கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2

தொடர்ச்சி…

6. “நிலநடுக்கம்  உண்டாகும் சாத்திமுள்ள பகுதியில் அணுமின் நிலையம் அமைவது ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது”

“2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின.”

நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியில் இந்த அணு மின் நிலையம் கட்டப் படுவதினால் நில நடுக்கம் வரும் பொழுது பெரும் விபத்து ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கும் என்கிறார்கள்.

இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை, இருபதினாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கும் ஒரு திட்டத்தினை இந்த இடத்தில் அமைக்க திட்டமிடும் முன்னால், இந்த எளிய பாதுகாப்புப் பிரச்சினையைக் கூடவா இதைத் திட்டமிட்டவர்கள் அலசியிருக்க மாட்டார்கள்? அது நம் விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் அடிப்படை அறிவையே கேலிக்குள்ளாக்கும் ஒரு குற்றசாட்டு அல்லவா?

தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் எத்தனை முறை எந்த அளவில் கடந்த 200 ஆண்டுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளன? அப்படியே ஒரு குற்றசாட்டை வைத்தாலும் அதன் உண்மையைப் பற்றிப் பேசக் கூடிய தகுதி உள்ளவர்கள் நிலவியலாளர்களும், கட்டிட நிபுணர்களும், பாதுகாப்பு பொறியாளர்களும் அல்லவா? இந்தக் குற்றசாட்டை வைத்து அப்பாவி மக்களைப் பயமுறுத்தும் முன்னால் எத்தனை நிபுணர்கள் கலந்தாலோசிக்கப் பட்டார்கள்?

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை முழுவதுமே நிலநடுக்கப் பகுதிகள்தான். அங்கு நில நடுக்கம் அடிக்கடி நிகழ்கின்றன. அதே பிரதேசத்தில் ஏராளமான அணு சக்தி நிலையங்களும் ஆராய்ச்சி சாலைகளும் அமைக்கப் பட்டுள்ளனவே? கடந்த 50 ஆண்டுகளில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த அணு நிலையங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையே? அதே பாதுகாப்பை இங்கு செய்திருக்கிறார்களா? அது எவ்வளவு அளவைத் தாங்கும் என்பதைப் பற்றி மட்டுமே கேள்வி எழுப்பப் பட்டு அதற்கு உரிய வல்லுனர்களால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். போகிற போக்கில், இந்தத் துறையென்று இல்லாமல் எந்தத் துறையிலும் முறையான எந்தவொரு அறிவும் இல்லாத அரசியல்வாதிகளும், பாதிரியார்களும் இவை போன்ற ஆதாரமில்லாத வதந்திகளைப் பரப்பக் கூடாது.

இதை விட அதிக நில நடுக்க வாய்ப்புள்ள அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இதை விட அதிக அளவிலான அணு மின் உலைகள் நிறுவப் பட்டு பாதுகாப்புடன் செயல் பட்டு வருகின்றன. நில நடுக்கப் பகுதிகளில் கட்டப் படும் அணு மின் உலைகள் அதற்கான உறுதியுடனும் பாதுகாப்புடனுமே கட்டப் படுகின்றன. இதை ஒரு ஆய்வு மூலம் மக்களின் திருப்திக்காக உறுதி செய்து கொள்ளலாம்.

மாறாக அப்படி பாதுகாப்பு ஏதுமே இருக்காது என்ற அவநம்பிக்கையான வதந்தியின் அடிப்படையில் இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை நிறுத்த எந்தவொரு முகாந்திரமும் கிடையாது.

7. “அணு உலைக் கழிவுகளால்  ஆபத்து”

”அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும்.”

இது எதிர்ப்பாளர்களின் வாதம்.

இதற்கான பதிலை வெறும் வதந்திகளின் அடிப்படையில் தர முடியாது. அணு விஞ்ஞானிகளின் குழு ஒன்றை கூடங்குளத்திற்கு அனுப்பி இந்த ஆபதுக்களையெல்லாம் அவர்கள் எப்படிக் கையாள உத்தேசித்திருக்கிறார்கள், அதற்கான உறுதி மொழிகள் யாவை என்பதை விளக்கச் சொல்லலாம். அவர்கள் சொல்வதை நாம் நம்பியே ஆக வேண்டும்.  நாம் நம் மருத்துவர்கள் சொல்லும் மருத்துவ சிகிச்சையை எப்படி  நமது அறிவுக்கு எட்டிய அளவில் ஆராய்ந்து பார்த்து விட்டு பிறகு பின்பற்றுகிறோமோ,  எப்படி நமது விண்வெளி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நம்பி ஏற்றுக் கொள்கிறோமோ,  அது போலவே நம் அணு விஞ்ஞானிகளையும் நம்பி ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இதற்கான உரிய பதில்களை அவர்கள் தர மறுத்தாலோ அல்லது இவற்றை அவர்களும் அரசும் உறுதி செய்ய மறுத்தாலோ அன்றி, இதைக் காரணமாகக் காண்பித்து இந்த திட்டத்தை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது

8.  “நீர்வளம்  சுரண்டப் படும்”.

தாமிரவருணியில் இருந்து அதிகமாக நீர் பயன் படுத்துவார்கள் என்றும் அதனால் தாமிரவருணி விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள் என்றும் அதனால் இது வரக் கூடாது என்றும் ஒரு எதிர்ப்பு.

இது ஒரு பெரிய பிரச்சினை அன்று. இந்த அணு மின் நிலையம் உற்பத்தி செய்யப் போகும் மின்சாரத்தில் ஒரு சிறு அளவைக் கொண்டு கடல் நீரைச் சுத்திகரித்து அதையே இந்த அணுமின் நிலையத்தில் பயன் படுத்திக் கொள்ளலாம். விவசாயத்திற்கு உதவும் நதி நீர்ப் பயன் பாட்டைத் தவிர்த்து விடலாம். இதை ஒரு காரணமாக காட்டி இதை நிறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இது விவசாயிகளைத் தூண்டுவதற்கான ஒரு வாதம் மட்டுமே

9.  “அணு மின் நிலையங்கள் திறமையாக இயங்குவதில்லை. அதன் மின்சார உற்பத்தித் திறன் மிகவும் மோசமாக உள்ளது.”

இது ஒரு உண்மையான குற்றசாட்டே. அணு சக்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பது தவிர பிற பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளும் நடை பெறுவதினால் இந்தக் குறை பாட்டை பெரிதாகக் கொள்ள முடியாது. இருந்தாலும் நிவர்த்திக்க வேண்டிய குறைபாடே.  ஆனால் இதை வைத்துக் கொண்டு,  திட்டத்தையே முடக்க முயல்வது சரியானதல்ல.

*************

இனி, இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராகக் கிளப்பப் பட்டிருக்கும் போராட்டத்தின் அரசியல் பரிமாணங்களைப்  பார்ப்போம்.

போராட்டத்தினை முன்னிறுந்து நடத்துபவர்களில், முக்கியமாக கத்தோலிக்கப் பாதிரியார்களும், இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்டுள்ள சில்லரை அரசியல்வாதிகளும், அமெரிக்காவில் ஆராய்ச்சி முடித்து விட்டு இந்தியாவில் தன்னார்வமாக அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த வந்திருக்கும் எஸ்.பி. உதயகுமார் என்பவரும் இருக்கிறார்கள்.

இந்த உதயகுமார் என்பவர் ஏதோ அமெரிக்காவில் நியூக்ளியார் சயிண்டிஸ்டாக இருந்தார் என்று எண்ணி விட வேண்டாம். இவர் எதில் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தேடிப் பார்த்தால், இந்தியாவில் உள்ள இந்து இயக்கங்களைப் பற்றி அவதூறுகளையும் விஷமப் பிரச்சாரங்களையும் செய்வதையே தன் முழு நேர ஆராய்ச்சியாக செய்து வந்துள்ளார். இந்து இயக்கங்களையும், பாரதிய ஜனதா அரசையும் எதிர்த்து அவர்களை ஃபாசிஸ்டுகள் என்று வர்ணித்து ஆராய்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளியிடுவதுதான் இவர் அமெரிக்காவில் செய்து வந்த முக்கியமான ஆராய்ச்சி!   இவரது முக்கியமான எதிரியாக இவர் பாரதிய ஜனதா கட்சியையும், ஆர் எஸ் எஸ் இயக்கத்தையும் அடையாளப் படுத்தியே தாக்குதல் நடத்தி வந்துள்ளார். இவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களில் சில :

– ‘Om-made’ History: Preparing the Unlettered for the Future Hindu Rashtra
– Historicizing Myth and Mythologizing History: The Ayodhya Case in India
– Mapping the ‘Hindu’ Remaking of India
– Betraying a Futurist: The Misappropriation of Gandhi’s Ramarajya

இவை போன்ற இந்து எதிர்ப்புப் பிரச்சாரங்களை யார் உருவாக்குகிறார்கள்,  இவரைப் போன்ற இந்து எதிர்ப்பாளர்களுக்கு எந்த சக்திகள் நிதியுதவி செய்கின்றன – என்பதையெல்லாம் நான் விளக்க வேண்டிய அவசியமில்லை.

இவர் கடுமையாக எதிர்த்து ஆராய்ச்சி செய்து நூல்கள் வெளியிடும் பாரதிய ஜனதாவின் வாஜ்பாயியின் தலைமையிலான அரசுதான் பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தியது. அந்த அரசைப் பற்றி இவரது புத்தகம் என்ன சொல்கிறது என்று  இவரது புத்தகங்களுக்கு பாராட்டி மதிப்புரை வழங்குபவர்கள் இப்படி கூறுகிறார்கள்  (Amazon.com தளத்திலிருந்து) –

Endorsement From Joseph E. Schwartzberg, Professor Emeritus, University of Minnesota:

”Rewriting the history of India to promote the fundamentalist Hindu nationalist agenda has been a major project of the so-called Sangh Parivar, a still potent collectivity of exclusivist political, social and cultural entities that flourished under the aegis of India’s recently deposed BJP-led government. In this trenchant and salutary work, S.P. Udayakumar exposes the methods employed by the revisionists and demonstrates their remarkable similarity to those developed so effectively under the European Fascist and Nazi regimes more than half a century ago.”

Endorsement From Johan Galtung, Professor of Peace Studies & Director, TRANSCEND Rector, TRANSCEND Peacre University:

”Presenting the Past has two very basic ramifications. The BJP-led government in Delhi was substituting Nehruvian secularism with its virulent Hindutva, a fundamentalist ideology that put Muslims and other minorities in India on a collision course with the “Hindus.” It also sought to replace another Nehruvian principle, Non-alignment, and create a sort of Asian NATO with the United States against China. If the reader wants to know the background, this is the best book.”

அதாவது பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு இவரது ஆராய்ச்சியின் படி ஒரு ஃபாசிஸ்டு அரசு. நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி இந்திய தேசத்தை வலுவாக மாற்றும் ஒரு மாபெரும் திட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார் என்றால் அதன் பின்ணணியில் கத்தோலிக்க சர்ச்சுகளும் நிற்கின்றன என்றால் இவர்கள் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது பெரிய ராகெட் சயின்ஸ் அல்ல.

இவரைப் போன்ற இந்து, இந்திய எதிர்ப்பு சக்திகள்தான் கூட்டணி சேர்ந்து இந்த கூடங்குளம் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள் என்பதன் காரணத்தையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

அணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல. இந்தியாவைச் சுற்றியுள்ள சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை விட பல மடங்கு அதிகமான நியூக்ளியார் போர்க் கருவிகளும் பிற சாதனங்களும் தயார் செய்து கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் இந்தியாவில்  ஒட்டுமொத்தமாக அணுசக்தி தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கு இவை போன்ற அணு மின் நிலையங்களும்  பயன் படுத்தப் படலாம்.  இந்தியாவை அத்தகைய ஆராய்சிகளில் இறங்க விடாமல் செய்து, தொடர்ந்து பிற நாடுகளின் தயவிலேயே தக்கவைக்கவே,  இத்தகைய எதிர்ப்புகள் மறைமுகமாக நிகழ்த்தப் பெறுகின்றன.

இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை. அதன் வலிமையைக் குறைக்க உள்ள பல்வேறு வழிகளில் சர்ச்களும் ஒன்றே. இந்தியா அணு குண்டு வெடிப்பதை இதே சர்ச்சுகளும் இதே உதயகுமார் போன்றோரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஏன் எதிர்த்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த எதிர்ப்புக்கும் காரணம் புரியும்.

இந்த அணு மின் நிலையத்தை வெறும் மின்சார உற்பத்தி நிலையமாக மட்டும் நாம் கருத முடியாது. இதில் மின்சார உற்பத்தி என்பது ஒரு பயன் பாடே அன்றி, அது தவிர இந்தியப் பாதுகாப்பு நோக்கத்திற்கான ஆராய்ச்சிகளும் இங்கு நடக்கக் கூடும். உதய குமார்களும், பாதிரிகளும் மக்கள் பாதுகாப்பு நலன்  என்ற போர்வையில்  அணுசக்தி ஆய்வுகளை எதிர்ப்பதன் நோக்கம் இந்தியா ஒரு வலிமையான வல்லரசாக மாறி விடக் கூடாது என்பதே. கூடங்குளம் அணு நிலையத்தில் ஒரு சில பாதுகாப்பு ஆராய்ச்சிகளும் நடக்கக் கூடும் என்பதினால் இது தேசிய முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளும் பெரும் தவறுகளைச் செய்துள்ளன. இவை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை உரிய முன்யோசனை, பாதுகாப்புகள், மக்களிடம் விழிப்புணர்வு, மக்களின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகியனவற்றை முறையாகச் செய்த பின்னரே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நம் அரசு அதிகாரிகளிடமும், நிர்வாகிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நிலவும் ஆணவமும், திமிரும், அலட்சியமும் மக்க்ளை மதிக்காத போக்குகளுமே இத்தனை பெரிய சிக்கலில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து விட்டுள்ளது.

மக்களிடம் ஆரம்பம் முதலே நெருங்கிச் சென்று இதன் சாதக பாதகங்களை வெளிப்படையாகச் சொல்லியிருந்திருந்து அவர்களைத் தயார் செய்திருக்க வேண்டும். குறிப்பாக அந்தப் பகுதி வாழ் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் இது குறித்த போதிய அறிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அவர்கள் மூலமாக அவர்கள் பெற்றோர்களிடம் நம்பிக்கையை ஊட்டியிருக்க வேண்டும். அணு சக்தி என்பது அபாயகரமானது, பல தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்னும் பொழுது,  தாம் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லியிருந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை அறிவித்து செயல் படுத்தினால் மட்டும் போதாது. மத்திய அமைச்சர்களும், விஞ்ஞானிகளும், மாநில முதல்வரும் அதிகாரிகளும் தொடர்ந்து மாதம் ஒரு முறை மக்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

நாளைக்கு இந்தத் திட்டம் ஆரம்பிக்காமலேயே வீணாகுமானால் அதற்கு முழு முதற் காரணம் மத்திய மாநில அரசுகள் மட்டுமே. அணுசக்தித் துறை விஞ்ஞானிகளும் இந்த விஷயத்தில் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட முடியாது. அவர்கள் பிரபலமான விஞ்ஞானிகளான எம்.ஆர்.ஸ்ரீநிவாசன், டாக்டர் சிதம்பரம், ராஜா ராமண்ணா போன்றோரை அனுப்பி மக்களிடம் விளக்கியிருந்திருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்கள் மீது மக்களுக்கு பெருத்த அபிமானமும், நம்பிக்கையும் உண்டு. அவரை உரிய விதத்தில் பயன் படுத்தியிருந்திருக்க வேண்டும். மாறாக, உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்து பலப்பிரயோகத்தினால் மட்டுமே மக்களை அடக்கி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இத்தகைய பெரும் சிக்கலில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

>>> இடப் பெயர்வு செய்ய வேண்டியது அவசியமானால், அதை மக்களிடம் தெளிவாகவும், நேர்மையாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி மக்களை இடம் பெயர்ப்பது அவசியம் என்றால் அவர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் நிவாரணமும், நிலமும், வீடும், வேலையும் அளிக்க வேண்டும்.

>>> அணுக் கழிவுகளை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதை விளக்கி மக்களின் அச்சத்தைத் தீர்க்க வேண்டும்.

>>> இதை ஒரு நிரந்தர ஏற்பாடாக முன்னிறுத்தக் கூடாது. வருங்காலத்தில் சூரிய சக்தி போன்ற மாற்று எரிசக்தி முறைகளின் செலவு கட்டுப் படும் பொழுது இந்த அணு மின் நிலையம் அகற்றப் படும்;  அதுவரை இது ஒரு தற்காலிகத் தீர்வே என்பதையும் விளக்க வேண்டும்.

>>> இது தேசப் பாதுகாப்புக்கும் அவசியமான ஒன்று என்பதையும், நீர் மின்சாரம் மூலமாகவும், அனல் மின்சாரம் மூலமாகவும் ஏற்படும் பிற சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் வன அழிப்புகளையும் மக்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும். பிரச்சாரப் படங்கள் மூலமாக மக்களை அணுகியிருந்திருக்க வேண்டும்.

இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால், அது அனைவருக்கும் தோல்வியாக அமையும். இதில் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே.

இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால், அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்.

பொதுவாக மக்களிடம் அரசாங்கத்திடமும், தனியார் நிறுவனங்கள் மீதும் பெருத்த அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ஊழலும் திறமையின்மையும் நிரம்பிய நம் அரசு அமைப்புகளினால் எதையும் பொறுப்புடன் பாதுகாப்பு உணர்வுடன் செய்ய முடியாது என்று மக்கள் தீர்மானமாக நினைக்க ஆர்மபித்து விட்டார்கள். அது ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை. அதற்கு நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதே நேரத்தில் நம் மக்கள் நமது பொறியாளர்களின், நமது விஞ்ஞானிகளின் சாதனைகளையும் வெற்றிகளையும் நினைவில் கொண்டு, அவர்களிடமாவது ஒரு நம்பிக்கையை வைக்க வேண்டும். செயற்கைக் கோள்கள் ஏவுவதிலும், மருத்துவத்திலும் நமது அறிவியலாளர்களின் சாதனைகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அதே நம்பிக்கையை நாம் இந்த அணு சக்தித் துறையின் மீதும் வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மக்களிடம் அரசும் விஞ்ஞானிகளும் ஏற்படுத்த வேண்டும்.

***********

இறுதியாக, அணு மின்சாரம் நிச்சயமாக அபாயகரமானதே. அது நிரந்தரத் தீர்வு அல்ல. இந்தியா மாற்று எரிசக்தி ஆராய்ச்சிகளில் பெரிய முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவில் சாதாரணமாக மக்கள் சாலைகளில் செல்வது கூட ஆபத்தான ஒரு விஷயமாவே உள்ளது, ரயில் விபத்துக்களிலும், குண்டு வெடிப்புக்களிலும், விமான விபத்துக்களிலும், சாலை விபத்துக்களிலும், தீ விபத்துக்களிலும், உணவு விஷமாவதிலும், உரிய சுகாதாரமின்றியும், மருத்துவ வசதி இன்றியும், நில நடுக்கத்திலும் இன்னும் இந்தியாவில் தினம் தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான விபத்துக்களின் மூலமாகவும் இறக்க நேர்பவர்களை விட ஒரு அணு உலை விபத்தினால் இறப்பவர்கள் நிச்சயம் குறைவானவர்களாகவே இருப்பார்கள். இந்தியாவின் மோசமான பாதுகாப்பில்லாத ரசாயனத் தொழிற்சாலைகளையும், மாசுக் கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், மின் உற்பத்தி நிலையங்களையும் விட இந்த அணு மின் நிலையத்தின் விபத்து குறைவாகவே இருக்கும்.

இருந்தாலும், அப்படி ஒரு விபத்து நேரும் பட்சத்தில், அதன் பாதிப்பு எதிர்காலத் தலைமுறையையும் பாதிக்கும் என்ற அச்சமே இந்த அணு நிலையங்களுக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பை ஏற்படுத்துகின்றது. அதை உணர்ந்து, மக்களின் அச்ச உணர்வை உணர்ந்து, அரசாங்கம் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பாதுகாப்பு முய்ற்சிகளில் எவ்வித சமரசமும் ஊழலும் இன்றி செயல் பட்டு, அவற்றை மக்களிடம் விளக்கவும் செய்ய வேண்டும். அது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு.

இவ்வளவு தூரம் செலவு செய்து விட்டதையும், இந்தியாவின் மின் தேவைகளையும், இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு அவசியங்களையும் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உரிய பாதுகாப்புக்களை பலப் படுத்திய பின்னர், அதை மக்களிடம் விளக்கிய பின்னர், துவங்குவதே விவேகமான ஒரு செயலாக இருக்கும்.

(முற்றும்)

28 Replies to “கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2”

  1. Article will look balanced if the author clarifies about forces that are against nuclear reactors in places like Jaitapur, Haripur.

  2. தற்போது போராட்டம் நடத்துபவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை பற்றி பல கோணங்களில் ஆராய வேண்டியது அவசியம்.அணுமின் திட்டத்தை முடக்க நினைக்கும் வெளிநாட்டு சதியின் விளைவாக கூட மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு இந்த போராட்டம் நடக்கலாம். கிறிஸ்துவ பாதிரியார்கள் தலைமையேற்று நடத்தும் இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க போன்ற ஏதாவது கிறிஸ்துவ நாடு கூட இருக்கலாம் அல்லது இலங்கையில் கால் பதித்து விட்ட சீனாவின் சதியாக கூட இருக்கலாம்.இப்போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பான்மையாளர்கள் கிருத்துவர்கள். இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய நட்புணர்வை சீர்குலைக்க அமெரிக்கா பல வழிகளில் முயன்று வருகிறது..

    இந்த அணுமின் உலை ரஷ்ய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.
    இந்தியா மற்றும் ரஷ்யாவின் இடையே உள்ள நெருங்கிய நட்புணர்வை கெடுக்கவும் இருநாடுகளுக்கும் ஆயிரகணக்கான கோடி பணத்தை நஷ்ட படுத்தி ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தியா,ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தவும் அமெரிக்கா கைகூலிகள் மக்களை தூண்டிவிட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறது . எனவே அமெரிக்காவிற்கு ஏஜென்டாக செயல்படும் ஒரு பாதிரியார்தான் இந்த போராட்டங்களுக்கெல்லாம் மூல காரணம். இந்தியாவில் நடக்கும் அனைத்து விசயங்களையும் இந்த பாதிரி உளவு சொல்லுகிறார். இதற்காக இவருக்கு தாரளமாக பணம் கைமாறுகிறது.. ரஷ்யாவிற்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் இந்த பாதிரி செயல்பட்டு வந்தார்.

    வரும் டிசம்பர் மாதம் உற்பத்தி தொடங்க போகும் நேரத்தில் ஏன் திடீர் போராட்டம்? இவ்வளவு நாள் என்ன செய்தார்கள்?
    இப்பெரிய போராட்டம் ஏன் தமிழக உளவுத்துறைக்கோ அல்லது இந்திய உளவுத்துறைக்கோ முன்கூட்டியே தெரியவில்லை?
    மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனில், 3.5 பில்லியன் டாலர் கோடி செலவு செய்யப்பட்டதில் பத்து சதமானம் வரை மக்களின் வாழ்வாதாரத்திற்காக (இடம் பெயர்த்து குடியிருப்புகள் ஏற்படுத்துதல், தொழில் வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தி கொடுக்கவில்லை?
    மக்களுக்கு வாழ்வாதாரம் பிரச்சினையா? அல்லது அணு மின் நிலையம் பிரச்சினையா?
    இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் இந்த அளவு மூக்கை நுழைக்கிறது? இவ்வளவு நாள் அவர்கள் எங்கு இருந்தார்கள்? இக்கட்சிகள் இப்போராட்டத்தின் மூலம் கட்சியையோ அல்லது அதன் தலைவரையோ ஏன் முன்னிறுத்துகிறது? ஏன் தமிழக எம் பி – க்கள் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை இது நாள் வரை நாடாளுமன்றத்தில் கேட்கவில்லை?

    வாழ்க பாரத தேசம். வெல்க பாரதம்

  3. இது ரஷிய ஒப்பந்த்துடன் செய்துகொண்ட ஏறபாடு. நமக்கு அமரிக்காவுடன் ஒரு ஒப்பந்த்தை ஸ்ரீ மன்மோகன்சிங்க் அரசு செய்துள்ளது தெரிந்ததே. ஏன் இது ஒரு அமெரிகன் முயற்சியாக இருக்க்கூடாது? இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அமெரிக்கர்களுக்கு நல்லதுதானே!
    இருப்பினும் நமது முதல்வர் சில ஒப்பந்த்ங்களுக்கு நமது நாட்டை உள்ளாக்கியுள்ளார். அதன்படி உலையில் உண்டாகும் கழிவுகளை நமது இஷ்டப்படி உபயோகிக்க முடியாது.. அதற்கும் உலக அளவிலான நியுக்கிளியர் க்ரூபிடமிருந்து அனுமதி பெற்றே செய்யவேண்டும்,அவர்கள் பார்வைக்கு ஒவ்வொன்றையும் கொண்டுசெல்ல வேண்டும். .இதனால் எந்த அளவிற்கு நமது எதிர்ப்பு சக்தி வீணாகும் என்று சொல்லத்தேவையில்லை. ..நமது பாதுகாப்பு மேம்படும் என்று பகல் கனவு காண வேண்டியதுதான்.

  4. விஸ்வாமித்ரா,

    உங்கள் மையக் கருத்து – அணு மின் நிலையத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து பாராமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக் கூடாது – என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் உங்கள் உண்மையான பிரச்சினை உதயகுமாரின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைதான், பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் உங்களுக்கு எதிரி என்ற அணுகுமுறையில் எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது. எத்தனையோ முறை எழுத்திலும் தனிப்பட்ட பேச்சிலும் அரசின் திறமை, நேர்மை பற்றி தீவிர அவநம்பிக்கையோடு பேசும் நீங்கள் இன்று குளறுபடிகளை, கழிவுகளால் ஆபத்து என்பதை வதந்தி என்று புறம் தள்ளுவதும், விபத்துகள் சகஜம் என்பதும், எல்லா பாதுகாப்பாகத்தான் கட்டுவார்கள் என்பதும், திறமையாக இயங்கவில்லை என்றால் அது பெரிய குறைபாடு இல்லை என்பதும் இந்த சந்தேகத்தை வலிவாக்குகிறது.

    உங்கள் ஸ்டைலிலேயே உங்கள் வாதங்களைப் பற்றி:

    1. // ஜனநாயக முறை பின்பற்றவில்லை என்று 20 வருடம் கழித்து ஏன் சொல்கிறார்கள்? அன்றே அடிக்கல் நாட்டும் அன்றே அதை வலியுறுத்தி இன்று நடத்தும் அதே போராட்டத்தை ஏன் நடத்தவில்லை? ஐயா, எங்கள் கருத்தைக் கேட்ட பின்பே நீங்கள் இதை அமைக்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைக்க விட மாட்டோம் என்று போராடியிருக்கலாமே? // இது கூறு கெட்ட வாதம். அன்றைக்கு அணு மின் நிலையங்களைப் பற்றித் தெரிந்தவற்றை விட இன்று அதிகமாகத் தெரிந்திருக்கிறது. அன்று சுனாமி அனுபவம் இல்லை, இன்று இருக்கிறது.

    2. // குறிப்பிட்ட சுற்றளவுக்குள் இத்தனை மக்கள் தொகைதான் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள்… // மீறப்படுகின்றன. // தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) … // அதுதான் இந்த அரசாணை 91-ஆம் ஆண்டு வந்தது என்று தெளிவாக எழுதி இருக்கிறீர்களே? கல்பாக்கம், ட்ராம்பே, 91-க்கு முன்னால் கட்டப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? அணு மின் நிலைய அனுபவம், உலகத்தில் அணு உலைகள் விபத்து பற்றிய அறிவு வளர வளர விதிமுறைகள் இன்னும் கடுமையாக ஆவதில் வியப்பென்ன? மேரி க்யூரி கதிர்வீச்சினால் உண்டான நோயால் செத்தார், அதனால் இன்றும் எந்த விதமான கவசமும் இல்லாமல் ரேடியத்தைக் கையாலேயே தொடவேண்டும் என்பீர்களா?

    3. // அணு மின் நிலையம் அமைப்பதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. // இதை நீங்கள் நம்பவில்லை என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

    4. // ஒரு பெரிய கட்டிட வேலை நடக்கும் பொழுது விபத்துக்கள் நேர்வது சகஜமே. // இந்த விளக்கம் எல்லாம் நீங்கள் கருணாநிதி முன் நடத்திய புதிய சட்டசபை கட்டிடக் கோளாறுகளைப் பற்றி வாய் தவறிக் கூட சொல்லிவிடுவீர்களா?

    5 . // சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பெருமளவில் இருக்கும் // இது நியாயமான கவலை என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

    6. // நிலநடுக்கம் உண்டாகும் சாத்திமுள்ள பகுதியில் அணுமின் நிலையம் அமைவது ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது // என்ற கவலைக்கு // இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை, இருபதினாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கும் ஒரு திட்டத்தினை இந்த இடத்தில் அமைக்க திட்டமிடும் முன்னால், இந்த எளிய பாதுகாப்புப் பிரச்சினையைக் கூடவா இதைத் திட்டமிட்டவர்கள் அலசியிருக்க மாட்டார்கள்? அது நம் விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் அடிப்படை அறிவையே கேலிக்குள்ளாக்கும் ஒரு குற்றசாட்டு அல்லவா? // இப்படி பதில் சொல்லி இருக்கிறீர்கள். அப்படி என்றால் அரசு முன் வைக்கும் எந்த நிர்மாணத் திட்டமும் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது என்று பொருள் கொள்வதா? இது கேலிக்கூத்தான வாதம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இது அடிப்படை அறிவு இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே இல்லை. அந்த அடிப்படை அறிவு செயல்படுத்தப்பட்டதா, இல்லை கன்றாக்டர்கள், அரசியல்வாதிகள், ரஷியர்களின் அழுத்தம் எல்லாம் செயல்படுத்த விட்டதா என்ற கேள்வி.

    7. // அணு உலைக் கழிவுகளால் ஆபத்து // என்ற வாதத்தை அலட்சியப்படுத்த முடியாது. உலகமெங்கும் உள்ள பிரச்சினை இது.

    8. // நீர்வளம் சுரண்டப் படும் // என்பதற்கு விஸ்வாமித்ரா ஒரு வழி சொல்கிறார். என்ன பயன், அவர் கூடங்குளத்துக்கு இன் சார்ஜ் இல்லை. அங்கே உள்ளவர்கள் யாரும் – அடிப்படைக்கு மேலான அறிவுள்ள நம் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் – இப்படி வழி சொல்லவில்லையே?

    9. // அணு மின் நிலையங்கள் திறமையாக இயங்குவதில்லை. அதன் மின்சார உற்பத்தித் திறன் மிகவும் மோசமாக உள்ளது. // இது உண்மையே என்று விச்வாமித்ராவும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் பாதுகாப்புக்கான வேலைகளும் நடப்பதால் இது பெரிய விஷயம் இல்லை என்கிறார். அப்படி என்றால் அதை ஒரு ராணுவ ஆராய்ச்சி தளமாக அல்லவா நடத்த வேண்டும்? செலவாவது குறையும்.

    உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. கல்பாக்கத்திலிருந்து நமக்கு சராசரியாக மாதம் எத்தனை மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்று தெரியுமா? Historical average என்ன? அங்கே ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எத்தனை பணம் செலவாகிறது? இருபது இருபத்தைந்து வருஷத்துக்கு முந்தைய செய்திப்படி அங்கே உற்பத்தி ஆன மின்சாரம் பிளான்ட் நடத்தவே போதாது. (அங்கே வேலை செய்தவரின் மகன், என் கல்லூரித் தோழன் சொன்ன செய்தி)

  5. Sir

    Nice article. Many facts are analysed properly. The communists are not opposing Koodankulam project because it is from Russia but they are opposing project at Jaitapur because it is from France.
    But please honestly tell me sir, where will the power come from if not from atomic? This is cheap and best as for as present situation is concerned. You need power to develop industries, to make tamil nadu power surplus you have to use atomic power.
    When Kalpakkam power opened no one opposed, you may say, lack of awareness. But Tsunami did struck Kalpakkam, No reactor damaged. People suffered because of tsunami. Even in Japan, loss of lives and properties were because of tsunami not because of reactor. The reactor in Japan was old modelled one, and it was not built propertly giving room for cooling. Whereas in Koodankulam, it is nearly three metres height. So enough space of cooling point. Next, there is always a safe zone. People should not be asked to occupy and proper replacements should be made. Whether this is done or not we do not know. The cheap politicians might have done some wrongs colluding with local officials, for that scientists cannot be blamed. In India, why even globally, whenever any major industrieis or some similar things are coming up, locals will taken care of adequately both monetarily and otherwise like giving preference to locals in the low categories, etc., This might not have happened. Please understand christians and commies are not interested in the welfare of the state. They know which side to go when the wind blows. Let us believe our scientists and march forward

  6. கண்டிப்பாக அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு இந்த போரட்டத்தில் தொடர்பு இருக்கவேண்டும் , ஏனென்றல் இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடு நமது இந்தியா, இதை கண்டிப்பாக அமெரிகாவுக்கு சகிக்க முடியாது , இஸ்லாமிய நாடுகளின் எண்ணை வழத்தை தனது கட்டுக்குள் கொண்டு வர எதுவெல்லாம் உக்தி முடியுமோ அவை அனைத்தையும் செய்து இன்று இஸ்லாமிய நாடுகளை தனது கட்டுபாட்டிற்குள் வைத்திருகிறது அமெரிக்கா.
    மேலும் சீனாவை நமக்கு நல்லவே தெரியும் இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முட்டுக்கட்டை இடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது , உலகில் உள்ள எல்லா அனுவுலைகளும் விபத்துகுள்ளவதில்லை ,
    மேலும் விபத்து என்று பார்க்க போனால் எங்கும் எப்போதும் எப்படியும் நடக்கலாம் . வானில் பறக்கும் விமானம் நமது ஊரின் மீது விழலாம் , ஏவுகணை சோதனை செய்யும்போது திசை மாறினால் ஆடு நாட்டில் எங்கும் விழலாம் , இப்படி பல விபத்து காரணிகளை அடுக்கி கொண்டே போகலாம் , அதற்காக எல்லாத்தையும் நாம் தடை போட்டோமானால் நாம் மீண்டும் திரும்பி கற்காலத்திற்கு தான் செல்லவேண்டும் .
    எனவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டுமே ஒழிய ,பிரச்சனைக்கு பயந்து முடங்குதல் நாகரிகம் அல்ல

  7. உணர்ச்சிவசப் பட்டு முடிவு செய்யமுடியாது என்பது புரிகிறது. முறையான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் அரசு என்று தான் போராட வேண்டும்.

  8. விஸ்வாமித்ரா,

    <>

    நன்றி

    <>

    தவறான பார்வை. அந்நிய சக்திகளின் இந்தியத் தலையீடு குறித்தும் இந்திய தேசிய நலன்களுக்கு எதிராகச் செயல் படுபவர்கள் இயங்கும் குறித்து, அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் சக்திகள் குறித்தும், அந்தக் கூலிக்கு அந்த அறிவாளிகள் செயல் படும் விதம் குறித்தும் என்னை விட மிக அதிகமாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும், அரவிந்தன் நீலகண்டன்/ராஜீவ் மல்ஹோத்ரா இருவரும் தங்களது ப்ரேக்கிங் இந்தியா நூலிலும் எழுதியுள்ளார்கள். முக்கியமாக சர்ச்சுகள் இவர்களைப் போன்ற ஆட்களைத் தேர்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற போர்வையில் இந்துக்களுக்கு எதிராகவும் இந்தியாவை மிகக் கேவலமாகச் சித்தரிக்கும் விதத்திலும் எழுத வைத்து பின்னர் அதையே முழு முதல் ஆதாரமாக மேற்கொள்ளும் போக்கு மாக்ஸ் முல்லர் காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வருவது. அப்படி இந்து விரோதக் கொள்கை உள்ள ஆள் வழக்கம் போலவே இந்திய நலன்களுக்கும் விரோதமாக இருப்பதை நாம் அருந்ததி ராய் முதற்கொண்டு அந்தோனி மார்க்ஸ், சைமன் (சீமான்) நாடார் வரை காண்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தையும் அந்த சக்திகள்தான் முன்னிறுந்து நடத்தி வருகின்றன என்பது ஒரு முழுமையான கட்டுரையில் சொல்லியே ஆக வேண்டும். இந்த உண்மை வாசகர்களின் பார்வைக்கு வராமல் இது ஏதொ மக்களலால் நடத்தப் படும் ஒரு போராட்டம் என்ற எண்ணத்திற்கு வாசகர்களைத் தள்ளி உண்மையை மறைத்து “செக்யூலாகாரக” எழுதுவதற்கு இது ஏதோ ஜீனியர் விகடனிலோ, வினவு தளத்திலோ வரும் கட்டுரை அல்ல. ஆகவே இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களின் பின்புலத்தையும் அவர்களது மறைமுகமான உள்நோக்கங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது தமிழ் ஹிந்துவின் கடமை. அதையே நானும் செய்திருக்கிறேன். இதைச் சொல்லா விட்டால் நான் அனைத்து பரிமாணங்களையும் சொல்லாமல் மறைத்த குற்றத்தினைச் செய்தவனவாவேன். மேலும் குற்றசாட்டுக்களைப் பட்டியலிடும் பொழுது நான் எதையும் மறைக்காமல் ஒளிக்காமல் எதிர் கொண்டிருக்கிறேன் என்பதையும் கவனிக்கவும்

    தொடரும்…

  9. நான் அடைப்புக் குறிக்கும் இட்டவை வரவில்லை அவை. முதல் கொட்டேஷனுக்கு நன்றியும் இரண்டாவதற்கு என் விளக்கமும் அளித்துள்ளேன்

    ”உங்கள் மையக் கருத்து – அணு மின் நிலையத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து பாராமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக் கூடாது – என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது”

    ”ஆனால் உங்கள் உண்மையான பிரச்சினை உதயகுமாரின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைதான், பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் உங்களுக்கு எதிரி என்ற அணுகுமுறையில் எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.”

  10. ஆர் வி

    ”எத்தனையோ முறை எழுத்திலும் தனிப்பட்ட பேச்சிலும் அரசின் திறமை, நேர்மை பற்றி தீவிர அவநம்பிக்கையோடு பேசும் நீங்கள் இன்று குளறுபடிகளை, கழிவுகளால் ஆபத்து என்பதை வதந்தி என்று புறம் தள்ளுவதும், விபத்துகள் சகஜம் என்பதும், எல்லா பாதுகாப்பாகத்தான் கட்டுவார்கள் என்பதும், திறமையாக இயங்கவில்லை என்றால் அது பெரிய குறைபாடு இல்லை என்பதும் இந்த சந்தேகத்தை வலிவாக்குகிறது”

    நம்முடைய தனிப்பட்ட மின்னஞ்சல் உரையாடல்களின் பொழுதும் பிற கட்டுரைகளிலும் அரசின் மீதான அவநம்பிக்கையும் குளறுபடிகளையும் தெரிவித்திருக்கிறேன். உண்மைதான். அதில் இப்பொழுதும் எவ்வித மாற்றமும் இல்லை.

    அரசு துறைகள் இயங்கும் விதம் பலவிதமானது. குறிப்பாக பஞ்சாயத்தாராலும், மாநில அரசுகளாலும் நிர்வாகிகப் படும் சாலைகளுக்கும் தேசீய நெடுஞ்சாலைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அவை இரண்டும் தரத்தில் வேறு பட்டவை. அது போலவே ஒரு சில கட்டுமானப் பணிகளை அரசாங்கம் எல் & டி, சீமன்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த கட்டுமான நிறுவனங்களிடம் விடும் பொழுது அவற்றின் தர நிர்ணயம் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இதை நான் அணுமின் நிலைய கட்டுமானப் பொறியாளர்களிடமும் விசாரித்த பின்னரே எழுதுகின்றேன். ஒரு சில அரசுத் துறைகளில் தரக் கட்டுப்பாட்டில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். இதை கட்டுமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் உங்களது பொறியாள நண்பர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம். அதுவும் அணு மின் நிலையம் என்று வரும் பொழுது அதன் தரம் உலகத் தரத்தையெல்லாம் மிஞ்சியதாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கடுமையான விதிகளை அனுசரிக்கிறார்கள். ஆக எல்லா அரசு நிர்வாகங்களையும் கட்டுமானப் பணிகளையும் ஒரே தராசில் அளந்து விட முடியாது. ஒரு சில மக்கள் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட கட்டுமானங்களில் மிகக் கடுமையான தர நிர்ணய விதிகள் அனுசரிக்கப் படுகின்றன. ஆகவே பொதுவான ஊழலும் திறமையின்மையும் நிறைந்த இந்திய அரசின் ஊழல் நிறைந்த கட்டுமானப் பணிகளின் நடுவேயும் கூட தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் விடப்படும் ஒரு சில பணிகள் அதீதமான தொழில் நேர்த்தியுடனும் திறமையுடனும் பாதுகாப்பு விதிகளுடனும் கட்டப் படுகின்றன. இதை அதே இந்திய அரசின் மின் கட்டுமானப் பணிகளை நிர்வாகிக்கும் தலைமைப் பொறியாளர்களாகச் செயல் படும் என் நெருங்கிய நண்பர்கள் மூலமாக அறிவேன். அவர்கள் பெயர்களை என்னால் வெளியிட முடியாது. ஆனால் அவர்களை நீங்கள் சந்தித்து உங்கள் சந்தேகங்களைக் கேட்க்க வேண்டும் என்றால் தாராளமாக ஏற்பாடு செய்கிறேன். நேரடியாகப் பேசிக் கொள்ளலாம். அவர்கள் நேர்மையிலும், கட்டுப்பாட்டிலும் என்னை விட பல மடங்கு உயர்ந்தவர்கள் என்ற சான்றினையும் என்னால் தாராளமாக அளிக்க முடியும். ஆகவே பாராட்ட வேண்டிய இடங்களில் நம் பொறியாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை நாம் வழங்கியே ஆக வேண்டும். டெல்லியின் மெட்ரோ ரயில் கட்டுமானம் , மேற்குக் கடற்கரை ரெயில் பாலம் போன்றவை சில உதாரணங்கள். ஆகவே எனது விமர்சனங்கள் அனைத்துமே இடம், காலம் சார்ந்தவை.

    தொடரும்…

  11. ”1. // ஜனநாயக முறை பின்பற்றவில்லை என்று 20 வருடம் கழித்து ஏன் சொல்கிறார்கள்? அன்றே அடிக்கல் நாட்டும் அன்றே அதை வலியுறுத்தி இன்று நடத்தும் அதே போராட்டத்தை ஏன் நடத்தவில்லை? ஐயா, எங்கள் கருத்தைக் கேட்ட பின்பே நீங்கள் இதை அமைக்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைக்க விட மாட்டோம் என்று போராடியிருக்கலாமே? // இது கூறு கெட்ட வாதம். அன்றைக்கு அணு மின் நிலையங்களைப் பற்றித் தெரிந்தவற்றை விட இன்று அதிகமாகத் தெரிந்திருக்கிறது. அன்று சுனாமி அனுபவம் இல்லை, இன்று இருக்கிறது.”

    சரி எனது வாதம் கூறுகெட்டதாகவே இருக்கட்டும் :)) அதிலும் சில கூறுகள் உள்ளன. சுனாமி எப்பொழுது நடந்தது? 2004 டிசம்பர் 24 அன்று. அது நடந்து 7 வருடங்கள் முடியப் போகின்றன. ஏழு வருடங்கள் கழித்துத்தானா ஒரு போராட்டம் துவங்க வேண்டும்? ஆக சுனாமி ஏற்படுத்தும் அழிவைப் பற்றி தெரிய ஏழு வருடங்கள் தேவைப் பட்டனவா? சரி அந்த சுனாமி இல்லை ஜப்பானிய சுனாமி என்று சொல்வீர்கள். ஜப்பானிய சுனாமி எப்பொழுது நடந்து எப்பொழுது ஜப்பானிய அணு உலை விபத்து ஏற்பட்டது? மார்ச் மாதம். அதன் பின்னர் 6 மாதங்கள் ஓடி விட்டன. இடையில் ஒரு மாபெரும் பொதுத் தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. உண்மையான எதிர்ப்புப் போரட்டமாக இருந்திருந்தால் தேர்தலின் பொழுது அல்லவா இந்த இயக்கத்தினர் தங்கள் எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டியிருக்க வேண்டும்? தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை ஒட்டு மொத்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்ட மக்கள் எடுத்திருந்திருக்கலாமே? அல்லது இந்தத் திட்டத்தை நிறுத்தும் முடிவை எடுக்கும் கட்சிக்குத்தான் எங்கள் ஆதரவு என்று சொல்லியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு அப்பொழுதே இந்த வருட இறுதியில் இந்தத் திட்டம் செயல் படப் போவதும் தெரியும், அவர்களுக்கு அப்பொழுதே ஜப்பானில் நடந்த அணு விபத்து பற்றியும் தெரியும் அப்படி இருந்தும் தேர்தலின் பொழுது இது ஏன் பெரிய ஒரு தேர்தல் பிரச்சினையாக்கி அப்பொழுதே ஒரு வாக்குறுதி அரசியல்வாதிகளிடமிருந்து பெறப் படவில்லை? ஒரு அக்கறையுள்ள போராட்டம் என்றால் தேர்தலை அலலவா முறையாகப் பயன் படுத்தியிருந்திருக்க வேண்டும்? அப்பொழுது தேர்தல் புறக்கணிப்பு என்ற ஒரு அஸ்திரத்தை இந்த போராட்டக்காரர்கள் பயன் படுத்தியிருந்தால் அதற்கான பலனே வேறு அல்லவா? ஆகவே நான் கேட்ட கேள்வியிலும் கூறு இருக்கிறது என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். மார்ச் மாதம் நடந்த அணு மின் நிலைய விபத்து பற்றி மே மாதம் நடந்த எலக்‌ஷனின் பொழுது வெழிப்படாத விழிப்புணர்வு சடாரென்று செப்டம்பர் மாதம் வெளிப்படும் ரகசியம் என்னவோ?

    தொடரும்………

  12. 2. // குறிப்பிட்ட சுற்றளவுக்குள் இத்தனை மக்கள் தொகைதான் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள்… // மீறப்படுகின்றன. // தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) … // அதுதான் இந்த அரசாணை 91-ஆம் ஆண்டு வந்தது என்று தெளிவாக எழுதி இருக்கிறீர்களே? கல்பாக்கம், ட்ராம்பே, 91-க்கு முன்னால் கட்டப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? அணு மின் நிலைய அனுபவம், உலகத்தில் அணு உலைகள் விபத்து பற்றிய அறிவு வளர வளர விதிமுறைகள் இன்னும் கடுமையாக ஆவதில் வியப்பென்ன? மேரி க்யூரி கதிர்வீச்சினால் உண்டான நோயால் செத்தார், அதனால் இன்றும் எந்த விதமான கவசமும் இல்லாமல் ரேடியத்தைக் கையாலேயே தொடவேண்டும் என்பீர்களா?

    நான் கேட்கும் கேள்வியின் அர்த்தம் கல்பாக்கத்திலும் டிராம்பேயிலும் அந்த விதிமுறை இல்லாமல் போனதினால் எத்தனை லட்சம் பேர் இறந்து போனார்கள் என்பதுதான்? சரி 91ம் ஆண்டு போடப் பட்ட சட்டத்தின் பின்னால்தானே இந்த கூடங்குளம் கட்டப் பட்டது? இப்பொழுது போராட்டும் நடத்தும் அதே பாதிரிகள் இந்த அணு உலைக் கட்டப் படும் பொழுதே இந்த விதியை மீறிக் கட்டுகிறார்கள் ஆகவே தடை செய்ய வேண்டும் என்று ஏதேனும் வழக்கு தொடர்ந்தார்களா? இந்த மனித உரிமைப் போராளிகள் அனைவரும் சேர்ந்து வழக்கு தொடர்ந்து இந்த கட்டுமானம் கட்டப் படுவதையே நிறுத்தியிருக்கலாமே ? ஏன் அப்பொழுது செய்யாமல் கட்டி முடிக்கப் பட்ட பின் நிறுத்துகிறார்கள்? உடனே அப்பொழுது ஜப்பானில் சுனாமி நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். இந்தக் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கான எதிர்ப்பு 1988ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. அப்பொழுது அவர்கள் வழக்குப் போட்டு நிறுத்தியிந்திருக்கலாம். இவ்வளவு தூரம் 4 பில்லியன் டாலர் செலவு செய்த பின் நிறுத்துவதில் அவர்களுக்கு பல விதங்களில் அனுகூலங்கள் இருக்கின்றன அதையெல்லாம் நான் விரித்து எழுத ஆரம்பித்தால் இன்னுமொரு முழு நீளக் கட்டுரையாக அது நீண்டு விடும்.

    நான் அப்படி பாதுகாப்பு இல்லாமல் எதையாவது செய்ய வேண்டும் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறேனா என்ன? இந்த 30 மைல் விதிமுறைகளையெல்லாம் இந்தியா போன்ற அடர்த்தியான மகக்ள் தொகையுள்ள ஒரு தேசத்தில் அமுல் படுத்துவது மிகக் கடினமானது. ஓரளவுக்கு மக்கள் தொகை அடர்த்தி குறைவான பகுதிகளில்தான் கட்ட முடியும். மக்கள் தொகை இல்லை என்பதற்காக காடுகளை அழித்துக் கட்ட முடியாது. மக்கள் தொகை இல்லை என்பதற்காக சீன, பாக்கிஸ்தான் எல்லையில் போய் கட்ட முடியாது. கூடுமானவரை அனுசரித்தேதான் கட்ட முடியும். வேண்டுமானால் இந்த விதி முறையை காரணமாகக் காட்டி இப்பொழுது கூட சட்டப் படி இதை தடுத்து நிறுத்தலாம். அப்படிச் செய்யட்டும்.

    தொடரும்..

  13. 4. // ஒரு பெரிய கட்டிட வேலை நடக்கும் பொழுது விபத்துக்கள் நேர்வது சகஜமே. // இந்த விளக்கம் எல்லாம் நீங்கள் கருணாநிதி முன் நடத்திய புதிய சட்டசபை கட்டிடக் கோளாறுகளைப் பற்றி வாய் தவறிக் கூட சொல்லிவிடுவீர்களா?

    மன்னிக்கவும். அபத்தமான ஒரு கேள்வி இது. அது கருணாநிதியே கட்டிய கட்டிடமாக இருந்த போதிலும் மிகப் பெரிய கட்டிடங்களில் விபத்து நடப்பது சகஜமானதே. கருணாநிதி கட்டிய கட்டிடத்தில் ஊழல் நடந்து விட்டது என்பதும் அது தவறான இடத்தில் கட்டப் பட்டுள்ளது என்பதுவுமே குற்றசாட்டு. அப்படி அந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தின் பொழுது விபத்து நடந்துள்ளது என்று யாரேனும் குற்றம் சாட்டுவார்களாயின் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கருணாநிதி கட்டிய கட்டிடத்தின் கோளாறுகளை, ஊழல்களைச் சொல்வது வேறு அதில் நடந்த ஒரு விபத்தைப் பெரிதாகச் சொல்வது வேறு. நான் விபத்தை முன்வைத்து அந்தக் கட்டிடத்தை எதிர்க்க மாட்டேன். மிகப் பெரிய ஆலைகள், மின் நிலைய டவர்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள் போன்றவை கட்டப் படும் பொழுது விபத்து நடப்பது காயம் அடைவதும் சமயங்களில் உயிரிழப்பு நேர்வதும் கட்டுமானப் பொறியியலில் நடப்பதுதான். இதை நீங்கள் எல் அண்ட் டீயின் ஈ சி சி போன்ற பெரிய கட்டுமானங்களில் ஈடுபடும் பொறியாளர்கள் எவரிடத்தும் கேட்டுக் கொள்ளலாம். நான் வேண்டுமானால் உங்கள் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். பெரிய கட்டுமானங்களின் பொழுது ஏற்படும் விபத்தை பெரிய குற்றசாட்டாகச் சொல்லி அந்தக் கட்டிடமே இயங்கக் கூடாது என்று சொல்வதோ அந்தத் திட்டமே நிறுத்தப் பட வேண்டும் என்று சொல்வதோ வடி கட்டிய முட்டாள்த்தனம் அன்றி வேறு எதுவும் இல்லை.

    தொடரும்…

  14. 5 . // சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பெருமளவில் இருக்கும் // இது நியாயமான கவலை என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

    நான் என்னளவில் ஒரு சூழல்வாதியே. ஆகவே இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் அது சரி செய்யப் பட்ட பின்னரே அமுல் படுத்த வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. இதிலும் அதே நிலைப்பாடே. அணு மின் நிலையத்தை நிறுத்துவது என் கோரிக்கை அல்ல. அதில் ஏதும் சூழல் பாதிப்பு இருந்தால் அதை சரி செய்து விட்டு துவக்க வேண்டும் என்பதே என் நிலை.

    6. // நிலநடுக்கம் உண்டாகும் சாத்திமுள்ள பகுதியில் அணுமின் நிலையம் அமைவது ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது // என்ற கவலைக்கு // இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை, இருபதினாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கும் ஒரு திட்டத்தினை இந்த இடத்தில் அமைக்க திட்டமிடும் முன்னால், இந்த எளிய பாதுகாப்புப் பிரச்சினையைக் கூடவா இதைத் திட்டமிட்டவர்கள் அலசியிருக்க மாட்டார்கள்? அது நம் விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் அடிப்படை அறிவையே கேலிக்குள்ளாக்கும் ஒரு குற்றசாட்டு அல்லவா? // இப்படி பதில் சொல்லி இருக்கிறீர்கள். அப்படி என்றால் அரசு முன் வைக்கும் எந்த நிர்மாணத் திட்டமும் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது என்று பொருள் கொள்வதா? இது கேலிக்கூத்தான வாதம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இது அடிப்படை அறிவு இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே இல்லை. அந்த அடிப்படை அறிவு செயல்படுத்தப்பட்டதா, இல்லை கன்றாக்டர்கள், அரசியல்வாதிகள், ரஷியர்களின் அழுத்தம் எல்லாம் செயல்படுத்த விட்டதா என்ற கேள்வி.

    அரசு முன் வைத்த அணு திட்டங்கள் எல்லாமே இது வரை ஓரளவுக்குத் திறமையான விஞ்ஞானிகளாலும் பொறியாளர்களாலுமே நிறைவேற்றப் பட்டுள்ளன. நான் டிராம்பே, கல்பாக்கம் ஆகிய திட்டங்களை நேரிடையாகக் கண்டிருக்கிறேன். அதையும் மீறி சில குறைபாடுகள் இருப்பினும் கூட சிறு சிறு விபத்துக்கள் பாதிப்புகள் இருந்தாலும் கூட இது நாள் வரை அவை அனைத்தும் ஓரளவுக்கு திருப்தியாகவே செயல் பட்டு வருகின்றன. அவற்றின் மின்சார உற்பத்தி குறைவு என்ற குற்றசாட்டுக்கு காரணங்கள் வேறு உள்ளன.

    அரசியல்வாதிகளின் ஊழல், அரசுத் துறையின் மெத்தனம், அமெரிக்க ரஷ்ய அழுத்தம் எல்லாவற்றையும் மீறி நாட்டு வளர்ச்சியிலும் ராணுவப் பாதுகாப்பிலும் அக்கறையுள்ள விஞ்ஞானிகளும், ராணுவத் தலைவர்களும் இதில் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர். அப்துல் கலாம், சிதம்பரம் போன்றோர் மீது எனக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்தத் திட்டத்தின் மீதும் நான் வைக்கும் நம்பிக்கை. ஏவுகணைகள், அணு ஆராய்ச்சிகள் போன்ற துறைகளிலும் நம் ராணுவத்தினர் மீதும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. ஜனநாயக அமைப்பில் முற்றிலும் நம்பிக்கையிழந்து போவது போன்ற ஆபத்து வேறு எதுவும் இல்லை.

    விண்வெளியில் ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் நம் விஞ்ஞானிகளும், ராணுவத்தினரும், விமானப் படையினரும் செயல் படுத்துகிறார்களே அவற்றில் சில ராக்கெட்டுகள் வழி தவறி சென்னை மீதோ, டெல்லி மீதோ விழுந்தால் என்னாவது? அவர்களை நம்பித்தானே நாம் நம் தேசீயப் பாதுகாப்பை ஒப்படைக்கின்றோம்? அது போலவே நம்பிக்கையுள்ள மற்றொரு துறை இந்தியாவின் அணு சக்தித் துறையும் கூட. பொக்ரான் அணு குண்டு சோதனையை அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் கூட அறியாத வண்ணம் தங்கள் குடும்பத்தார் கூட அறியாத வண்ணம் கடும் அர்ப்பணிப்புணர்வுடன் செயல் படுத்திய விஞ்ஞானிகள்தான் நம் அணு ஆராய்ச்சித் துறையினர் என்பதை மறந்து விட வேண்டாம்.

    தொடரும்…..

  15. 7. // அணு உலைக் கழிவுகளால் ஆபத்து // என்ற வாதத்தை அலட்சியப்படுத்த முடியாது. உலகமெங்கும் உள்ள பிரச்சினை இது.

    அலட்சியப் படுத்த வேண்டும் என்று நான் எங்கேயும் எப்பொழுதும் சொல்லவில்லையே.

    8. // நீர்வளம் சுரண்டப் படும் // என்பதற்கு விஸ்வாமித்ரா ஒரு வழி சொல்கிறார். என்ன பயன், அவர் கூடங்குளத்துக்கு இன் சார்ஜ் இல்லை. அங்கே உள்ளவர்கள் யாரும் – அடிப்படைக்கு மேலான அறிவுள்ள நம் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் – இப்படி வழி சொல்லவில்லையே?

    இப்பொழுது வழி சொல்லவில்லைதான். இந்தப் போராட்டத்தின் ஒரு விளைவாக நாளைக்கு இதே பதிலை அவர்கள் சொல்லக் கூடும் அல்லவா? அதைச் சொல்லும் வரை ஆரம்பிக்க அனுமதிக்க வேண்டாம். உரிய பதிலைச் சொன்ன பிறகு செயல் படுத்திய பிறகு ஆரம்பிக்கட்டுமே. அதைக் காரணம் காட்டி நிறுத்தக் கூடாது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தீர்வு. நான் சொன்ன யோசனையை அவர்களும் பரீசீலித்துக் கொண்டிருக்கக் கூடும் அல்லவா?

    9. // அணு மின் நிலையங்கள் திறமையாக இயங்குவதில்லை. அதன் மின்சார உற்பத்தித் திறன் மிகவும் மோசமாக உள்ளது. // இது உண்மையே என்று விச்வாமித்ராவும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் பாதுகாப்புக்கான வேலைகளும் நடப்பதால் இது பெரிய விஷயம் இல்லை என்கிறார். அப்படி என்றால் அதை ஒரு ராணுவ ஆராய்ச்சி தளமாக அல்லவா நடத்த வேண்டும்? செலவாவது குறையும்.

    மன்னிக்கவும் இது குறித்த உங்கள் புரிதல் குறைபாடானது. ஒரு சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஒரு சில ராணுவ தளவாடங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இந்த அணு உலை செயல் படுவது அவசியம். இது இல்லாமல் அது நடக்காது. அமெரிக்காவில் உள்ளது போல தனியான அணு ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கலாம் ஆனால் அதற்கான தாதுக்கள் இந்த நிலையத்தின் செயல்பாட்டின் விளைவாகக் கிடைப்பவையே. நீங்கள் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை நகரத்தில் இருப்பதாக உங்கள் தகவல்கள் சொல்லுகின்றன. நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே லிவர் மூர் என்றொரு இடத்தில் ஒரு ஆராய்ச்சி சாலை இருப்பது தெரியுமா? அங்கு என்ன விதமான ஆராய்ச்சிகள் நடக்கின்றன என்பது தெரியுமா? அதற்கான மூலப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தெரியுமா? அந்த இடத்தில் இருந்து நீங்கள் வசிக்கும் இடம் எத்தனை தூரம் என்பது தெரியுமா? அதையெல்லாம் பற்றி கவலைப் படாமல் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒரு ஏற்பாடு நடக்கும் பொழுது அதை மட்டும் பூதாகரமாக்கி மக்களைப் பயமுறுத்துவது முறையா?

    உங்களுக்கும், இந்த அணு மின் நிலையத்தை எதிர்க்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கும் உள்நோக்கம் எதுவும் கிடையாது என்பதும் உண்மையான அச்சமும் அக்கறையுமே காரணம் என்பதை நான் நன்கு அறிவேன். அந்த அச்சத்தையும் மீறி நம் அரசின் திறமையின்மை, ஊழல்கள் போன்றவற்றையும் மீறி இது போன்ற திட்டங்களின் தேசீய ராணுவப் பாதுகாப்பு முக்கியத்துவத்தையும், நம் விஞ்ஞானிகளின் கடந்த கால திறமையையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு இதை கண்ணை மூடிக் கொண்டு ஒட்டு மொத்தமாக எதிர்க்க வேண்டாம் என்பதே என் கோரிக்கை. இதை எதிர்க்கும் அந்தப் பாதிரிகள், உதயகுமார்கள், வினவுகள், கோபாலசாமிகள் போன்றோரின் நோக்கம் வேறு சாதாரண மகக்ளின் அச்சங்கள் சந்தேகங்கள், உங்களைப் போன்ற ஜெயமோகன் போன்ற உண்மையான அக்கறையுடவர்களின் சந்தேகங்கள் அச்சங்கள் வேறு என்பதை நான் நன்கு அறிந்தே பொறுமையுடன் இவ்வளவு தூரம் விளக்கியுள்ளேன்.

    ”உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. கல்பாக்கத்திலிருந்து நமக்கு சராசரியாக மாதம் எத்தனை மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்று தெரியுமா? Historical average என்ன? அங்கே ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எத்தனை பணம் செலவாகிறது? இருபது இருபத்தைந்து வருஷத்துக்கு முந்தைய செய்திப்படி அங்கே உற்பத்தி ஆன மின்சாரம் பிளான்ட் நடத்தவே போதாது. (அங்கே வேலை செய்தவரின் மகன், என் கல்லூரித் தோழன் சொன்ன செய்தி)”

    கேட்டு முழுத் தகவல்களைச் சொல்கிறேன். முடிந்தால் நீங்களே ஒருவருடன் நேரடியாகச் சந்தித்து விளக்கம் பெறுவதற்கும் முயற்சி செய்து தருகிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல அவை வெறும் மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமே அல்ல ஆகவே அதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

    விஸ்வாமித்ரா

  16. திரு.விஸ்வாமித்ரா,
    முதலில் அனந்த கோடி நன்றிகள்.

    அணுமின்சக்தியைப் பொறுத்தவரை மக்களில் 3 விதம் இருக்கிறார்கள்.
    (அ)அணுமின்சக்தியின் அனைத்து பரிமாணங்களையும் புரிந்து கொண்டு,
    சாதக, பாதகங்களையும் புரிந்து கொண்டு, பாதுகாப்பு பிரச்சினைகளையும்
    புரிந்து கொண்டு, எதார்த்தத்தின் படி அது தேவை என்று முடிவு
    செய்பவர்கள். நான் இந்த வகை. சில மீனவர்கள் வதந்திகளினால்
    முன் வைக்கும் பொய்களை முற்றும் முழுவதுமாக புறம் தள்ளுகிறேன்.
    (ஆ) பாதுகாப்பு பிரச்சினைகளினால் பயந்து அந்த பக்கமா / இந்த
    பக்கமா என்று ஒரு முடிவிற்கு வர முடியாமல் திணறுபவர்கள்.
    (இ)அணுமின்சக்தி அபாயகரமானது-அதை உலகிலிருந்தே அகற்றி விட
    வேண்டும் என்பவர்கள்.

    இந்த கட்டுரையிலுள்ள அடிப்படை பிரச்சினை. நீங்கள் இரண்டாம்
    வகையில் இருந்து எழுதியுள்ளீர்கள்.

    என்னைப் பொறுத்தவரை முதல் வகையிலிருந்து இந்த கட்டுரையை
    2ம் வகை மனிதர்களுக்காக எழுத வேண்டும்.

    —————-
    ரொம்ப ரொம்ப முக்கியம். 3ம் வகை மனிதர்களை நம் பக்கம் இழுப்பது
    கனவிலும் நடக்காது. அவர்கள் எதிர்த்து கொண்டே இருப்பார்கள்.
    நாம் ஆதரித்து கொண்டே இருக்க வேண்டும். யார் ஜெயிக்கிறார்கள்
    என்று பார்த்து விடுவோம்.
    ————–

    ஃபுக்கூஷீமா அணு உலை விபத்திற்கு பின்னும் இந்தியா அணுமின்சக்தியை
    உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து நான் ஒரு
    கட்டுரையை எழுதியிருந்தேன்.
    https://tamilhindu.com/2011/05/india-needs-nuclear-energy-why/

    எந்த ஒரு எதிர்ப்பும் அறிவியல் உண்மைகளை கொண்டோ அல்லது
    நடைமுறை எதார்த்தத்தை அனுசரித்தோ இருந்தால்தான் நம்பகத்தன்மை
    இருக்கும். இதில் இரண்டுமே இல்லை.

    முற்றும் முழுவதுமாக புறம் தள்ள வேண்டிய குப்பையான சிந்தனைகளை
    அறிவியல் உண்மைகளாக முன்வைத்து பேசுபவர்களை திருத்த முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உதாரணமாக
    -இந்த அணு உலை பரிசோதனை நடந்தவுடன் Lobsters இறந்து விட்டன;
    -ஹீரோஷிமா, ஃபுக்குஷீமா போன்ற (இரண்டுக்கும் ஸ்நான பிராப்தி
    கூட கிடையாது)
    -மீன் வளங்கள் அழிந்து விடும்.
    Bla Bla Bla. இவையெல்லாம் சாதாரண பொதுமக்களினால்
    எழுப்பப் படும் சந்தேகங்கள். வெறும் வதந்திகளின் மூலம் பரப்பப்படும்
    இவ்வகை சந்தேகங்களுக்கு பதில் கூற முடியுமா என்பது தெரியவில்லை.

    ஆனால் அறிவியல் உண்மைகளின் படியே (ஆனால் எதார்த்தத்தை
    சிறிதளவும் அனுசரிக்காத) அணு சக்திக்கான எதிர்ப்பு என்பது உலகம் பூராவும் விரிந்தது. அதற்கென்று பல குழுக்கள் இயங்குகின்றன. அணுசக்தியை எதிர்க்க அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதே
    நேரத்தில் அணு சக்தியை ஆதரிக்கும் மக்களும் (என்னைப் போன்று) விஞ்ஞானிகளின் அறிவியல் உண்மைகளை மட்டுமே நம்பும் குழுக்களும் உண்டு. இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சேர வாய்ப்பே இல்லை. பேசி தீர்க்கக்கூடிய பிரச்சினை இது அல்ல. அந்தந்த சூழலில் யாருடைய கை ஓங்குகிறதோ அவர்களே முன்னிலையில் இருப்பர். ஃபுக்குஷீமா விபத்திற்கு பின் எதிர்ப்பாளர்களின் கையே ஓங்கியுள்ளது. இதுதான் யதார்த்தம். அதற்காக விஞ்ஞானிகள் வாளாக இருக்கப் போவதில்லை.

    பயம் போனபிறகு, மின்சாரம் கிடைக்காத போது, மின்சாரத்தின் விலை
    தாறுமாறாக உயரும் போது அணுசக்தியே வெல்லும்.

    அடுத்து, நீங்கள் சில விவரங்களை முழுமையாக அளிக்க வில்லை.
    (1)நீங்கள் அணுமின்சக்தியை ஆதரிப்பவரா/இல்லையா? பா.ஜ.கவின்
    இன்றைய நிலையைப் போல் இருக்கிறது உங்கள் நிலை. அணுமின்சக்தி
    வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கூறுவர். ஆனால் பொதுவில்
    பாதுகாப்பைப் பற்றி மட்டுமே பேசுவர்.

    (2)ஜெர்மனி அணுமின் சக்தியிலிருந்து விலகுகிறது. உண்மைதான்.
    ஆனால் இன்னொரு உண்மையும் உண்டு. உடனடியாக சில
    அணு மின் உலைகள் மூடியதின் விளைவாக ஆஸ்திரியாவிடமிருந்து
    விலை கொடுத்து ஜெர்மனி மின்சாரத்தை வாங்குகிறது. இதில் ஒரு
    சுவாரஸ்யம். ஆஸ்திரியா எண்ணெயை எரித்து தன் நாட்டில் மின்சாரத்தை
    உற்பத்தி செய்து அதை ஜெர்மனிக்கு விற்று கொண்டிருக்கிறது.

    அடுத்து 10 வருடங்களுக்கு பிறகு ஜெர்மனிக்கு ஏற்படப் போகும்
    மின் பற்றாக்குறையை Alternative Energy தீர்க்க முடியாது என்று
    அந்நாட்டின் மின் பொறியாளர்கள் தெளிவாகவே கூறி விட்டார்கள்.
    10 வருடங்கள் கழித்து, அணு உலைகளை மூடிய பின் மற்ற
    நாடுகளிடமிருந்து எரிசக்தியின் மூலம் உருவான மின்சாரத்தைத்தான்
    ஜெர்மனி வாங்க வேண்டியிருக்கும். இதைப் பற்றி பேசக்கூடாது சார்.
    புகையை எவ்வளவு வேண்டுமானாலும் விடலாம். ஆனால் அணுமின்சக்தி
    மூச்.

    (3)கூடங்குளம் அணு உலைக்காக 15000 கோடி ரூபாயை செலவழித்து
    விட்டோம். ஆகவே இதிலிருந்து நாம் விலக முடியாது என்பது
    உங்கள் கூற்று. நான் இதனுடன் உடன் பட வில்லை.
    ஜைட்டாபூரில் அணு உலைகள் கட்டப் பட்டுத்தான் வருகின்றன.
    இந்திய-அமேரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தத்திற்கு பின் 20க்கும்
    மேற்பட்ட அணு உலைகள் இந்தியா முழுவதும் கட்டப் பட போகின்றன.
    அத்தனை அணு உலைகளும் நமக்கு அவசியம். கிட்டத்தட்ட
    ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்களை நாம் செலவு செய்ய கொள்கை
    முடிவை எடுத்து விட்டோம். (ஒரு பட்டவர்த்தனமான இரகசியம்;
    வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போதுதான் இந்திய-அமேரிக்க அணு
    மின்சக்தி ஒப்பந்தத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது).
    ஒரு Incident ஏற்படுவதால் Strategyயை மாற்றுவது சுத்த முட்டாள்தனம்.
    அதுவும் அந்த ஃபுக்குஷீமா Incident கூடங்குளத்தில் ஏற்படுவது
    Statistical Probabilityன் அடிப்படையில் Near Zero.

    (4) மின்சார உற்பத்தியின் போது, அணு மின்சக்தி துறையினால்
    ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பாதிப்புகளை மற்ற மின் உற்பத்தி
    முறைகளுடன் ஒப்பீடு செய்தால் அணு மின்சக்தியினால் ஏற்படும்
    சேதம் மிக மிக குறைவு. நீங்கள் கூறியிருப்பது மிக மிக சரி. என்
    கட்டுரையில் நான் இதை புள்ளி விவரங்களுடன் எழுதியிருந்தேன்.
    ஆனால் கேட்பதற்கு ஆளில்லை.

    (5) பாதுகாப்பைப் பற்றி நீங்களும் சில சந்தேகங்களை எழுப்புகிறீர்கள்.
    அரசியல்வாதிகளையும், அரசு உத்தியோகஸ்தர்களையும்
    ஊழல்வாதிகளாக பார்ப்பதால் அந்த பயம். இந்த பயத்திற்கு அவசியமே
    இல்லை. அடுத்து பாதுகாப்பு / இராணுவ காரணங்களுக்காகவும் இந்த
    அணு உலை வேண்டும் என்றும் எழுதி உள்ளீர்கள். இது தவறு.

    இந்திய-அமேரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு
    காரணங்களுக்கான அணு மின் உலைகளை இந்தியா முடிவு செய்து
    அதை இரகசியமாகவே வைத்திருக்கும். அவை மின்சார உற்பத்திக்காக
    இல்லை. கூடங்குளம், ஜைட்டாபூர் போன்ற அணு உலைகள்
    மின்சாரத்திற்காகவே இயங்கும். இதற்கு தேவைப்படும் யூரேனியம்
    போன்ற பொருட்கள், தொழில் நுட்பம் போன்றவற்றை பிற நாடுகள்
    வழங்கும்.

    மிகவும் முக்கியமாக இந்த அணு உலைகளின் பாதுகாப்பு சர்வதேச
    நெறிமுறைகளின் படியே அனுசரிக்கப் படும். மேலும் IAEAவின்
    பரிசோதனையும் நடக்கும். ஆகவே நம் டோங்கிரி ஊழல்வாதிகளால்
    ஒரு மண்ணும் செய்ய முடியாது.

    கடந்த செப்டம்பர் 22ம் தேதி, பி.பி.சி தமிழ் ஓசையில் கூடங்குளம்
    பிரச்சினையைப் பற்றின செய்தி ஒலிபரப்பாகியது. அதில் நீங்கள்
    குறிப்பிடும் திரு.உதயகுமார் ஒரு பேட்டியையும் அளிக்கிறார்.
    https://www.mediafire.com/?dnf9un39k5kku
    இவர் தமிழக முதலமைச்சரை சில இடங்களில் அ.தி.மு.க ஆதரவாளரைப்
    போல் சிலாகித்து பேசுகிறார். கூடங்குளம் அணு உலைகளை முழுவதும்
    மூடி விடுவது உடனடி சாத்தியமல்ல என்பதையும் ஒப்புக் கொள்கிறார்.

    மேலும் விஞ்ஞானி திரு. எம்.ஆர்.சீனிவாசனும் ஒரு பேட்டியை அளிக்கிறார். சில சந்தேகங்களுக்கு ஆணித்தரமான பதில்களையும் அளிக்கிறார்.

    கடைசியாக யாரேனும் விபத்தே ஏற்படாது என்று உறுதியாக
    கூற முடியுமா? சத்தியமாக முடியாது. Asteriod ஒன்று பூமியுடன்
    மோதியதால் டைனஸோர்கள் அழிந்தன என்பது வரலாறு. இன்னொரு
    முறை இது நிகழாது என்று யாரேனும் உறுதியாக கூற முடியுமா?

  17. To the most intelligent writer,
    First I request you to go through internet to find the issues due to the atomic reactors in Japan.
    Do you think that they are fools when compare to us? Or do you think that they did’t take care of the security concerns?
    Don’t you think that it’s a foolish and childish article?
    In entire world countries like Germany already decided to shut down the nuclear reactors? But, still you are supporting this.
    The reason behind your support (that too not at all needed in this type of web site) are
    1. Since christians are opposing this project.
    2. Since JJ’s period this project has been started or now it is JJ’s period.

    But, whatever it is, really it shows your narrow mind and idiotic biased nature.

  18. அணு உலை கசிவின் கதிர்வீச்சு மீனவ கிராமங்களை மட்டும் பாதிக்காது; உள்ளே நெல்லை, கன்யாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஊர்கள் அனைத்தையும் விடாது. அங்கே இந்துக்களே அதிகம். எனவே அவர்களும் இப்போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். வாழ்வா சாவா என்ற கேள்வி எல்லாருக்கும்; மீனவர்களுக்கு வாழ்வாதார கேள்விக்குறியும் சேர்த்து. கேரளாவில் கொல்லம் வரை பாதிப்பு இருக்கும். எவருமே இங்கு சி.ஐ.ஏ ஈடுபட்டிருக்கிறதா ? மிசுநரிகள் பணம் வாங்கிக்கொண்டு நாட்டுத் துரோகம் பண்ணுகிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ப‌சித்த‌வ‌ன் ருசி பார்ப்ப‌தில்லை. நீரில் மூழ்க‌ப்போகிறவன் தனக்கு எவர் உத‌வினால் என்ன‌ என்றுதான் பார்ப்பான்.

    இன‌து அமைப்புக்க‌ள் ஈடுப‌ட‌வில்லையென்றாலும் ப‌ர‌வாயில்லை. எதிர்த்தால் அவை ம‌க்க‌ளுக்கு எதிரான‌வை என்றே பேர் பெறும். த‌மிழ். ஹின்து.காம் இதையெல்லாம் நினைவில் கொண்டு இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளை ஏற்க‌க்கூடாது எவ்வ‌ள‌வுதான் நியாய‌மான‌ க‌ருத்துக்க‌ளைக்கொண்டிருன்தாலும் !

    ம‌க்க‌ள் வாழ்வாத‌ர‌த்திற்க்காக குர‌ல் கொடுக்க‌ம‌ட்டுமே இத்த‌ள‌ம் ப‌ய‌ன்ப‌ட‌வேண்டும்.

  19. \\\\ம‌க்க‌ள் வாழ்வாத‌ர‌த்திற்க்காக குர‌ல் கொடுக்க‌ம‌ட்டுமே இத்த‌ள‌ம் ப‌ய‌ன்ப‌ட‌வேண்டும்.\\\\

    தேச நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தை அமுக்கி உண்மையல்லாத ஆனால் தேச நாசத்தில் ஆசையுள்ள மிஷ நரிகள் பூதாகாரம் செய்ய விழையும் விஷயங்கள் ஆகியவற்றை மதசார்பற்ற ஊடகங்கள் கண்டிப்பாக பெரிது பண்ணும். மதசார்பற்ற முகமூடி இல்லாத ஊடகங்கள் தேச நலன் சார்ந்த விஷயங்களில் மிஷ நரிகள் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக உற்று நோக்க வேண்டும். அதையே இந்த வ்யாசமும் இந்த தளமும் செய்துள்ளது என நம்புகிறேன்.

    \\\\\இது ஏதொ மக்களலால் நடத்தப் படும் ஒரு போராட்டம் என்ற எண்ணத்திற்கு வாசகர்களைத் தள்ளி உண்மையை மறைத்து “செக்யூலாகாரக” \\\\\\

    NGOக்கள் மற்றும் மிஷ நரிகள் நுழையும் தேசவிரோத போராட்டங்களுக்கு மக்களால் நடத்தப்படும் போராட்டம் என முகமூடி அணிவிப்பது மதசார்பின்மை வாதிகளின் ஸம்ப்ரதாயம்.

    \\\\\அது போலவே ஒரு சில கட்டுமானப் பணிகளை அரசாங்கம் எல் & டி, சீமன்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த கட்டுமான நிறுவனங்களிடம் விடும் பொழுது அவற்றின் தர நிர்ணயம் உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன.\\\\\\\\டெல்லியின் மெட்ரோ ரயில் கட்டுமானம் , \\\

    அப்பழுக்கற்ற ஸ்ரீமான் ஸ்ரீதரன் ஜி அவர்கள் நிரீக்ஷணத்தில் இயங்கும் தில்லி மெட்ரோவின் கட்டுமானங்களில் சமீப காலங்களில் பெரும் விபத்துகள் நிகழ்ந்ததை மறக்கவோ மறுக்கவோ இயலாது. தர நிர்ணயம் மற்றும் target chasing இரண்டிற்கும் இடையே சமன்வயம் மிகக் கடினமானது. எங்கெல்லாம் target chasing முன் சென்று தர நிர்ணயம் பின் செல்ல இயலுமோ அங்கெல்லாம் விபத்துக்கள் கண்டிப்பாக நிகழும்.

    \\\\ ஒரு சில அரசுத் துறைகளில் தரக் கட்டுப்பாட்டில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள்.\\\\

    சிவில் கட்டுமானம் அதுவும் பெரு நிறுவனங்களால் கட்டப்படும் கட்டுமானங்களில் தரக்கட்டுப்பாடு என்பது பெருமளவில் நம்பப்படும் விஷயமே. கட்டுமானதாரர்களின் பில்கள் பட்டுவாடா செய்யப்படுமுன் தரக்கட்டுப்பாடுகள் தரக்கட்டுப்பாடு பரிசோதிக்கும் நிறுவனங்களால் பரிசீலனைக்கு உட்பட்டு அதன் பின்னரே பட்டுவாடா செய்யப்படுகின்றன.

    இந்தளவு பரிசீலனைக்கு உட்பட்ட பின்னும் எப்படி கணக்கு வழக்குகளை பரிசீலிக்கும் CAG (Comptroller and Auditor General) கணக்கு வழக்குகளில் குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொணர்கிறார்களோ அதே போல் நிகழ்த்தப்பட்ட கட்டுமான வேலைப்பணியில் தொழில் நுட்ப குறைபாடுகளை தரக்கட்டுப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்பட்ட பின்னும் CTE (Chief Technical Examiner) என்ற அரசு சார்ந்த விபாகம் பல சமயங்களில் முன் வைத்துள்ளது.

    ஒரு சில அரசுத் துறைகளில் தரக் கட்டுப்பாட்டில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று மட்டும் நம்பியிராமல் கட்டுமானப்பணிகள் CTE யால் பரிசீலிக்கப்பட்டுள்ளதா அவர்களது report என்ன சொல்கிறது என்று பார்ப்பது நிலமையை பெரிதும் துலக்கும்.

    \\\\\\\\\\\\இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை, இருபதினாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கும் ஒரு திட்டத்தினை இந்த இடத்தில் அமைக்க திட்டமிடும் முன்னால், இந்த எளிய பாதுகாப்புப் பிரச்சினையைக் கூடவா இதைத் திட்டமிட்டவர்கள் அலசியிருக்க மாட்டார்கள்? அது நம் விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் அடிப்படை அறிவையே கேலிக்குள்ளாக்கும் ஒரு குற்றசாட்டு அல்லவா?\\\\\\\\அப்படியே ஒரு குற்றசாட்டை வைத்தாலும் அதன் உண்மையைப் பற்றிப் பேசக் கூடிய தகுதி உள்ளவர்கள் நிலவியலாளர்களும், கட்டிட நிபுணர்களும், பாதுகாப்பு பொறியாளர்களும் அல்லவா? இந்தக் குற்றசாட்டை வைத்து அப்பாவி மக்களைப் பயமுறுத்தும் முன்னால் எத்தனை நிபுணர்கள் கலந்தாலோசிக்கப் பட்டார்கள்?\\\\\\

    குறைபாடு விஞ்ஞானிகளின் மீது அல்ல. விஞ்ஞானிகளின் பரிந்துறைகளை மீறி அல்லது அவர்களது பரிந்துறைகளைக் கரைத்து திட்டங்களை செயல் பட விழையும் அரசியல் வாதிகள் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரி வர்க்கம் இவர்களில் குறைபாடுகள் உள்ளது என்பது ஸ்வதந்த்ரம் கிடைத்து இன்று வரை நிகழ்ந்துள்ள ஊழல்கள் காண்பிக்கும் விஷயம்.

    பூகம்பத்தை தாங்குவதற்காக கட்டுமான வரைபடத்தில் உள்ள கட்டுமான வழிமுறைகள் போதுமானவையா? முக்யமாக, இன்றைக்கு எதிர்நோக்கும் பூகம்ப ஆபத்துக்களை தாங்குவதற்கு போதுமானதா?

    கட்டுமானத்தை நிகழ்த்தும் நிறுவனங்கள் விதிக்கப்பட்ட வழிமுறைகளைக் குறைவின்றி கையாண்டுள்ளார்களா?

    கூடங்குள பரியோஜனா CAG மற்றும் CTE தணிக்கைக்கு உட்பட்டுள்ளதா?

    தணிக்கை ரிபோர்ட் என்ன சொல்கிறது?

    A transparent approach on the part of IAEA on answering genuine concerns of concerned citizens would go a long way in dispelling intended disruptions of mischief mongers.

  20. நான் சாதாரணமாக ஊகங்களை முன்வைத்து புனையப் படும் சதி திட்டங்களை (Conspiracy Theory) ஏற்றுக் கொள்வதில்லை.
    ஆனால் இந்த எதிர்ப்பில் பல சந்தேகங்கள் வருகின்றன.

    (1)ஆசிரியர் எழுதியபடி, இந்த எதிர்ப்பை முன்னிருந்து நடத்தும் திரு.உதயகுமார் ஹிந்துத்துவா இயக்கங்களையும், பா.ஜ.கவையும் எதிர்த்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதற்கு மேற்கத்திய நாடுகளைச்சேர்ந்த சில பேராசிரியர்களும் முன்னுரை அளித்துள்ளனர். உதாரணமாக,
    https://www.amazon.com/Presenting-Past-Anxious-History-Hindutva/dp/product-description/0275972097
    இதில் தவறு ஒன்றும் இல்லை. எழுதுவது அவர் உரிமை.

    (2)திரு.உதயகுமார் கூடங்குளம் பகுதியில் அணு உலைக்கு எதிராக
    பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போது கத்தோலிக்க பாதிரியார்களும் உடன் சேர்கின்றனர். சில கத்தோலிக்க பாதிரியார்களும், செவிலியர்களுமே உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இதுவும் தவறு அல்ல.
    https://www.cathnewsindia.com/2011/09/22/protest-against-koodankulam-nuclear-plant-called-off/

    (3)உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவு நிர்வாகம், வாடிகனின்
    நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே வரும். வாடிகன் அணு சக்தியைப் பற்றி
    கூறிய கருத்துக்களை இணைய தளங்களில் தேடினேன்.
    https://www.christiantoday.com/article/vatican.says.nothing.wrong.with.nuclear.power/12016.htm
    https://satodayscatholic.wordpress.com/2010/09/27/promote-peaceful-use-of-nuclear-energy-urges-vatican-official/
    அதிகாரபூர்வ வாடிகனின் கொள்கை மிகவும் தெளிவாகவே தெரிகிறது.
    (அ)அணு குண்டுகளை முழுமையாக எதிர்க்கிறது.
    (ஆ)ஆக்க பூர்வமான அணு சக்தியை மனித முன்னேற்றத்திற்காகவும்,
    நோய் நிவாரணத்திற்கும் பயன் படுத்த ஆதரவு அளிக்கிறது.
    (இ)செர்னோபில் விபத்திற்கு பின் இத்தாலி அணு மின்சக்தியிலிருந்து
    விலக முடிவெடுத்தது தவறு என்றும் கூறுகிறது.
    (ஈ)சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க அணு மின்சக்தி கண்டிப்பாக
    உதவும் என்றும் கூறுகிறது.
    “Excluding nuclear energy because of a preconceived principle or for
    fears of disasters could be a mistake and in come cases could have
    paradoxical effects.”

    அதிகாரபூர்வ வாடிகன் இப்படி ஒரு கொள்கையை கொண்டிருக்க
    தமிழ்நாட்டின் கூடங்குளம் பகுதி கத்தோலிக்க பாதிரியார்கள் முழுவதும்
    வேறுபட்ட, எதிர்நிலை கொள்கை முடிவை எடுக்கிறார்கள். மேலும்
    கூடங்குளம் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து அணு மின்சக்தி
    உலைகளும் மூடப்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பதை
    தெளிவாகவே அறிவித்துள்ளனர்.
    https://www.ucanews.com/2011/09/20/protesters-take-aim-at-nuclear-plant/
    “Russian nuclear technology has failed in Chernobyl. Why should we
    use it here to endanger our lives,” said Bishop Yuvon Ambroise of Tuticorin and chairperson of the Office for Justice, Peace and
    Development (JPD) at the Catholic Bishops’ Conference of India.

    Meanwhile, the JDP issued a statement today asking the government to close the reactors at Koodankulam and to gradually decommission all existing nuclear reactors in the country.

    இதை கோர்வையாக பார்க்கும் எவர்க்கும் சில அடிப்படை கேள்விகள்
    வராமலிருக்க முடியாது.
    (1)திரு.உதயகுமாரின் எதிர்ப்பு என்பது அவரின் நிலைப்பாட்டை
    உணர்த்துகிறது. அது அவரின் உரிமை என்று கூற முடியும்.
    (2)திரு.உதயகுமாரின் ஹிந்து எதிர்ப்பினால் கவரப்பட்ட கத்தோலிக்க
    பாதிரியார்கள் தங்கள் அதிகார பூர்வ வாடிகனின் நிலையையே
    கேள்விக்கு உட்படுத்தி அவரின் இயக்கத்துடன் சேர்கிறார்கள். இந்த
    ஹிந்து எதிர்ப்பு இல்லாத ஒருவருடன் கத்தோலிக்க பாதிரியார்கள்
    கூட்டு சேர்ந்திருப்பார்களா என்பது முதல் கேள்வி.
    (3)இந்திய விரோத சக்திகள் சேர்ந்து இவர்களுக்கான ஆதரவை
    மறைமுகமாக வழங்குகின்றதா என்பது இரண்டாவது கேள்வி.
    (3)இந்திய விரோத சக்திகள் உதயகுமார் மற்றும் கத்தோலிக்க
    பாதிரியார் குழுமத்தை பகடை காயாக பயன்படுத்தி இந்திய வளர்ச்சியை
    தடுக்க முனைகிறதா என்பது 3ம் கேள்வி.
    (4)இந்த எதிர்ப்பை தாண்டி வாடிகனுக்கு கூடங்குளம் பகுதி
    பாதிரியார்களின் இந்த வேறுபட்ட நிலை தெரியுமா என்பதும் ஒரு
    சுவாரஸியமான கேள்வியே!

    கண்டிப்பாக இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றாலும்.
    “Doubt by Association” என்பது இங்கே ஒரு முக்கிய கேள்வியாக
    எழத்தான் செய்கிறது.

  21. சாரவ்

    To the most intelligent writer,

    உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙂

    First I request you to go through internet to find the issues due to the atomic reactors in Japan.

    உத்தரவு. அப்படியே செய்கிறேன் ஐயா.

    Do you think that they are fools when compare to us?

    இல்லை. அவர்களும் முட்டாள்கள் இல்லை நாமும் முட்டாள்கள் இல்லை

    Or do you think that they did’t take care of the security concerns?

    ஆம், அப்படித்தான் தோன்றுகிறது. இனிமேல் சரி செய்து கொள்வார்கள்.

    Don’t you think that it’s a foolish and childish article?

    அது உங்கள் தரப்பு. நான் அப்படி நினைக்கவில்லை.

    In entire world countries like Germany already decided to shut down the nuclear reactors? But, still you are supporting this.

    அப்படியா? ஜெர்மனி செய்வதையெல்லாம் நாமும் பின்பற்ற வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம். ஜெர்மனியில் யூதர்களை அழித்தார்கள் என்பதால் நாமும் யூதர்களைக் கொன்றோமா என்ன? ஒவ்வொரு நாட்டின் முடிவுகளும் அந்தந்த நாட்டின் தேவைகள், பாதுகாப்புச் சூழல்கள், சுற்றியுள்ள நாடுகள், அந்த நாட்டின் அரசியல் நிலவரங்கள் போன்ற எண்ணற்றக் காரணிகளைப் பொறுத்து அமைபவை. ஆகவே ஜெர்மனி ஒன்றைச் செய்தால் நீயும் அதையே செய் என்று யாரும் இந்தியாவை வற்புறுத்த முடியாது. இந்தியாவுக்கு எது தேவையோ, எது அவசியமோ எது முக்கியமோ அதைத்தான் இந்தியா செய்ய முடியும்.

    1. ஜெர்மனியைச் சுற்றியுள்ள நாடுகளில் எத்தனை நாடுகள் ஜெர்மனியின் எதிரி நாடுகள்?

    2. ஜெர்மனியின் மின் தேவை என்ன? அவை எந்தவிதத்தில் ஏற்கனவே பூர்த்தி செய்யப் படுகின்றன? இனி இந்த அணு உலைகளை மூடி விட்டாலும் கூட அவர்களின் தேவைகள் எவ்வாறு எதிர் கொள்ளப் படும்?

    3. ஜெர்மனியின் நிதி நிலமை என்ன? அதன் செல்வம், இயற்கை வளம், சேமிப்பு? ஜி டி பி என்ன?

    4. ஜெர்மனியில் எத்தனை அணு ராணுவ தளவாடங்கள் ஏற்கனவே தயாரிக்கப் பட்டுத் தயார் நிலையில் உள்ளன? அவற்றை எப்படித் தயாரித்தார்கள்? இனி இந்த அணு உலைகளை மூடினாலும் அவர்களுக்குத் தேவையான அல்லது தேவைக்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப் பட்டிருக்கிறதா?

    இது போல இன்னும் நூறு கேள்விகளை நான் கேட்டுக் கொண்டே போகலாம். முதலில் மேற் சொன்னக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்து கொண்டு விட்டு அந்தப் பதில்களோடு அதே விஷயங்களில் இந்தியாவின் நிலை என்ன என்பதையும் ஒப்பீடு செய்து விட்டு அதன் பின்னால் ஜெர்மனியில் மூடிகிறான் ஆகவே நீயும் மூடு என்ற அறிவுரையை இந்தியாவுக்குச் சொல்ல வாருங்கள்.

    The reason behind your support (that too not at all needed in this type of web site) are

    அப்படியா? அட எனக்கே தெரியாத காரணங்களையெல்லாம் கண்டு பிடித்துச் சொல்லியுள்ளீர்களே. சபாஷ்.

    1. Since christians are opposing this project.

    இல்லை. இதை இந்து முன்ணணி எதிர்த்திருந்தால் கூட இதே கட்டுரையைத்தான் எழுதியிருந்திருப்பேன் என்ன உதயகுமார் மற்றும் பாதிரியார்கள் குறித்த கருத்து இருந்திருக்காது.

    2. Since JJ’s period this project has been started or now it is JJ’s period.

    ஓ 1986-88லிலேயே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டாரோ? இந்தத் திட்டம் துவங்கும் பொழுது எம் ஜி ஆரும், அதன் பின்னர் ஜானகியும் அதன் பின்னர் கருணாநிதியும் ஆட்சியில் இருந்தனர். 1991 ஜூனுக்குப் பிறகே ஜெயலலிதா பதவிக்கு வருகிறார். ஆகவே முதல் கூற்றே தவறு

    இப்பொழுது ஜெயலலிதா இல்லாமல் கருணாநிதி இருந்திருந்து இதே போராட்டம் நடந்திருந்தாலும் என் கட்டுரையில் ஒரு இம்மி கூட மாற்றம் இருந்திருக்காது. எனது அக்கறை ஒட்டு மொத்த இந்தியாவின் நலன் மட்டுமே அன்றி யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை வைத்து அல்ல.

    But, whatever it is, really it shows your narrow mind and idiotic biased nature.

    எனக்கு குறுகிய மனப்பான்மை இருப்பதையும் நான் ஒரு முட்டாள் என்பதையும் சார்பு நிலை எடுப்பவன் என்பதையும் ஆராய்ந்து கண்டு பிடித்துச் சொன்னதற்கு மிக்க நன்றி. உங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்யவும்

    விஸ்வாமித்ரா

  22. R Balaji
    26 September 2011 at 9:42 am
    திரு.விஸ்வாமித்ரா,
    முதலில் அனந்த கோடி நன்றிகள்.

    திரு.பாலாஜி அவர்களுக்கு

    உங்கள் பதிலுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றிக்கும் நன்றி.

    நான் ஏற்கனவே நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்த பின்னரே இதை எழுதினேன் ஆகையினால் நீங்கள் ஏற்கனவே சொல்லிய விபரங்களைத் தவிர்க்க விரும்பினேன்.

    ————-
    இந்த கட்டுரையிலுள்ள அடிப்படை பிரச்சினை. நீங்கள் இரண்டாம்
    வகையில் இருந்து எழுதியுள்ளீர்கள்.

    என்னைப் பொறுத்தவரை முதல் வகையிலிருந்து இந்த கட்டுரையை
    2ம் வகை மனிதர்களுக்காக எழுத வேண்டும்.

    —————-

    சரிதான். ஆனால் நான் இரண்டாவது வகை ஆட்களுடன் தோள் மேல் கை போட்டுக் கொண்டு நானும் உங்களை மாதிரிதாங்க பாருங்க இருந்தாலும் இதுதானே நல்லது என்ற விதத்தில் எழுத விரும்பினேன்.

    ———————–
    அடுத்து, நீங்கள் சில விவரங்களை முழுமையாக அளிக்க வில்லை.
    (1)நீங்கள் அணுமின்சக்தியை ஆதரிப்பவரா/இல்லையா? பா.ஜ.கவின்
    இன்றைய நிலையைப் போல் இருக்கிறது உங்கள் நிலை. அணுமின்சக்தி
    வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கூறுவர். ஆனால் பொதுவில்
    பாதுகாப்பைப் பற்றி மட்டுமே பேசுவர்.
    ————————–

    இவ்வளவு தூரம் எழுதிய பின்னரும் இப்படி ஒரு கேள்வியா? 🙂 ஆம் ஆதரிக்கிறேன். நான் தெளிவாகப் பட்டவர்த்தனமாகச் சொல்லாதபடியால் இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. நான் உறுதியாக ஆதரிக்கிறேன். நம்மைச் சுற்றி உள்ள நாடுகள் அனைத்தும் ஏராளமான அணு ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொழுதும், அணு உலைகளை மின்சாரத்திற்கு மட்டும் அல்லாது ராணுவ காரணங்களுக்காகவும் பயன் படுத்தும் பொழுது இந்தியா மட்டும் அணு உலைகளை மூடி விட வேண்டும் என்று சொல்லப் படும் வாதத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

    ———————
    (3)கூடங்குளம் அணு உலைக்காக 15000 கோடி ரூபாயை செலவழித்து
    விட்டோம். ஆகவே இதிலிருந்து நாம் விலக முடியாது என்பது
    உங்கள் கூற்று. நான் இதனுடன் உடன் பட வில்லை.

    ஜைட்டாபூரில் அணு உலைகள் கட்டப் பட்டுத்தான் வருகின்றன.
    இந்திய-அமேரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தத்திற்கு பின் 20க்கும்
    மேற்பட்ட அணு உலைகள் இந்தியா முழுவதும் கட்டப் பட போகின்றன.
    அத்தனை அணு உலைகளும் நமக்கு அவசியம். கிட்டத்தட்ட
    ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்களை நாம் செலவு செய்ய கொள்கை
    முடிவை எடுத்து விட்டோம். (ஒரு பட்டவர்த்தனமான இரகசியம்;
    வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போதுதான் இந்திய-அமேரிக்க அணு
    மின்சக்தி ஒப்பந்தத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது).
    ஒரு Incident ஏற்படுவதால் Strategyயை மாற்றுவது சுத்த முட்டாள்தனம்.
    அதுவும் அந்த ஃபுக்குஷீமா Incident கூடங்குளத்தில் ஏற்படுவது
    Statistical Probabilityன் அடிப்படையில் Near Zero.
    ——————–

    நீங்கள் சொல்வது சரியே. உடன் படுகிறேன்

    ———————–
    (5) பாதுகாப்பைப் பற்றி நீங்களும் சில சந்தேகங்களை எழுப்புகிறீர்கள்.
    அரசியல்வாதிகளையும், அரசு உத்தியோகஸ்தர்களையும்
    ஊழல்வாதிகளாக பார்ப்பதால் அந்த பயம். இந்த பயத்திற்கு அவசியமே
    இல்லை. அடுத்து பாதுகாப்பு / இராணுவ காரணங்களுக்காகவும் இந்த
    அணு உலை வேண்டும் என்றும் எழுதி உள்ளீர்கள். இது தவறு.
    ——————–

    நான் சொன்னது மக்களிடம் உள்ள சந்தேகங்களை அச்சங்களை. அவற்றிற்கு உரிய பதில்களை முறையாக விளக்க வேண்டியது அரசின் கடமையே.

    ——————
    இந்திய-அமேரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு
    காரணங்களுக்கான அணு மின் உலைகளை இந்தியா முடிவு செய்து
    அதை இரகசியமாகவே வைத்திருக்கும். அவை மின்சார உற்பத்திக்காக
    இல்லை. கூடங்குளம், ஜைட்டாபூர் போன்ற அணு உலைகள்
    மின்சாரத்திற்காகவே இயங்கும். இதற்கு தேவைப்படும் யூரேனியம்
    போன்ற பொருட்கள், தொழில் நுட்பம் போன்றவற்றை பிற நாடுகள்
    வழங்கும்.
    ———————-

    அப்படித் தீர்மானமாகச் சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை. அப்படி ஒரு வேளை அது வெறும் மின்சார உற்பத்தி உலையாக மட்டுமே இருந்தாலும் கூட அதில் இருந்து பெறப்படும் அனுபவங்கள் ராணுவத் தளவாடங்களுக்கும் பிற ஆராய்ச்சிகளுக்கும் முக்கியமானவையே.

    ————–
    மிகவும் முக்கியமாக இந்த அணு உலைகளின் பாதுகாப்பு சர்வதேச
    நெறிமுறைகளின் படியே அனுசரிக்கப் படும். மேலும் IAEAவின்
    பரிசோதனையும் நடக்கும். ஆகவே நம் டோங்கிரி ஊழல்வாதிகளால்
    ஒரு மண்ணும் செய்ய முடியாது.
    —————

    நம்ம மன்மோகன் வகையறாக்களை அப்படி எளிதில் ஒதுக்கி விட முடியாதே 🙂

    நீண்ட பதிலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி பாலாஜி. நிச்சயம் கருத்தில் கொள்வேன்

    விஸ்வாமித்ரா

  23. Pingback: Indli.com
  24. மக்களின் நலனே முதன்மையானது. அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் முழுமையான முறையில் செயல் படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த துறையில் அனுபவம் பெற்ற வின்ஜாநிகளாலோ, பொறியியல் வல்லுனர்களாலோ இந்த அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பப் பட்டிருந்தால், இது அச்சம் கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால், இந்த துறையின் அடிப்படை கூட தெரியாத, சம்பந்தமே இல்லாத ஒரு கூட்டம், இதை எதிர்ப்பதும் உண்ணாவிரதத்தை தூண்டி விடுவதையும் பார்த்தால், இந்திய அரசின் திட்டங்களையும், தேச நலனையும் மட்டுமே எதிர்க்கும் ஒரு சதிவேலையோ என்று எண்ண மட்டுமே வாய்ப்புள்ளது – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    ஆரோக்யா

  25. Catholic Church involved in Kudankulam Nuclear Plant agitation: Dr. Swamy asks for PM’s explanation

    October 17, 2011.

    Statement of Dr. Subramanian Swamy,
    President of the Janata Party.

    I demand an explanation from the Prime Minister Dr. Manmohan Singh as to why his Secretary Mr. Pulok Chatterji, with the help of the Maharashtra Chief Minister Mr. Prithviraj Chavan, has entered into negotiations with the Catholic Church in Mumbai to help resolve the protests taking place against the Kudankulam Nuclear Plant. Does this mean that the Catholic Church is behind the agitation in which case it is highly objectionable and calls for action under IPC Sections 153A & B, 295A and 505(2). It also exposes that the PMO is under the clutches of the Catholic Church probably due to the extra-constitutional authority exercised by the now ailing Ms Sonia Gandhi who appears to regard Mr. Pulok Chatterji with the PMO as her personal civil domestic servant judging by his role when she was hospitalized in New York. During the period of her hospitalization, Mr. Pulok Chatterji was frequently seen arranging for pizza and other snacks for her large Italian entourage numbering about fifty and living in plush apartments in New York close to the hospital.

    The Prime Minister, if he is committed to secular, that is, not prejudiced against the majority Hindu community and biased in favour of the Christians because they are patrons of Ms. Sonia Gandhi, should put an end to this condemnable negotiation on the viability of the Kudankulam Plant. The Church has no business to decide whatsoever on whether a new reactor set up after Government approval is to be opposed or supported. Let the Catholic Church restrict itself to religious matters otherwise persons like myself would be free to investigate the practices of the Church such as in appointment of Bishops on direction from the Vatican, and receipt of funds from abroad.

    (SUBRAMANIAN SWAMY)

  26. நான் இந்தக் கட்டுரையில் சொன்னதை இப்பொழுதுதான் அணு சக்தித் துறையினர் படித்தார்கள் போலிருக்கிறது. காலம் கடந்து நான் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். ஆம் கலாம் அவர்களை அழைத்துச் சென்று பேச வைத்திருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். என் கட்டுரையில் சொன்ன பிற ஆலோசனைகளையும் அவர்கள் உடனடியாக்ச் செய்வார்கள் என்று நம்புகிறேன். தமிழ் ஹிந்துவில் வந்த கட்டுரை அணு சக்தி துறை நிர்வாகிகளால் படிக்கப் பட்டிருக்கிறது

    தினமலர் செய்தி

    திருநெல்வேலி: கூடன்குளம் அணுமின்நிலையம் முழு பாதுகாப்பானது என சுற்றி்பார்த்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கூறினார்.பீதியை ஏற்படுத்தி பெரும் போராட்டக்களமாக மாறியிருக்கும் கூடன்குளத்தில் கலாம் முகாமிட்டுள்ளார். இவர் அணுமின் நிலையம் முழுவதும் சுற்றிப்பார்ப்பதுடன், போராட்டக்குழுவினர் அச்சம் தீர்க்கும் வகையில் மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ‌அணுமின் நிலையத்திற்கு ஆதரவு அளி்ப்போர் கலாம‌ை சந்தித்து பேசினர். எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்குழுவினரை சந்திக்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் என்னை சந்திக்க வந்தால் சந்திப்பேன் நானாக செல்ல மாட்டேன் என்றார். அணுஉலை தொடர்பாக கலாமின் கருத்துக்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அணுமின் நிலையம் பாதுகாப்பானது : அணு மின்நிலையத்தை சுற்றிப்பார்த்துவிட்டு அப்துல்கலாம் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவர் அப்போது கூறுகையில்: பாதுகாப்பு பணிகள் முழு திருப்தி அளிக்கிறது. நான் இந்த அணு மின் நிலையத்திற்கு தற்போது 2 வது முறை வந்திருக்கிறேன். இன்று அணுமின் நிலைய அதிகாரிகளுடன் பல மணி நேரம் ஆலோசித்தேன். இந்த அணுமின் நிலையம் முழு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கழிவுகள் 75 சதம் மறு சுழற்சி மூலமும், ஏனைய 25 சதம் ஆலையில் வைக்கப்படும். அதி நவீன பாதுகாப்பு இருப்பதால் கதிர்வீச்சு வெளியாகாது. சுனாமி, பூகம்பம் போன்ற நிகழ்வின்போதும் எவ்வித பாதிப்பையும் தராது. இது இப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் .

    மத்திய அரசின் தூதராக வந்துள்ளீர்களா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கலாம், யாருடைய கோரிக்கையின் படியும் தான் இங்கு வரவில்லை என்றார். அணுசக்தி சுத்தமான சக்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனர்ஜி இன்டிபென்டன்ட் என்று சொல்லக்கூடிய சக்தி சுதந்திரத்திற்காக பாடுபட்டு வருவதாகவும், இதற்காக காற்றாலை மின்சக்தி, சூரிய ஒளி மின்சக்தி, பயோ மின்சக்தி மற்றும் அணுமின் சக்தி ஆகியவை மேம்பட தான் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரத்தின் அருமையை தான் அறிந்துள்ளவன். இப்பகுதி மக்களின் சந்ததிகள் சிறப்பாக வாழ கூடங்குளம் அணுமின் நிலையம் கண்டிப்பாக தேவை என்றும் கூறினார்.

    கலாம் கருத்துக்கள் ஏமாற்றம் அளிக்கிறது – போராட்டக்குழு : அப்துல் கலாம் கூறிய கருத்துக்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; அப்துல் கலாம் கூறிய கருத்துக்கள் எல்லாம் கேள்விப்பட்டதுதான். கேட்டு, கேட்டு புளித்து போனதுதான். புதிதாக ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் விஷயம் இல்லாமல் போனது. இவரது பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. பல நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காமல் இவ்வாறு பேட்டி அளிப்பது அவரது அந்தஸ்துக்கு ஏற்புடையது அல்ல என்றார். அவருடைய பேச்சு வருத்தத்தை தருகிறது. கழிவுகள், கழிவுகள் செயலிழப்பு குறித்து விளக்கம் வேண்டும். 12 லட்சம் பேர் வசிக்கின்றனர் அவர்களை அப்துல்கலாம் நினைத்து பார்க்க வேண்டும். எங்கள் மக்களை இழக்க தயராக இல்லை. ரஷ்யாவில் போய் வைக்க வேண்டியதுதானே. இந்தியாவில் வளர்ச்சி தேவை. 15 முதல் 20 மெகாவாட் மின்சாரம் காற்றாலை, சூரிய ஒளி மூலம் தயாரிக்கலாமே, அணு சக்தி திட்டத்தினால்தான் நாம் வாழுகிறோம் என்பது அப்பட்டம், இந்த அணுமின் நிலையம் எங்களுக்கு வேண்டாம் என்றார்.

    கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு பிரச்னையை முன்வைத்து பல நாட்களாக போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் மற்றும் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பு போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மக்களின் அச்சத்தைப் போக்க விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோரை கொண்ட 15 பேர் கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில் அப்துல் கலாம், இங்கு வந்தது முக்கியத்துவம் பெறுகிறது.

    இன்று காலை 9.30 மணியளவில் கலாம் அணுமின் நிலையத்திற்கு சென்றார். இவருடன் இந்திய அணுசக்தி கழக தலைவர் ஜெயின் , திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி, நிலைய இயக்குனர் சுந்தர், தலைமைப் பொறியாளர் ஜின்னா மற்றும் விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினார். அணு நிலையம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். மின்சாரம் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் நிருபர்களை சந்தித்து பேசினார்.

    அணு எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அப்துல் கலாமை சந்தித்து பேசினாலும் அவரது கருத்தை ஏற்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் முன்னதாக கூறியிருந்தனர். கலாம் வருகையையொட்டி மத்திய, மாநில பாதுகாப்புப் படை போலீசார், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    .4 அடுக்கு பாதுகாப்பு உள்ளது மத்திய அமைச்சர் : கூடன்குளம் அணுமின்நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று கூறுகையில்; கூடன்குளம் அணுமின்நிலையம் தொடர்பான அப்பகுதி மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எவ்வித பிரச்னையும் எற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித சர்ச்சையும் எழாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாத சுனாமி தாக்குதல் வந்தாலும் இந்நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருக்கின்றன என்றார்.

  27. க்றைஸ்தவர்களுக்கும் ஹிந்துக்களைப் போன்றே பொதுநலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விமர்சனங்கள் செய்ய உரிமை உள்ளது என்பது மேம்போக்காக சரி என்று படுகிறது. அணுசக்தி போன்ற பன்முக உபயோககரமானதும் தேசஹிதத்திற்கும் ஆன விஷயத்தில் மதத்தை நுழைத்து ஆர்ப்பாட்டம் செய்வது என்பது, மதரீதியாக க்றைஸ்தவ மதமாகப்பட்டது ஹிந்துஸ்தானம் ஒரு பரமாணு வல்லரசாக விழைவதின் எதிரி என்ற தோற்றத்தை கண்டிப்பாக அளிக்கும். ஆனால் ஆங்க்ல பாஷையில் சொல்வது போல் “have the cake and eat it too” என்ற படிக்கு தேச நலனில் அக்கறை உள்ளவர்கள் போல் ஒரே சமயம் காட்டிக்கொள்வதும் அதே சமயம் தேசத்திற்கு ஹிதமளிக்கும் விஷயங்களை தேசத்திற்கு எதிரானது போன்று காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதும் ஆன க்றைஸ்தவ ரெட்டை வேடங்களை ஹிந்துக்கள் கண்டிப்பாக அறிய வேணும்.

    ஸ்ரீ உதயகுமர் அவர்கள் கூடங்குளம் மட்டுமன்றி ஹிந்துஸ்தானம் முழுதும் எங்கெங்கு அணு உலைகள் உண்டோ அவற்றை எதிர்ப்போம் என்ற ரீதியில் பேசிஉள்ளார். koodankulam அணு உலையிலிருந்து கழிவுகள் எவ்வளவு வெளியேறும் அவை எத்தனை டன் கொள்ளளவு என்றெல்லாம் விபரங்கள் தெரிவிக்காது கழிவுகள் பற்றி அணு உலை சார்பாளர்கள் பூசி மெழுகுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது grey area தானா தெளிவான விபரங்கள் உள்ளதா தெரியவில்லை. கட்டுமானத்தில் குளறுபடிகள் என்றும் ஸ்ரீ உதயகுமார் பொத்தாம் பொதுவாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் தரப்பிலிருந்து ஏதும் மேலதிக விபரங்கள் இல்லை. அதே சமயம் தேசத்தின் வளர்ச்சிக்கு மின்சக்தி என்பது அத்யாவசியம் என்றும் அதை நீர்மின்சாரம் மூலமும் மற்ற Non conventional – Renewable energy Soruces மூலமும் பெற முடியும் என்பது அவர் வாதம். எதிர்காலத்தில் நமது Energy தேவை எவ்வளவு அதை எந்த அளவுக்கு Non conventional – Renewable energy Soruces மூலம் பெறமுடியும் என்று கணக்கீடுகள் இல்லாத வரை இதை எந்த அளவுக்கு ஏற்க இயலும் தெரியவில்லை.

    அணு உலை சார்பாளர்கள் விக்ஞான ரீதியாக குற்றச்சாட்டுகளுக்கு பதிலிறுக்காமல் பொத்தாம் பொதுவாக பூசி மொழுகுவதாகவும் அவரின் குற்றச்சாட்டு.நேற்று சன் தொலைக்காட்சியில் நான் கேட்டது தவறா அல்லது அவர் சொன்னது தவறா தெரியவில்லை. ஹோகேனக்கல் மூலம் 50,000 மெகாவாட் நீர் மின்சாரம் பெற முடியும் என சொன்னதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இது எப்படி சாத்யம் என்று புரியவில்லை. ஏனெனில் உலகத்திலேயே பெரிய நீர் மின்சாரத் திட்டம் சீன தேசத்தில் உள்ள 22,500 மெகாவாட் திறனுள்ள three gorges dam என்ற திட்டம். டெஹ்ரி ஜலாசயம் ஹிந்துஸ்தானத்தில் இன்றிருக்கும் நீர் மின் திட்டங்களில் மிகப்பெரியதும் 2,400 மெகாவாட் திறனுள்ளதும் ஆன திட்டம். ஹிந்துஸ்தானத்தில் இதுவரை அமைக்கப்பட்ட நீர்மின் திட்டங்கள் 5,000 மெகாவாட்டைக் கூட இதுவரை தொடாதபோது நீர்வரத்து அதிகம் உள்ள உத்தர பாரதத்தில் கூட சாத்யமில்லாது தக்ஷிண பாரதத்தில் எப்படி 50,000 மெகாவாட் நீர் மின் திட்டம் அதுவும் ஒரு நீராதாரம் மூலம் சாத்யமாகும் என்பது புரியவில்லை.

  28. பாலாஜி

    கான்ஸ்பிரைசி தியரி குறித்த உங்கள் சந்தேகங்களைப் படித்தேன். உதயகுமார் எழுதிய நூல்களும் பதிப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இந்து விரோத, இந்து அமைப்புகளுக்கு விரோதமான கட்டுரைகளே. அதில் இருந்தே அவரை இயக்குவது யார் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடியும். மேலும் கூடங்குளம் திட்டம் அங்கு அமைவதினால் புதிய கல்வி, மருத்துவ நிலையங்கள் அமையும். அங்குள்ள மக்களுக்கு மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் கிட்டும். வெளியுலகத்துடன் தொடர்பு அந்த மக்களுக்கு ஏற்படும். இவர்களில் பெரும்பாலோர் தற்பொழுது சர்ச்சுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் பாதிரியாரின் கட்டளைப் படிதான் ஓட்டு கூடப் போடுகிறார்கள். மேலும் அந்தப் பகுதி வளர்ச்சியடையாமல் ஏழ்மை நிலையில் இருந்தால் மட்டுமே தொடர்ந்து பாதிரிகளால் ஆன்ம அறுவடை செய்து மதம் மாற்ற முடியும். ஆக அவர்களது அதிகாரத்துக்கும் மத மாற்ற முயற்சிகளுக்கும் இந்த அணு மின் திட்டம் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதினால் ஏற்கனவே அவர்கள் உதவியுடன் இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வரும் உதயகுமாரின் தலைமையில் ஒன்றிணைந்து செயல் படுகிறார்கள். இந்த கோணத்திலும் அவர்களது சதிச் செயல்களை நீங்கள் நோக்க வேண்டும்

    நன்றி
    விஸ்வாமித்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *