தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சேவை செய்வதே எங்கள் உய்ர்மூச்சு என்றெல்லாம் நாடகம் ஆடும், “தமிழ்” அரசியல்வாதிகளில் ஒருவர் கூட மதானியின் விடுதலைக்கு எதிராகவோ, அல்லது அவன் குண்டு வைத்ததனால் பாதிக்கப் பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஆதரவாகவோ, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்து தமிழ் மக்களை அவமரியாதை செய்தனர்.
View More கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2Year: 2009
கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1
ஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான்.
View More கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்
தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது வந்துள்ளதா?
View More நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!
”சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பது அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் ஜாதி மத பேதங்களை அகற்றுவதும். மூடப்பழக்கங்களை ஒழிப்பதும் பொருளியில் சமதர்மமாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையில் பிரசாரம் செய்யவும் அமுலுக்குக் கொண்டுவரவுமான காரியங்கள் நடைபெறவேண்டும். காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயம்”.
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!தொன்மங்களையும் நாயகர்களையும் தேடி…
மைக்கேல் எடுத்திருக்கும் நான்கு ஆவணப்படங்களும் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை முடிவான விடை காணப்படாத தொன்மங்களைப் பற்றியது. அந்த தொன்மங்களை சார்ந்த நாயகர்களைப் பற்றியது – அவர்கள் உண்மையில் இருந்தார்களா ? காலப்போக்கில் மருவி மருவி முற்றிலும் உண்மை அல்லாத புணைவாக மாறக்கூடிய தன்மை கொண்ட தொன்மங்கள் எல்லாம் வெறும் புணைவா என்று ஆராய வரலாற்றின் பாதையில் பின் செல்கிறார்.
View More தொன்மங்களையும் நாயகர்களையும் தேடி…போகப் போகத் தெரியும் – 37
உடல் என்ற அடையாளத்தை உதற வேண்டும் என்று நினைக்கும் சமணத் துறவிகள் மீது தாக்குதல்; நிர்வாண ஆராய்ச்சி செய்த ஈவெராவுக்கு சிலை வைத்து பாராட்டு. தமிழகமே இதுதானா உன் தலைவிதி?
View More போகப் போகத் தெரியும் – 37ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது… பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா) குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்?
View More பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்தேவை: சமச்சீர் வசதிகள்
அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும்.
View More தேவை: சமச்சீர் வசதிகள்மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை.
View More மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்