தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

சென்ற செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மலேகான் என்ற இடத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் நால்வர் இறந்து பலர் காயமுற்றனர். தற்போது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்று கூறி பிரஜ்ஞா சிங் டாகுர் என்னும் இந்துப் பெண் துறவியையும், மூன்று இந்துக்களையும் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் இவர்களுக்கு உதவி புரிந்ததாகச்சொல்லி விசாரணைக் கைது செய்யப் பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்” மற்றும் “அபினவ் பாரத்” என்கிற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளதாக மஹாராஷ்டிர போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தையும், இதில் குற்றம் சாட்டப் பட்டு கைதாகியுள்ளவர்களையும் தமிழ் இந்து.காம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை. நமது வேதங்களிலும், தத்துவங்களிலும், இதிகாசங்களிலும், சான்றோர் அறவுரைகளிலும் கண்மூடித்தனமான வன்முறையை பின்பற்ற சொல்லும் எந்தப் பிரசங்கங்கங்களும், அறைகூவல்களும் எள்ளளவும் இல்லை. “சொல்லப் பயன்படுவர் சான்றோர், கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்” என்று கூறும் உன்னத இந்து தர்ம அறநூலான திருக்குறள் “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல், பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்று “களையெடுக்கும்” உரிமையை அரசுக்கும், சட்டத்திற்குமே அளிப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனையே மகாபாரதம் கூறும் விரிவான அரசியல் தர்மங்களும் எடுத்துரைக்கின்றன.

அதர்மத்தின் கை ஓங்கும்போது அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட முறையான, நியாயமான போர் செய்ய வேண்டும் என்று சொல்லி இருகிறதே ஒழிய முறையற்ற வன்முறையிலோ, பயங்கரவாதத்திலோ ஈடுபட வேண்டும் என்று ஒரு போதும் சொல்லப்படவில்லை. பாரத தேசம் இஸ்லாமிய பயங்கரவாதம், மற்றும் கிறிஸ்துவ மதமாற்றம் ஆகிய இரு மாபெரும் ஆபத்துக்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டு வரும்போது, அவற்றை எதிர்கொள்ள பல ஜனநாயகமான முறைகள் இருக்கின்றன. நமது ராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகிய அனைத்து அமைப்புகளும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே, மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்.

அதே நேரத்தில், விதிவிலக்கான இந்த ஒற்றைச் சம்பத்தைக் கொண்டு பயங்கரவாதத்திற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் உண்டென்பது போலவும், அதற்கு “இந்து பயங்கரவாதம்” என்று ஒரு பெயர், “காவி பயங்கரவாதம்” என்று ஒரு இந்து வர்ணம் பூசி உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சில ஊடகங்களையும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளையும், அறிவு ஜீவிகளையும் தமிழ்இந்து.காம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்.

எத்தகைய ஆபத்துக்கள் நம் தேசத்தை சூழ்ந்தாலும், அவற்றை எதிர்கொள்ள தேசபக்த பொதுமக்கள் பயங்கரவாதத்தைக் கையில் எடுப்பது தேச நலனுக்கு ஏற்புடையதாகாது என்பதையும் இந்தக் கண்டனம் மூலம் தமிழ்இந்து.காம் தெளிவு படுத்த விரும்புகிறது. நமது இந்து பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் நம் மக்களிடையே பரப்பி அவற்றைப் பாது காக்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு, நமது ஜனநாயகப் பொறுப்பை உணர்ந்து, நம் வாக்குகளை வீணடிக்காமல் அளித்தோமானால் அதுவே போதுமானது. ஒவ்வொரு இந்து வாக்கும் (ஓட்டும்) புனிதமானது என்பதை இந்து வாக்காளர்கள் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்து பொறுப்புடன் செயல் பட்டால், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஜனநாயக வழியில் நம் தேசத்தில் தர்மத்தை நிலை நாட்டி, மதவாத சக்திகளை விரட்டி அடிக்க முடியும்.

தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.

வந்தே மாதரம். வெல்க பாரதம்!

11 Replies to “தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்”

  1. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தை மிக நடுநிலைமையுடன் “தமிழ் இந்து” அணுகியுள்ளது. அருமையாக தங்கள் கண்டனத்தை பதிவு செய்த ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள்.

    ஹிந்து மதத்தில் வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி வன்முறையை கையில் எடுக்கும் எண்ணம் கொண்டோரின் மனதில் தெளிவு பிறக்க அறிவுரை கூறிய அதே நேரத்தில், இந்த சம்பவத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன் படுத்த முனைந்த போலி மதச்சார்பின்மை வாதிகளின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்த தமிழ் இந்து பாராட்டுக்குரியது.

    வாழ்க தமிழ் இந்து! வளர்க அதன் சீறிய பணி!

  2. இந்த எதிர் பயங்கரவாதம் (Retaliatory terrorism), ஆபிரகாமியத்தின் வெற்றி.

    ஆபிரகாமிய மதங்கள்தான் வன்முறையை மதநம்பிக்கையாக நம்புகின்றன.

    ஹிந்துத்வம் உண்மையை புரிந்துகொள்வதில்தான் வாழ்கிறது. வற்புறுத்துவதால் அது இறந்துபோகிறது. ஹிந்துக்களுக்கு ஹிந்துத்வம் என்றால் என்ன என்று சொல்லிதரவேண்டும் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

    இதுவரை இஸ்லாமியர்களுடைய உட்பிரிவு சண்டைகளால் வெடிகுண்டுகள் வெடித்தன. அதனால்தான், இஸ்லாமிய தூய்மைவாதிகள் சமாதிகளை வழிபடும் தர்காக்களில் குண்டுகள் வைத்தனர். அவற்றில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் இறந்தனர். இது இஸ்லாமிய பயங்கரவாதம்.

    ஆனால், இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெறும் “எதிர்-பயங்கரவாதமாக” நாம் சிமி அலுவலகத்தில் நடந்த இந்த இந்த குண்டு வெடிப்பை காணுகிறோம்.

    பயங்கரவாதத்தை அரசாங்கம் அழித்துவிடும் என்ற நம்பிக்கையை இழந்த சில இந்தியர்களால் இது நடத்தப்பட்டது. எதிர்-பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். இந்தமுறை எதிர்-பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஹிந்துக்கள்.

    சாதாரண குடிமகனின் வாழ்வச்சம் எப்படி மாறும் என்பதையும் நாம் உறுதி செய்ய முடியாது. நாளை இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்களில் கிருத்துவர்களும், முஸ்லீம்களும், ஹிந்துக்களும் இருக்கலாம்.

    தான் அன்பு செலுத்தி பக்தியுடன் வணங்கிவந்த இஸ்லாமிய புனிதரின் சமாதியில் குண்டுவெடிப்பதாலும், சாதிவெறுப்பை பயிலுகின்ற சர்ச்சுகளால் வெறுப்படைந்து போனவர்களாலும் நாளை இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும்கூட இந்த எதிர்பயங்கரவாதத்தில் ஈடுபடலாம்.

    ஆனால், வெடிக்கும் குண்டிற்கு மத வித்தியாசம் தெரியாது.

    ஹிந்துக்களுக்கு ஹிந்துத்வம் புரியாததால் ஏற்பட்ட விளைவே இது. நாட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபட்ட பகத் சிங்கையும், வாஞ்சி நாதனையும், வ.வே.சுவையும், மதன் லால் திங்கராவையும், அப்துல் கலாமையும், அண்ணல் காந்தியையும் போற்றும் அதே சமயத்தில், அப்பாவி மக்களை பலிகொண்ட இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன்.

    பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் நசுக்கப்படும் என்பதை அரசாங்கம் நிலைநாட்டாததால்தான் எதிர்-பயங்கரவாதம் நிகழ்கிறது. அரசாங்கம் பயங்கரவாதிகளை தண்டிக்கும் என்ற நம்பிக்கை சாதாரண மக்களுக்கு ஏற்படவேண்டும்.

    அப்பாவி மக்களின் மரணத்திற்குக் காரணமான ஹிந்துக்களையும், அஃப்சல் குருக்களையும் ஒரே தூக்கு மேடையில் பலி கொடுக்க வேண்டும்.

    இதுதான் என்னைப்போன்ற ஹிந்துத்துவர்களின் நிலைப்பாடு.

  3. Terrorism in any form should be condemned. If the accused are proven guilty, they should be punished as per law. The greatness of our vedic dharma is that it never retaliated offensively in the known history. We have accepted all faiths and practices and embraced the good from even other faiths. This is the reason we are the oldest surviving civilization and religion, where all the other great civilizations succumbed to the later religions. if we deviate from our path and foolishly get into terrorism, then we loose the greatness of the faith.

    Hope this doesn’t continue and irrespective of religion all the culprits should be punished.

  4. The whole thing is a beat up by the Congress party. Where is the evidence that Hindus were responsible for the bombings? Not guilty until proven. Punish them if they are guilty.
    I accept that any form of violence need to be dealt with. But if the law is lax and is unwilling to punish the Muslim terrorists, docile hindus eventually will take law into their own hands. How long you expect the Hindus to put up with terrorisim in their own country? In Tamil as they say” Sadhu meerandal kaadu kolathu”

  5. I appreciate the proactive step by tamilhindu.com to pre-emptively condemn violent tendencies that maybe erupting in some parts of the Hindu society. It is also important that we condemn the media excesses and biases involved in this, as you have rightly done.

    But as far as the current case of Malegaon blasts related arrests are concerned, the investigations have just started and nothing conculsive has emerged. So, those arrested based on suspicions should be given all rights/help under the Indian legal/democratic setup, before putting strong stamp of accusation on them and the organizations that are named in connection.

    This article by Tarun Vijay gives a very balanced view –

    View: Pushing Hindus into a corner
    https://www.rediff.com/news/2008/oct/27tarun.htm

  6. THEY TRIED TO FALSIFY GODHRA, NOW BLACKEN HINDUS

    We must not forget that, the so called secularists and the anti hindu parties have been exposed thoroughly, as promoters and shielders of jihadi terror.
    First they tried to paint Godhra as some kind of an accident for which the minorities were targeted, in Gujarat.
    The nanavati commission has fully exposed this as sheer fabrication and that the incident was an act of terror by the residents of godhra, and this now puts the subsequent disturbances in the light of a retaliation by the majority community.

    This being the case, how could we trust this government that manufactured a judicial enquiry report, that it wouldnt direct its agencies to go after some hindu outfits in order to smear them.

    They have not solved the majority of the terror strikes, and the last count of which is around 4800 dead so far and ten times more injured.
    Yet, here they are having solved Malegon blast and booked the culprits in a jiff.
    How come for months and years, no one could be booked related the blasts in bombay, hyderabad,etc and in this peculiar instance of hindu terror, such efficiency displayed?

    The question remains that inorder to save face in this monumental failure to curb jihadi terror, the pseudo-secular establishment must now try equate the aggressors with the victims, and have they sought to tarnish the hindu community, so they could play thier role of angel faced ”secularvadis” ?

    Apart from that, is it not true that any community, that has been continously and openly attacked would not have atleast a few who could not restrain themselves and retaliate in kind?

    And if so who is to be blamed?

    when jihadi violence went on, what was the excuse given?

    Was it not said by these secularists that ‘they were natural reaction for the wrongs done by Babri masjid demolition and gujarat riots?
    The hindus were told by one and all that the jihadi violence was the result of hindutva provocation.
    Now is it not fit that we remind them that a hindu reaction, if it really proved to be one, is also inevitable, if jihad goes on?
    If they truly want an end to any violence, then the only way is to curb that and eliminate it.
    To allow jihadis and missionaries to run amock and wait for a belated and ineffective hindu reaction and equate both and comically and overzealously go after hindu reactionists cannot put an end to this.
    Infact, as things stand, a hindu retaliation is inevitable sooner or later, and in this the anti hindu secularists and thier covert support to jihadism are the culprits to be blamed.

    One cannot blame the hindus if a section of their youth choose to reply in kind to the grave affronts, and by no stretch of imagination can they be equated with ideologically motivated and convinced terrorists.
    So far hindus have been restrained, and the malegon incident and its like may not really be true, for the other side has been consistant liars and zealous anti hindus.
    They have fabricated evidences, paraded false witnesses and persuaded a Judge to issue a false report about godhra, all to justify and shelter jihadists.

    Let the facts emerge and truth be found out by the courts, and till then no one needs be apologetic or rush to condemn anyone, least of all the hindus.
    Also, we need not suffer from any illusions that hindus can be taken for granted and any reaction on thier side should be unjustly considered as condemnable.

    Infact if any hindu in the present environment must follow in the footsteps of jihadis, it is quite understandable, for only already dead bodies alone cannot react to painful stimuli, or go on suffer injuries to its limb, something ridiculous to expect from a billion strong community, with such a heroic past,and certainly a perversion of the hindu dharmic doctrine of ahimsa.For can anyone in his right senses say that, no matter how much violence is inflicted on us, we would encounter it only in a certain stoic spirit of moderation and pacifism ?

    What better mentality than the pacists’ be facilitative for the jihadis to get encouraged and emboldened to escalate the conflict?

    Terrorism is certainly an un-hindu idea, because it violates the doctrine of kshatriya, who alone is to wield the sword, in defense of the weak and never against an unarmed opponent.
    But if terrorism is adharma, and the war is fought breaking the dharmic rules,then no such regard need be given encountering such a foe.
    It may not be judicious to air such views, but a free mind cannot escape noticing truths even if they are uncomfortable.
    we need not also judge harshly,the victims of thier times,when so much atrocious happenings go unchallenged a few may stop pretending that they are angels of peace and tolerance but infact are impotent cowards and given to catapulting under sustained psycological bullying and mouth inapt slogans.

    Hence, i cannot but condemn the current state of affairs and the abject spineless and self destructive mindset of hindu nor fail to sympathise with the misguided few, if they indeed they have been proved to have done so.

  7. இது ஒரு இயல்பான விஷயமாகவே எனக்கு படுகிறது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இயலாத அரசு, பெரும்பான்மை மக்களின் உரிமைகளை மதிக்காமல், சிறுபான்மை சமூகத்தினரின் வஞ்சக எண்ணங்களுக்கு உரம் போட்டு வளர்க்கும் ஊடகங்களின் போக்கு, அனைத்தையும் விட முக்கியமாய் தன் கண்ணெதிரிலேயே தன் நாடு பயங்கரவாதத்தாலும், மதமாற்றங்களாலும்(இது தானே முன்வந்து மதம் மாறும் போக்கைக்குறிப்பிடவில்லை(அவ்வாறு என்று நடந்துள்ளது?). பணபலம் மற்றும் மூளைச் சலவை போன்ற நிகழ்வுகளால் நிகழும் மதமாற்றங்களைக் குறிப்பிடுகிறேன்) அறியாமையினாலும் அதன் விளைவான கலாசார அழித்தொழிப்பு போன்றவற்றால் சீரழிந்து கொண்டிருப்பதைக் கண்டும் கையாலாகாமல் இருக்கும் நிலையினால் தூண்டப்படுகிறது. இது இத்தோடு நிற்கவேண்டும் என்று பரம்பொருளை வேண்டிக் கொள்கிறேன். கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டதைப்போல சனாதன மக்கள் தம்முடைய வாக்குகளை சிதறடிக்காமல் ஜனநாயக முறையில் நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும்.

    என் மனது நம்பிக்கையினால் நிறைந்துள்ளது. அதிர்ஷடவசமாக என் அலுவலக சூழலில், நன்பர்கள் வட்டத்தில் என்று நான் சந்திக்கும் அனைவருக்கும் இவற்றைப்பற்றிய ஆதங்கமும், கோபமும் பெருமளவில் உள்ளது. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், எல்லோரும் 30 வயதுக்குட் பட்டவர்கள்.

    திம்மித்தனம் சிறிது சிறிதாக ஒழிந்து கொண்டு உள்ளது. இதில் நம் பங்கும் நிறைய உள்ளது. நிறைய இது பற்றி விவாதிக்க வேண்டும். பேசாப் பொருள்கள் பேசப்படவேண்டும். நான் வணங்கும் பவன குமாரன் நமக்கான ஆன்ம பலத்தை அளிக்கட்டும்.

    ஜெய் ஷ்ரி ராம்.

    கணேஷ்.

  8. All of us agree that people who perpetrate terror against fellow human beings should be punished irrespective of who they are.
    But innocent until proven guilty or the other way round?
    People who are fed up of the lies of popular media look for a balanced view from alternate media like this one.
    This is a article that reflects our thoughts too on peace and violnece but it takes the popular media line of “Guilty if we say so”
    Dont we all know from past experience how corrupt the four pillars of our democracy are? We have to wait and watch for evidence as we believe all are equal before law.
    For the first time a less balanced article here
    Senthil

  9. Thamizhchelvan,

    // வாழ்க தமிழ் இந்து! வளர்க அதன் சீறிய பணி! //

    ஓ, அமைதியாக இருந்த தமிழிந்து சீறியது என்றா சொல்ல வருகிறீர்கள்? :))

    “சீரிய” என்று இருக்க வேண்டும்.

  10. வணக்கம்,

    தர்மத்துக்காக வாளெடுத்து போரிடும் கடமை, ஷத்த்ரியர்கள் அதாவது அரசன் அல்லது அரசுக்கே உரியது. மக்களின் கடமை அதை அரசுக்கு உணர்த்துவது.

    இப்படி தமது இஷ்டப்படி எதிர் விளைவுகள் காட்டுவது என்பது, வன்முறையை கையில் எடுப்பது போன்ற செயல்கள், மிகவும் கண்டிக்கப் படவேண்டியது ஆகும், நமக்கும் இந்த வன்முறைகளே அடையாளம் என்ற ரீதியில் பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தால் சனாதன தர்மத்தின் அடிப்படையாகிய அன்பே சிவம் என்ற கோட்பாடு அர்த்தமற்றது ஆகிவிடும், முதலில் இவர்களுக்கு சனாதன தர்மத்தின் கோட்பாடுகளை புரிய வைக்க வேண்டும். தவறான புரிதலின் அடையாளங்களே இந்த நிகழ்ச்சி.

    இப்படி வன்முறை நிகழ்த்துபவன் ஒரு இந்துவாக இருக்கமுடியாது என்று ஜகா வாங்க மனமில்லாது நான் இதை பதிவிடுகிறேன். ஏனெனில் இவர்கள் உள்ளப் பூர்வமாக நமது தர்மத்தை புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிப் பூர்வமாக அறிந்துள்ளார்கள். இக்கொடூரசெயலை வன்மையாக கண்டித்த தமிழ் இந்து தளத்திற்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *