வயலூர் கோயிலில் அரசு அத்துமீறல், அர்ச்சகர்கள் போராட்டம்

 திருச்சி அருகிலுள்ள புகழ்பெற்ற வயலூர் கோயில் சிவாகம அடிப்படையில் அமைந்த சிவாலயம் ஆகும். அங்குள்ள முருகப்பெருமான் சன்னிதியின் பிரசித்தி காரணமாக வயலூர் முருகன் கோயில் என்றே அழைக்கப் படுகின்றது. இங்கு 5 அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கல்யாண சுந்தரம், ரமேஷ் 2 பேர் இந்து அறநிலையத்துறையால் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள், மற்றொருவர் ரமேஷ் தினக்கூலி அடிப்படையிலும், கார்த்தி, ராம்குமார் ஆகிய 2 பேர் சம்பளம் இன்றி 12 வருடங்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையால் புதிய அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏப்ரல் 19, 2022 அன்று இருவரும் கோவிலில் அர்ச்சனை செய்ய முயன்றபோது, ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

– செய்தி

இது குறித்து கோயிலின் பாரம்பரிய ஆதிசைவ அர்ச்சகர் கார்த்திகேயன் பேசிய மனதை உருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அர்ச்சக மரபு குறித்தும், சிவாலயங்களைக் காப்பாற்ற ஆதிசைவ அர்ச்சகர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் அதில் அவர் கூறியுள்ளார். “மோடி ஐயா தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று பிரதமருக்கே நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

இக்கோயிலில் தலைமுறைகளாகத் தன்னலமின்றி பூஜை செய்து தொண்டு புரிந்து வரும் பாரம்பரிய ஆதிசைவ அர்ச்சர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். அதைக் குலைக்கும் வகையில் ஆட்களை நியமனம் செய்யும் இந்து அறநிலையத் துறைக்குக் கடும் கண்டனங்கள். இ.அ. துறை தனது அராஜகமான அர்ச்சகர்கள் நியமனங்களைத் திரும்பப் பெறவேண்டும். அர்ச்சகர்கள் குறித்து பொய்யான வெறுப்புப் பிரசாரங்களைப் பரப்புபவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

One Reply to “வயலூர் கோயிலில் அரசு அத்துமீறல், அர்ச்சகர்கள் போராட்டம்”

  1. Government cannot appoint Archakas. Period. This the law. As per the constitution, government can only manage the financial part of the temple for A SHORT PERIOD and only if there are irregularities. Government hasn’t got any authority to take over any temples. This the law. Please watch Sri T R Ramesh’s videos on YouTube on this. What the government is doing is totally illegal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *