தமிழகத்தைப் பீடித்துள்ள கழகபிராண்ட் அரசியலில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு சீசன் உண்டு. காவிரி, முல்லை பெரியாறு, இந்தி எதிர்ப்பு, தமிழினப் பற்று போன்றவை அவ்வப்போது தோன்றி மறையும்; சில காலம் அது குறித்தே பேச்சாக இருக்கும்; அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அதுகுறித்து முழங்கித் தீர்ப்பர். ஊடகங்கள் அவற்றை தன் சார்பு, சார்பின்மையைப் பொருத்து செய்திவெளியிடும். பிறகு அந்த விஷயம் மெல்ல மறக்கப்படும். அடுத்த விஷயம் முன்னணிக்கு வரும்…
அந்த வகையில் தற்போது முன்னிலை வகிப்பது ஈழத்தமிழர் பிரச்சினை. கழகங்களின் அரசியலுக்கு நீண்டகாலமாக தொடர்ந்து கைகொடுக்கும் வற்றாத ஜீவநதி இந்த இலங்கைப் பிரச்சினை. தமிழர்-சிங்களர் இனப்பிரச்சினை, மலையகத் தமிழர் பிரச்சினை, சிறிமாவோ முதல் ரனில் விக்கிரமசிங்கே வரையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள், ஒப்பந்த மீறல்கள், ஆயுதப் போராட்டம், இந்தியத் தலையீடு, இறுதிப் போர் போன்றவை பற்றியெல்லாம் நிறைய பேசியாயிற்று. எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று தொடரும் இந்த விவாதம் என்றுமே முடிவடையப் போவதில்லை. நாம் நிகழ்காலப் பிரச்சினைக்கு வருவோம்..
இலங்கை – தமிழகம் – தற்போதைய நிலை
- 05-09-2012 அன்று பூண்டிமாதா கோயிலுக்கு வந்த இலங்கை நாட்டவர்கள் (அவர்களில் தமிழர்களும் உண்டு) திருச்சி அருகே தாக்கப்பட்டனர். தக்க பாதுகாப்புடன் அன்று இரவே தனி விமானத்தில் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் தமிழகத்துக்குச் செல்லவேண்டாம் என அந்த நாட்டுஅரசு அறிவித்துள்ளது.
- சில நாள்களுக்கு முன்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் கால்பந்து விளையாட வந்த இலங்கை விளையாட்டு வீரர்கள் (அவர்கள் அனைவரும் சிங்களர்கள் அல்ல. அவர்களில் தமிழர்களும் உண்டு] திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விளையாட அனுமதியளித்த அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை பாணி அரசியல் ஜெயலலிதா அவர்களுக்கு புதிதல்ல. ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களை விஷம் என வெறுத்து ஒதுக்கியவர் அவர். இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் கொல்லப்படுவது பற்றிக் கேட்டபோது, போர் என்றால் அப்பாவிகள் சிலர் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாது என்ற (யதார்த்தமான) கருத்தைக் கூறியவர். அப்படிப்பட்டவர் தடம் மாறியது சென்ற பாராளுமன்றத் தேர்தலின்போதுதான். ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த சமயமாதலால் அது ஒரு தேர்தல் பிரச்சினையாக மாற்றப்பட்டது .காங்கிரசுடன் கருணாநிதி கூட்டணியில் இருந்ததால் ஜெயலலிதா ‘ஈழத்தாயாக’ மாற்றப்பட்டார். ஈழ ஆதரவாளர்களால் கருணாநிதி தூற்றப்பட்டதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் புலி ஆதரவாளர்களின் புகலிடமாக ஜெயலலிதா மாறினார். மீடியாக்கள் உதவியுடன் ஈழப்போர் எரியும் பிரச்சினையாக முன்நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்ச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. புலி ஆதரவாளர்களின் கோஷ்டிகானத்தில் புல்லரித்த ஜெயலலிதா, தான் ஆதரிக்கும் அரசு மத்தியில் அமையும் பட்சத்தில் இலங்கை மீது போர் தொடுத்து ஈழத்தைப் பெற்றுத் தருவோம் என்று முழங்கினார்.
தேர்தலின் முடிவு என்ன ஆனது? தமிழக மக்கள் அமைதியாகத் தங்கள் கருத்தை வெளியிட்டனர். தமிழர்களின் மீது போர் தொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நமக்குத் தெரிய வரும் உண்மை என்ன? இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது தமிழகத்தில் தேர்தல் பிரச்சினை அல்ல. அதை எழுப்புவதன் மூலம் யாரும் அரசியல் ஆதாயம் அடைய முடியாது என்பது மீண்டும் உறுதியாயிற்று. அதன்பிறகாவது ஜெயலலிதா தன் நிலையை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ”தமிழினத் தலைவர்” பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்; இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எதிர்க்கிறார்; எல்லை தாண்டும் நமது மீனவர்களை கண்டிக்காமல், இலங்கை ராணுவத்தைக் குற்றம் சாட்டுகிறார். (உண்மையில் தங்கள் மீன்பிடிப்புப் பகுதிகளில் இந்திய மீனவர்கள் நுழைவதால் தாக்குபவர்கள் பெரும்பாலும் இலங்கைத் தமிழ் மீனவர்களே.)
தமிழக அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள் (பெரும்பாலும் ஹிந்து விரோதிகள்) வரம்பு மீறுகின்றனர். தமிழகத்துக்கு வரும் இலங்கை அதிகாரிகளை, சிங்களர்களை, இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழர்களைத் தாக்குகின்றனர்.
04-09-2012 தினமணி தலையங்கம்
”இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா? இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படிப் பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்? இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜீய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது? இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாக பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும்.”
இந்தியாவுக்கான நிர்பந்தங்கள்
நமக்குச் சொந்தமான பல ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் அருணாச்சல பிரதேசத்தைத் தன்னுடைய பகுதி என்று சாதிக்கும், காஷ்மீருக்கு சிறப்பு விசா வழங்கும் சீனாவுடன் எல்லா உறவையும் தொடர்கிறோம்; எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு இந்தியர்களைக் கொன்றுகுவிக்கும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம்; நம் உதவியால் சுதந்திரம் பெற்று, இன்று நம் தேசத்துக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் வங்கதேசத்துடன் கூட பிரச்சினைகளை பேசித் தீர்க்கவே முயல்கிறோம்.
இலங்கையுடன் நமக்கு ராஜாங்கரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் நல்லுறவு உண்டு. தூதரக உறவும் உண்டு. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளில் (சார்க்) இலங்கையும் ஒரு உறுப்பினர். அந்தவகையில் கூடு ராணுவப் பயிற்சி என்பது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு கூறிவிட்டது.
இலங்கைத் தமிழர்களுக்கு நாம் ஏதேனும் நன்மை செய்ய நினைத்தால், அதை மத்திய அரசின் மூலமாகவே செய்ய முடியும். போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா சபையே கூறிவிட்ட பிறகு நாம் வேறு எதுவும் செய்வதற்கில்லை. ராஜாங்கரீதியிலான அழுத்தங்கள் தரலாம். இலங்கைத் தமிழர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்யலாம். இதுதான் யதார்த்தம். மற்றபடி தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் எந்தவகையிலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை அளிப்பதாக இல்லை.
புலி ஆதரவாளர்களின் உண்மை முகம்
இந்திய-இலங்கை உறவு சம்பந்தமான சர்வதேச நிர்பந்தங்களை, தனக்கு உள்ள ராஜாங்கரீதியிலான பொறுப்புக்களை, வர்த்தக நிர்பந்தங்களை மத்திய அரசு எவ்வளவு கூறினாலும் புலி ஆதரவாளர்கள் செவிமடுக்கப்போவதில்லை. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, கு.ராமகிருட்டிணன், திடீர் தமிழன் சீமான் (இவர்கள் பெரும்பாலும் ஹிந்து விரோதிகள்) போன்ற தேச விரோதிகளிடம் நம் நாட்டுக்கான விசுவாசத்தை எதிர்பார்த்துப் பலனில்லை. அது அவர்கள் பிழைப்பு. புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஈழப் பிரச்சினையைக் காட்டி பணம் பெற்று வயிறு வளர்ப்பவர்களிடம் தேச பக்தியை எதிர்பார்த்தால் அது நம் தவறு.
ஈழப்போர் முடிந்த உடனே இலங்கை சென்று ராஜபக்ஷே அளித்த விருந்தில் கலந்துகொண்டு உடம்பை வளைத்து பரிசு பெற்றுவந்தவர்தான் திருமாவளவன். இவர்களை எல்லாம் நாம் லட்சியம் செய்யத் தேவையில்லை.
ஆனால் தமிழக முதல்வர் தமிழர்களின் பிரதிநிதி. அவரது செயல்கள் பெரும்பாலும் தமிழர்களின் கருத்தாகவே வெளிப்படும். சிங்களர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தமிழகத்தில் வளர்ப்பது இலங்கை வாழ் தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும்.
கருணாநிதி எனும் முன்உதாரணம்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவது புலி ஆதரவாளர்களின் இயல்பு. தமிழினத் தலைவர் என்ற பட்டத்திற்காக ஈழப் போராளிகளை தமிழகத்தில் செயல்பட அனுமதித்த கருணாநிதி கடைசியில் தனது ஆட்சியை இழந்ததுதான் மிச்சம். அன்று அவரை தலையில் தூக்கிவைத்து ஆடியவர்கள் இன்று அவரைத் தூக்கி வீசி விட்டனர். ஜெயலலிதா அவர்கள் நாளை காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் இவர்கள் அனைவரும் கருணாநிதி முகாமுக்கு இடம்பெயர்ந்து விடுவர். இவர்களின் ஆதரவு என்பது ஈ.வெ.ரா காமராஜரை ஆதரித்ததுபோல்தான். நன்மைகளை விட தீமைகளே அதிகம்.
80-களின் இறுதியில் தமிழகத்தில் நிலவிய பயங்கரத்தை நாம் மறந்துவிடக்கூடாது. ஈழப் போராளிகளின் சண்டைக்களமாக தமிழகம் மாறியது. ”சகோதர யுத்தத்தில்” ஆரம்பித்த கோரதாண்டவம் ராஜீவ் கொலையில் முடிவுற்றது. தமிழகத்துக்குத் தீராப்பழி வந்து சேர்ந்தது.
தவறுகளில் இருந்து பாடம் கற்பதே அறிவுடமை. கருணாநிதி செய்த அதே தவறுகளை இன்று ஜெயலலிதா செய்கிறார். மீண்டும் தமிழகத்தை பயங்கரவாதிகளுக்கான காலமாக மாற்றாமல் தமிழக மக்களைக் காப்பது முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் கடமை.
எல்லாம் சரிதான்… ஆனால் வக்கிரம் பிடித்த சிங்களர்களை என்ன செய்வது? கார்ட்டூனை பார்த்தீர்களா? அதை பார்த்த பின்புமா இக்கட்டுரையை வெளியிடுவது?
தமிழ் நாட்டிலுள்ள ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் (சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஈழத் தமிழரின் பெயரில் வியாபாரம் நடத்தும் கும்பல்) எல்லாம் இங்கிருந்தே வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மையான அணுகுமுறையைக்கை கொண்டு இவைகள் ஒருபோதும் ஈழப் பிரச்னையை அணுகியதில்லை. சிங்களப் பேரினவாதத்தை கண்டிக்கும் நேரத்தில் புலிகளினால் ஏற்பட்ட இழப்புகளை இவைகள் ஒருபோதும் கண்டித்ததில்லை. ராஜீவ் கொலையினால் புலிகள் தமிழர்களின் அனுதாபத்தை முழுமையாக இழந்து விட்டன என்றால் மிகையாகாது. கழகங்களின் அரசியல் ஆதாயத்துக்கு ஐம்பதுகளில் ஹிந்தி எதிர்ப்பு. இப்போது தமிழ் ஈழம். இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை பல வருடங்களாக புத்தி சாலித்தனமாக வடிவமைத்துகொள்ளவில்லை . அதன் விளைவு பாகிஸ்த்தானால் தூண்டப்படும் இஸ்லாமியப் பயங்கரவாதம்., மற்றொன்று இலங்கை நம்மை மதிப்பதே இல்லை என்பதே.. இன்றைய தமிழக முதல்வர் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் தொலை நோக்கு உணர்வுடன் சிந்திப்பார் என்று நம்புவோம்.
சரியான சமயத்தில் சொல்லப்பட்ட மிகச் சரியான கருத்துக்கள்.நமது நாடு நமது மாநிலம் நன்மையடைய இலங்கையை எதிர்ப்பது சரியல்ல . அதற்காக எல்லாச் செயலும் ஆதரிக்கப்படவும் கூடாது . அதேசமயம் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதுவும் சரியல்ல.
ஈஸ்வரன்,பழனி.
//கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ”தமிழினத் தலைவர்” பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார்.
கருணாநிதி செய்த அதே தவறுகளை இன்று ஜெயலலிதா செய்கிறார் //
உண்மைகளை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் சான்றோன். சிறந்த பதிவு.
சிறிமாவோ பண்டாரநாயகவுடன் லால் பகதூர் சாஸ்திரி செய்த ஒப்பந்தம் ஒரு மோசடி ஒப்பந்தம். அதன் விளைவாக இலங்கையில் பல நூற்றாண்டு வாழ்ந்த இந்திய குடும்பங்கள் அகதி என்று முத்திரை குத்தப்பட்டு இந்தியாவுக்கு கட்டாயமாக இடம்பெயரச்செய்யப்பட்டனர். பங்களா தேசத்திலிருந்து மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தால் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அகதிகளை, காங்கிரஸ் திருட்டு அரசுகள் , ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை கொடுத்து, இந்தியாவின் அஸ்ஸாமிய மக்களை , அஸ்ஸாமில் மைனாரிட்டி ஆக்கி விட்டன. ஆனால் இலங்கையில் பல நூற்றாண்டு வாழ்ந்த தமிழர்களை இலங்கையில் ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை வாங்கி கொடுக்காமல், இந்தியாவுக்கு காங்கிரஸ் நரிகள் அழைத்து வந்தன. எனவே, காங்கிரஸ் கட்சி , மற்றும் காங்கிரசின் சொம்புகளான கருணா குடும்பக்கட்சி , மற்றும் துணை சொம்புகளான திருமா, சுபவீ வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படும் வரை , தமிழன் மீது வன்முறை அடக்குமுறை தொடரும். தமிழக பொதுமக்கள் என்றும் ராஜீவ் கொலையாளிகளை ஆதரிக்கவில்லை. திமுக , திக போன்ற இயக்கங்கள், விடுதலைப்புலிகள் பத்மநாபா கொலையை தமிழ்நாட்டில் நிகழ்த்துவதற்கும், அதன்பின்னர் பத்திரமாக தப்பி செல்வதற்கும் வழிவகுத்தன. என்ன சொன்னாலும் , இலங்கையில் அப்பாவி சிவிலியன் தமிழரை லட்சக்கணக்கில் கொன்ற பாவத்துக்கு , இலங்கை தமிழின துரோகி விக்கி என்ற கருணாவும், தமிழக தமிழின துரோகி மஞ்சள் கருணாவும் , மஞ்சள் கருணாவின் கரங்களால் பாதபூஜை பெற்று மகிழும் சோனியாவின் காங்கிரஸ் அரசுமே பொறுப்பு. சோனியாவையும், கருணாநிதியையும், 2014 -பாராளுமன்ற தேர்தலில் நம் மக்கள் கருவறுப்பார்கள்.
மக்கள் எதிர்ப்பை தொடங்கிய பிறகுதான் அரசாங்கமும், கட்சிகளும் ஒட்ட வங்கிக்காக எதிர்க்க தொடக்கியுள்ளது. இது முன்பே நடந்திருக்க வேண்டியது.
கொடூரமான நிகழ்வுகளை மறந்து விட்டு எழுதுகிறீர்கள். தேசியத்தை முக்கியமாக கருதுகிறீர்கள், முதலில் மனித நேயத்தை முக்கியமாக கருதுவோம்.
ராஜ தந்திரம் என்ற பெயரில் மனித நேயத்தை அடகு வைத்து விட முடியுமா?
ஈழத் தமிழர் ப்ரச்சினை என்றாலே ஸ்ரீலங்காவை மற்றும் சிங்களர்களை த்வம்சம் செய்யவேண்டும் என்ற படிக்கு அப்பட்டமான விரோதமான நிலைப்பாட்டை முன்னிறுத்தி ஹிந்துஸ்தானத்தின் தேசநலனை புறத்தொதுக்கி எடுக்கப்படும் நிலைப்பாடுகளை பதிவு செய்யும் வ்யாசங்களை மட்டும் நம் தளத்தில் வாசித்து வந்துள்ளேன். இச்சூழ்நிலையில் ஸ்ரீமான் சான்றோன் அவர்களது குறு வ்யாசம் ஒரு தேச பக்த தமிழ் ஹிந்துவின் நிலைப்பாடுகளை பதிவு செய்கிறது என்றால் மிகையாகாது. (உடனே மாற்றுக் கருத்துக்கள் தேச பக்தி குறைந்த கருத்துக்கள் என முடிவு செய்ய வேண்டா). இன்னும் நிறைய விஷயங்கள் பதியப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் குறு வ்யாசம் என்கிறேன். பெயரால் மட்டுமின்றி சான்றாண்மை மிக்க கருத்துக்களால் இவ்யாசத்தில் பதிவு செய்யப்பட்டவை தேசபக்தி மிகுந்த சான்றோர் கருத்தே.
\\5-09-2012 அன்று பூண்டிமாதா கோயிலுக்கு வந்த இலங்கை நாட்டவர்கள் (அவர்களில் தமிழர்களும் உண்டு) திருச்சி அருகே தாக்கப்பட்டனர்.\\\
தாக்கப்பட்ட ஈழ வாசிகளின் பயம் சார்ந்த தமிழில் பேசப்பட்ட அழுகுரல்கள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. பேசிய பலரும் தமிழில் தான் பேசினார்கள். ஆசை ஆசையாய் ஹிந்துஸ்தானத்தில் உள்ள ஆலயங்களில் (க்றைஸ்தவ மற்றும் ஹிந்து?) தரிசனம் செய்ய வந்த தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகள் – இவர்கள் பயணம் செய்த பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குவதின் மூலம் ஈழத்தமிழர் ப்ரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நினைப்பவர்களின் மனநிலையை என் சொல்வது? இப்படிப்பட்ட குண்டர்களை தமிழர் என எப்படி சொல்வது. இப்படி அப்பாவி மக்களை தாக்கும் செயல் தமிழ்ப்பண்பாடும் ஆகாது. அப்பாவி மக்களை தாக்கி அழித்தொழிப்பவர்களை உலகம் ஜிஹாதி என அழைக்கிறது.
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்திய பாக்கி ஸ்தான் நம் ஹிந்துஸ்தான அரசால் முற்றாக ஒதுக்கப்படுவதில்லை. பாக்கி ஸ்தான விளையாட்டு வீரர்களும் கலைஞர்களும் ஹிந்துஸ்தானம் வந்து செல்கிறார்கள். நம் கலைஞர்கள் பாக்கி ஸ்தானம் ஏன் செல்ல இயலவில்லை என்பதனை ராஜ் தாக்கரே போன்றவர்கள் ப்ரச்சினையாக்குவதையும் ஒதுக்க இயலாது தான். இப்படி இருக்க ஸ்ரீலங்காவின் விளையாட்டு வீரர்களை அவமான கரமாய் திருப்பி அனுப்பியது அராஜகம்.
\\\எல்லை தாண்டும் நமது மீனவர்களை கண்டிக்காமல், இலங்கை ராணுவத்தைக் குற்றம் சாட்டுகிறார். (உண்மையில் தங்கள் மீன்பிடிப்புப் பகுதிகளில் இந்திய மீனவர்கள் நுழைவதால் தாக்குபவர்கள் பெரும்பாலும் இலங்கைத் தமிழ் மீனவர்களே.)\\\
க்ஷமிக்கவும் ஸ்ரீமான் சான்றோன் அவர்களே. மேற்கண்ட கூற்றுடன் எனக்கு சற்றேனும் உடன்பாடில்லை. ஸ்ரீலங்கா ராணுவத்தால் தாக்கப்படும் தமிழ் மீனவர்களாகட்டும் பாக்கி ஸ்தான் ராணுவத்தால் தாக்கபட்டு சிறை பிடிக்கப்படும் குஜராத் மீனவர்களாகட்டும் இவர்கள் யாரும் முனைந்து எல்லை தாண்டுவதில்லை. அப்பாவி மீனவர்களுக்கு சமுத்திரத்தில் இதுதான் எல்லை என நிர்ணயிக்க முள்வேலி ஏதும் இல்லையே அன்பரே! அப்படியிருக்க மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் (முனைந்து என்ற பதம் இந்த ஆரோபத்தில் தொக்கி நிற்கிறது)என்பது அபாண்டமான ஆரோபம். அதே சமயம் இவர்களை தாக்கும் மற்றும் சிறை பிடிக்கும் அன்ய ராணுவத்தினர் இவர்களைத் தங்கள் எல்லையில் தான் சிறை பிடிக்கிறார்களா என்பதுவும் அவதானிக்க வேண்டிய விஷயம். நம் அரசியல் வாதிகள் வாய்மூடி மௌனியாய் இருக்க அல்லது ஊடகங்கள் எதிரிக்குதிக்கையில் பூசிமொழுக மாதத்தில் ஓரிரு முறையாவது எல்லை மீறித் தகறாறு செய்வது சீனா தொடர்ந்து செய்து வரும் அக்ரமம்.
ஹிந்துஸ்தானத்து மீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குகின்றனர் என்ற தகவலை முதன்முறையாக வாசிக்கிறேன். இதற்கான ஆதாரத்தை தாங்கள் பகிர வேணுமாய் விக்ஞாபிக்கிறேன்.
கச்சத்தீவு ஹிந்துஸ்தானத்தின் வசம் இருந்த வரை இது போன்ற தாக்குதல்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன என்பது நிதர்சனம். கடலோர எல்லைப்பாதுகாப்பு சேனை நமது மீனவர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு எத்தகையது? அதில் மேம்பாடுகளுக்கு சாத்யமென்ன என்பவற்றை தமிழக மற்றும் குஜராத் அரசியல் வாதிகள் மத்திய அரசுடன் விவாதித்து நிலைமையை சீர் செய்தல் தமிழக மற்றும் குஜராத் ப்ரதேச அப்பாவி மீனவர்களுக்கு நன்மை பயக்கும்.
Don’t write like this.what is happening in eastern province in Sri Lanka?Already Muslims are claiming that Eastern province is a Islamic province. It will not take much time to pass resolution to support Pakistan and against India.who is going to protect Hindu Land?, Mahinda?Sonia?Subramanian swamy?If present situation continues,with in next 15 years Tamil Hindu Homeland will be occupied by Muslims and Buddhists. May be some Indian Hindus only concerned about Kashmir Hindus. what a hypocrisy.
கருத்துக்களை பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி…….
//தேசியத்தை முக்கியமாக கருதுகிறீர்கள், //
இதை நான் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்…….ஆனால் புலி ஆதரவாளர்கள் உருவாக்க விரும்புவது தமிழ் தேசியத்தை நண்பரே…..தமிழகமும் ,ஈழமும் அடங்கிய நிலப்பரப்பே அவர்களின் கனவு ……இலங்கை தமிழர்கள் மீது எனக்கும் அனுதாபம் உண்டு……….ஆனால் நான் தமிழ் தேசிய ஆதரவாளன் அல்ல….
//மக்கள் எதிர்ப்பை தொடங்கிய பிறகுதான் அரசாங்கமும், கட்சிகளும் ஒட்ட வங்கிக்காக எதிர்க்க தொடக்கியுள்ளது. இது முன்பே நடந்திருக்க வேண்டியது. //
எந்த மக்கள் நண்பரே? பெரும்பாலான தமிழக மக்கள் இவர்களை ஆதரிப்பதில்லை….ஆரம்பத்திலிருந்தே புலி வாலை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் வைகோவின் இன்றைய நிலையே அதற்கு சான்று….
ஈழத்தமிழர்களுக்கு ஓரளவேனும் நன்மை அளிக்க உத்தேசிக்கப்பட்ட..இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை புலிகள் ஏற்க மறுத்ததற்கு வைகோ ஒரு முக்கிய காரணம்…….இன்று அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நினைத்துக்கூடப்பார்க்க முடியாது….
இறுதிக்கட்டப்போரின்போது ஒரு கட்டத்தில் சரணடைய நினைத்த புலிகளை தடுத்ததும் தமிழக அரசியல்வாதிகள்தான்….இதோ தமிழகம் பொங்கி எழுந்து விட்டது….மத்திய அரசு நடுங்கிவிட்டது……உடனடியாக இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் செய்யப்போகிறது…..என்று தவறான தகவல்களை அளித்து புலிகளை முற்றாக அழித்தவர்கள் தமிழகத்தில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே……
பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அய்யா அவர்களே…….
// ஹிந்துஸ்தானத்து மீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குகின்றனர் என்ற தகவலை முதன்முறையாக வாசிக்கிறேன். இதற்கான ஆதாரத்தை தாங்கள் பகிர வேணுமாய் விக்ஞாபிக்கிறேன்.//
பொதுவாக மீனவர்கள் என்றாலே அப்பாவிகள்…….அவர்கள் தெரிந்து எந்த தவறும் செய்வதில்லை என்பது நம் மனப்பதிவு……நான் அதை ஏற்பதில்லை……
நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ,வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பலர் வேலை செய்கிறார்கள்……அவர்களில் பலரும் புலிகளின் காலத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்களே…….யமஹா பைக்குகளின் எஞ்சின்கள், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் உணவு பொருட்களை இந்திய மீனவர்கள் மூலமே புலிகள் பெற்றனர்……ராஜீவ் கொலைக்குப்பின் சி.பி.ஐயிடம் சிக்கி ,பின் தற்கொலை செய்துகொண்ட கோடியக்கரை சண்முகம் போன்ற பல திடீர் பணக்காரர்கள் புலிகளின் உபயத்தில் சம்பாதித்தவர்களே……
குறிப்பிட்ட சில மீன் வகைகள் நம்முடைய கடல் பகுதியை விட இலங்கை கடல் பகுதியில் அதிகம் கிடைப்பதை நம் நாட்டு மீனவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்……போர் முடிவுக்கு வரும்வரை நம் மீனவர்களுக்கு சிங்கள ராணுவத்தால் மட்டுமே பிரச்சினை…..ஆனால் தற்போது பழமையான உத்திகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்கள் , நவீன வலைகள் மற்றும் இயந்திர படகுகள் மூலம் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்……இந்திய கடலோர காவல்படையின் எச்சரிக்கையை மீறி நமது மீனவர்கள் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதாக,கடலோர காவல்படை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை நீங்கள் கவனித்திருக்கக்கூடும்……
கடலில் எல்லை பிரச்சினை உலகெங்கும் உண்டு……எல்லை வரையறை செய்வதில் நவீன உத்திகளை பயன்படுத்துதல்……கடலோர காவல் படையின் தீவிர ரோந்து போன்றவை பிரச்சினையை தீர்க்ககூடும்…..ஆனால் நீ அவனை தாக்கினால் நான் இவனை தாக்குவேன் என்பதெல்லாம் ஏற்க முடியாது…..
//இன்னும் நிறைய விஷயங்கள் பதியப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் குறு வ்யாசம் என்கிறேன்.//
உண்மை…….இன்னும் பல விபரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்……கால அவகாசம் இன்மையால் சுருக்கமாக எழுத நேர்ந்தது……
சுமார் ஐந்து லட்சம் ஈழத்து தமிழர்களை இலங்கையிலிருந்து நாடு கடத்திய பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த பெருமையும் அவர்களுக்கு உண்டு. இந்த சுயநல நடவடிக்கைகளால் தமிழ் இந்துக்கள்தான் பெருமளவில் பாதிப்படைந்தஆர்கள்.
புலிகள் இந்து விரோதிகள் அல்ல.இந்துக்களுக்கென ஒரு உருப்படியான அமைப்பு இலங்கையில் இல்லை. சூடு சுரணை அற்ற இந்துக்கள் சும்மா இருந்தார்கள். இப்பவும் எருமை மாட்டில் மழை பெய்தது மாதிரிதான். எனவே அந்த இடத்தை கிறிஸ்தவர்கள் நிரப்புகிறார்கள். இதை பார்த்து புலிகளை இந்துக்களின் எதிரிகள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம். ஏன் இந்தியாவில்கூட இந்துக்களுக்கென ஒரு வானொலி தொலைகாட்சி பத்திரிகை இருக்கிறதா? சமுதாய பொருளாதார செயற்பாடுகளில் இந்துக்களின் பங்கு என்ன? கோவில்கள் வர்த்தக நிலையங்களே அன்றி கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகளைப்போல சமுதாய சமய வளர்ச்சியில் அறிவுபூர்வமாக இயங்குகின்றனவா? இந்துக்கள் தாமும் செய்யமாட்டார்கள் மற்ற மதத்தவர்களையும் செய்ய விடமாட்டார்கள். முதலில் இந்துக்களாகிய நாங்கள் திருந்த வேண்டும். செயல்களில் இறங்கவேண்டும். போரினாலும் சாதியினாலும் பாதிக்கபட்டவர்களை காப்பாற்ற வேண்டும், திருவிழாக்கள் செய்வதால் இந்து சமயமோ சமூகமோ வளராது. இந்திய உதவி இலங்கை இந்துக்களுக்கு கிடைக்கவேயில்லை. இன்னமும் எமது கோவில்கள் பவுத்த பிக்குகளால் தாக்கப் படுகின்றன. அழிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்க ஒரு இந்துகூட இலங்கையிலோ இந்தியாவிலோ இல்லை. முதலில் இந்திய இந்துக்கள் இலங்கை இந்துக்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்குங்கள். பின்பு பொருளாதார உதவிகளை செய்யுங்கள். நீங்கள் இந்த இடத்தை நிரப்பினால் பின் கிறிஸ்தவர்கள் அந்த இடத்துக்கு வர மாட்டார்கள். சமய மாற்றமும் செய்ய மாட்டார்கள். இதை முதலில் இந்திய இந்துக்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்திய மீனவர்களை தாக்குவது இலங்கை அரச படையினர். இலங்கை மீனவர்கள் அல்ல. இதனை நிறுத்த முடியாத இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். இயலுமானால் கொஞ்ச சப்பாத்தி வாங்கி டெல்லிக்கு அனுப்புங்கள்.
அத்விகா அவர்களே….
//சிறிமாவோ பண்டாரநாயகவுடன் லால் பகதூர் சாஸ்திரி செய்த ஒப்பந்தம் ஒரு மோசடி ஒப்பந்தம். //
மேற்படி ஒப்பந்தம் ஈழத்தமிழர்கள் தொடர்பானதல்ல…..பிரிட்டிஷார் காலத்தில் தேயிலைத்தோட்ட வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட மலையக தமிழர்கள் பற்றியது…… இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். என்று இலங்கை கோரியது…..இந்தியா மறுக்கவே , மலையக தமிழர்கள் தாக்கப்பட்டனர்….அது தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன…..[ நேரு – சிறிமாவோ இடையிலான பேச்சுவார்த்தையை அண்ணாதுரை கீழ்த்தரமாக கேலி செய்தது அப்போதுதான்…] நேரு மறைந்த பிறகு சாஸ்திரி அந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்தார்……அந்த காலகட்டத்தில் இந்தியா வம்சாவளி தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் சிங்களர்களை விட தீவிரமாக இருந்தவர்கள் ஈழத்தமிழர்கள் …………அவர்களும் தமிழர்கள்தானே என்று இலங்கை தமிழர்கள் நினைக்கவில்லை…
” இந்திய நாய்கள்” என்று அவர்களை வர்ணித்து , விரட்டியடித்தவர்கள் மெயின் லேண்ட் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட இலங்கைத்தமிழர்களே……
அப்போதைக்கு அவர்களை பயன்படுத்திக்கொண்ட சிங்களர்கள் ,பின்பு ஈழத்தமிழர்களையும் தாக்கினார்கள்……ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியது……இதற்கு யாரை குற்றம் சொல்ல?
எந்த ஒரு அரசியல்வாதி மீதும் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லாததால், இது போன்ற அல்லது அரசியல் வாதிகளுக்கான கட்டுரைகளுக்கு நான் எந்த பதிவும் இடுவதில்லை..
ஆனால், இந்தக்கட்டுரையைப் படித்த போது, இக்கட்டுரையாசிரியர் சிறிது அரசியலறிவற்றவராயும், வரலாற்றுணர்வு இல்லாதவராயுமே தெரிந்தது.. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றவர்களின் அரசியலை தெரிந்தோ, தெரியாமலோ சரியானமுறையில் இக்கட்டுரை அணுகவில்லை.. எனது பார்வையில் இக்கட்டுரை மிகவும் …. (என்ன சொல்வது என்று தெரியவில்லை )
இந்நிலையில், நேற்று (10.09.2012) லக்பிம என்ற இலங்கையின் சிங்களப் பத்திரிகை மிகவும் கேவலமான முறையில், ஊடகவியல் அறத்தை மீறிய நிலையில் தமிழக முதல்வரைச் சித்தரித்து, மிகவும் கண்டிக்கத்தக்க முறையில், கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறது.
இந்த நிலையில், என்ன சொல்வது..? இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு மணிநேர உண்ணாவிரதப் புகழ் கருணாநிதியாலோ, வேறு எவராலோ, நற்பலனுண்டாகும் என்று நம்புகிற நிலையில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை..
என்னுடைய பதில் பிரசுரிக்கப்படாமலேயே போகலாம் இருந்தாலும், தமிழ் ஹிந்து இணையத்தினர் கொஞ்சமாவது நடுநிலையாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். ஈழத்தமிழன் என்ற உணர்வை மறக்காமல் பதிலெழுதத் துணிந்த திரு மயூரகிரி சர்மா அவர்களைப் பாராட்டாமிலிருக்க என்னால் முடியவில்லை. அந்த தமிழுணர்வு, நாமனைவரும் தமிழர்கள், பிராமணர் என்பது வெறும் சாதி மட்டும் தான் என்ற உணர்வும், சகதமிழர்களின் பரிவும் ஏற்படும் வரை தமிழ்நாட்டில் திராவிடவாதிகளுக்கும், மற்றவர்களுக்குமிடையில் நடக்கும் போரில் பலிக்கடாக்களாக்கப் படுவது, பெரும்பான்மையான உண்மையான இந்துக்களாகிய கொண்ட ஈழத்தமிழர்கள் தான்.
ஈழத்தமிழர்களைப் பற்றியும் அவர்களின் வரலாற்றை, அவர்களின் இந்துமத நிலைப்பாட்டை, பிராமணர்களை எதிர்க்காத தன்மையை, திராவிடக் கொள்கைகளில் சிறிதளவும் நம்பிக்கை இல்லாத அவர்களின் தமிழுணர்வை, மதவுணர்வையுணராத, இலங்கையைப் பற்றி கேள்விஞானம் மட்டும் கொண்ட சான்றோன் போன்ற எழுத்தாளர்கள் திராவிடக்கட்சிகளுக்கெதிரான அவர்களது வேள்வித் தீயில் ஈழத்தமிழர்களைத் தூக்கிப் போட்டுப் பொசுக்கி விடத் தயங்குவதில்லை. இப்படியான அரைவேக்காட்டு ஒருபக்கச்சார்பான கட்டுரைகளை வெளியிட்டு உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழ் இந்துக்கள் பலரும் செல்லும் இணையப்பத்திரிகையாக உருவாகி வரும் தமிழ்ஹிந்து தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் என்னுடைய ஆவல்.
திராவிடவாதிகளுக்கும், பெரியாரிஸ்டுக்களுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் உள்ள காழ்ப்புணர்வில், பெரும்பான்மையான இந்துக்களாகிய ஈழத்தமிழர்களின் நலன்களுக்கெதிரான பொய்ப்பிரச்சாரம் தவிர்க்கப்பட வேண்டும்.
திரு. சான்றோன் அவர்களே!
//இதை நான் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்…….//
ஈழத்தமிழர்கள் இந்தியத் தேசியத்துக்கெதிரானவர்களல்ல. இன்றும் பல ஈழத்தமிழர்களின் வீடுகளில் மகாத்மா காந்தியின் படம் சாமியறையிலுண்டு அத்துடன் சுபாஸ் சந்திரபோஸ், நேரு, இந்திரா காந்தி போன்றோரின் படங்களையும் காணலாம். இந்திரா காந்தி இறந்த நாளில் கோயிலுக்குப் போய்ப்பிரார்த்திக்கும் ஈழத்தமிழர்களுமுண்டு. யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியின் பெயர் மகாத்மா காந்தி வீதி.(அண்ணாசாலை போல).மகாத்மாவுக்கு தமிழ்ப்பகுதிகளில் மட்டும் தான் சிலையுண்டு.
//ஆனால் புலி ஆதரவாளர்கள் உருவாக்க விரும்புவது தமிழ் தேசியத்தை நண்பரே…..தமிழகமும் ,ஈழமும் அடங்கிய நிலப்பரப்பே அவர்களின் கனவு ……இலங்கை தமிழர்கள் மீது எனக்கும் அனுதாபம் உண்டு……….ஆனால் நான் தமிழ் தேசிய ஆதரவாளன் அல்ல.//
ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் சிங்கள பெளத்த தேசியத்துக்குப் பதிலடியாக உருவானதேயல்லாமல் அதற்கும் திராவிடக் கொள்கைகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. எந்த ஒரு ஈழத்தமிழ் தலைவரும் பிரபாகரன் உட்பட, தமிழ்நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்ததுமல்ல, அதைப் பற்றிப் பேசியதுமில்லை. தமிழீழம் பிரிந்தால் (இப்பொழுது அது சிறிதளவும் சாத்தியமல்ல) அது ஒரு இந்து நாடாக, இந்து சமுத்திரத்தில் இந்தியச்சார்பான, இந்தியாவில் முழுவதும் சார்ந்த ஒரேயொரு நாடாக இருந்திருக்கும் அப்படியிருக்க ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுப் பிரிவினையை ஆதரித்து, இந்தப்பெரிய இந்தியாவுடன் மல்லுக்கட்டும் என்று இன்றும் கூறுவது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்தியாவினதும், இந்தியர்களாகிய தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும் கேள்விக்குறியாக்கும் இழிவான செயல். நான் சந்தித்த எந்தவொரு தமிழ்நாட்டு இளந்தமிழர்கள் பலரும் பிரிவினை என்ற பேச்சையே கேட்ட்டிராதாவர்கள் அதை அவர்களால் கற்பனை கூடப்பண்ண முடியாது.
///ஹிந்துஸ்தானத்து மீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குகின்றனர் என்ற தகவலை முதன்முறையாக வாசிக்கிறேன். இதற்கான ஆதாரத்தை தாங்கள் பகிர வேணுமாய் விக்ஞாபிக்கிறேன்.///
ஐயா கிருஸ்ணகுமார் அவர்களே, இது முற்றிலும் உண்மையல்ல. இலங்கைத் தமிழ் மீனவர்கள் குறிப்பாக யாழ்ப்பாண மீனவர்கள் கடந்த முப்பது வருடங்களாக ஆழ்கடல் மீன்பிடிக்க போனதில்லை அதை விட அவர்களை இலங்கை இராணுவம் அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் முழு வளங்களையும் அனுபவித்தது மட்டுமல்ல, கடல் வளங்கள் பாதுகாக்க்கப்ட வேண்டுமென்பதை மறந்து அழித்தும் வந்துள்ளனர் என்பது உண்மை ஆனால் அவர்களைத் தாக்குவது ஈழத்தமிழ் மீனவர்களல்ல. இன்று போர் முடிந்த நிலையில் ஈழத்தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே அடிமைகளாக, சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்கிறார்கள்.
தென்னிலங்கையின் சிங்கள மீனவர்கள் கூட்டம் கூட்டமாக சிங்கள இராணுவத்தின் உதவியுடன் கரையோரம் முழுவதும் குடியேறி மீன்பிடிக்கத் தொடங்கி விட்டனர். இலங்கைத் தமிழ் மீனவர்கள் அவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக் கடல்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து செல்வி.செயலலிதா போன்ற தமிழகத்தலைவர்களும் அடிக்கடி இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதைத் தடுப்பதற்காக தான் இலங்கைத் தமிழ் மீனவர்கள் தான் தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்களைத் தாக்குகிறார்கள் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சாரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ திரு. சான்றோன் அவர்களும் பங்கேற்கிறார்.
சிங்களவர்களுக்கும் தமிழ் தெரியும், சிங்கள மீனவர்களும், அவர்களின் கடற்படையுடன் இணைந்து தமிழக மீனவர்களைத் தாக்கி விட்டு, இலங்கைத் தமிழ் மீனவர்கள் தாக்கியதாக கதையைத் திருப்பி விடுவதுமுண்டு. யாழ்ப்பாணம் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ளது. அங்குள்ள தமிழர்கள் இராணுவத்தின் அனுமதியில்லாமல் ஒரு ஈயைக் கூட விரட்ட முடியாது அப்படியிருக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதாகச் சொல்வதெல்லாம் அபத்தம். தமிழக மீனவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமாறு ஈழத்தமிழர்களை வற்புறுத்துவதும் இராணுவம் தான். யாழ்ப்பாணத்தில் எப்படியான நிலையில் இராணுவம் உள்ளது எவ்வாறெல்லாம் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதையும், இந்துக் கோயில்கள் எல்லாம் புத்தர் கோயில்களாக மாறிவருவதையும் * The International Crisis Group, Amnesty International, ஐக்கியநாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் விவரமான அறிக்கைகளாக வெளியிட்டுள்ளன.
என்னைப் போன்ற பாரத புண்ணியபூமி பிளவு படுவதை விரும்பாத ஈழத்தமிழ் இந்துக்களையும் பதிலளிக்க, நடுநிலைமையுடன் தமிழ் ஹிந்து அனுமதியளித்தால், திரு.சான்றோன் அவர்களின் ஏனைய கருத்துக்களுக்கும் பதிலளிக்க விரும்புகிறேன்.
SRI LANKA’S NORTH I: THE DENIAL OF MINORITY RIGHTS
*https://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/219-sri-lankas-north-i-the-denial-of-minority-rights.pdf
திரு. மயூரகிரி சர்மா அவர்களே……
தமிழ் ஹிந்து தளத்தில் என்னைபோன்றவர்களுக்கும் இடம் உண்டு என்ற எண்ணத்திலேயே இந்த கட்டுரையை எழுத துணிந்தேன்…என்னுடைய அரசியல் அறிவுக்கும் , வரலாற்று அறிவுக்கும் எட்டிய வரையில் கட்டுரையை எழுதியுள்ளேன்…… முனைவர்கள், புலவர்கள் , வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோர் மட்டுமே தமிழ் ஹிந்து தளத்தில் எழுதலாம் என்று தமிழ் ஹிந்து தளம் அறிவிக்கும் பட்சத்தில் , என்னை போன்றவர்கள் கட்டுரைகளை படிப்பதுடன் நிறுத்திக்கொள்கிறோம்…….
இலங்கை பிரச்சினை பற்றி விரிவான ஆய்வு எதுவும் இந்த கட்டுரையில் இல்லை……சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளை , தேச விரோத சக்திகள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்ளும் அபாயத்தை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளேன்….. கட்டுரையில் குறிப்பாக இந்த இடத்தில் தவறு என்று சுட்டிக்காட்டுங்கள்……தவறு இருந்தால் திருத்திக்கொள்கிறேன்……அதைவிடுத்து பொத்தாம்பொதுவாக என்னை இழிவு செய்வது தங்களை போன்றவர்களுக்கு அழகல்ல…….
//எந்த ஒரு அரசியல்வாதி மீதும் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லாததால் //
அரசியல்வாதிகளை விட்டு நீங்கள் விலகியிருப்பது உங்கள் தனிப்பட்ட விஷயம் …. அவர்கள்தான் நம்மை ஆளுகிறார்கள்… அவர்களின் செயல்கள் நம்மை நேரடியாக பாதிக்கின்றன….எனவே அதைப்பற்றி விவாதிப்பது அவசியமாகிறது……தமிழ் ஹிந்து வெறும் இலக்கிய விசாரத்துக்கான தளமல்ல……
நீங்களும் திரு.சிவகுமார் அவர்களும் ,சிங்கள பத்திரிகையில் வெளியான கட்டுரையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்……அந்த பத்திரிக்கையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது……அதற்காக விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவதையும் , யாத்ரீகர்களை தாக்குவதையும் நியாயப்படுத்த முடியாது…..
சற்று எண்ணிப்பாருங்கள்……நேரு -சிறிமாவோ இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, தமிழக அரசியல் தலைவர் ஒருவர்,” தம்பி……. நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர் , இருவரும் தனி அறையில் ஒருமணி நேரம் அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் ? ”…… என்று கேட்டார்…….அப்படிப்பட்ட ” பேரறிஞரை ” நாம் முதல்வராக்கி அழகு பார்த்தோம்…..அவரது இறுதி ஊர்வலத்துக்கு கோடிக்கணக்கில் குவிந்து கின்னஸ் சாதனை செய்தோம்….இன்று பல்கலைக்கழகம் தொடங்கி,பேருந்து நிலையம் வரை சகல இடத்திலும் அவர் பெயரே விளங்குகிறது….அவர் பெயர் தாங்கிய வளைவை இடிக்ககூட முடியாமல் அது அந்தரத்தில் தொங்குகிறது……
தி.மு.க பொதுக்கூட்டத்தில் சற்று நேரம் நின்று பாருங்கள்……செல்வி.ஜெயலிதா அவர்கள் பற்றிய வசவுகளை காது கொடுத்து கேட்க முடியாது……கருணாநிதி முதல்வராக இருந்தபோது, செல்வி.ஜெயலலிதா அவர்களை பற்றி எழுதிய ” சுனாமி கவிதை ” உலகப்பிரசித்தம்……இந்த ஆபாசக்குப்பைகளைத்தான் நாம் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறோம்…..நமக்கெல்லாம் பிறரை குற்றம் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?
//க்ருஷ்ணகுமார் on September 11, 2012 at 12:56 pm
ஹிந்துஸ்தானத்து மீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குகின்றனர் என்ற தகவலை முதன்முறையாக வாசிக்கிறேன். இதற்கான ஆதாரத்தை தாங்கள் பகிர வேணுமாய் விக்ஞாபிக்கிறேன்//
இந்திய மீனவர்களின் அந்து மீறல் செயலால் (இலங்கை )வட பகுதி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலமை ஏற்படும்
https://newjaffna.com/fullview.php?id=MTg5NzU=
ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி ரூபா கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்கள் இலங்கை விரிவுரையாளர் சூசை ஆனந்தன் குற்றச்சாட்டு
https://voiceofmannar.com/2012/07/22/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/
////அந்த காலகட்டத்தில் இந்தியா வம்சாவளி தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் சிங்களர்களை விட தீவிரமாக இருந்தவர்கள் ஈழத்தமிழர்கள்அவர்களும் தமிழர்கள்தானே என்று இலங்கை தமிழர்கள் நினைக்கவில்லை… ” இந்திய நாய்கள்” என்று அவர்களை வர்ணித்து , விரட்டியடித்தவர்கள் மெயின் லேண்ட் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட இலங்கைத்தமிழர்களே……///
என்னுடைய பதிலை அப்படியே பிரசுரித்த தமிழ் ஹிந்துவுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.
இலங்கைத் தமிழர்கள் மேல் சான்றோனுக்கு அப்படியென்ன காழ்ப்புணர்வோ தெரியாது வெறும் கேள்வி ஞானத்தை வைத்தே கொஞ்சம அளவுக்கதிகமாகவே பொய்ப்பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது.
ஒரு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவர் தன்னுடைய மந்திரி பதவியைக் காப்பாற்றுவதற்காக சிங்களவர்களுடன் ஒத்துழைத்த ஒரே காரணத்தைத் திரித்து இலங்கைத் தமிழரகள் அனைவரையும் தமிழுணர்வற்றவர்களாகவும் மலையகத் தமிழர்களைத் திருப்பியனுப்புவதில் தீவிர்மாக இருந்ததாகவும் இவர் கூறுவது கடவுளுக்கே அடுக்காது.
இதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் இதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வது முக்கியமாகும். இலங்கையில் இரு பிரிவினராகிய தமிழர்க்ள் வாழ்கின்றனர். ஒரு பிரிவினர் இலங்கை அல்லது ஈழத்தமிழர்கள், அவர்கள் இலங்கையின் பூர்வீக குடியினர். இலங்கையின் வரலாற்றை விளக்குவதாகக் கருதப்படும் சிங்களவர்களின் ஒருபக்கச்சார்பான மகாவம்சம் கூட 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததையும் ஆண்டதையும் தெளிவு படுத்துகிறது.
அதை விட இலங்கைத் தமிழர்கள், தமது யாழ்ப்பாண அரசின் ஆளுமையையும் சுதந்திரத்தையும் போத்துக்க்கேயரிடம் போரிட்டுப் போர்க்களத்தில் தான் இழந்தனர். அதிலும் போத்துக்கேய புனித சேவியரால் மன்னாரில் மத மாற்றம் செய்யப்பட்ட சைவப் பரவர்கள்(மீனவர்கள்) அனைவரையும் யாழ்ப்பாண அரசன் சங்கிலி குமாரன் பரராசசேகரன் வெட்டிக் கொன்றமைக்குப் பழிவாங்குமாறு கோவாவிலிருந்த புனித சேவியர், லிஸ்பனுக்கு எழுதி வற்புறுத்திய காரணத்தாலும் தான் போத்துகேயர் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்தனர். சைவத்தைக் காக்க முனைந்து, கிறித்தவமத மாற்றத்தை எதிர்த்ததால் தமது இராசதானியை இழந்தவ்ர்கள் ஈழத்தமிழர்கள் மட்டும் தான் என்பதை ஈழத்தமிழர்களுக்கெதிராகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள் மறந்து விடக் கூடாது.
மலையகத் தமிழர்கள் என அழைக்கப்ப்டும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து பிரித்தானியர்களால் தேயிலை, இரப்பர் போன்ற பெருந்தோட்டங்களில் கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் வறிய தாழ்த்தப்பட்ட சாதியினரும், கணிசமானோர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவர் வகுப்பினருமாவர்.
அக்காலத்தில் ஈழத்தமிழர்களிடையே தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான தீண்டாமை,சாதி வெறி பரவிக்கிடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பிராமணர்களின் எண்ணிக்கை இலங்கையில் மிகவும் குறைவு அதனால் யாழ்ப்பாணத்துச் சைவவேளாளர்கள் தான் உயர்ந்தசாதியினராகக் கருதப்பட்டனர். சாதி வெறியில் யாழ்ப்பாணத்துச் சைவ வேளாளர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல. 🙂
அத்தகைய சாதிப்பிளவினால் அதாவது இந்தியவம்சாவளித் தமிழர்கள் யாழ்ப்பாணச் சைவவேளாளர்களை விடச் சாதியடிப்படையில் குறைந்தவர்களாகக் கருதப்பட்டதாலும், மலையகத் தேயிலைத் தோட்டங்களுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருந்ததாலும், ஆங்கிலேயர் மலையகத் தமிழர்களை அடிமைகள் போன்று தேயிலைத் தோட்டங்களை விட்டு வெளியேபோக அனுமதிக்காததாலும் தமிழ்ச்சகோதரத்துவமும், இனவுணர்வும் ஆங்கிலேயர் இலங்கையை விட்டு வெளியேறி ஆட்சி சிங்களவர்களின் கைகளில் மாறி அவர்கள் தமிழர்களனைவருக்குமெதிராக சட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும் வரை உருவாகவில்லை.
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு, நடந்த முதல் தேர்தலில் மலையகத் தமிழர்கள் மட்டும் எட்டு பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியுற்ற சிங்களவர்கள், இப்படியே போனால் எதிர்காலத்தில் மலையகத்தமிழர்களினதும், வடக்கிலும்,கிழக்கிலுமுள்ள ஈழத்தமிழர்களினதும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் King makers ஆகி விடுவார்களெனப் பயந்து தான் மலையகத்தமிழர்க்ள் இலங்கையில் இரண்டு, மூன்று தலைமுறையினராக வாழ்ந்த பின்னரும் அவர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
தனது மந்திரிப் பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த்ச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, வரலாற்றுப் பிழையைப் புரிந்து ஈழத்தமிழர்களனைவருக்கும் தீராத பழியைத் தந்தவர் இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சித் தலைவர் கணபதிப்பிள்ளை காங்கேயர் பொன்னம்பலம்.
அதைத் திரித்து “இந்தியா வம்சாவளி தமிழர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் சிங்களர்களை விட தீவிரமாக இருந்தவர்கள் ஈழத்தமிழர்கள் ” இந்திய நாய்கள்” என்று அவர்களை வர்ணித்து , விரட்டியடித்தவர்கள் மெயின் லேண்ட் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட இலங்கைத்தமிழர்களே” என்பது இலங்கையின் வரலாறு தெரியாத சான்றோன் போன்றவர்களின் அறியாமையே.
உண்மையில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மலையகத்தமிழர்களுக்கெதிரான வாக்கை ஈழத்தமிழர்கள் துரோகமாகப் பார்த்தனர். அந்த வாக்கின் பின்னர் ஜீ.ஜீ. பொன்னம்பலம், ஒரு உலகப்புகழ் பெற்ற வக்கீலால் அரசியலில் தலைதூக்க முடியவில்லை.அந்த துரோகத்துக்காக அவரை காங்கேசன்துறைத் தொகுதியில் அடுத்த தேர்தலில் கட்டுப்ப்ணம் இழக்கச் செய்தார்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள்.
ஜீ.ஜீ. பொன்னம்பலம் சிங்களவ்ர்களுடன் சேர்ந்து மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு வாக்களித்ததை எதிர்த்துக் கட்சியை விட்டு விலகி தமிழரசுக் கட்சியைத் தொடங்கி ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழ்ச்சகோதரர்களை வெறுக்கவில்லை அவர்களும் எமது இரத்தம் தான் எனக் காட்டினார் ஈழத்துக் காந்தியென அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம். அந்த ஒரு காரணத்துக்காக கிறித்தவரான அவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்து தலைவராகவும் ஏற்றுக் கொண்டனர் யாழ்ப்பாணத்துக் கந்த்புராணச் சைவர்களாகிய யாழ்ப்பாணத் தமிழர்கள்.
அப்படியிருக்க இந்தியத்தமிழர்களை, இந்தியநாய்கள் எனக் கூறி இலங்கைத் தமிழர்கள் தான்விரட்டியடித்தார்கள் என்பது வரலாறு தெரியாத அறியாமை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களைக் களங்கப்படுத்தும் செயலுமாகும்.
உண்மையில் மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து விரட்டியடிக்க காரணமானவர்கள் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான சிந்தனையற்றிருந்த வட இந்திய ஆட்சியாளர்கள் தான். இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த பின்பு 1954 இல் சான்பிரான்சிகோவில் நடந்த Japan Peace Treaty signing ceremony இல் **ஆணவத்துடன் நடந்து கொண்ட இலங்கைக்கு பாடம் கற்பிக்க விரும்பிய இந்தியப் பிரதமர்நேரு மலையகத்தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களை ஆலோசிக்காமல் மூன்று தலைமுறைக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்தவர்களை, சிங்களவர்கள் வற்புறுத்துகிறார்க்ள் என்பதற்காக மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என உறுதியளித்திருந்தார். அத்துடன் இலங்கையிலுள்ள் மலையகத் தமிழர்களின் விடயத்தில் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் கலந்துரையாடிய பின்பே எந்த முடிவையுமெடுப்பதாகவும் நேரு உறுதியளித்திருந்தார். குறுகிய காலத்தில் அண்ணாவும், நேருவும் மறைந்தன்ர். அதனால் பதவியிலமர்ந்த சாஸ்திரியை சிங்களவர்கள் புத்திசாலித்தனமாக வற்புறுத்தி சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் கைச்ச்சாத்திட்டதால் மலையகத் தமிழர்கள், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, பிறந்த நாட்டை விட்டு, ஆடுமாடுகளைப் பிரிப்பது போல் பிரித்து, கப்பலேற்றி அனுப்பப்பட்டார்களே தவிர அதற்கும் ஈழத்தமிழர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை இனி மேலாவது திரு. சான்றோனைப் போன்றவர்கள் உணர்வார்களா?
** Sri Lankan Tragedy – India’s Role – Savior?
by V. S. Subramaniam
(“Sri Lankan hostility towards India
This runs deep and has a long history. Despite all the platitudes exchanged, the regimes resurrected the historical memories of past Indian invasions to nurture the deep popular resentment towards India whom they viewed (and this view still persists as reflected in the acrimony over the purchase of offensive weapons from the Pakistan/China axis) as the menacing Big Brother next door. Sri Lanka displayed its resentment openly at different levels. The mainstream Indians may not wish to readily forget the shabby treatment of Indian leaders in international forums. Minister Jayewardene snubbed Sri Nehru (PM) at the Japan Peace Treaty signing ceremony in San Francisco in 1954. PM Kotalawela’s public snubbing of Sri Nehru at the Non-Aligned Conference in Banding, Indonesia in 1953 was ruder still. At every turn, Sri Lanka aligned with the US/Pakistan axis then to sabotage India’s leadership of the non-aligned movement. The minutes of these conferences are useful reading for intelligence analysts, journalists, and media moguls for delivering balanced and informed lessons on modern Indian history to the Indian reading public at large.”)
//சற்று எண்ணிப்பாருங்கள்……நேரு -சிறிமாவோ இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, தமிழக அரசியல் தலைவர் ஒருவர்,” தம்பி……. நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர் , இருவரும் தனி அறையில் ஒருமணி நேரம் அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் ? ”…… என்று கேட்டார்…….அப்படிப்பட்ட ” பேரறிஞரை ” நாம் முதல்வராக்கி அழகு பார்த்தோம்…..///
சான்றோன் அவர்களே,
எப்பொழுது இந்த நேரு சிறிமாவோ பண்டாரநாயக்கா சந்திப்ப நடந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய பாட்டி சிறிமாவின் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர். அவர் சிறிமாவோ நேருவைப் பிரதமர் என்ற முறையில் சந்திக்கவில்லை என்கிறார்.அவர் லால்பகதூர் சாஸ்திரியை, நேரு காலமாகிய பின்னர் 1964 இல் சந்தித்து தான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாரே தவிர ஜவகர்லால் நேருவையல்ல. அண்ணாதுரை அவர்கள் முதலமைச்சரான போது (1967-1969) சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருக்கவில்லை. உங்களின் கருத்துச் சரியானதாகக்கூட இருக்கலாம், அதனால் தயவு செய்து இந்த நேரு- சிறிமா சந்திப்பு எப்பொழுது, எங்கு நடந்தது என்பதைத் தெரிவிக்கவும்.
நன்றி
அன்பார்ந்த ஸ்ரீமான் சான்றோன்,
இத்தளத்தில் மட்டுமன்றி மற்றும் பல தளங்களிலும் தங்கள் கருத்துக்களை வாசித்து வருகிறேன்.
நான் வாசித்த படிக்கு தங்கள் கருத்துக்களில் அப்பழுக்கற்ற தேசியமும் தமிழ்ப்பற்றும் விகசிதமாய் தெரிகின்றன.
எனக்குத் தமிழில் பெரிய பாண்டித்யம் கிடையாது. பின்னும் தங்கள் கருத்துக்கள் மிகத்தெளிவானவை மற்றும் கருதுபொருளிலிருந்து அறவே விலகாதவை என்பது என் அபிப்ராயம். தங்கள் சமூஹத்தைச் சார்ந்த சஹோதரர்கள் பலர் ஆப்ரஹாமிய மதங்களைத் தழுவியதாக இத்தளத்தில் தாங்கள் கருத்து பதிந்ந்ததாக என் நினைவு. அப்படி இருக்க ஒரு பெருமை மிக்க தமிழ் ஹிந்துவாக தீரமான தேசிய வாதியாகவே சமூஹ மற்றும் மதம் சார்ந்த தங்கள் கருத்துக்களை வாசித்து வருகிறேன். தாங்கள் நிறைய எழுத வேண்டும் எனவும் தங்கள் எழுத்துக்களால் நமது சிந்தனைகளில் மெருகு ஏறட்டும் எனவும் எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமாளை ப்ரார்த்திக்கிறேன்.
சாரமில்லாத அவதூறுகளை பொருட்படுத்தாதீர்கள். அவதூறுகள் கவனத்தில் மட்டும் சென்று ஹ்ருதயத்தில் செல்லவில்லையெனில் உங்களுக்கு ஆன்மீக முன்னேற்றமும் ஸ்திரப்படும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் ஈழத்தில் சிறை வைக்கப்படுவது போன்ற நிகழ்வுகளில் எனது தகவல் சொற்பமே. சொற்பத் தகவல் தவறான நிலைப்பாடுகள் உருவாகக ஹேதுவாகிறது. தாங்களும் அன்பு சஹோதரர் சிறிலங்கா ஹிந்து மற்றும் அன்பு சஹோதரி திவ்யா அவர்களும் அளித்த தகவல்கள் எனது தவறான நிலைப்பாட்டை பெருமளவு துலக்குகிறது. மிக்க நன்றி.
பின்னிட்டும் ஸ்ரீலங்கா சேனையினர் நம் கடல் எல்லைக்குள் நுழைந்து நம் மீனவர்களை கைது செய்கிறார்களா என்ற சம்சயம் எனக்கு உண்டு. மேலும் கடல் எல்லை சார்ந்த ஈழப்பகுதிகளில் மற்றும் பாக்கி ஸ்தானப் பகுதிகளில் நமது கடலோர எல்லைப்பாதுகாப்பு சேனையின் ரோந்துப் பணி எவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் அன்ய தேசத்து மீனவர்கள் மற்றும் ராணுவத்தினரின் ஊடுருவலை அறவே தடுக்கும் சக்தி வாய்ந்ததா என்பதிலும் சம்சயம் உண்டு.
\\\இக்கட்டுரையாசிரியர் சிறிது அரசியலறிவற்றவராயும், வரலாற்றுணர்வு இல்லாதவராயுமே தெரிந்தது.. \\\\
ஸ்ரீ ஷர்மா மஹாசய, க்ஷமிக்கவும். இது ஆதாரம் இல்லாத அபவாதம்; தேவையற்ற தனிநபர் நிந்தை என்பது என் அபிப்ராயம்.
ஸ்ரீலங்கா தர்சனார்த்திகள் தாக்கப்பட்டது மற்றும் விளையாட்டு வீரர்கள் அவமானகரமாய் திருப்பி அனுப்பப்பட்டது இவற்றை தாங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? ஈழத் தமிழர் ப்ரச்சினை என்பதனை அரசியல் பகடைக்காயாக்கிக் குளிர் காய நினைக்கும் தமிழக அரசியல் வாதிகள் அதன் மூலம் உண்மையில் பயனடைந்ததில்லை என்பதை சமீபத்து அரசியல் நிகழ்வுகள் மூலம் ஸ்ரீமான் சான்றோன் தெளிவு படுத்தியுள்ளார். அதில் எங்கு தவறு என்று தாங்கள் சுட்டியிருந்தால் நன்று. அதை விடுத்து தனிநபர் நிந்தை புரிவது சரியல்ல. என் கூற்று தவறென்றால் அதை தெளிவு செய்யவும்.
ஹிந்துஸ்தானத்திற்கான (இந்தியாவிற்கான) நிர்ப்பந்தங்கள், புலி ஆதரவாளர்களின் உண்மை முகம் மற்றும் கருணாநிதி எனும் முன் உதாரணம் இவற்றில் நீங்கள் ஏற்காத விஷயம் எது என்பதை கோடிட்டிருந்தால் கூட தங்கள் கருத்து யாது என்பது துலங்கியிருக்கும். க்ஷமிக்கவும். எஞ்சியிருப்பது அபவாதம் மட்டும் தான்.
தவறாகப் பதியப்பட்ட வரலாற்றுச்செய்தியை துலக்கலாமே பொத்தாம் பொதுவாக சொல்வதல்லாது.
நான் ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையில் வசித்து வருகிறேன். இங்கு வசித்த ஹிந்துக்கள் துரத்தப்பட்டுள்ளார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. பலர் அறியாத செய்தி இங்குள்ள சீக்கியர்கள் எத்தனை அச்சுறுத்தல்கள் வரினும் புலம் பெயர்வதில்லை என்பது. காஷ்மீரத்து சீக்கியர்கள், அங்கு சேவை செய்யும் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் சிவிலியன்கள் அங்கு தொடரும் பயங்கரவாதம் மற்றும் அவ்வப்போது நிகழும் கல்லெறி வைபவங்கள் வெறுக்கும காஷ்மீர சமூஹத்தினர் இவைகளை எதிர்கொண்டு தான் அங்கு வாழ்கின்றனர்.
இம்மக்களை விட மிக மோசமானதொரு நிலையில் ஈழத்தில் வாழும் தமிழன்பர்கள் பால் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தனது மற்றும் தனது சுற்றத்தாரின் உயிர் உடமைக்கு அஞ்சி அன்ய தேசங்களில் சரணார்த்திகளாக வாழும் ஈழத்தமிழன்பர்களை நான் காஷ்மீரத்திலிருந்து தொல்லை தாங்காது புலம் பெயர்ந்த காஷ்மீர ஹிந்துக்களைப் போலவே தான் காண்கிறேன்.
ஈழத்தமிழர் ப்ரச்சினை பற்றி தமிழக அரசியல் வாதிகள், அவர்களது நாடகங்கள், வீர வசனங்கள் இவைகளை நான் பொருட்படுத்துவதில்லை. புலம் பெயர்ந்த ஈழத்தமிழன்பர்களைக் காட்டிலும் ஈழத்தில் தீரத்துடன் வாழும் தமிழன்பர்களின் கருத்துக்களை நான் மிகவும் உள்வாங்க முயற்சிக்கிறேன். இன்று ஈழத்தில் வாழும் தமிழன்பர்கள் அங்கு ப்ரச்சினை தீர யாது செய்ய வேண்டும் என அபிலாஷிக்கிறார்களோ அவை முற்றிலுமாக ஏற்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது என் அபிப்ராயம். தங்களைப் போன்றோர் மிகுந்த நிதானத்துடனும் கருத்தாழத்துடனும் அவசியம் எழுதுவீர்கள். தங்களது கருத்துக்களை தனித்ததொரு வ்யாசமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது எனது விக்ஞாபனம்.
அன்பு சஹோதரி திவ்யா,
\\தமிழீழம் பிரிந்தால் (இப்பொழுது அது சிறிதளவும் சாத்தியமல்ல) அது ஒரு இந்து நாடாக……….\\
க்ஷமிக்கவும். இத்தளத்தில் பதிவான ஈழத்து அன்பர் ஸ்ரீமான் ராஜ் ஆனந்தன் அவர்களது வ்யாசங்களை கருத்தூன்றி வாசித்துள்ளேன். ஈழத் தமிழ் ஹிந்துக்களின் கோவில் அபகரிப்பு காணிகள் அபகரிப்பு போன்றவற்றில் ஈழத்தமிழ் முஸல்மான்கள் சிங்கள ராணுவத்தினருடன் கூட்டு சேர்ந்து என்னென்ன அக்ரமங்கள் நிகழ்த்தியுள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளார். சிங்கள ராணுவத்தினருக்கெதிராக ஈழத்தமிழ் ஹிந்துக்கள் இழந்ததைக் காட்டிலும் ஈழத்தமிழ் முஸல்மான்களிடம் இழந்தது அதிகம் எனத்தெரிகிறது.
தமிழீழம் என்று பிரிந்தால் அது க்றைஸ்தவ நாடாகவோ அல்லது முஸ்லீம் நாடாகவோ உள்ள வாய்ப்புகள் பளிச்சென அன்பர் ராஜ் ஆனந்தனின் வ்யாசங்களில் தெரிந்தது. கூடவே ஈழத் தமிழ் ஹிந்துக்கள் தங்கள் ஆலயங்கள் க்ராமங்கள் காணிகள் இழந்தமையும் தமிழ் முஸல்மான்களை எதிர்கொள்ள இயலாமையும் அறிய முடிந்தது. உலக ஹிந்துக்களின் நிலமை கூட அதிகம் வித்யாசமில்லாதது தான்.
\\\அப்படியிருக்க ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுப் பிரிவினையை ஆதரித்து, இந்தப்பெரிய இந்தியாவுடன் மல்லுக்கட்டும் என்று இன்றும் கூறுவது முட்டாள் தனம் மட்டுமல்ல………….\\\
கடுமையாகவும் உரத்துப்பேசியும் கருத்துகளுக்கு வலு சேர்க்காதீர்கள் அன்பு சஹோதரி. தமிழ்த்தேசியம் பேசுபவர் ஈழத்தில் இருக்கலாம் இல்லாமலிருக்கலாம். உண்மை அறியேன். தமிழகத்தில் இது போன்ற கும்பல் வலுத்து வருகிறது என்பது நிதர்சனம். ஸ்ரீமான் சான்றோன் இக்கும்பலைச் சார்ந்த அரசியல் வாதிகளை பட்டியலிட்டும் உள்ளார் இவ்யாசத்தில். இக்கும்பல் அப்பட்டமான ஹிந்து விரோதிகள் என்பதும் நிதர்சனம். இதை தமிழ் ஹிந்துக்கள் புறத்தொதுக்கல் ஆபத்தானது.
\\\சிங்களவர்களுக்கும் தமிழ் தெரியும், சிங்கள மீனவர்களும், அவர்களின் கடற்படையுடன் இணைந்து தமிழக மீனவர்களைத் தாக்கி விட்டு, இலங்கைத் தமிழ் மீனவர்கள் தாக்கியதாக கதையைத் திருப்பி விடுவதுமுண்டு. \\\
இதில் உண்மையிருக்கும் என நம்புகிறேன்.
\\\என்னைப் போன்ற பாரத புண்ணியபூமி பிளவு படுவதை விரும்பாத ஈழத்தமிழ் இந்துக்களையும் பதிலளிக்க, நடுநிலைமையுடன் தமிழ் ஹிந்து அனுமதியளித்தால், திரு.சான்றோன் அவர்களின் ஏனைய கருத்துக்களுக்கும் பதிலளிக்க விரும்புகிறேன்.\\\
தங்களது கருத்துக்கள் முற்றிலும் இங்கு பதியப்பட்டுள்ளது. பதிவை வாசித்த பின், மற்றைய விஷயங்களில் தங்கள் கருத்து யாது என அறிய விழைகிறேன்.
\\ நான் சந்தித்த எந்தவொரு தமிழ்நாட்டு இளந்தமிழர்கள் பலரும் பிரிவினை என்ற பேச்சையே கேட்ட்டிராதாவர்கள் அதை அவர்களால் கற்பனை கூடப்பண்ண முடியாது……….\\\
தங்களது நம்பிக்கை நிதர்சனமாக வேண்டும் என எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனைப் ப்ரார்த்திக்கிறேன்.
திவ்யா அவர்களே…..
//அவர் சிறிமாவோ நேருவைப் பிரதமர் என்ற முறையில் சந்திக்கவில்லை என்கிறார் //
சிறிமாவோ – நேரு சந்திப்பு நடந்தது இந்தோனேசியாவில் உள்ள பாண்டுங் -இல் …..அணி சேரா நாடுகள் மாநாட்டில்…..அப்போது அண்ணாதுரை தமிழக முதல்வர் கிடையாது…… கழகங்களின் ஆபாச அரசியலை நினைவுபடுத்தவே இந்த பேச்சு நினை வு கூறப்பட்டது……
//அத்துடன் இலங்கையிலுள்ள் மலையகத் தமிழர்களின் விடயத்தில் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் கலந்துரையாடிய பின்பே எந்த முடிவையுமெடுப்பதாகவும் நேரு உறுதியளித்திருந்தார். //
இலங்கை அரசியலை பற்றி நீட்டி முழக்கும் நீங்கள் , இந்திய வரலாற்றையும் சற்று தெரிந்த பின்பு கருத்து சொல்லுங்கள்……
நேரு 1964 ம் ஆண்டு மே 27 ம் தேதி காலமானார்….அண்ணாதுரை அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 1967 ல் தமிழக முதல்வரானார்….
//வெறும் கேள்வி ஞானத்தை வைத்தே கொஞ்சம அளவுக்கதிகக்கதிகமாகவே பொய்ப்பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது. //
நான் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை…..புலி ஆதரவாளர்கள் போல் அல்லாமல் எனக்கு பிழைக்க வேறு நல்ல தொழில் உள்ளது……இலங்கை பிரச்சினையை நீண்ட காலமாக கவனித்து வருபவன் என்ற முறையில் என்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளேன் ….
சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தையடுத்து இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட மலையகத்தமிழர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன்……அவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையிலேயே என் கருத்தை நான் பதிவு செய்துள்ளேன்…..
உங்கள் வாதப்படியே பார்த்தாலும் , பொன்னம்பலத்தின் கருத்து எப்படி ஈழத்தமிழர்களின் கருத்தாக கருதப்பட்டதோ , அப்படி தமிழக முதல்வரின் செயல்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக கருதப்படும் அபாயத்தையே என்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன்…..
பெருமதிப்பிற்குரிய கிருஷ்ண குமார் அய்யா அவர்களுக்கு…..
தங்களின் ஆதரவான கருத்துக்கள் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்தும்……நன்றி…….
திரு.சான்றோன் அவர்களுக்கு,
உங்களின் பதிலுக்கு மிக்கநன்றி. இலங்கைத் தமிழர்களின் சார்பில் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.போரினாலும், சிங்கள ஆக்கிரமிப்பாலும் நொந்து போயிருக்கும் எங்களைப் பற்றி எழுதும் போது, எழுந்தமானத்துக்கு கேள்விஞானத்தை மட்டும் வைத்துக் கட்டுரைகளை எழுதாமல் ஆராய்ச்சி பண்ணி விட்டு எழுதவும், கூகிளில் பல ஆதாரங்களை இலகுவாகப் பெற முடியும்.
//சிறிமாவோ – நேரு சந்திப்பு நடந்தது இந்தோனேசியாவில் உள்ள பாண்டுங் -இல் …..அணி சேரா நாடுகள் மாநாட்டில்…..அப்போது அண்ணாதுரை தமிழக முதல்வர் கிடையாது…… கழகங்களின் ஆபாச அரசியலை நினைவுபடுத்தவே இந்த பேச்சு நினை வு கூறப்பட்டது……//
1955 இல் பாண்டுங் ((Asian-African Conference), மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்குபற்றியவர் சேர்.ஜோன் கொத்தலாவல அப்பொழுது சிறிமாவோ பிரதமராகவில்லை. அப்பொழுது நடந்த மாநாட்டுக்குப் பெயர் அணிசேரா நாடுகள் அல்ல. அணிசேரா நாடுகள் எனப் பெயரிடப்பட்டது 1961 இல் பெல்கிரேட் மாநாட்டில் தான். சிறிமாவோவும் நேருவும் அங்கு சந்தித்தனர் என்பது உண்மை. ஆனால் சிறிமாவோவுக்கும் நேருவுக்குமிடையில் எந்த வித தனிப்பட்ட சந்திப்பும் (closed door meeting) பெல்கிரேட்டில் நடைபெறவில்லை. அதனால் அந்தக் கதை இட்டுக்கட்டப்பட்டதாகத் தானிருக்க வேண்டும். எனக்கு கழக அரசியலிலோ திராவிடக் கொள்கைகளிலோ எந்த வித ஈடுபாடும் கிடையாது.
https://www.encyclopedia.com/topic/Bandung_Conference.aspx
https://www.indonesia.bg/NAM.htm
https://www.nam.gov.za/background/background.htm
//இலங்கை அரசியலை பற்றி நீட்டி முழக்கும் நீங்கள் , இந்திய வரலாற்றையும் சற்று தெரிந்த பின்பு கருத்து சொல்லுங்கள்……//
தங்களின் அறிவுரைக்கு நன்றி. நான் உங்களை விட வயதிலும் அறிவிலும், அனுபவத்திலும் குறைந்தவள். நிச்சயமாக இந்திய வரலாற்றை மேலும் பல புத்தகங்களைக் கற்று அறிய வேண்டுமென்ற ஆவல் எனக்கு நிறையவுண்டு. அதிலும் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களின் நடுநிலயான எழுத்துக்களை வாசிக்கத் தான் நான் தமிழ்ஹிந்துவுக்கே வந்தேன்.
//நேரு 1964 ம் ஆண்டு மே 27 ம் தேதி காலமானார்….அண்ணாதுரை அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 1967 ல் தமிழக முதல்வரானார்….//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அண்ணாதுரை 1967 இல் தான் முதலமைச்சரானார். ஆனால் அவர் இராச்சியசபா உறுப்பினராக இருந்த போதே, இலங்கையில் இந்தியாவம்சாவளித் தமிழர்கள் படும் துன்பத்தைப் பற்றிப் பேசி, திரு.நேருவிடம், மலையகத்தமிழர்களின் விருப்புக்கு மாறாக நடக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்.
மீண்டும் 1964 டிசெம்பரில் இராச்சியசபாவில் அவரது முழுப்பேச்சையும் நீங்கள் கீழேயுள்ள link இல் பார்க்கலாம்.
In December 1964, the DMK leader, in a pragmatic but emotional speech at the Rajaya Sabha – the Upper House of the Indian Parliament – conveyed the remorse and agony of millions, at the betrayal of the stateless people domiciled in Ceylon by the Indian government led by Lal Bahadur Shastri. (See annex below)
https://www.atimes.com/ind-pak/CL15Df05.html
//நான் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை…..புலி ஆதரவாளர்கள் போல் அல்லாமல் எனக்கு பிழைக்க வேறு நல்ல தொழில் உள்ளது……இலங்கை பிரச்சினையை நீண்ட காலமாக கவனித்து வருபவன் என்ற முறையில் என்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளேன்.//
ஐயா, நானும் நல்ல தொழிலில் தான் உள்ளேன். எனக்கும் புலிஆதரவுப் பிரச்சாரம் செய்து பிழைக்க வேண்டிய தேவையில்லை, எழுத்துக்களிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை அல்லது விளக்கம் கேட்பவர்களுக்கு புலி அடையாளம் குத்தும் நோய் பல தமிழ்நாட்டு ஈழத்தமிழர் எதிர்ப்பு எழுத்தாளர்களுக்குண்டு. அது ஒரு நல்ல எழுத்தாளருக்கு அழகல்ல.
//உங்கள் வாதப்படியே பார்த்தாலும், பொன்னம்பலத்தின் கருத்து எப்படி ஈழத்தமிழர்களின் கருத்தாக கருதப்பட்டதோ , அப்படி தமிழக முதல்வரின் செயல்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக கருதப்படும் அபாயத்தையே என்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன்.//
ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் ஒரு வாக்கு ஈழத்தமிழர்களனைவரும் மலையகத்தமிழர்களை எதிர்த்தார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்துக்குப் பாவிக்கப்படுவது தவறானது என்பது தான் என்னுடைய வாதம். அது தவறான செயல் என்பது யாழ்ப்பாணத்தமிழர்கள் அவரை அடுத்த தேர்தலில் கட்டுப்பணத்தை இழக்கச் செய்ததிலிருந்து தெளிவானது.
அதே போல் செல்வி. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் ஆதரவுக்கு பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு இல்லை என்பது அடுத்த தேர்தலில் அவரும் தனது கட்டுப்பணத்தை இழந்தால் மட்டும் தான் உண்மையாகும்.
செல்வி. ஜெயலலிதாவின் அரசியலில் என்ன குறைபாடிருந்தாலும், அவரது அரசியல் நுணுக்கம், ஒரு செயலில் இறங்கு முன்னர் அந்த விடயத்தை நன்கு ஆராய்ந்து, அதைப்பற்றிக் கற்று அதன் வரலாற்றை அறிந்து ஆதரவளிக்கும் தன்மை, திடமான செயல்பாடு, பாரதியார் கண்ட உறுதியான, பலமான பெண்மை இவைதான் ஈழத்தமிழர்களிடயே அவருக்குள்ள ஆதரவுக்குக் காரணமேயல்லாமல் அவரது கழக அரசியல் அல்ல.
திருவாளர் க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு,
உங்களின் பதிலுக்கு நன்றி. கிருஸ்ண என்ற பெயர் ஈழத்தமிழர்களுக்கு மதிப்புக்குரிய நீதிபதி வி, ஆர். கிருஸ்ண ஐயர் அவர்களைத் தான் நினைவூட்டும் ஏனென்றால் இந்தியா முழுவதுமே ஈழத்தமிழர்களை எதிர்த்த போதும், மனிதவுரிமைகளை மதித்து, ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நியாயத்தையுணர்ந்து, அவர்களுக்கு நடைபெறும் கொடுமைகளைத் தெரிந்து நடுநிலைமையுடன் ஆதரவளித்தவர் அவர். அதனால் உங்களின் தமிழ் கொஞ்சம் உதைத்தாலும் கூட 🙂 உங்களுக்கும் ஈழத்தமிழர்களின் விடயத்தில் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளும் பண்பு இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
எந்த வ்யாசமும் (கட்டுரையும்) விவாதத்துக்குரியதே, அது போன்றது தான் தமிழீழம் பிரிந்தால் அது இந்து இராச்சியமாக இருந்திருக்குமா அல்லது கிறித்தவ இராச்சியமாக மாறியிருக்குமா என்பதும். ஈழத்தமிழர்களின் வரலாற்றை அறிந்தவர்கள், கிறித்தவ மேலைநாடுகளுக்குக் குடியேறிய பின்னரும் ஐரோப்பாவிலும் , கனடாவிலும் வீதிக்கொரு இந்துக் கோயில் கட்டிப்பராமரிக்கும் இலங்கைத் தமிழர்கள் தமது சொந்த நாடு கிறித்தவ நாடாக மாற அனுமதிப்பார்கள் எனக் கூறுபவர்களுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றித் தெரியாது என்று தான் கூற வேண்டும் அதே வேளையில் பெரும்பான்மையான இந்துக்களாகிய ஈழத்தமிழர்கள் தமது சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தைக் கைவிடமாட்டார்கள் அதே வேளையில் மதத்தையும் அரசியலையும் கலப்பதையும் விரும்ப மாட்டார்கள் என்பது தான் ஈழத்தமிழர்களைப் பற்றிய சரியான கணிப்பாக இருக்கும்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம் சான்றோன் சார்,
ஈழம் என்பதோ விடுதலை புலிகள் என்பதோ முடிந்து போன கதை இலங்கையில் உள்ள 20 லட்சம் தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும், இந்திய தரப்பில் இனி நாம் செய்யவேண்டியது என்ன என்பதை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும் .
” இந்திய நாய்கள்” என்று அவர்களை வர்ணித்து , விரட்டியடித்தவர்கள் மெயின் லேண்ட் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட இலங்கைத்தமிழர்களே……///
இதே “இந்திய …….” என்கிற பதத்தை பிரபாகரனும் பல தடவை உச்சரித்திருக்கிறார் ,அதுவும் ஒரு தடவை இலங்கை அதிபரை சஹோதரர் என்றும் கூறியிருக்கிறார் …
நமஸ்காரம்.
Anantha Saithanyan
//தனது மற்றும் தனது சுற்றத்தாரின் உயிர் உடமைக்கு அஞ்சி அன்ய தேசங்களில் சரணார்த்திகளாக வாழும் ஈழத்தமிழன்பர்களை நான் காஷ்மீரத்திலிருந்து தொல்லை தாங்காது புலம் பெயர்ந்த காஷ்மீர ஹிந்துக்களைப் போலவே தான் காண்கிறேன்//
அன்பு சகோதரர் க்ருஷ்ணகுமாரருக்கு சில சமயம் தெரிந்திருக்க வாய்பில்லை என்பதால் ஒரு உண்மையை தெரிவிக்க விரும்புகிறேன். காஷ்மீரத்திலிருந்து அரபு ஆக்கிர மதத்தவரது தொல்லை தாங்காது புலம் பெயர்ந்த காஷ்மீர ஹிந்துக்கள் அடைக்கலம் தேடியது ஹிந்துஸ்தான் ஹிந்துக்களிடம். அதே போல் இலங்கை தமிழர்களும் யுத்த கொடுமைகள், புலிகள் கொடுமை, புலிகளின் யுத்தம் செய்வதற்காக கட்டாய ஆட்சேர்ப்பு, புலி கப்பம் இவற்றில் இருந்து தப்புவதற்காக அன்னிய தேசங்கள் தவிர பெருமளவில் அடைக்கலம் தேடிய இன்னோர் இடமும் உண்டு. ஹிந்துஸ்தானின் தமிழ்நாட்டில் மோசமானவர்களாக பிரசாரபடுத்தபடும் இலங்கை சிங்கள பௌத்த மக்களின் பிரதேசங்களிலேயே அடைக்கலம் தேடி சென்று இலங்கை தமிழர்கள் பலர் வாழ்ந்தார்கள். இன்னும் தமிழ் பிரதேசங்களுக்கு திரும்பாமல் தொடர்ந்தும் அங்கே வாழுபவர்கள் பலருண்டு.
அன்பு சஹோதரி திவ்யா, சஹோதரர் சான்றோன் மற்றும் சிறிலங்கா ஹிந்து
ஒரு கருத்தை தெளிவு செய்ய விழைகிறேன்.
இங்கு கருத்துப் பரிமாறும் அன்பர்கள் அனைவரும் ஹிந்து நலனும் தமிழர் நலனும் ஹிந்துஸ்தானத்தின் நலனும் பேணுபவர்கள் என்பதில் எனக்கு எள்ளளவேனும் சம்சயமில்லை.
ஈழத் தமிழ் நலன் பேசுபவர் யாரும் ஹிந்துஸ்தானத்திற்கு விரோதியோ அல்லது ஹிந்துஸ்தானத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு பேசுபவர் யாரும் ஈழத் தமிழர் நலனில் குறைவான பரிவு உடையவர் என கருத வேண்டாம்.
தவறான கருத்துக்கள் வ்யாசத்தில் பதியப் பெற்றாலும் அல்லது உத்தரங்களில் பதியப் பெற்றாலும் தவறுகளை களைவதில் மட்டும் கவனம் செலுத்துவோமே.
கருத்துகளில் தெளிவு சேர்ப்பதில் மற்றும் பிழை களைதலில் மட்டும் கவனம் செலுத்தி கருத்து பதிபவரை குறை சொல்லும் போக்கை விட்டொழிப்போம்.
\\\\அதனால் உங்களின் தமிழ் கொஞ்சம் உதைத்தாலும் கூட \\\
அம்மணி, தங்களுக்கு எனது மொழி நடை எப்படி இருப்பினும் எனது தமிழ் மொழி நடையில் எனக்கு எந்தக் குறையும் இல்லை.
எனது இயல்பான மொழிநடை
கதிர்காமத்து உறையும் தமிழ்த்ரைய விநோதப்பெருமாளின்
கோலப்ரவாளபாதத்தில்
மாக்ருதா புஷ்பமாலையாய்
எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமான் சமர்ப்பித்த மொழிநடை
திருப்புகழில் ஆரம்பித்து திருப்புகழிலே நிறைவு பெறுவது எனது தமிழ்.
நன்றி
திவ்யா அவர்களே…..
//நானும் நல்ல தொழிலில் தான் உள்ளேன். எனக்கும் புலிஆதரவுப் பிரச்சாரம் செய்து பிழைக்க வேண்டிய தேவையில்லை,//
கட்டுரையிலும் சரி,மறுமொழிகளிலும் சரி…..நான் புலி ஆதரவாளர்கள் என்று குறிப்பிடுவது வைகோ,நெடுமாறன் , சீமான் போன்றவர்களையே……தங்களையோ அல்லது இதர நண்பர்களையோ அல்ல……
// தமிழீழம் என்று பிரிந்தால் அது க்றைஸ்தவ நாடாகவோ அல்லது முஸ்லீம் நாடாகவோ உள்ள வாய்ப்புகள் பளிச்சென அன்பர் ராஜ் ஆனந்தனின் வ்யாசங்களில் தெரிந்தது. கூடவே ஈழத் தமிழ் ஹிந்துக்கள் தங்கள் ஆலயங்கள் க்ராமங்கள் காணிகள் இழந்தமையும் தமிழ் முஸல்மான்களை எதிர்கொள்ள இயலாமையும் அறிய முடிந்தது. //
தமிழீழம் க்றைஸ்தவ நாடாகவோ, முஸ்லீம் நாடாகவோ வாய்ப்பிருந்தால் க்றைஸ்தவ நாடுகளும், முஸ்லீம் நாடுகளும் சிங்கள அரசுக்கு உதவாமல் புலிகளுக்கு உதவியிருப்பார்கள். மேலும் தமிழ் முஸல்மான்களை எதிர்கொள்ள இயலாததன் காரணம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசின் ஆதரவு தமிழ் முஸல்மான்களுக்கு இருந்ததும் காரணம். இப்போது ஈழத்தில் வேகமாக எவ்வித தடையுமின்றி நடந்து வரும் சிங்கள பௌத்த மயமாக்கலால், ஹிந்துஸ்தானத்தின் நம் போன்ற ‘தமிழ் ஹிந்துக்களின்’ ஆதரவும் இல்லாத நிலையில், ஈழத்து தமிழ் ஹிந்துக்கள் காக்க வராத கந்தசாமியை விட்டு விட்டு கச்சாமி கச்சாமி என்று மாறிவிடப் போகிறார்கள்.
//கோவில்கள் பவுத்த பிக்குகளால் தாக்கப் படுகின்றன. அழிக்கப்படுகின்றன//
https://poonththalir.blogspot.de/2012/09/blog-post_7650.html
இரண்டாவது படத்தில் முஸ்லிம் மத குருவும், கிறிஸ்தவ பாதியாரும் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்றால் மதத்தைவிட்டு இவர்களுக்கு தலாக் கொடுத்து விடுவார்கள் என்று அறிகிறேன்.
///இரண்டாவது படத்தில் முஸ்லிம் மத குருவும், கிறிஸ்தவ பாதியாரும் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.///
இது கோயில் அல்ல மகாதேவ ஆசிரமத்தின் சிறுவர் இல்லம். இலங்கையில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அரச விழாக்களில் எல்லா மதக்குருமார்களையும் ஒப்புக்கு அழைப்பது வெறும் விளம்பரத்துக்குத் தான்.
எத்தனையோ இந்துக் கோயில்கள் எல்லாம் அழிவிலும், இராணுவ வலயத்திலும் உள்ளடக்கப்பட்டு, கோயில் நிலங்கள் சூறையாடப்பட்டு புத்தகோயில்கள் கட்டப்படுகின்றன, புத்தமதத்தினர்கள் இல்லாத (ஆக்கிரமிப்பு இராணுவத்தைத் தவிர), பாரம்பரிய சிவபூமியான வடகிழக்கில், தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை மாற்றியமைப்பதற்காக புத்தர் சிலைகளும் , புத்தர் கோயில்களும் கட்டப்படுகின்றன. இப்பொழுது ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் புத்த மதத்தை தமிழ் சிறார்களுக்கு வலுக்கட்டாயமாகக் கற்பிக்கவும் தொடங்கி விட்டனர். தமிழர்களின் புத்தமதம் மீளமைக்கப்பட வேண்டுமென தமிழர்கள் விரும்பினால், இந்து, தமிழ் எதிர்ப்புச் சிங்கள பிக்குகளினதும், சிங்கள இராணுவத்தினதும் தொடர்பில்லாமால் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் தமிழர்களின் பாரம்பரிய பூமியைச் சிங்கள மயமாக்கும், ஈழத்துச் சிவபூமியை பெளத்த மயமாக்கும் திட்டத்தின் அங்கம் தான். இந்திய இந்துக்களுக்கு அரசியல் சிங்கள பெளத்ததுக்கும், புத்தர்களின் போதனைகளுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்ற உண்மையும் தெரியாது, சிங்கள புத்த பிக்குகளின் இந்து எதிர்ப்புத் தன்மையும் தெரியாது. சிங்கள பெளத்த்தில் இந்துக்கடவுளர் அனைவரும் புத்தரின் வேலைக்காரர்கள் மட்டும் தான்.
இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்குத் தேவை ஒரு நாளும் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன், அன்று பெளத்தர்களிடம் வாதிட்டுச் சைவத்தைக் காத்த ஞானசம்பந்தன் மீண்டும் ஈழத்தமிழர்களிடையே உருவானாலே தவிர ஈழத்துச் சிவபூமியை யாராலும் காக்கமுடியாது.
எவ்வாறு இந்துக் கோயில்கள் இலங்கையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன என்பதைப் படங்களுடன் இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
https://thivyaaa.blogspot.ca/
அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1 உங்கள் வலைத்தளத்தில் வந்ததுதான். அங்கே சொன்ன நாடுகள் ரஷியா சீனா பாகிஸ்தான் அனைத்தும் இலங்கைக்கு உதவி செய்கின்றன சோனியா காந்தியும் உதவி செய்கிறார் நீங்கள் சொன்ன உள்ளூர் தேச துரோகிகள் தான் சிங்களர்க்கு உதவி செய்கின்றன. இந்த விஷயத்தில் நீங்கள் காங்கிரஸ் சை ஆதரிக்கும் மர்மம் என்ன
இலங்கை இந்தியாவை ஆதரிக்கவில்லை மிரட்டுகிறது. திராவிட கட்சிகள் ஈழ தமிழர்களை ஆதரிகிறார்கள் என்று நீங்கள் ஆதரிக்கவில்லையா. தமிழ் இந்து என்று பெயரை வைத்துகொண்டு தமிழர்களை தாக்குவது என்ன நியாயம். சுப்ரமணிய சுவாமி ராஜபக்சே விற்கு விருது தரவேண்டும் என்கிறார்.