் சொல்லும் செய்தி. இந்த உலகத்தில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்தையும் தவத்தையும் ஒன்றுபோல் வளர்த்தார்கள். நினைத்துப் பார்ப்பதற்கும் அரிதான நற்குணங்களை உடைய அந்த இராமன் அரசாண்ட இடம் இது; இந்த இடத்தில் வீற்றிருந்துதான் இராமன் ஏழு உலகங்களையும் ஆண்டான் என்று சொன்னால் அது போதாதோ? அதைவிடவும் அனுபவிப்பதற்கு ஒரு பெரிய போகம் இருப்பதான இடம் வேறு ஒன்று இருக்கவும் முடியுமா?

இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம் என்பதைக் காட்டிலும் வேறு என்ன சிறப்பை அயோத்திக்குச் சொல்லிவிட முடியும்!

Translation: The Vedas say that heaven is the reward for such of those souls that perform good deeds while they live on this earth. Who is there other than Rama that established and nurtured Dharma as well as penance in this world! (And, if you remember that) It was from here, (with Ayodhya as his capital) that he ruled over the worlds seven, where is that land in which a better prosperity can reside!

Elucidation: What is the need for me to elaborate on the celebrated aspects of this city! Is it not sufficient if I say that this was the capital of Rama and it was from here that his authority glowed all around, over the seven worlds!

முந்தைய பகுதி

அடுத்த பகுதி

One Reply to “கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)”

  1. I am often viewing your site and reading a lot. Because of your site I got intro to online hindu web tv http://www.vhtv.in. It is thought provoking and very nice. I liked all videos expecially the one relating to Neyveli and VaVeSu. Slogam classes are superb. Let hundreds of Hindu Web TVs blossom. It is a sure way to fight illegal conversions by Christians, which eats away the very social fabric of this country.

    Vaidya, Mumbai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *