ஆ! அசின்

இந்தக் கட்டுரைக்கு ‘காட்மண்டுவில் கஜினிகள்’ என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். முன்னாள் இந்துதேசம் நேபாளத்தில், இந்துக்களின் மிகப் புனித ஆலயம் பசுபதிநாத் சிவன் கோவில் தாக்கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டது. இந்தியன் என்ற ஒரே காரணத்தால், தலைமை அர்ச்சகர் தாக்கப்பட்டு, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்…

View More ஆ! அசின்

கவிதை: குருநாதன்…

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!

View More கவிதை: குருநாதன்…

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை…

View More சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

இவரை மறக்கலாமா?

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்…

View More இவரை மறக்கலாமா?

போகப் போகத் தெரியும் – 6

பெரிய புராணத்தையும் கம்ப ராமாயணத்தையும் எரிக்கச் சொல்லி உத்தரவு போட்டவர் ஈ.வே.ரா.

ஈ.வே.ரா.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைமலை அடிகள் “பெரிய புராணத்தை எரிப்பேன் என்று சொன்ன பெரியாரின் குடலைக் கிழித்து மாலையாகப் போடுவேன்” என்றார்…

View More போகப் போகத் தெரியும் – 6

இஸ்ரேல் ஏன் ஹமாஸ் மீது குண்டு வீசியது?

ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் மீது, முக்கியமாக குழந்தைகள் விளையாடுமிடங்கள் மேல் ராக்கெட்டுகளை வீசி தொடர்ந்து தாக்கி வருகிறது. அதனால் இஸ்ரேலில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி நம் நாட்டில் எவரும் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் இங்குள்ள ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பானவை.

View More இஸ்ரேல் ஏன் ஹமாஸ் மீது குண்டு வீசியது?

அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.

மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

View More அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

போகப் போகத் தெரியும் – 5

பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.

மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை…

View More போகப் போகத் தெரியும் – 5

ஜனவரி 1 – படித்திருவிழா

ஆங்கிலேயர் ஆட்சி நம்நாட்டில் நிலவிய காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதப் பிறப்பன்று அதிகாரிகளான துரைமார்களை காணிக்கையுடன் சென்று கண்டு புதுவருட வாழ்த்துக்களைக் கூறித் திரும்புவது நம் மக்களிடையே ஏற்பட்ட ஒரு பழக்கம். திருப்புகழைத் தவமாக மேற்கொண்ட, வள்ளிமலை ஸ்வாமிகள் சித்தத்தில் ஒரு ஞான உதயம்! உலகத்திற்கே பெரிய அதிகாரியான, உமாஸ்கந்தனை இவ்விதம், சென்று கண்டு தொழுதால், வருட முழுவதும் எண்ணற்ற நலங்களை பெறலாமே, என அருள்கூட்டியது…

View More ஜனவரி 1 – படித்திருவிழா