ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

rajiv-sonia-marriageமூலம்: ஜான் மெக்லிதான் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 12/11/10)
தமிழில்: எஸ். ராமன்

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன். மேலும் இந்நாட்டை எனது நாடாகத் தழுவியுள்ளவன். ஆனால் எங்களுக்குள் உள்ள ஒற்றுமை இத்துடன் முடிவடைகிறது.

உண்மைக்கு மாறுபட்ட பல விதமான எண்ணத் தாக்கங்களுடன் தான் நான் இந்தியாவை வந்தடைந்தேன். எனது இளம் பிராயத்துக்கே உண்டான முதிர்ச்சியின்மையின் காரணத்தால் இங்கு வாழும் மக்களை பொய்யான மதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி, உண்மைக் கடவுளிடம் சேர்ப்பிக்கும் இறைதூதன் நான் என்றே என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்தியா வந்தடைந்ததுமே நான் இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றுமில்லை, மாறாக நான் கற்றுக் கொள்ளுவதற்குத் தான் இந்தியாவிடம் நிறைய இருப்பதோடு மட்டுமல்லாது, அதை எனக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். எனது தொழிலிலோ, ஆன்மீகத்திலோ, மனித உணர்வுகளிலோ நான் இந்தியாவிடம் பெற்றது ஏராளம், ஏராளம். இங்கு வரும் மேல்நாட்டினர்களில் பலபேருக்கு இந்தியா தங்கள் நாடுகளை விடத் தாழ்ந்தது என்றும், தாங்கள் அதை ஈடு செய்து இந்நாட்டை கடைத்தேற்றத்தான் வந்திருப்பதாகவும் ஆழ் மனத்திலாவது ஒரு எண்ணம் உண்டு. ஆங்கிலேயர்களுக்கும் அப்படிப்பட்ட உள்ளுணர்வு உண்டு, அன்னை தெரசாவுக்கும் அப்படியே, சோனியாவுக்கும் அப்படியேதான்.

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை எல்லாம் கொண்டு வந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. மற்ற நூற்றுக்கணக்கான பாராளு மன்ற உறுப்பினர்கள் போல் அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும், ஒரு வெளி நாட்டவரான அவருக்கு இருக்கும் அதிகாரம் அவருக்கே அவரிடம் பயம் கொள்ளுவதாகத் தான் இருக்கிறது. மராட்டிய முதல்வர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரைப் பார்க்க டெல்லிக்கு ஓடுவதை அனைத்துத் தொலைகாட்சிகளும் கண்ணின் இமை கொட்டாதது போல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் சவான் ஒரு மாநில முதல்வராக பிரதமரிடம் அல்லவோ முதலில் சென்றிருக்க வேண்டும்?

மத்திய புலனாய்வுத் துறையான CBI, வெளி நாட்டவரான ஆட்டாவியோ குவாத்ரோச்சி சம்பந்தப்பட்ட வழக்கில் வெட்கம், மானம் ஏதுமின்றி வெளிப்படியாகவே தனது குற்றப்பட்டியலையும், விசாரணையையும் நீர்த்துப் போகச் செய்ததுமல்லாமல், ஏதோ அவருக்கு சீர் வரிசை செய்வது தனது கடமை என்பது போல, அந்தக் குற்றவாளியே கொள்ளை அடித்த இந்திய மக்களின் கோடானு கோடி பணத்தையும் லாவகமாக எடுத்துப் போகவும் அனுமதித்தது. அந்தக் கொள்ளையைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல், நமது ஊடகங்களோ ஊழல் என்று பெரிதும் இல்லாது, நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தின் முதல்வரை கடுமையாகச் சாடுகிறது. சோனியாவின் அனுமதி பெற்றோ பெறாமலோ, தனது பண பலத்தால் காங்கிரஸ் கட்சியோ பல மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அல்லாத கட்சி ஆளும் மாநில ஆட்சிகளை கவிழ்கின்றது. அவரது கைப்பாவைகளாக மாநிலத்தின் ஆளுநர்கள், சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

sonia_gandhi_caricature.jpg10 ஜன்பத் இல்லத்தை கோட்டையாகக் கொண்டு, காவலர்களையும் பாதுகாப்பாகக் கொண்டு, ஒரே ஒரு ஆளாக நாட்டிற்கு மிக முக்கியமான தீர்வுகள் பலவற்றையும் தானே செய்துகொண்டு இந்த முடிசூடா மகாராணி இந்தியாவை கிட்டத்தட்ட ஒரு முடியரசாக கோலோச்சிக்கொண்டு ஆள்வதை இந்தியர்கள் அறிவார்களா? டில்லியில் 2G, CWG, மற்றும் மும்பையில் ஆதர்ஷ் என்று பல தரப்பட்ட ராக்ஷச அளவில் நடைபெறும் ஊழல்களின் வழியே கொள்ளை அடிக்கப்படும் செல்வம் எல்லாம் அவைகளில் ஈடுபடும் பற்பல அரசியல்வாதிகளின் கைகளுக்கு வெகுவாகச் செல்லாது, சோனியாவைத் திருப்திபடுத்தும் முகமாக அடுத்து வரும் தேர்தல்களுக்காக காங்கிரசின் பொக்கிஷத்திற்கே போய்ச் சேர்கிறது என்று இந்தியக் குடிமக்களுக்குத் தெரியுமா? சோனியாவின் இந்த மறைமுக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள் என்றே தெரிகிறது.

எழுத்தாளர் அருந்ததி ராய் பிரிவினை வாதத்தைத் தூண்டுகிறார் என்று மணிக்கணக்கில் கூச்சல் போடுகிறார்கள். அதையும் விட முக்கியமாக காங்கிரஸ் அரசே நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் வேலை ஒன்றைச் செய்துகொண்டிருப்பதை மக்கள் அறிவார்களா? இந்த தேசத்திற்கு ஒரு மரியாதையுடனும், பக்தியுடனும் சேவை செய்து கொண்டிருக்கும் தேசிய ராணுவம் ஒன்றுதான் முந்தைய காலத்து உண்மையான க்ஷத்ரியர்கள் போல் தற்காலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஸ்தாபனம். ஏனென்றால் அரசியல், நிர்வாகம், நீதி, பத்திரிகை என்று பல துறைகளும் புரையோடிப் போயிருப்பது கண்கூடு. நிர்வாகங்கள் அனைத்திலுமே ராணுவம் ஒன்றுதான் தங்களது ஊதியம் அதற்கு ஏற்றாற்போல் இல்லாவிட்டாலும், தங்கள் உயிரினைக் கொடுத்து தேசத்தைக் காப்பாற்றும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. மேலும் ராணுவம் ஒன்றுதான் இப்போது சாதி, சமயங்கள் அற்ற நிர்வாகமாக இருக்கின்றது. ஒரு சிப்பாயோ, அதிகாரியோ இந்துவாகவோ, முஸ்லீமாகவோ எப்படி இருந்தாலும் எவருக்கும் எந்த சிறப்பு சலுகையும் மத அடிப்படையில் கிடையாது. அந்தக் கட்டுக்கோப்பை கலைக்கும் முகமாக, முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா, அல்லது தான் என்ன செய்கிறோம் என்பதை அறியும் திறமை இந்த அரசுக்கு இல்லையா?

அடுத்த படியாக காஷ்மீரில் ராணுவத்தின் வலிமையைக் குறைக்கும் செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு வலு சேர்க்குமா, இல்லையா?

இப்போது ஆதர்ஷ் ஊழலில் ராணுவ அதிகாரிகளை விவரம் புரிந்தோ, புரியாமலோ மாட்டி வைக்குமா என்பது தெரியவில்லை. நாம் இப்போது அறிந்த அளவில் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதிகளே அதில் பயனடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு உதாரணத்திற்கு, பிரான்ஸ் போன்ற தேசத்தில், கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும் மேலான அதிகாரங்கள் கொண்ட திரை மறைவு அதிகாரி ஆக்குவது என்பதைக் கனவிலும் காண முடியாது. இப்போது காங்கிரசிலேயே திறமை கொண்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள், தம் கலாசாரத்தையும் இந்தியரின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்த இந்தியர் ஒருவரையே தம்மை ஆளும் தலைவராக ஏன் தேர்ந்தெடுக்க முடியாது? அப்படி இல்லாது இப்போது அந்நியராகிய சோனியா தலைமையில் இயங்குவதால் நம் கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத நாட்டின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் பல சக்திகள் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

ஜனநாயகம், தொழில் நுட்பத் திறமைகள், நல்வாழ்வு வசதிகள் என்ற இப்படியான மேலை நாட்டுத் தரவுகளை வரவேற்பதில் எந்த விதமான தவறும் இல்லை. ஆனால் மேலை நாட்டு பிரச்சினைகள் நமக்கு எதற்கு? அங்கு மூன்றில் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. சிறுவர்கள் துப்பாக்கி ஏந்தி தங்களையோ, மற்றவர்களையோ சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். முதியோர்களை அவர்களின் வாரிசுகளே கவனிப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருமே பிடிபடாத ஒரு மனத் தாழ்வினால் ஏதோ ஒரு வகையில் அவதிப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில், அவைகளுக்கு மருந்தாக மேலை நாட்டினரே இந்தியா போன்று ஆன்மிகம் தழைத்த நாடுகள் தரும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

bharatham03நிலைமை இப்படி இருக்க, காலத்தால் பண்பட்ட தனது மதிப்புகளைத் துறந்துவிட்டு இந்தியா ஏன் கண்மூடித்தனமாக மேலை நாட்டை பின்பற்ற வேண்டும்? இன்னும் 85 கோடி இந்துக்கள் இந்தியாவில் இருக்கின்றனர், உலகளவில் 100 கோடியாகவும் உள்ளனர், இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது என்பவைகள் எல்லாவற்றையும் சோனியா தன் மனத்தில் இருத்திக் கொள்வது நல்லது. அந்தத் தனித் தன்மையே ஒரு இந்தியக் கிறிஸ்துவனையும் ஒரு அமெரிக்கக் கிறிஸ்துவனையும் வேறு படுத்திக் காட்டுகிறது. அதுவே ஒரு இந்திய முஸ்லீமையும் ஒரு சவூதி முஸ்லீமையும் வேறு படுத்திக் காட்டுகிறது.

அதனாலேயே, ஆயிரக்கணக்கில் இந்துக்களைக் கொன்று குவித்தும், பல்லாயிரக் கணக்கான இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக நடத்தியும் அராஜகம் செய்த ஹுமாயுனின் சமாதியை, இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தலைநகர் டில்லியில் முதன் முதல் நிகழ்ச்சியாக அமைத்து, அவரை அழைத்துக் கொண்டு காட்டியது அனைத்து இந்துக்களையும் அவமதிக்கும் செயல் அன்றி வேறென்ன? ஹுமாயூன் தனது அண்ணனின் கண்களை நோண்டி எடுத்து, அதில் எலுமிச்சையைப் பிழிந்து அவனை இம்சை செய்த கொடுங்கோலன்!

அந்நிய ஆதிக்கத்தில் வெகு காலமாக அவதியுற்று இருந்தது இந்தியாவின் சரித்திரத்தின் ஒரு துயரப் பகுதி. அதன் காரணமாகவே, அண்டை நாடான சீனா போல் அல்லாது, தனது தீர்வுகள் அனைத்திற்கும் இந்தியா மேலை நாடுகளின் வழிகளைப் பின்பற்றுகிறது. அந்த வழிமுறையின் பிரதிபலிப்பாகவே, அவருக்கு வேண்டிய தகுதிகள் இருக்கிறதோ இல்லையோ இங்கு சோனியா காந்தியும் மகாராணியாக வீற்றிருக்கிறார்.

(கட்டுரை ஆசிரியர் ஜான் மெக்லிதான் Hindutva, sex & adventures என்ற ஆங்கில நாவலையும் எழுதியிருக்கிறார்).

36 Replies to “ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி”

 1. This article is true and an eye opening article to hindus. Obama came to delhi see the himayun tomb and hear the choir of romaniyan from shillong troup – a christian choir. so no hindu cultures are shown to them becouse hillary clinton was attracted towards hinduism when she came to india along with her daughter. since then sonia is v carefull not to show hindu culture or temple to those diginateries from america or other western countries where christianity is declining. Many websites protray that sonia works as an agent for ‘Oppusdei’
  the powerful intelligence agency for christianity churches with head quarters in madrid spain
  which is said to be having 1,00,000 agents in india to spread the christianity by converting the hindus. Sonia involvement in many covert operation is believed and said in many websites on the quick departures of rajesh pilot, madhava roa scindia and jijendra pandy,congress leaders
  and subsequently to remove the clouds seen around her, she appointed all their sons as ministers in central govt ( pardoning of sins of thier fathers and washing her sins). This news are in many websites. so she acts as agent of vatigan and pope. Hindus who are ignorant will regret one day by which time, most of the people in india would have been converted to christianity, a covert imaginary figure of ”christ jesus’ planted by romanians to destory the pagan faith prevailing in greece before 1000 years ago. christianity is the curse to the society
  and unless hindus realise the truth, they would meet the end soon.

 2. மிகச் சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை.
  இன்று சோனியா சூத்ரதாரியாக இருந்து நடத்தும் சர்க்கார் உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊழல் அரசாக உள்ளது.
  சோனியாவை திரையாக வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் அவரது கூடாரத்தில் நுழைந்து கொண்டு இந்த நாட்டை பயங்கரமாகச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.

  தேச பக்தர்களான ஆர்ர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்கள் பயங்கர வாதிகளாக முத்திரை குத்தப் படுகின்றனர்
  ஆனால் நாடாளுமன்ற குண்டு வைப்பு வழக்கில் தூக்கு தண்டை வழங்கப்பட்ட அப்சல் குருவை தூக்கில் போடாமல் வைத்துள்ளனர்.
  தேச த்ரோஹப் பேச்சு பேசிய அருந்ததிராய்,கீலானி இவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  காஷ்மீரின் பெருவாரியான மக்கள் பாரதத்துடன் இருக்கவே விழைகின்றனர். அனால் இந்த அரசு இந்த நாட்டின் மீது துளியும் நாட்டுப் பற்று இல்லாத interlocutors மூலமாக பிரிவினை வாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது

  சோனியா ஆட்சி அதிகாரத்தை மறைவிலிருந்து நடத்த ஆரம்பித்தவுடன் தான் ஹிந்துக்களின் மீதும்,ஹிந்து இயக்கங்களின் மீதும், சாதுக்கள், சாத்விகள் மீதும் வரலாறு காணாத அளவு பொய் வழக்குகள் போடப்படுவதும் , அவர்கள் பணிகள் முடக்கப் படுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
  இதற்குப் பின் சர்ச் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

  ஹிந்துக்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டு,முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முன்னிலைப் படுத்தப் படுகின்றனர்.
  அவர்களுக்கு பெருமளவில் பட்டங்கள், பதவிகள், விருதுகள், பண முடிப்புகள் வழங்கப் படுகின்றன..ஜனநாயகத்தின் ஒவ்வொரு அங்கமும் திட்டமிடப்பட்டு நாசமாக்கப் பட்டு வருகிறது. குற்றம் சாட்டப் பட்ட நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார். நீதி மன்றத்தில் ஊழல் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் தாமஸ் தலைமை ( ஊழல்) கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் படுகிறார். நம் நாட்டு மக்களை கிண்டல் செய்வது போல் குடியரசுத் தலைவராக ஒருவர் நியமிக்கப் படுகிறார். தலை ஆட்டி பொம்மையாக உள்ள, தன்னைச் சுற்றி எந்த ஊழலும், அநியாயமும், அக்கிரமும் நடந்தாலும் ஒன்றுமே நடக்காதது போல நடிக்கும் ஒருவரை பிரதமராக நியமித்தனர்.

  சுருங்கச் சொன்னால் நம் நாட்டை முற்றிலும் அழித்தொழிக்கும் ஒரு திட்டத்துடன் அனுப்பப் பட்டிருபதாகவே தெரிகிறது.

 3. super super அந்த அம்மா இன்னமும் இத்தாலி குடிஉரிமை வைத்து உள்ளார்.

  இந்த கொடுமை இங்கு மட்டுமே நடக்கும்.

 4. //Her governors shamelessly hijack democracy by twisting the law.//

  //அவரது கைப்பாவைகளாக மாநிலத்தின் ஆளுநர்கள், சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.//

  shamelessly => வெட்கம் கெட்டுப்போய்

  “அவரது கைப்பாவைகளான மாநிலத்தின் ஆளுநர்கள், வெட்கம் கெட்டுப்போய்ச் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.” என்று மொழிபெயர்ப்பு வந்திருக்க வேண்டும்.

  வெட்கம் கெட்ட செயலை வெட்கம் கெட்ட செயல் என்று சொல்வதில் என்ன தவறு?

 5. தமிழ் நேசன்:

  நீங்கள் கூறுவதில் தவறில்லை. மொழிபெயர்ப்பின் போது சில சொற்கள் கூடுதலாக வருவதுபோல, முக்கியமாக வாக்கியத்திலேயே கவனம் செல்லுவதால், சில சொற்கள் விட்டுப் போகின்றன. சுட்டிக் காட்டிச் சேர்த்ததற்கு நன்றி.

  ராமன்

 6. Pingback: Indli.com
 7. ராணி மஹாராணி ஒளிந்து திரிந்து
  சமயம் பார்த்து பதவி தேடி ஓடி அலைந்த ராணி
  எட்டவில்லை என்பதினால் எட்டி உதைத்த ராணி
  ஒட்டாமல் ஒட்டிக்கொண்டு சிண்டுமுடியும் ராணி
  உத்தமராம் காந்தி அவர் பேர் கெடுக்கும் ராணி
  புனிதமான பாரதத்தின் புகழ் குலைக்கும் ராணி
  அன்னியமத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் ராணி
  உண்டவீட்டில் கன்னம் வைக்கும் ஊமையான ராணி
  சகுனிளையே வென்றுவிட்ட சாகச கூனி
  கோடிகளை சேர்த்துவிட்டு கோலோச்சும் ராணி
  உன்னதமாம் இந்துமதம் அதன் உருகுலைக்கும் ராணி
  மானம் இல்லை வெட்கம் இல்லை ரோஷம் இல்லை இங்கே
  கொழுத்துவிட்ட அன்னியரின் அடிவருடும் கூட்டம்
  இனிமேலும் தாங்காது வஞ்சகரின் சூழ்சி
  ஒன்றுபடுவோம் வென்றிடுவோம் விழ்திடுவோம் வாரீர்

 8. இந்தியர்கள் எப்போதுமே அந்நியர்களிடம் அடிமையாக இருப்பதை விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள். இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய போதே ஆக்டேவியன் ஹ்யூம் தலைவராக இருக்க வில்லையா? திலகர் காலம் வரையிலும் ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் பிரிட்டிஷ் அரசருக்கு வாழ்த்துப்பா பாடித்தான் மாநாட்டைத் தொடங்க வில்லையா? பல காங்கிரஸ் மகாநாடுகளுக்கு அந்தந்த மாநில வெள்ளைக்கார கவர்னர்கள் சிறப்பு விருந்தினராக வரவில்லையா? இதிலெல்லாம் அவர்களுக்கு மானம் கிடையாது. அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டி தங்கள் நல்லுயிர் ஈந்த தியாகச் செம்மல்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு அந்நிய அடிவருடுதல் தான். இன்று இத்தாலிய அடிமை மோகம் தலைக்கேறிகிடக்கும் சூழ்நிலையில், அந்த அம்மையாரை இத்தாலியர் என்ற உண்மையைச் சொன்ன சுதர்சனுக்கு எத்தனை எதிர்ப்பு இந்த காங்கிரசாரிடமிருந்து. வெட்கம். வெட்கம். நூறு கோடி இந்தியரில் ஒரு தலைவன் இல்லாதது நமக்குத் தலைக்குனிவுதான்.

 9. CHRISTIANITY THUMB RULE IS ”DIVIDE AND RULE’ .THAT IS WHAT THEY DID TO RULE OUR COUNTRY BY BRITISH COLONICAL RULERS. CONGRESS WHICH WAS STARTED BY A BRITISH MISSIONARY MEN FOLLOWS STILL THE SAME POLICY – DIVIDE INDIA BY RELIGION AND DIVIDE HINDUS BY CASTE. SO HINDUS ARE PERMANENT SLAVES TO CONGRESS WHICH RULED INDIA FOR 65 YEARS. UNLESS HINDUS ARE EDUCATED AND REALISED THE TRUTH, CONGRESS AND SONIA MANIA WILL DESTORY THE HINDUISM

 10. The allegations made by Sudarshan are now new. The same was made by Narain Kataria of US. These kangi hoodlums filed a suit and demanded some $220 million as damage. The case went kaput.

 11. அந்தோனியா மைனோ என்ற சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விதமே ஒரு அசிங்கமான கூத்து.
  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்த பொது அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி நடுவே ‘கால் கழுவச்’ சென்ற பொது ஜால்ராக்கள் சோனியாவை அவரது இடத்தில் உட்கார வைத்தது தலைவியாக ‘மகுடம் ‘ சூட்டினர்!

 12. சோனியா இத்தாலியர் என்று மட்டும் திரு.சுதர்சன் சொல்லவில்லை. சோனியா ஒரு CIA உளவாளி, அவர் தந்தை யார் என்பதில் குழப்பம் என்பன போன்ற விஷயங்களைச் சொன்னார். குமுதன் அவர்கள் சொன்னது போல இது ஏற்கனவே அமெரிக்காவில் கடாரியா என்பவரால் சொல்லப்பட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் சோனியா குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அமெரிக்க நீதிமன்றத்தில் சோனியா நேரில் ஆஜராக வேண்டும் என்பதாலும், கடாரியா அவர்கள் சொன்னதும் பத்திரிக்கைகளில் வந்ததும் தவறு என்று சோனியாவே நிரூபிக்க வேண்டும் என்பதாலும் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. Dr. சுப்பிரமணியன் சுவாமி இது பற்றிப் பல மேடைகளில் இதைவிடவும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

  சோனியா குடும்பத்தினர் இத்தாலியில் இந்தியத் தொல்பொருட்களைக் கடத்தி விற்கிறார்கள், அவர்கள் KGB உளவாளிகள் என்பது உட்பட இன்னும் பல குற்றச்சாட்டுகள் கூறுகிறார் சுவாமி.
  https://www.youtube.com/watch?v=1mjdFujlVwo
  நீதிமன்றத்துக்கு வா வழக்காடு என்று சவாலும் விடுத்திருக்கிறார். இது வரை யாரும் அவர் மீது வழக்குத் தொடரவில்லை.

  ஆனால் திரு.சுதர்சன் இதைச் சொன்னார் என்றதுமே RSS, BJP இரண்டும் “ஐயகோ! இதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டன. RSS மூத்த தலைவர் வைத்யா இது சோனியா காந்தி மீது சுதர்சன் கூறிய குற்றச்சாட்டு, காங்கிரசுக் கட்சி மீதோ UPA அரசு மீதோ கூறப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. எனவே கட்சி ஆர்ப்பாட்டதை நிறுத்திவிட்டு சோனியா என்ற தனிநபர் சுதர்சன் என்ற தனிநபர் மீது வழக்குத் தொடரட்டும் என்றார். (Mr Vaidya was of the view that since the serious charges by Mr Sudarshan were not against the Congress or the UPA government but against her, the Congress chief should knock the doors of court of law.) ஆனால் பத்திரிக்கைகள் RSS தலைவர் வைத்யா சுதர்சன் மீது வழக்குப் போட சோனியாவுக்கு சிபாரிசு செய்தார் என்று செய்தி வெளியிட்டன.
  https://www.deccanchronicle.com/national/sonia-should-file-case-says-vaidya-969

  KGB, CIA உட்பட எந்த உளவு அமைப்பும் தங்கள் உளவாளிகளை offer letter, appointment order எல்லாம் கொடுத்து வேலைக்கு எடுப்பதில்லை. எதோ ஒரு கம்பெனியில் இன்சூரன்ஸ் ஏஜெண்ட், கிளார்க், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்றுதான் வேலை செய்வார்கள். சம்பளம் வழங்கப்படும். அது போன்ற உளவாளிகளுக்கு என்று கணக்கில் வராத ஒரு கணக்கும் உண்டு.

  இத்தகைய குற்றச்சாட்டுகள் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியாதவை. Dr.சுப்பிரமணியன் சுவாமி அழைத்தது நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையில் சிக்கலான கேள்விகளைக் கேட்பதற்கும் அதன் மூலம் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கவும் தான் என்று அவரே சொல்கிறார். வேறு பல உண்மைகளையும் வரவழைக்கிறேன் என்று சவால் விடுகிறார். மைனோ மகாராணியார் வாளாயிருப்பதே சிறப்பு என்று கருதுகிறார் போலும். Dr.சுப்பிரமணியன் சுவாமிக்கு பதில் சொல்லவில்லை. வைத்யாவின் சவாலுக்கும் பதிலில்லை. RSS வருத்தம் தெரிவித்தது போதும் என்கிறார்கள்.

  கடவுளே! கடவுளே!! கடவுளே!!!

 13. வைத்யா அவர்கள் அவ்வாறு சொன்னது எதற்காக என்றல் அப்படியாவது கோர்ட்டில் சோனியா ஆஜர் ஆகி தன்னைப் பற்றிய உண்மைகளை உலகத்துக்குச் சொல்ல மாட்டாரா ஏன்றுதான்!

 14. (Deport Sonia to Italy)
  1. sole proprietor for telling countless number of lies
  2. She is hailed from a Russian spy family now switched her loyalty to another communist country.
  3. Catholic Christianity and Pope order are her main breath
  4. Uneducated lady, served in a bar as maid servant. Does not know good English or Hindi. Always speaks if some body writes it in a paper that too with broken pronunciation. Cleverly avoid all press TV interviews.
  5. She does not have tinge of patriotism toward India
  6. Shamelessly annexed to her name Gandhi to cheat the Indians.
  7. Every year the entire family goes to Lakshadeep to celebrate Christmas.
  8. Only after the arrival of this bar girl in active politics conversion in India has taken a bad shape
  9. Because of her intervention recent Tamil genocide took place in Sri Lanka
  10. Ready to give Badmashree awards to any body who teases Hindu and Hinduism
  11. She is behind creating bad names for Hindu saint and seers.
  12. When she visited Kadmandu along with Rajiv she requested the king to release 90 Padaris put in the jail for illegal conversion activities
  13. Similarly Rajiv when visited one Northeastern state during election time announced if people vote congress party they will run the state as per Bibical order
  14. Now Manipur is demanding to announce their state as Christian state and wants rule the state as applicable to Kashmir
  15. All the Maoist activities are encouraged by Christian Church and Sonia is not permitting to control them with military power
  16. Earlier also because of her influence currencies appeared with cross, hand symbol and now with Alponsa.
  17. When Pope John Paul died, only two country Italy & Canada paid homage by hoisting the flag down. Along with them India also paid homage by hoisting the flag down. Except these three others are not secular country
  18. She is doing the routine exercise of swindling the Indian money and depositing in the foreign country starting from Bofors, KGB, Wolkers, Sadams food for petrol exchange, 2G spectra scandal and the list goes endlessly.
  19. Last year she got one Belgium Govt award “Leo Pold”, which is normally given to people who are true patriot of the nation. This clearly shows her affinity towards alien country.
  20. Mother for all pseudo secularist , antinational and of course all fundamental Christian

 15. திரு சுப்பிரமணிசாமியின் கட்டுரையிலிருந்து சில வரிகள்

  Between December 26, 2007 and January 5, 2008, Ms. Sonia Gandhi was sent Rs. 10,000 crores in dollars equivalent by Raja’s benefactors into her Cayman Island Bank of America account, which incidentally Rahul Gandhi also operates.

  Hence, the PM became silent. I urge the BJP to attack Sonia Gandhi for this deal and not waste time on our puppet PM. She is the Tadaka who has to be countered and not her minions. I also demand that the PM grant me sanction under the Prevention of Corruption Act or face me in court as a co-conspirator in this deal.

  நேற்று உச்சநீதிமன்றம் ராஜாவின் மீது வழக்குதொடுக்க திரு சாமியின் கோரிக்கை மனுவிற்க்கு 16 மாதங்கள் ஆகியும் பதில் கூறாதது ஏன் ? என்று மன்மோகள்சிங்கை சாடியுள்ளது. பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டு இந்த சதிகாரகும்பல்களுக்கு துணைபோவது ஒருமானம்கெட்ட வெட்கம்கெட்ட செயல். அதைவிட நாக்கைபிடுங்கிக்கொண்டு சாவதேமேல்

 16. தயவு செய்து சோனியாவையோ, ராகுலையோ, பிரியங்கவையோ , ஏன் இந்திரா குடும்பத்தினரையே காந்தி எனும் பெயரைச் சொல்லி எழுத வேண்டாமே! நன்றி!

 17. https://www.janataparty.org/pressdetail.asp?rowid=59
  STATEMENT OF DR.SUBRAMANIAN SWAMY, PRESIDENT OF JANATA PARTY MADE IN CHENNAI ON 03.11.2010
  1. The Home Minister Chidambaram’s inane comment on ‘Hindu Terror’ acts is actually a Home Ministry project of 2004-06. With the explicit approval on exercise of her extra-constitutional authority Ms.Sonia Gandhi had instructed the then Intelligence Bureau Director to recruit army, Hindu sadhus and sadhvis on the call of ‘patriotism’ and thus motivated them to commit acts of terror to polarize the Muslim community against Hindus.
  2. In 2007, Ms.Gandhi ordered the termination of this clandestine operation that she had order in 2004. She then used the project to discredit the Hindutva movement by targeting innocent and unsuspecting persons, focussing on RSS persons.
  3. The framing of the Kanchi Shankaracharya in the Sankaraman murder case was also on the instruction of Ms.Sonia Gandhi to Ms.Sasikala. Ms.Jayalalitha the then CM, being a performing ‘circus lion’ in front of the ‘ring master’ Ms.Sasikala, obliged and hence the Shankaracharya was arrested.
  4. The foreign Christian missionary lobby has been against the Shankaracharya because he had tried to co-opt Scheduled Castes and Backward Classes into the Hindutva movement.
  5. I therefore welcome the RSS decision to launch a nation wide agitation to expose this slandering and framing of Mr.Indresh Kumar, and the RSS as an organization.
  (SUBRAMANIAN SWAMY)
  STATEMENT of Dr. Subramanian Swamy made in Kochi 3/11/10
  The vicious attack on the RSS by Ms. Sonia Gandhi yesterday at the captive Congress Party meeting is now making clear to all Indians her true form. Like Ravana who came dressed as a Sadhu in saffron colour clothes to fool Sita to let down her guard, so that he could kidnap her, in the same way Ms. Gandhi came dressed in a saree, even covering her head on occasions as a good bahu (daughter in law)would, and fooled Indian people to enable her to steal the raj simhasan,
  Yesterday at the meeting, she was speaking in her true form, as a foreign Christian missionary agent of the religious conversion violence against Bharat Mata, and hence seeking to defame the RSS with a contrived charge of terrorist activities.
  RSS is a voluntary organization of patriotic Hindus who want to rise above petty caste and regional loyalties, and hence a sheet anchor in the battle against cash-induced religious conversion of which Ms. Gandhi is the patron in India.
  She is now seeking to shackle India so that the Vatican can enjoy suzerainty over Sanatana Dharma and Hindustan.
  I urge all genuine Hindutvavadis to throw off all their shackling inhibitions and join in a grand democratic onslaught on this covert, clandestine, and cancerous invasion against the most ancient and continuing value system of India that was made known to us Indians as Hindutva by Swami Vivekananda and Veer Savarkar, and given an all India organisational content by the RSS. For the sake of a Virat Hindustan I appeal to all patriotic Indians to defend the RSS with all the resolve that they can muster.

 18. சுதந்திரத்திற்க்கு பின் பர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜமானியம் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவிற்க்கு பணம் கிடைத்தது. ஆனால் இவை ஒவ்வொன்றாக ஒழித்துவிட்டபின்தான் அரசு திட்டங்களில் கொள்ளையிடும் ஊழல் அரசியல் தலைதூக்க ஆரம்பித்தது. இதற்க்கு முன்னோடிகள் இந்திராகாந்தியும் கருனாநிதியும் தான் ( அர்தஷ் மேதா நகர்வாலா சர்காரியா) . இந்திரா காங்கிரஸ் என்று ஆரம்பித்து அதற்க்கு தேர்தல் விதிமுறையை மீறி கை சின்னத்தை அளித்தார்கள். (தேர்தல் விதிபடி மணித உறுப்புகளை தேர்தல் சின்னமாக வைக்க அனுமதி இல்லை) அன்றிலிருந்து ஆக்டோபஸ் போல் எல்லா திசைகளிலும் வெட்கம் இல்லாமல் கைபோட்டு (களவாடி) இன்று வரை தொடர்ந்து ஊழல் செய்துகொண்டிருக்கிறது. இது தீவிரம் அடைந்து கேட்பார் இல்லாத சர்வாதிகார அரசியலாக மாறிவிட்டது. கேள்வி கேட்கவேண்டிய கவர்னர் ஜனாதிபதி நீதிபதி தேர்தல் கமிஷன் சி.பி.ஐ பத்திரிகைகள் டிவி என்று ஒரு இடத்தையும் விடாமல் ஆளும்கட்சிக்கு நெருங்கியவர்களையே பதவியில் அமர்துவது என்பது இன்று நடைமுறைபடுத்தப்பட்டு சந்திசிரித்து கொண்டிருக்கிறது. மீறி குரல் எழுப்பும் எதிர் கட்சிகளையும் பணத்தாலும் வழக்குகளில் சிக்கவைத்தும் தங்களுக்கு சாதகமாகவோ அல்லது வாய்முடிகிடக்கவோ செய்துவிடுகிறார்கள். உலகமயமாக்கப்பட்டபின் தேசபற்றுள்ள தொழில் அதிபர்களும் ஊடகங்களும் காணாமல் போய்விட்டன.

  பொதுசொத்தை கொள்ளையடித்து வந்த காங்கிரஸ் தலைவர்களிடை போட்டி அதிகமானதால் காட்டிகொடுப்பதும் அதிகமாகி மத்யஸ்தம் செய்ய தேசபற்று சிறிதும் இல்லாத வெளிநாட்டு தலைவியை இறக்குமதி செய்தார்கள். இவர் குரங்கு ஆப்பத்தை பங்கிடுவதுபோல் எல்லா கொள்ளையும் ஏப்பம்விட்டு நாட்டையே விலைபேசிக்கொண்டிருக்கிறார். இந்த காங்கிரஸ் மரமண்டைகளுக்கு என்றுதான் உரைக்குமோ !!!!!!!!!!!!!!!

  காலம் மாறிக்கொண்டிருக்கிறது நமது கவலைகள் நீங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது நம்பிக்கையுடன் காத்திருப்போம்

 19. //3. The framing of the Kanchi Shankaracharya in the Sankaraman murder case was also on the instruction of Ms.Sonia Gandhi to Ms.Sasikala. Ms.Jayalalitha the then CM, being a performing ‘circus lion’ in front of the ‘ring master’ Ms.Sasikala, obliged and hence the Shankaracharya was arrested.//

  Good joke. There is a reason why Subramaniam swamy is called as the political clown of india. the above statement confirms that.

  When we are so proud when nikki haley wins a governor election in america why you people are so pathetically frustrated when it comes to sonia. she could have been the prime minister if only if she wanted to way back in 2004. but she has renounced that high office and made BJP shut their mouth once and for all.

 20. //When we are so proud when nikki haley wins a governor election in america why you people are so pathetically frustrated when it comes to sonia//

  Nikki Haley previously known as Nimrata Nikki Randhawa was a sikh. She had to convert to christianity (Methodist) before she could be accepted in US. Same is the case with Bobby Jindal. You can’t too far in US politics if you are non-christian. Did Sonia convert to Hinduism?

 21. // Nikki Haley previously known as Nimrata Nikki Randhawa was a sikh. She had to convert to christianity (Methodist) before she could be accepted in US. Same is the case with Bobby Jindal. You can’t too far in US politics if you are non-christian. Did Sonia convert to Hinduism? //

  Good point Kumudan… It is not just with non-Christians in the US. They are so bigoted and blinded by fundamentalism that even non-Protestant Christians face the same music. JFK being a Catholic had to clarify his religion in front of the people. So is the case with Mitt Romney 2 years ago as he is Mormon. (Actually, a good portion of them classify Catholics and Mormons as “non-christians”). A good percentage of the people there still believe Obama is a secret Muslim, and that is why he avoids wearing the turban when he is on tour to Eastern countries. This is utter humiliation and nothing else.

  It is a big joke to say that Nikki Haley or Bobby Jindal should make Indians proud. Rather, they are a major disgrace to our timeless cultural values that go beyond mere two millenia of history (and that too studded with crusades, bloodbath, genocide, dishonesty, cheating, defamation, and plundering).

 22. சுப்பிரமணியம் சுவாமி அவர்களை ஏளனம் செய்யும் அளவுக்கு நவீத் என்ன பெரிய மேதாவியா?
  இவர் செய்வது என்ன இல்லையா?
  சுவாமி மெத்தப் படித்தவர்.
  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின்
  ஆள்பவர்களின் ஊழல்களைக் கண்டு கொள்ளாமல் ஜால்ரா தட்டும் போலி அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் இதோ நான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக் விளங்குபவர்
  ஜெயலலிதாவாகட்டும் ,ராமகிருஷ்ண ஹெக்டே ஆகட்டும், சோனியா ஆகட்டும் சிறிதும் அவர்களது மிரட்டல் உருட்டல்களுக்கேல்லாம் பயப்படாமல் போராடியவர்.
  இன்று அவர் இல்லாவிட்டால் உலக ஊழலான ஒரு லட்சத்து எழுபதாராயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் பூசணிக்காய் பொய் என்னும் சோற்றில் மறைத்திருப்பார்கள்.

 23. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்திக்கச் சென்ற போது, தன்னிடம் 272 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகச் அலட்டிக் கொண்டார் சோனியா.’
  பத்திரிக்கை நிருபர்கள் ‘ஆட்சி அமைக்க உரிமை கோரப் போகிறீர்களா’ என்று கேட்ட போது ‘பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அப்படிக் கேட்பதுதான் வழக்கம்’ ( thats what happens normally)என்று தலை நிமிர்ந்து பேசியவர் , வெளியில் வரும் போது முகம் வெளிறிக் காணப் பட்டார்
  அப்படியானால் குடியரசுத் தலைவர் அவரிடம் என்ன சொன்னார்?
  அதுதான் சுவாமி அவர்கள் சொன்ன ‘ Principle of reciprocity’
  அதன் படி இத்தாலியில் ஒரு இந்திய வம்சாவளியினருக்கு என்ன உரிமைகள் அனுமதிக்கப் பட்டுள்ளதோ அந்த உரிமைகளைத்தான் இத்தாலிய வம்சாவளியினர் பாரதத்தில் பெற முடியும் என்பது.
  அதன்படி பாரத வம்சாவளியினர் இத்தாலியில் பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ ஆக முடியாது.
  ஆகவே இத்தாலியரான சோனியா இங்கு பிரதமர் ஆக முடியாது !
  அதற்குப் பிறகு அசடு வழிந்து குப்புற விழுந்தாலும் மீசையில் (!) மண் ஒட்டவில்லை என்பது போல் பேசிய வசனம் தான் ‘தியாகம் ‘ என்பதெல்லாம்! காங்கிரஸ் ஜால்ராக்கள் இன்றும் ஓயாமல் அந்த புளுகை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
  தான் அடைய முடியாததை எப்படியாவது தன மகன் அடைய வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறார் சோனியா
  அவரது கட்சியைச் சேர்ந்த ஜகன் ரெட்டியே இதை வெளிப்படையாகச் சொல்லி விட்டார்!

 24. நவீத் செய்வது abuse இல்லையா?
  சுவாமி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் visiting professor

 25. ஒருவர் தியாகம் செய்து விட்டார் என்று எப்போது சொல்லலாம் என்றால் அவருக்கு தர்மப்படியோ,நியாயப் படியோ, சொந்தமான ஒன்றை அவர் துறந்து விட்டார் என்ற போதுதான்.
  பாரதத்தின் தலைமைப் பதவி எப்படி சோனியாவுக்கு சொந்தமாகும்?
  அவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த நாட்டின் தலைவராக அவர் நினைத்திருக்கவே கூடாது
  அன்னி பெசன்ட், புதுச்சேரி அன்னை,சகோதரி நிவேதிதா போன்ற வெளி நாட்டுப் பெண்மணிகள் இங்கே வந்தனர்.
  அவர்கள் யாரும் பணம்,அதிகாரம்,பதவி ,சுக போகம் இவற்றை நாடவில்லை
  பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற பாரம்பரியங்களை அவர்கள் போற்றினர், அவை காட்டிய பாதையில் வாழ முயற்ச்சித்தனர்.
  இந்த நாட்டின் கோடானு கோடி எளிய மக்களை மதித்தனர்.
  ஆனால் இவ்வளவு ஆண்டுகள் இங்கு வாழ்ந்த பின்னரும் சோனியாவுக்கு எள்ளளவாவது நம் நாய்ட்டின் சரித்திரமோ, கலாச்சரமோ ,உயர்வோ தெரியுமா?
  இந்த நாட்டின் ஆன்மாவை அவர் உணர முடியுமா?
  ஆகவே அவருக்கு இந்தநாட்டின் தலைமைப் பதவியை வகிக்க அருகதை இல்லை
  அதை அடைய நினைப்பதே ஒரு பாவமாகும். ஒரு சமுதாயத்தையே ஏமாற்றுவது போலாகும்.
  சிங்கக் கூட்டத்துக்கு சிறு நரி தலைவனாக நினைப்பது போலாகும்.
  ஆகவே அவருக்கு சொந்தமில்லாத ஒன்றை எப்படி அவர் தியாகம் செய்ய முடியும்?

 26. இன்று காங்கிரஸ் அரசுக்கு உச்சநீதிமன்றம் மேலும் ஒரு சாட்டை அடி கொடுத்துள்ளது. P.J. Thomas ஒரு கிரிமினல் குற்றம்சாட்டப்பட்வர், வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அவருக்கு எவ்வாறு விஜிலன்ஸ் கமிஷன் தலைவர் பொறுப்பு கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இன்று காங்கிரஸ் மானம் கெட்டு மதிஇழந்து போனதிசை எல்லாம் கள்வனாய் சேலை கட்டி திரிந்துகொண்டிருக்கிறது. இந்த லஷ்ஷணத்தில் போபர்ஸ் புகழ் கொள்ளைகாரி ஒரு பொதுகூட்டத்தில் நாட்டில் (Greed & graft) அதிமாகிவிட்டது என்று பொன் மொழி உதிர்த்துள்ளார் (Devil preaching the gospel)

 27. அரசின் தலைமை வழக்கறிஞர் நாட்டின் தலைமை நீதிபதியை மிரட்டுவது இப்போது தான் நடந்திருக்கிறது. ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையில் இருக்கும் P.J.தாமஸ் எப்படி ஊழல் தடுப்பு தலைமை அதிகாரியாகச் செயல்பட முடியும், இப்படிகுற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு பதவி உயர்வே தரமாட்டார்களே பிறகு எப்படி இவரை CVC ஆக நியமித்தீர்கள் என்பதே CJIன் கேள்வி.

  இதற்கு பதில் தருமுகமாக தாமஸின் பெயர் எட்டாவதாகத்தான் குற்றப்பத்திரிக்கையில் இருக்கிறது, அவர் குற்றத்தை முன்னின்று செய்யவில்லை, வேடிக்கை பார்த்தார் என்பதே குற்றச்சாட்டு, என்பன போன்ற சால்ஜாப்புகளைச் சொல்லலாம். ஆனால், AG அப்படி அப்பழுக்கற்ற நேர்மைதான் தகுதி என்றால் நீதித்துறை உள்ளிட்ட எல்லா நியமனங்களையும் அந்தத் தகுதியின் மூலமாகக் கேள்விக்கு உள்ளாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

  ஏன் குற்றம் நடந்தது என்று கேட்டால் இதே கேள்வியை உன்னை நோக்கியும் கேட்கலாம் அடக்கி வாசி என்ற மிரட்டல் தொனிக்கிறது இந்த பதிலில். வெளியே வந்து AG தான் ஒரு மிகச்சிக்கலான சட்ட விஷயத்தைப் பேசியதாகவும் “அப்பழுக்கற்ற நேர்மை என்பதைக் கொண்டு யாரையும் கேள்வி கேட்க முடியும், ஆகவே அது தகுதி என்பது சரிவராது” என்று தாம் சொன்னதாகவும் அது மிரட்டல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்.

  ஆக, அரசின் நிலைப்பாடு “நேர்மை தேவையில்லை”.

 28. அருமை நண்பர் ஆர்.ஸ்ரீதரன் அவர்களே! அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியா வந்தார், நம் சுதந்திரத்துக்காக பாடுபட்டார். ஹோம்ரூல் இயக்கம் துவக்கினார். எல்லாம் சரி. மகாகவி பாரதி அவரை மதித்தார் அவர் நோக்கத்தில் குறை காணவில்லை. அவர் ஐரிஷ் பெண்மணி, எப்போதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்துக் கொண்டவர். ஆனால் அந்த அம்மையார் சுதந்திரப் போரில் தான் மும்முரமாக ஈடுபட்டதை பாரதி விரும்பவில்லை. அவரை கேலி செய்து எழுதினர். “பொன்வால் நரி” “Fox with a Golden Tail” என்றொரு கேலிக் கட்டுரை எழுதினர். நம் நாட்டைப் பற்றி நம்மை விட எங்கிருந்தோ வந்தவர் போலியாக பற்றுக் கொண்டவர் போல பேசுவதை அவர் விரும்பவில்லை. பாரதி இன்று இருந்திருந்தாலும் அதையேதான் இன்றைய வெள்ளைத் தோலுக்குச் சொல்லியிருப்பார்.

 29. An interesting reason on why communists support this lady:

  For decades the Communist parties in India had identified the Congress Party as their Enemy # 1 and the West as their Enemy #2. Four years ago, they voted in favor of making Mrs. Sonia Gandhi – an Italian born, Roman Catholic woman – the Prime Minister of India. Why did they do so?

  Obviously, many factors favored that decision, but for me the most amazing explanation came from an Indian software engineer who called from Chicago. “You do not know me, Dr. Mangalwadi,” he said, “but I have tracked you down because I have interesting news for you. Several years ago I was working for a software company in Hyderabad and I used to be in and out of the Parliament House in Delhi for work. I bought 70 copies of your book Missionary Conspiracy: Letters to a Postmodern Hindu” and gave them to the Members of Parliament that I met.

  “Now I work for a US Company and I was back in the Parliament House on behalf of this Company. I ran into Mr. [xyz], a General Secretary of a Communist Party. He asked me, ‘Are you the gentleman who gave me a copy of the letters to Arun Shourie?’

  “When I told him, I was, he said, ‘You know it was because of that book that we decided to support Sonia Gandhi. That book told us how good Christianity has been for India and we thought may be, as a Christian she too will be good for our country.’“

  https://satyameva-jayate.org/2010/11/23/kandhamal-maoists-christianity/

 30. காய்தல் உவத்தல் இல்லாத நேர்மையான அலசல்,அதிகாரத்தைக் கண்டு அஞ்சாத தன்மை ,இந்தியர்களை விடவும் இந்தியாவின் மேலும் ,இந்தியக் கலாசாரத்தின் மீதும் உயர்ந்த மதிப்பீடு ….என ஜான் மெக்ளிதான் கட்டுரையில் நீதியும் ,நேர்மையும் மிளிர்கின்றன …பாராட்டுகள் …

 31. ஏற்கனவே கிட்டதட்ட 900 ஆண்டுகள் அடிமை வாழ்கை வாழ்ந்து மிகபெரிய போராட்டத்திற்கு பின் இரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றோம். மீண்டும் ஒரு அந்நிய ஷக்தி சோனியாவிடம் (ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி) அடிமை பட்டு கிடக்கிறோம் .

  என்று தணியும் இந்த சுதந்திர தாகம்………
  என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ……….
  என்ற வீரகவி பாரதியின் பாடல் நியாபகம் வருகிறது .

  மீண்டும் ஒரு சுதந்திர போர் ! தேவை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *