வன்முறையே வரலாறாய்… -7

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan

தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

M.A.Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன….

முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3,  பகுதி 4, பகுதி 5, பகுதி 6

***

சிறிதும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த மதமானது, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவின் சிந்து, வங்காளம் போன்ற பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்தது.

ஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)
ஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)

தங்களுக்கு எதிரான அத்தனை மத நம்பிக்கைகளையும் வன்முறை மூலம் அழித்தொழிக்கும் செயலை தங்களின் அடிப்படை மதக் கடமையாகக் கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னால் பௌத்தம் பேரழிவைச் சந்தித்தது. ஆம்; இஸ்லாம் பரவிய வழிகளில் இருந்த பௌத்தம் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டது.

இஸ்லாமிய வரலாற்றிசிரியரான அல்-புரூனி இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1203-ஆம் வருடம் இந்தியாவின் பிகார் பகுதியிலிருந்த பௌத்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட பக்தியார் கில்ஜியைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு இஸ்லாமிய வரலாற்றிசிரியரான இப்ன்-அசிர், “எதிரிகள் அறியாதவண்ணம் திடீர்த் தாக்குதலை மேற்கொண்ட முகமது பக்தியார், மிகுந்த வேகத்துடனும், துணிவுடனும் கோட்டை வாயிலை அடைந்து, பின்னர் எதிரிகளின் கோட்டையைக் கைப்பற்றினான். அதனைத் தொடர்ந்து அளவற்ற செல்வத்தை வெற்றி கொண்ட இஸ்லாமியப் படை கைப்பற்றியது. அந்தக் கோட்டையில் வசித்தவர்களில் பெரும்பாலோர் மொட்டைத்தலைகளை உடைய பிராமணர்கள் (உண்மையில் அவர்கள் பௌத்த பிட்சுகள்). அவர்கள் அத்தனை பேரும் வாளுக்கு உடனடியாக இரையாக்கப்பட்டார்கள்.”

அதனைத் தொடர்ந்து,  புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தினை அடைந்த பக்தியார் கில்ஜி  “ஏராளமான புத்தகங்களைக் கண்டான்” எனக் குறிப்பிடுகிறார் இப்ன்-அசிர். பக்தியார் கில்ஜி பௌத்த பிட்சுகளின் மீது செலுத்திய ஈவு, இரக்கமற்ற படுகொலைகள் காரணமாக அங்கிருந்த புத்தகங்கள் என்ன மாதிரியானவை என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் கிட்டவில்லை எனப் பூரிக்கும் இப்ன்-அசிர்,  “அங்கிருந்த அத்தனை பிராமணர்களும் (பௌத்த பிட்சுகள்) கொல்லப்பட்டிருந்தார்கள்” என எழுதுகிறார்.

இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)

உலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட மிகப் பெரும் நூலகம் என்பதனைக் கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மிகப் பெரும் அவலம்தான். அங்கிருந்த புத்தகங்களில் எதுவும் குரான் இல்லை என்பதனை அறிந்துகொண்ட பக்தியார் கில்ஜி, பின்னர் அத்தனை புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான். கௌதம புத்தரின் காலம்தொட்டு பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வமான புத்தகங்கள் மூடர்களின் கண்மூடித்தனமான மதவெறியால் எரிந்து சாம்பலாகின.

* * *

டாக்டர் அம்பேதகர்
டாக்டர் அம்பேதகர்

இந்தியாவில் பௌத்த மதம் அழிந்தது குறித்து எழுதும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், “இந்தியாவில் பௌத்தம் அழித்தொழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இஸ்லாமியப் படையெடுப்புகளே” என்று குறிப்பிடுகிறார்.

சிலை வழிபாடு செய்யும் காஃபிர்களை அழிக்கப் புறப்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி அவர் கூறுகையில், “இஸ்லாம் ‘பட்’ (But)களுக்கு எதிரான ஒரு சமயமாகப் பிறந்த ஒன்று. அராபிய வார்த்தையான ‘பட்’ என்பதற்கு ‘சிலைகள்’ என்று அர்த்தம். எனவே புத்தரை வழிபடும் பௌத்தர்களும் இஸ்லாமியர்களின் கண்களுக்கு சிலை வழிபாடு செய்பவர்களாகவே தென்பட்டார்கள். எனவே சிலைகளை உடைக்கும் அவர்களின் மதக் கடமையானது பௌத்தத்தையும் ஒழிக்கும் ஒரு செயலாக மாறியது. இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை. அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது. இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்னர் பாக்டீரியா, பார்த்தீயா, ஆஃப்கானிஸ்தான், காந்தாரம், சீன துருக்கிஸ்தான் பகுதிகளில் மட்டுமின்றி ஆசிய நாடுகள் அத்தனையிலும் பரவி இருந்தது” என்கிறார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

இஸ்லாம் பௌத்த மதத்தை மட்டும் அழிக்கவில்லை; அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடரும் பாபா சாகேப், “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள். பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்.

“இந்த அர்த்தமற்ற படுகொலைகளின் காரணமாக பௌத்தத்தின் ஆணிவேர் இந்தியாவில் வெட்டியெறியப்பட்டது. பௌத்த பிட்சுகளைக் கொன்றதன் மூலம், இஸ்லாம் பௌத்தத்தை இந்தியாவில் கொன்றழித்துவிட்டது. இந்திய பௌத்தத்தின் மீது விழுந்த மரண அடி அது” என மேலும் சொல்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு. முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் உயர்சாதி இந்துக்களான ராஜபுத்திரர்களும், பிராமணர்களும் மட்டுமே அவர்களின் படைகளிலும், பிற அரசு உத்தியோகங்களிலும் சேர்க்கப்பட்டார்கள். தாழ்த்தப்பட இந்துக்களும், சீக்கியர்களும் முகலாயர்களால் உதாசீனப்படுத்தப் பட்டார்கள். முன்பே சொன்னபடி, 1690-ஆம் வருடம் சின்சானியில் கலவரம் செய்த தாழ்த்தப்பட்ட ஜாட்களை அடக்க உயர்சாதி இந்துக்களான ராஜபுத்திரர்களை ஔரங்கசீப் அனுப்பி வைத்தான்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல்கள் காரணமாக எண்ணற்ற கல்வியாளர்களும், சிற்பிகளும், தொழில் வினைஞர்களும் கொல்லப்பட்டார்கள். காலம்காலமாக அறிவையே தங்களது செல்வமாகச் சேர்த்து வந்த இந்தியாவில், கல்வியும், கலாச்சாரமும், கட்டடக்கலையும், சிற்பக்கலையும், நெசவும், அறிவியலும் அழிந்தன. இந்த நிலைமையே எகிப்தியர்களுக்கும், சிரியர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஏற்பட்டது. உலகின் பல பழமையான கலாச்சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டன.

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைத் தூக்கிப் பிடிப்பதையே தனது கடமையாச் செய்து வந்த ஜவஹர்லால் நேருவே கூட இதனை ஆமோதிக்கிறார்.

“வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த முஸ்லிம்கள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ அல்லது அறிவியல் வளர்ச்சிக்கோ எதுவும் செய்யவில்லை. எந்த விதமான புதிய அரசிய கோட்பாடுகளோ அல்லது பொருளாதாரக் கோட்பாடுகளோ அவர்களிடம் இல்லை. அவர்களின் மத நம்பிக்கை காரணமாக உண்டாகியதாகக் கூறப்படும் சகோதரத்துவத்திற்கும் மேலாக ஒருவகையான ஆண்டான்-அடிமைக் கோட்பாடே அவர்களிடம் நிலவியது. தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் அதன் அடிப்படைக் கட்டமைப்பிற்கான அறிதலிலும் அவர்கள் ஒருபோதும் இந்தியர்களுக்கு நிகரானவர்களாக இருந்ததில்லை. மொத்தத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், பொருளாதார வாழ்க்கைக்கும் அளித்த பங்களிப்பு மிக, மிகக் குறைவானதே. அன்றைய இந்தியா இஸ்லாமிய நாடுகளை விடவும் எல்லா விதத்திலும் முன்னேறிய ஒன்றாகவே இருந்தது.”

*

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டம்  கூட்டமாக அப்பாவி இந்துக்களைக் கொன்றழித்த கொலைபாதகச் செயல்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நிகழ்ந்தவை அல்ல என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துக்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வது, அவர்கள் வழிபடும் கோவில்களை இடித்து அதன் மீது மசூதிகளைக் கட்டுவது, அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்து அடிமைகளாகப் பிடித்துச் செல்வது போன்றவை – இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொள்கைகளாகவே இருந்து வந்தன. அந்தக் கொள்கையே இந்தியா முழுமையாகவும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சுல்தான் அலாவுதீன் கில்ஜியும் (1296-1316), முகமது-ஷா-துக்ளக்கும் (1325-1351) காஃபிர்களைக் கொல்லுவதிலும் அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதிலும் மிகுந்த உற்சாகம் கொண்டவரக்ள். சுல்தான் ஃபிரோஸ்-ஷா-துக்ளக் (1351-88) வங்காளத்தின் மீது எடுத்த ஒரு படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றாசிரியர் சிராஜ்-அஃபிஃப், “கொல்லப் பட்ட வங்காளிகளின் தலைகள் கணக்கிடப்பட்டதில் 1,80,000 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) பேர்களுக்கும் மேலாக இருந்ததாக”க் குறிப்பிடுகிறார்.

ஃபிரோஸ்-ஷா-துக்ளக், சிலை வழிபாட்டாளர்கள் மீது மிகக் கடுமையாக நடந்து கொண்டதுடன், அவர்களின் கோவில்களை இடிப்பதை வழக்கமாக கொண்டவன். இந்துக்கள் ரகசியமாக எங்கேனும் வீடுகளில் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று கண்காணிக்க தனி உளவுப்படையையே அமைத்த பெருமை ஃபிரோஸ்-ஷா-துக்ளக்கிற்கு உண்டு. பல இந்துக் கோவில்களை தரைமட்டமாக்கி, அங்கிருந்த பூசாரிகளையும், பிராமணர்களையும் கொன்றதாக அவனது வரலாற்றுக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அவனது வாழ்க்கைக் குறிப்பான ஃபுதுகாத்-இ-ஃப்ரோஸ்-ஷாஹியில், “காஃபிர் இந்துக்கள் இந்த நகரைச் சுற்றிலும் சிலைவழிபாட்டுக் கோவில்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இறைதூதருக்கு அல்லா அளித்த கட்டளைகளுக்கு எதிரானது. அல்லா அளித்த கட்டளையானது இந்தக் சிலைவழிபாட்டை முழுமையாகத் தடைசெய்கிறது. எனவே நான் அந்தக் கோவில்களை முழுமையாக இடித்து அழித்துவிட்டதுடன் அதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமலிருக்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.”

* * *

தென்னிந்தியாவில் குல்பர்கா மற்றும் மத்திய இந்தியாவின் பிதாரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாமினி சுல்தான்கள் இதற்கு சிறிதும் சளைத்தவர்களல்ல. “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி.

பாமினி சுல்தான்களின் மதவெறிக்கு பலியான ஹம்பி நகரம்
பாமினி சுல்தான்களின் மதவெறிக்கு பலியான ஹம்பி நகரம்

அதனையும் விட, பாமினி சுல்தான்கள் “ஒவ்வொரு முஸல்மானின் மரணத்திற்கும் பதிலாக ஒரு லட்சம் காஃபிர் இந்துக்களை கொல்ல வேண்டும்” எனச் சட்டமே இயற்றி இருந்ததாகக் குறிப்பிடுகிறார் ஃபரிஸ்டா. இரக்கமற்ற, மதவெறியர்களான பாமினி சுல்தான்களால் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களைக் குறித்து பிறகு பார்க்கலாம்.

இந்து அரசரான இரண்டாம் தேவராயர் போரில் இரண்டு முஸ்லிம்களைக் கைப்பற்றியதற்குப் பதிலாக, சுல்தான் அலாவுதீன் அஹமத்-ஷா-பாமானி (1436-58), “ராஜா தேவராயா கைப்பற்றிய இரண்டு முஸல்மான்களைக் கொன்றால் அதற்கு பதிலாக நான் ஒரு லட்சம் இந்துக்களைக் கொல்வேன்” எனச் சூளுரைத்ததாகத் தெரிகிறது. இதனைக் கேட்டு அச்சமடைந்த இரண்டாம் தேவராயர் உடனடியாக அந்த இரண்டு முஸ்லிம்களை விடுதலை செய்ததுடன், சுல்தானுக்கு கப்பம் கட்டுவதற்கும் சம்மதித்ததாகத் தெரிகிறது.

அமிர் தைமூர் அவனது வாழ்க்கைக் குறிப்பான மல்ஃபுஸாத்-இ-தைமூரியில், தான் இந்துஸ்தானத்திற்குப் படையெடுத்தது இஸ்லாமிய மதக் கடமையான ஜிகாதினை நிறைவேற்றி, காஃபிர்களை அழித்தொழிப்பதற்காகவே எனக் குறிப்பிடுகிறான். முக்கியமாக “காஜியாகுவதற்காக (காஃபிரைக் கொல்பவன்)”. 1398-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியைக் கைப்பற்றிய தைமூரின் உத்தரவின்படி ஒரே நாளில்  ‘ஒரு லட்சம் காஃபிர்களும், சிலை வழிபாட்டாளர்களும்’ கொல்லப்பட்டார்கள்.

(தொடரும்)

.

 

12 Replies to “வன்முறையே வரலாறாய்… -7”

  1. திரு ரூபன் அவர்களே,
    தாங்கள் இஸ்லாமியர்கள் எப்படி மிகவும் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டு இனப் படுகொலை செய்தார்கள் என்பதை அனைவரின் கவனத்திற்கும் தமிழ் இந்து தளத்தில் வெளிச்சம் போட்டுக் கட்டுவது, மீண்டும் அப்படிப் பட்ட பாதிப்புக்கு இந்துக்களும், ஏனைய சமயத்தவரும் ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணமே என்பதைப் பாராட்டுகிறேன். உங்களது இந்த சீரிய பணி தொடரட்டும். எனது வாழ்த்துக்கள்!
    இதற்கு மூலப் புத்தகமான Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan யும் முழுவதையும் படித்துத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஒரு இஸ்லாமியரே தனது சமயத்தின் கட்டுமிராண்டிச்செயல்களைத் துயரத்துடன் படம் பிடித்துக் காட்டுவதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். அந்தப் புத்தகத்தின் முகவுரையில் இஸ்லாமிய அனுதாபியான தான், நியுயார்க்கில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு ‘அமைதியான இஸ்லாம்’ சமயத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று மன வருத்தப்பட்டு, திருக்குரானைக் கற்க ஆரம்பித்து, அதில் சொல்லி இருப்பதைக் கண்டு மனம் கசந்து, வரலாறுகளை நன்கு கற்றறிந்து, தன் மனதில் எனப்பட்ட கசப்புகளை வடித்தெடுத்த நூலே ‘இஸ்லாமிக் ஜிஹாத்’ என்று தெளிவு படுத்தியதை படித்ததும் எனது மனம் நெகிழ்ந்தது. அதைத் தமிழ் உலகுக்கு நீங்கள் நல்குவதும் அளவு கடந்த நிம்மதியைத் தந்தது.
    அதே சமயத்தில், “இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு…” என்று இன்றைய தொடரில் நீங்கள் எழுதி இருப்பது, இந்துக்களிடையில் பிளவை ஏற்படுத்த இந்த வளையத்தைக் கருவியாக ஆக்கிக் கொண்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.
    நீங்கள் திரு கானின் ‘இஸ்லாமிக் ஜிஹாத்’தைப் படித்தால், அவர் இம்மாதிரி எழுதவில்லை என்று புலனாகும். வேண்டுமென்றால் அவர் புத்தகத்திலிருந்தே நீங்கள் எழுதியிருப்பதற்கு மாறான கருத்துக்களைச் சான்றாகத் தர என்னால் இயலும்.
    திரு கான் “இஸ்லாமிலும் பிரிவினைகள் இருந்து வந்தன, வருகின்றன; இந்து சமயத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறிய மாஜி-இந்துக்களை, அதாவது ஜிஹாதின் மூலம் ‘நல்வழி’ப்படுத்தப்பட்டோரையும் அராபிய முஸ்லிம்கள் எவ்வாறு மதித்தார்கள், அரபு மேட்டிமையை எப்படி நிலைநிறுத்தினார்கள்” என்பதை விளக்கிய பகுதியைச் சுருக்கி, ‘பலவண்ணப் பூமாலை’யாக விளங்கிவந்த நமது இந்து சமயத்தை பிய்த்தெறிந்து, கிறிஸ்தவமயமாக்க, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடத்திவந்த ஆபிரஹாமச் சமயப் பாதிரியார்களின் பிரசாரத்தை இன்றும் தொடர்ந்து தமிழ் வளையங்களில் காண்பது மிகவும் மன வேதனையத் தருகிறது. ஜாதி வேற்றுமையை உடைத்தெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, ஜாதி வேற்றுமையைத் தூண்டுவதுபோல எழுதுவது நியாயம்தானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் கட்டுரையை அந்தக் கேள்வியுடன் எழுதி வாருங்கள். உங்கள் கட்டுரைகள் இந்து சமய ஒற்றுமையை வளர்க்கும் வண்ணமும் பார்த்துக்கொள்ளுங்கள்.
    மாற்றான கருத்து இருந்தால், தங்களிடமிருந்து அதை அறிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.
    மற்ற இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னுடைய இந்தப் பதிவு நிறைய மறுமொழிகளைக் கொண்டுவரும் என்று அறிவேன். அதை நல்ல முறையில் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

  2. இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு…” என்று இன்றைய தொடரில் நீங்கள் எழுதி இருப்பது, இந்துக்களிடையில் பிளவை ஏற்படுத்த இந்த வளையத்தைக் கருவியாக ஆக்கிக் கொண்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.

    Hindus are already split on caste system. Its a fact. No need for the author to do it.

  3. திரு. அரிசேனன்,

    இந்தப் பகுதியைப் பொறுத்தவரை நான் வெறும் மொழி பெயர்ப்பாளன் மட்டுமே. இந்துக்களிடையே “பிளவு” ஏற்படுத்த முனைகிறேன் என்பதெல்லாம் உங்களின் கற்பனையைத் தவிர வேறெதுவும் இல்லை. மூலப்புத்தகத்தில் எழுதி இருப்பதைத்தான் நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எனக்குப் பிடிக்காத கருத்து உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் நான் அதனைச் நேர்மையாகச் சொல்லவே முயல்வேன். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் பதவிகள் கொடுத்தார்கள் என்பதில் என்ன மாதிரியான “பிளவு” இந்து மதத்தில் ஏற்படப்போகிறது அரிசேனன்?

    அப்படி நடந்திருந்தால் அது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கேவல மனோபாவத்தைத்தானே காட்டுகிறது?

    அப்படி அவர் எழுதவில்லை என்று ஆதாரம் காட்டுவீர்களாம். அதற்காக விவாதம் வேறு வருமாம். நல்ல தமாஷாக இருக்கிறது.

  4. Page 138,

    Furthermore, the Muslim rulers were caste-minded as upper caste Hindus in dealing with the lower caste people. They never tried to empower lower-caste Hindus in their employment. When muslim rulers started employing some Hindus in the army and other services, particularly in Mughal reign, they always looked up to upper-caste Rajputs and Brahmins…….

  5. அன்பார்ந்த ஸ்ரீ ரூபன்

    நான் என்னுடைய வ்யாசத்தில் கவனம் செலுத்திவருவதால் உங்களது அருமையான தொடரை விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டும்..

    Kudos for an articulative, genuine and honest write up.

    மூல ஆங்க்ல வ்யாசத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளது உள்ளபடி நீங்கள் பகிர விழைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. Ready came the reply from your end by quoting the related portion with page ref. Thumbs up.

    Throughout J&K, UP, MP and why…….. even across the LOC in Baqi Sthan aka pakisthan, the deep class based / caste based divisions among moslems are prevailing even today. And you explained this from a historical perspective as explained by Jenab Khan Saheb.

    அன்பர் ஸ்ரீ அரிசோனன் தன் தரப்பிலிருந்து சொல்ல வேண்டிய மாற்றுத் தகவல்கள் ஓரிரு வரிகளில் இருந்தால் நேரடியாக அதைப் பகிர்ந்து மேற்கொண்டு சம்வாதம் செய்வது முறையான கருத்துப்பரிவர்த்தனமாகும். If he feels that the author deviates from the original source, that can be straight away done by quoting the page reference to the pdf file the author has shared with us for ref.

    And the passage in question is genuinely and honestly translated by the author.

  6. Dear Mr. Roopan,
    First let me clarify once and for all that I am not instigating that you are trying to cause caste discard between Hindus. I expressed my concern that what you had written could help to cause caste discord between Hindus using the very same net which tries to promote unity between HIndus. Hence, there is a difference between accusing you of causing discard, and worrying that your good efforts could inadvertantly be used for causing cast-discord. Since I also read that particular portion of Mr. M.A. Khan, I told that I can quote from his book.
    Fortunately, you made my job easier by providing lines. “Furthermore, the Muslim rulers were as upper caste Hindus in dealing with the lower caste people. ”
    Let me translate it into Tamil.
    மேலும், கீழ்சாதி மக்களைக் கையாளும்போது (நடத்தும்போது), முஸ்லிம் (இஸ்லாமிய) ஆட்சியாளர்கள் உயர்சாதி இந்துக்கள் மாதிரி சாதி எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
    நீங்கள் எழுதியிருப்பது: “இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள்.”

    ஒப்பிடுவோம்: ‘மேலும்’ என்பதும் ‘இதையெல்லாம் விடவும்’ என்பதில் அதிக மாறுபாடு இல்லை. ‘ஆட்சியாளர்களை’ நீங்கள் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இது சரியான மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும், முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆக்ரமிப்பாளர்களாகவே இருந்ததால் அதையும் விட்டு விடலாம்.
    ‘சாதி எண்ணம் கொண்டவர்கள்’ என்பதற்கும் ‘சாதி வெறியர்கள்’ என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இதை நான் மேலும் விளக்கவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
    இந்த ஒரு வேறுபாட்டுக்குத்தான் நான் மறுப்பு எழுதினேன்.
    திரு ரூபன் அவர்களே, நான் உங்கள் பக்கம்தான். நமது இந்து சமயத்திற்கும், இந்து மக்களுக்கும், இந்து கலாசாரத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதியை நீங்கள் படம் பிடித்துக் காட்டுவதை நான் பாராட்டி எழுதியது எதுவும் உங்கள் கண்ணில் படாது போனது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
    சாதி வேறுபாடு காட்டக்கூடாது, சாதியைக்கொண்டு உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிவினை செய்யக்கூடாது என்பதில் நான் மிகவும் குறிப்பாக இருக்கிறேன். அதனால் ‘சாதி வெறியர்கள்’ என்று குறிப்பிட்டது எனது மூல நரம்பைக் கொஞ்சம் தொட்டு விட்டது.
    உங்களது சிறந்த பணியை மீண்டும் தொடருங்கள். அதற்கு எப்பொழுதும் எனது பாராட்டும், ஆதரவும் எப்பொழுதும் உண்டு.
    திரு கிருஷ்ணகுமார் அவர்களே, தங்களது கேள்விக்கும் இதிலேயே பதில் அடங்கி இருக்கிறது.

  7. Mr. Roopan,
    I missed two words from the lines of Mr. Khan. “Furthermore, the Muslim rulers were caste-minded as upper caste Hindus in dealing with the lower caste people.” When I wrote this line, I missed the two words ‘caste-minded’. Nevertheles, in my translation, I included those words. Sorry for the haste.
    All the best.

  8. // Ready came the reply from your end by quoting the related portion with page ref. Thumbs up. //

    The phrase ‘caste-minded’ in the original seems to be less intense than the translated phrase “சாதிவெறியர்’. That is the cause of the problem. ‘சாதிய சிந்தனையுடையவர்கள்’ என்பது நேரான, சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும்.

  9. அரிசேனன் மற்றும் பாலாவுக்கு,

    நன்றி.

    மொழிபெயர்க்கையில் சரியான வார்த்தைகளை உபயோகிக்காதது எனது தவறுதான். அதற்காக என்னை மன்னியுங்கள். நான் தமிழில் புலமையுடையவன் அல்லேன். என்னால் இயன்றவரை செய்து கொண்டிருக்கிறேன். இனியும் தவறுகள் வந்தால் பொறுத்துக் கொண்டு என்னை சரிப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    அ. ரூபன்

  10. அன்பின் பாலா, அரிசோனன்,

    நானும் இந்த வாசகத்தையும் மொழிபெயர்ப்பையும் வாசித்தேன் தான். வித்யாசம் துலங்கவில்லை. அழகாக விளக்கியமைக்கு நன்றி.

  11. திரு ரூபன் அவர்களே,
    தாங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நான் எழுதிய கருத்தைப் புரிந்துகொண்டாலே போதும். ஒவ்வொரு மொழியுமே மிகவும் மாறுபாடான தனித் தன்மையை கொண்டது. ஆகவே, பேசுவதைவிட மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஒருசில சமயம், சில சொற்களை மொழிமாற்றம் செய்வது என்பதே இயலாது. உதாரணத்திற்கு, ‘நீ உனது பெற்றோருக்கு எத்தனையாவது மகன்/மகள்?’ என்பதை ஆங்கிலத்திற்கு சாரியானபடி மொழிமாற்றம் செய்வது என்பது இயலவே இயலாது. மேலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் சொற்தொடர்கள் வெவ்வேறு விதமாக உருவமைக்கப் படுகின்றன. அதனாலேயே மிகவும் கடினமான உங்களது, மற்றும் திரு கிருஷ்ணகுமாறது முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. அதற்கு நாங்கள் அனைவரும் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். உங்களது சிறந்த பணியைத் தொடருங்கள்.

  12. மன்னிப்பு கேட்டதால் எனக்கொன்றும் குடி முழுகிப்போகப் போவதில்லை. என்னுடைய இலக்கு வேறு. எனவே அனாவசிய மயிர் பிளக்கும் விவாதங்களைத் தவிர்க்க முயல்கிறேன். என்னுடைய இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு. அதற்கு பதிலாக இதனை உபயோகித்திருக்கலாம் என்று நேரடியாக சொல்லியிருந்தால் இதெற்கெல்லாம் அவசியமேயில்லை.

    ‘சாதி வெறியர்கள்” என்பதனை ‘சாதிய சிந்தனையுடையவர்கள்’ என்று மாற்றுமாறு தமிழ் ஹிந்து குழுவினரை வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *