வன்முறையே வரலாறாய்… – 8

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3,  பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7

1947-ஆம் வருட இந்திய-பாகிஸ்தானிய பிரிவினையின் போது முஸ்லிம்கள் அப்பாவி இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகளைப் படிக்கையில் கண்ணீர் திரையிடுவதனைத் தவிர்க்க இயலவில்லை. அதனைப் படிப்பதற்கே ஒருவருக்கு மிகவும் நெஞ்சுரம் வேண்டும். மதத்தின் பெயரால் இத்தனை ஈவு, இரக்கமற்ற செயல்களைச் செய்த மனிதர்கள் விலங்கினும் கொடியவர்கள். அதனைக் குறித்து பின்னர் பார்க்கலாம்.

முதலில், இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் வரப்போகும் நிகழ்வுகளுக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்த கேரளத்தின் “மாப்பிள்ளைக் கலகம்” குறித்து சிறிது பார்ப்போம்.

1921-ஆம் வருடம் தென்னிந்தியாவின் கேரளத்தில் அமைந்திருக்கும் மலபார் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள், அங்கு வாழ்ந்த அப்பாவி இந்துக்களுக்கு எதிராக இழைத்த கொடூரங்கள் எண்ணிப்பார்க்கவே இயலாத வகையில் படுபயங்கரமானவை. மதச் சகிப்புத்தன்மை இயல்பாகக் கொண்ட இந்துக்கள் மத்தியில், 629-ஆம் வருடம் மலபார் கரையில் குடியேறிய அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் அங்கிருந்த இந்துப் பெண்களை மணந்தார்கள். பின்னர் அங்கிருந்த தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதம் மாற்றினார்கள். அந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பல்கிப் பெருகியது.

இஸ்லாமிய சூஃபிக்களின் தூண்டுதல்களின் பேரில் அந்த முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகவும், அப்போது மலபாரின் சில பகுதிகளை ஆண்ட போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகவும் அடிக்கடி “ஜிகாத்” செய்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஜிகாத் செய்வதினை தங்களின் மதக் கடமையாகவும், ஜிகாதின் போது இறந்து போவதால் தங்களுக்கு சுவனம் கிட்டும் என்னும் மூட நம்பிக்கையாலும் காஃபிர்களான இந்து மற்றும் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக வன்முறையை தொடர்ந்து செய்து வந்தார்கள். 1836-ஆம் வருடத்திலிருந்து 1919-ஆம் வருடம் வரைக்கும் ஏறக்குறைய முப்பத்தி இரண்டு முறைகள் இந்த ஜிகாதித் தாக்குதல்கள் பெரும் வெறியுடன் நடத்தப்பட்டன.

இதன் உச்சமாக 1921-ஆம் வருடம் மலபாரி முஸ்லிம்கள் (மாப்பிள்ளை அல்லது மாப்ளா என மலையாளத்தில் அழைக்கப்பட்டவர்கள்) அங்கிருந்த அப்பாவி இந்துக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் கொலைவெறித் தாக்குதலை நடத்த ஆரம்பித்தார்கள். அதுவே “மாப்பிள்ளைக் கலகம்” அல்லது “Mopla Rebellion” என இன்றைக்கு வரலாற்றில் அறியப்படுகிற வன்முறைக் கலகம்.

இந்தக் கலகத்தை இரண்டு முஸ்லிம் அமைப்புகள் முன்னின்று நடத்தின. ஒன்று, குட்டம்-இ-காபா (Khuddam-i-Kaba), இரண்டாவது மத்திய கிலாஃபத் கமிட்டி (Central Khilafat Committee). இந்த இரண்டு இயக்கங்களின் முக்கிய நோக்கம் எல்லா முஸ்லிம் நாடுகளையும் இணைத்து ஒரு இஸ்லாமிய காலிஃபேட் (Pan-Islami Caliphate) அமைப்பது.

இதனைக் குறித்து கூற விழையும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், “பிரிட்டிஷ்காரர்களால் ஆளப்படும் இந்தியா தாருல்-ஹார்ப் (Darul-Harb) ஆனதால், முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். அவ்வாறு போரிடாவிட்டால் அவர்கள் ஹிஜாரத்தை (முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதியில் இருந்து வெளியே) செய்ய வேண்டும் எனவும் இந்த இயக்கங்கள் மலபாரி முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்தன.”

இந்தக் கலவரம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானதாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் வாழும் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள் எவரும் இல்லாததால், அவர்களின் வன்முறை அப்பாவி இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. காலம் காலமாக தங்களுடன் வாழ்ந்த தங்களின் அண்டை வீட்டார்களான இந்துக்கள் மீது செய்யப்பட்ட, எண்ணிப் பார்க்கவே இயலாத, காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளைக் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் இவ்வாறு எழுதுகிறார் –

“மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்…. என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர்கள் காயம் பட்டார்கள் என்பதே அறியப்படவில்லை. என் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக இருக்கும் என்பதே என்னுடைய கணிப்பு.”

Moplah Revolt
1925: Mopla Prisoners go to trial at Calicut (Courtesy: Wikimedia)

1901-ஆம் வருடத்திலிருந்து 1943-ஆம் வருடம் வரை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரரான ஜெ.ஜெ. பன்னிங்கா (J.J. Banningaa) இந்த பயங்கரங்கள் குறித்து மேற்குலகிற்கு அறிவித்த முதல் ஐரோப்பியராவார். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விசாரித்து நீதி வழங்கிய மூன்று ஜட்ஜ்கள் கொண்ட பெஞ்ச், இதற்குக் காரணமான முக்கிய குற்றாவாளிகளை விசாரித்தது பற்றிப் பின்வருமாறு பதிகிறார் ஜெ.ஜெ. பன்னிங்கா,

“கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக மாப்ளாக்கள் திடீர், திடீரென இதுபோன்ற கொலைவெறி வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இஸ்லாமிய மதவெறியே இதன் அடிப்படை. காஃபிர்களைக் கொன்றால் உடனடியாக சுவனம் கிடைக்கும் எனத் தொடர்ந்து வெறியூட்டப்பட்டு வந்த முஸ்லிம்கள் அதனை முழுமையாக நம்பி நடப்பவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு வெறியூட்டப்படும் நாட்களில் கூட்டமாகக் வெளிக்கிளம்பும் மாப்ளாக்கள், கண்ணில் படும் எந்தவொரு இந்துவையும், அவர் யாராக இருந்தாலும், கொல்வதற்குத் தயங்காதவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களின் இந்தக் கொலைபாதகச் செயல்கள் குறித்து எந்தவிதமான குற்ற உணர்வும் அவர்களிடையே இருந்ததில்லை”

மாப்ளாக்களின் கொலைவெறித் தாண்டவத்தை விளக்கும் ஜெ.ஜெ. பன்னிங்கா,

“…அங்கிருந்த கிணறுகள் இந்துக்களின் வெட்டிச் சிதைக்கப்பட்ட உடல்களால் நிறைந்திருந்தன; கர்ப்பிணி இந்துப் பெண்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்கள்; இந்துத் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் கண் முன்னேயே கொல்லப்பட்டார்கள்; அப்பெண்களின் கணவர்களும், தந்தையரும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். தங்களின் மனைவி, மகள்களின் கண்களின் முன்னேயே அவர்களை நெருப்பு வைத்துக் கொன்றார்கள் மாப்ளாக்கள். இந்து இளம்பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள். வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக்க்கும் அதிகமான இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. கால் நடைகள், முக்கியமாக பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் குடல்கள் உருவி எடுக்கப்பட்டு, இந்துக் கோவில் தெய்வங்களின் கழுத்தில் மாலைகளாக இடப்பட்டன…..”

குறைந்தது பத்தாயிரம் இந்துக்கள் மாப்ளாக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறார் இன்னொரு வரலாற்றாசிரியரான ராபின்சன்.

கிலாஃபத் இயக்கத்தை ஆதரிக்கும் மகாத்மா காந்தி, “மாப்ளாக்களை இந்திய நாட்டின் மிக வீரமுள்ளவர்களாகவும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களாகவும்” சித்தரிப்பதுடன், மாப்ளாக்களின் வன்முறையைக் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

இதனைக் குறித்து யங்-இந்தியாவில் எழுதும் மகாத்மா, “நான் கல்கத்தாவில் இருக்கையில் எனக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் மூன்றே மூன்று கட்டாய மதமாற்றங்கள்தான் இந்தக் கலவரத்தால் நிகழ்ந்ததாக அறிந்தேன்….இந்தச் செயல்கள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எந்தவிதத்திலும் பாதிக்காது” என்கிறார்.

ஆனால், உண்மையோ இதற்கு நேரெதிரானது. கிலாஃபத்தின் போது கணக்கிலடங்காத மிக ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மகாத்மாவிற்கு அவருடைய அரசியல் நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம் என்பதுடன் இதனை இங்கு நிறுத்திக் கொள்வோம்.

(தொடரும்)

9 Replies to “வன்முறையே வரலாறாய்… – 8”

 1. திரு ரூபன் அவர்களே,
  நீங்கள் எழுதிவரும் இந்த வரலாற்றின் மூலத்தைப் படித்தபோது என் கண்கள் குளமாயின. இப்பொழுது உங்கள் தமிழாக்கத்தைப் படிக்கும்போதும் மீண்டும் என் கண்கள் குளமாகின்றன. ஓட்டுக்காகத் தங்களையே விலை பேசும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை பாரதத்திற்கு விடிவு வருமா?
  உங்களது சீரிய முயற்சி தொடரட்டும். தூங்கிக் கொண்டு இருக்கும் இந்து உடன்பிறப்புகளைத் தட்டி எழுப்புங்கள்.

 2. Before also once I requested to write about Kilafat movement. Pease write about Kilafat movement in detail and gandhi’s participation in it.
  If you write about tippu sultan’s malabar invasion and mapla rebellion, we will come to know more details.

 3. I have read that, the ‘Hindu Holocaust’ is the highest in human history but unfortunately, it is never talked about by anyone. The ‘Jewish Holocaust’ is being kept alive after so many years and the whole world sympathises them and Germans are made to feel guilty for it. No doubt it was worst, but the ‘Hindu Holocaust’ by Muslims is happening for the past 1000 years and the number of hindus killed is larger than all the holocaust put to gether in the world. But no media talks about it and no one bothers to highlight this. ‘Kali kaalam’ what else to say.

 4. அன்னி பெசன்ட் இக்கலவரம் பற்றி காந்தியைக் கண்டித்து எழுதியதை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நேரம் இருந்தால் நான் செய்கிறேன்.
  காந்தி அங்கு கலவரமே நடக்கவில்லை என்று கூறி வந்தார்;பின்பு ஆதாரங்களை மறுக்க முடியாமல் போனவுடன்,முஸ்லிம்கள் அவர்கள் மத வழக்கின் படி செய்கிறார்கள் என்றார்.இதைக் கண்டித்து அன்னி எழுதினார்.காந்தியின் முஸ்லிம்களின் அடி வருடும் போக்கினால் இந்துக்கள் பெரும் துன்பத்துக்கு
  ஆளானார்கள்.அரசியலில் தனது அரை வேக்காடான ஆன்மீகத்தை சோதனை செய்து பார்த்தது விவேகமற்ற செயல்.

 5. BR ambedkar on moplah riots:
  The Moplas were suddenly carried off their feet by this agitation. The outbreak was essentially a rebellion against the British Government The aim was to establish the kingdom of Islam by overthrowing the British Government. Knives, swords and spears were secretly manufactured, bands of desperadoes collected for an attack on British authority. On 20th August a severe encounter took place between the Moplas and the British forces at Thirurangadi. Roads were blocked, telegraph lines cut, and the railway destroyed in a number of places. As soon as the administration had been paralyzed, the Moplas declared that Swaraj had been established. A certain Ali Musaliar was proclaimed Raja, Khilafat flags were flown, and Ernad and Walluvanad were declared Khilafat Kingdoms.

  As a rebellion against the British Government it was quite understandable. But what baffled most was the treatment accorded by the Moplas to the Hindus of Malabar. The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping open pregnant women, pillage, arson and destruction- in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus until such time as troops could be hurried to the task of restoring order through a difficult and extensive tract of the country. The number of Hindus who were killed, wounded or converted, is not known. But the number must have been enormous
  – Pakistan or Partition of India

 6. Annie Besant on Ghandhi:
  Malabar’s Agony – Annie Besant writes on Gandhiji’s ‘Mappila brothers’

  ” It would be well if Mr. Gandhi be taken into Malabar to see with his own eyes the ghastly horror which have been created by his preaching and of his “loved brothers” Mohammed and Shaukal Ali. Mr. Gandhi asked the Moderates to compel the Government to suspend hostilities, i.e. to let loose the wolves to destroy what lives are left. The Murderers, the looters, the ravishers have put into practice the teachings of paralyzing the Government by making war on the Government in their own way.
  How does Mr. Gandhi like the Mopla spirit, as shown by one of the prisoners in the hospital, who was dying from the results of asphyxiation? He asked the surgeon, if he was going to die and the surgeon answered that he feared he would not recover. “Well, I am glad that I killed 14 infidels” said the ‘Brave, God-fearing Mopla’, whom Mr. Gandhi so much admires who “are fighting for what they consider” as religion, and in a manner they consider as religious”. Men who consider it “religious” to murder, rape, loot, to kill women and little children, cutting down whole families, have to be put under restraint in any civilized society.
  Mr. Gandhi was shocked when some Parsi ladies had their saris torn on, and very properly, yet the God fearing hooligans had been taught that it was sinful to wear foreign cloth, and doubtless felt they were doing a religious act; can he not feel a little sympathy for thousands of women left with only rage, driven from home, for little children born of the dying mothers on roads in refugee camps ? The misery is beyond description. Girl wives, pretty and sweet, with eyes half blind with weeping, distraught with terror, women who have seen their husbands backed to pieces before their eyes, in the way “Moplas consider as religious”, old women tottering, whose faces become written with anguish and who cry at a gentle touch and a kind look waking out of a stupor of misery only to weep, men who have lost all – hopeless, crushed, desperate. I have walked among thousands of them in the refuge camps, and some times heavy eyes would lift as a cloth was laid gently on the bare shoulder and a faint watery smile of surprise would make the face even more piteous than the stupor. Eyes full of appeal, of agonized despair, of hopeless entreaty, of helpless anguish, thousands of them camp after camp, “Shameful inhumanity proceeding in Malabar “says Mr. Gandhi Shameful inhumanity indeed. Wrought by the Moplas, and where are the victims, saved from extermination by British and India swords. For be it remembered the Moplas began the whole home business; the Government intervened to save their victims and these thousands have been saved. Mr. Gandhi would have hostility suspended – so that the Moplas may sweep down on the refugee camps, and finish their work”.
  Let me finish within beautiful story told to me. Two Pulayas the lowest of the submerged classes, were captured with others and given the choice between Islam and Death. These, the outcast of Hinduism, the untouchables, so loved the Hinduism which had been so unkind a step-mother to them, that they chose to die Hindus rather than to live Muslim. May the God of both, Muslim and Hindus send his messengers to these heroic souls, and give them rebirth into the faith for which they died.”
  – New India, 29 November 1921
  Posted by INNERFRONT at 08:05

 7. ஒரு முறை சரோஜினி நாயுடு நையாண்டியாக காந்தியிடம்’ மகாத்மா அவர்களே, உங்களை மக்கள் முன்னே எளிமையானவராகக் காட்ட மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது’என்றாராம் ( Mahatma, It is very costly to keep you simple!)

  அவர் தமாஷாகச் சொன்னது . அனால் காந்தியால் ஹிந்து சமுதாயம் எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்து விட்டது!

 8. It’s most unfortunate that Nehru followed a warped secularism, which was ‘pro-minority’ and anti-Hindu, allowing special privileges for the so-called minorities and denying the same to the majority Hindus! This was replicated by all the other pseudo-secular parties which found this very convenient for maintaining their votebanks! The result was that the alien minority religions were allowed to be propagated at State expense, while Hindus were suppressed! In Kerala, both the UDF and LDF Govts have been pampering these so-called minorities to the detriment of Hindus. They treated Muslims as “backward” community and provided 10% reservation to them.90% of the educational institutions n Kerala are ” minority”institutions with special privileges! I am surprised that no Hindu organizations challenged this in Court! Today these pampered Muslims are the ones who are a threat to the safety and security of the country and to national integration! The PFI and SDPI and CFI are a security threat to the nation! The false propaganda carried out in the name of CAA, NRC and NPR are meant to polarize the Muslims and create communal hatred! It’s the special privileges given to these Muslims which has “empowered ” them to revolt against the democratically elected Govt, and even go against the Court orders! The provincial and Central Govts must get tough with the leaders who are giving hate speeches and threatening violence and creating law and order problems! The Govt must also announce that all communities in the country will get equal rights and privileges, so that Hindus are not handicapped any more!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *