சர்ச்சில் வளரும் நாய்க்கு.. (கவிதை)

சர்ச்சில் வளரும் நாய்க்கு
சாப்பாட்டுக்குப் பஞ்சமே இருக்காது

பெரும் கருணையாளர்களான அவர்கள்
அதன் கழுத்தில் சங்கிலி கட்டிவைக்கமாட்டார்கள்

எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம்
யாரும் கல்லெடுத்து அடிக்கமாட்டார்கள்
உள்ளுக்குள் பெருகும் மூத்திரத்தை
பாதிரியார் சொல்லும் இடத்தில்
பெய்யக் கற்றுக்கொண்டுவிட்டால் போதும்

அவர் கைகாட்டும் நபர்களைப் பார்த்துக்
குரைக்கத் தெரிந்தால் போதும்

வாராந்தரப் பிரார்த்தனைகளில்
ஒழுங்காகப் பங்கெடுக்க வேண்டும்
என்றெல்லாம் எந்த நிர்பந்தமும் கிடையாது
வண்ணக் கண்ணாடிகளில் பட்டு எதிரொலிக்கும்
கன்யாஸ்த்ரீ மாடக் கூக்குரல்களைக் கேட்காததுபோல்
வாசற்படியில் காவல் இருந்தால் போதும்

தேவனை மகிமைப்படுத்தும்
இசைப்பயிற்சி வகுப்புகளை
அமைதியாக உட்காந்து கேட்கவேண்டும்
என்ற நிர்பந்தமெல்லாம் கிடையாது
நிலவொளியில் நனையும் சர்ச்களின் பின்முற்றத்தில்
புதைக்கப்படும் பிணங்களைப் பார்த்து
ஊளையிடாமல் இருக்கக் கற்றுக்கொண்டால் போதும்

பகல் நேரங்களில் தாராளமாகத்
தூங்கிக் கொள்ளக்கூட அனுமதி கிடைக்கும்
தசம பாக வரி வசூலிப்பு கருவூலங்களை
நள்ளிரவுகளில் கண்முழித்துக் காத்தால் போதும்

அதி விசுவாசமாக இருந்தால்
ஆட்சிப் பொறுப்புகூடக் கிடைக்கும்

உங்களால்
காரிருளைக்கூட விடியல் என்று
கட்டியம் கூற முடியும்

ஒரு காமடியனைக்கூட
கதாநாயகனாக்க முடியும்

ஹிட் விக்கெட் ஆனால் கூட
சிக்ஸர் என்று கூக்குரலிட
சியர் லீடர்ஸ் சிந்தனையாளர் குழு தயாராக இருக்கும்

இனத்துரோகத்தைக் கூட
இல்லாத எதிரியை எதிர்த்து
மறக்கடிக்கச் செய்ய முடியும்

கொலைப்பழி சுமத்தியவர்கள் கூட
கும்பிடு போட்டுக் குனிந்து நிற்பார்கள்

நீங்கள் கொண்டுவரும் திட்டங்கள்
மாநிலத்தை சொர்க்கமாக்கும்
அதையே மற்றவர்கள் செய்தால்
மாநிலம் சுடுகாடாகும்

நீங்கள்
அரை குவளை காலியாக இருக்கிறது என்று சொன்னால்
உலகமும் அதையே சொல்லும்
நீங்கள்
அரை குவளை நிரம்பியிருக்கிறது என்று சொன்னால்
உலகமும் அதையே சொல்லவைக்கப்படும்

சர்ச்கள் சதிகாரர்களின் சத்திரம் என்பதை
யாரும் சொல்லும் முன்
கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் என்று
சொல்லிவிடவேண்டும்
(கோவில்களில் கொடியவர்களை நியமித்து
சொன்ன அவதூறை நிஜமாக்கவும் வேண்டும்)

அதுபோலவே,
நீங்கள் அடிமை என்பதை
யாரும் சொல்வதற்கு முன்
அடுத்தவர்களை அடிமை என்று
சொல்லிவிடவேண்டும்
(நீதான் அடிமை என்று
அவர்கள் உண்மையைச் சொன்னால்
ஏதோ போட்டிக்குச் சொல்வதுபோல்
அது பிசுபிசுத்துப் போய்விடும்)

எல்லாவற்றுக்கும் மேலாக
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
நான் போட்ட பிச்சை என்று
ஒரு பாதிரியார் சொல்லும்போது
வாலாட்டிக் கொண்டே நின்றுவிடவேண்டும்
இல்லையென்றால்
வேறொரு நாய் மீது அன்பு காட்டி
அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடுவார்கள்

எலும்புத் துண்டு
எப்போதும் கிடைக்கவேண்டுமென்றால்
எஜமான விசுவாசம்
எப்போதும் இருக்கவேண்டும்

பகூத்தறிவு இயக்கம் ஜெயிக்கவேண்டுமென்றால்
பாதிரியின் முன் மண்டியிடவேண்டும்.

(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

One Reply to “சர்ச்சில் வளரும் நாய்க்கு.. (கவிதை)”

 1. திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே அந்த கிராமத்திற்குள் சிலர் ஓடிவருகிறார்கள்..

  வந்தவர்கள் சொல்கிறார்கள் திருடர் கூட்டம் ஒன்று உங்கள் கிராமத்தை கொள்ளையடிக்க வருகிறது உங்கள் பணம் நகை பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று..

  மக்களுக்கு சிந்திக்க நேரமில்லை, உடனே வீடுகளுக்குள் சென்று வைத்திருந்த பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். திருடர் திருடர் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள் பணம் நகைகளை எங்களிடம் தந்துவிட்டு எங்கள் பின்னால் வாருங்கள் என்று..

  மக்களுகம் அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் களைத்தபோது அவர்கள் சொல்கிறார்கள் திருடர்கள் நெருங்கி விட்டார்கள். உங்கள் கழுத்து கைகளில் உள்ள நகைகளையும் கழற்றித் தாருங்கள். நாங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று. கிராம மக்களுக்கும் அது சரியாகப்படவே நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுக்கிறார்கள்.

  பிறகும் அவர்களின் ஓட்டம் தொடர்கிறது. இப்பொழுது திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் கண்ணுக்கெட்டாத நீண்டதூரம் சென்றுவிட்டார்கள். ஆனால் கிராம மக்கள் இப்போதும் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

  ஒருசில கிராமத்தவர்கள் மட்டுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள்தான் உண்மையான திருடர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். பலர் இப்போதும் புரிந்துகொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

  அந்த கிராம மக்கள் யாருமல்ல எம் தமிழர்கள்தான். அந்த திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் வேறுயாருமல்ல கிறிஸ்தவ பறங்கியர்கள்தான்.

  சிங்கள இனவாதம் தமிழர்களை இனவழிப்பு செய்கிறது, தமிழர்களின் வாய்ப்புகளை அபகரிக்கிறது, திட்டமிட்டு தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கிறது என்று சொல்லிக்கொண்டே,
  *தமிழர்களின் மரபுகளை அழித்து இனவழிப்புச்செய்து தமிழர்களை கிறிஸ்தவ பறங்கியர்கள் ஆக்குகின்றார்கள்.

  *தமிழர்களின் இடங்கள் கிறிஸ்தவ பறங்கிய இடங்களாக மாற்றப்படுகின்றது.

  *தமிழர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பதவி நிலைகள் கிறிஸ்தவ பறங்கியர் வசமாக்கப்பட்டுள்ளது.

  *தமிழர்களின் அரசியல் தலைவர்களாக கிறிஸ்தவ பறங்கியர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர்.

  தமிழர்களே எப்போது விழிப்புணர்வு பெறுவீர்கள்!
  தொடர்ந்தும் திருடர்கள் பின்னால் அனைத்தையும் இழந்து ஓடிக்கொண்டே இருக்கப் போகின்றீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *