ஜூலை முதல் வாரம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் ஸம்ஸ்க்ருதத் துறைப் பேராசிரியர் மைக்கேல் விட்சல் நம் நாட்டுக்கு ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டு சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விக் கணைகளை தொடுத்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும் . விட்சல் தமிழ் இந்து தளத்தைப் பார்த்து கேள்விகளுக்குப் பதில்கள் தருவாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். நம் சென்னை மாநகரில் அவரது நிகச்சியை ஏற்பாடு செய்த அமைப்புகளாவது இக்கேள்விகளை அவர்கள் அழைத்து வந்த அமெரிக்க அறிஞருக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்புவோம்.
இந்நிலையில் மைகேல் விட்சலின் மேதா விலாசத்தையும் யோக்யதாம்சங்களையும் வாசகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அவரது வருகையை ஒட்டி சென்னையில் நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இதிலிருந்து தெரிந்து கொள்வதும், கற்றுக் கொள்ள வேண்டியதுமாக நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
மைகேல் விட்சலின் மேதா விலாசம் மற்றும் யோக்யதாம்சங்கள்:
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் “ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர்”! நம் நாட்டில் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளும் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு என்ன பாடங்கள் இருக்குமோ, அவற்றை தான் ஹார்வார்ட் பல்கலை வகுப்புகளில் இவர் நடத்துகிறார்; இவருக்கு ஸம்ஸ்க்ருதம் பேசத் தெரியாது; சம்ஸ்க்ருதத்தில் சுத்தமாகப் புலமை இல்லை என்று கூறப் படுகிறது. இவர் ஆரிய திராவிட இனவாதம், ஆரியப் படையெடுப்பு ஆகிய ஆதாரம் இல்லாத, அறிவியலுக்கு ஒவ்வாத கோட்பாடுகளில் (அவை பொய் என்று தெரிந்தும்) நம்பிக்கை கொண்டு அவற்றைப் பரப்புவதற்கு பெரிதும் முயன்று வருபவர்.
ஆரிய இனவாதம் விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளதாகக் கூறுபவர். மத்திய ஆசியாவில் உள்ள மக்கள் அனைவரும் விவிலியப் பிரளயத்திற்குப் பின்னர் நோவாவின் சந்ததிகளே என்று வாதம் செய்பவர். ஸம்ஸ்க்ருதம் இந்திய மொழி அல்ல என்றும் மத்திய ஆசிய மொழியென்றும் சாதிப்பவர். சம்பிரதாய மொழியியல் (Philology) ஒரு உண்மையான விஞ்ஞானம் என்று சொல்பவர் (ஆனால் உண்மையில் Philology விவிலியக் “கதைகளை” உண்மையென நிரூபணம் செய்ய “ஏற்பாடு” செய்யப் பட்ட ஒரு போலி விஞ்ஞான மார்க்கம் தான். pseudo-science.)
DNA அறிவியல் அதற்கு எதிரானது என்று கூறுபவர்; கார்பன் டேடிங் (Carbon Dating) அகழ்வாராய்ச்சி (Archaeology) ஆகியவை போலி-விஞ்ஞானம் என்பவர்;
பாரதத்தின் பழம்பெரும் நாகரிகத்தில் குதிரைகள் கிடையாது என்றும் அவை கழுதைகள் தான் என்றும் சாதிப்பவர். பாரத கடல் எல்லைகளில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் முன்னர் இருந்த நாகரிகத்தை உறுதி படுத்துகின்றன என்று கூறிய அமெரிக்க டர்ஹாம் பல்கலைக் கழகம் (University of Durham) ஹிந்துத்துவவாதிகளுடன் சேர்ந்து சதி செய்துள்ளது என்று கூறுபவர்.
மொத்தத்தில் விவிலிய நம்பிக்கைகளுக்கு எதிரான அனைத்தும் போலி விஞானம் என்றும் அவை ஹிந்துக்களின் சதி என்றும் சொல்பவர். ஹிந்து மதம், ஹிந்து கலாசாரம், வேத நாகரிகம், ஹிந்துத்துவம், பாரதம், ஸம்ஸ்க்ருதத்தின் புனிதம் ஆகிய அனைத்திற்கும் எதிரானவர். எதிராக வேலை செய்பவர். உதாரணமாக, “ஓம்” என்ற சொல் ஒருவரின் மனைவியையோ அல்லது ஆட்டையோ (Goat) அழைக்கும் சொல் என்று இயம்பி தன் மேதாவிலாசத்தை இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் மதப்பிரசார இயக்கங்களுடன் கூட்டு ச் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராகப் பணி புரிபவர். இந்து தர்மத்தை எள்ளி நகையாடியவர். கிறிஸ்துவப் பார்வையுடனேயா உலகத்தை அணுகுபவர். ஹிந்து சமூகத்திலிருந்து தலித்களைப் பிரிக்க, கிறிஸ்துவ சர்ச்சினால் இயக்கப்படும் தலித் விடுதலை இணைப்பு (Dalit Freedom Network) என்கிற இயக்கத்துடனும் தொடர்பு வைத்திருப்பவர்.
மேலும், இவர் நம் நாட்டின் உயர்ந்த வல்லுனர்களை, ஆராய்ச்சியாளர்களை, கல்வி அறிவாளர்களைக் கேவலப் படுத்தியவர். சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியிலும், மொழி ஆராய்ச்சியிலும் பல ஆண்டுகள் உழைத்து மிகவும் பயனுள்ள பல கண்டுபிடிப்புகளைத் தந்துள்ள சான்றோர் திரு டாக்டர் கல்யாணராமன் அவர்களை விட்சல் தரக் குறைவாக நடத்தியிருக்கிறார். சமீபத்தில் கூட ரிக் வேதம் பற்றி சிறந்த நூல் ஒன்றை நமக்களித்த சான்றோர் திரு ஸ்ரீகாந்த் தலகெரி என்பவரை தரமற்ற வார்த்தைகள் சொல்லி அவமதித்துள்ளார்.
சான்றோர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் சிறந்த கல்விமான்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். அவர்களுக்கிடையே வாத விவாதங்கள் நடப்பதும் சகஜம். ஆனால் அம்மாதிரிச் சமயங்களில், தெருச் சண்டைக்கு ஈடாக, அடுத்தவர் மீது தரமற்ற சொற்களை உபயோகித்து அவர்களை அவமானப் படுத்துபவர் இந்த மைகேல் விட்சல். இத்தனைக்கும் அவர்களின் கால் தூசி பெறாதவர் இவர்! ஸ்டீவ் ஃபார்மர் என்று இவருக்கு ஒரு அடிப்பொடி இருக்கிறார். அவரும் மேற்சொன்ன புனிதப் பணியில் இவருடன் சேர்ந்து கொள்பவர்.
மைகேல் விட்சலின் சமீபத்திய “சாதனை”:
அமேரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானப் வரலாறு பாடத் திட்டத்தில் இந்து மதத்தைப் பற்றியும், இந்து கலாசாரம் மற்றும் ஆன்மிகம் பற்றியும் தரக்குறைவாக மிகவும் கொச்சைப் படுத்தி பல அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டன. மற்ற மதங்களைப் பற்றிய பாடங்களை அவரவர்களே தயார் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்து மதப் பாடத் திட்டங்களை கலிபோர்னியப் பாட நூல் நிறுவனமே கிறிஸ்துவர்களைக் கொண்டு தயார் செய்தது. வீட்டில் பெற்றோர்கள் கற்றுத் தரும் விவரங்களிலிருந்து பள்ளியில் பாடப் புத்தகங்கள் மற்றும் ‘வெள்ளை’ ஆசிரியர்கள் கற்றுத் தரும் விவரங்கள் முற்றிலுமாக மாறி இருப்பதைக் கண்டு மிகவும் குழம்பிப்போன நம் இந்துக் குழந்தைகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
பதறிப்போன பெற்றோர்கள் California Parents for the Equalisation of Education Materials (CAPEEM) என்கிற குழுவின் கீழ் ஒன்று திரண்டு, கலிபோர்னிய நீதிமன்றத்தில் பாடநூல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஹிந்துக்களுக்கு எதிராகவும், பாடத் திட்டங்கள் மாற்றப் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், கொலராடோ சர்ச்சுடன் சேர்ந்து இயங்கியவர் மைகேல் விட்சல். ஹிந்துப்பெற்றோர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருந்தும் கூட, தான் பெரிதாகச் சாதித்துவிட்டதாகக் கொக்கரித்து வருகிறார் என்றும் கேள்வி.
மைகேல் விட்சலின் இந்தியப் பயணம்:
கிறிஸ்துவ இயக்கங்களுக்கே உரிய முறையில் மைகேல் விட்சலின் இந்தியப் பயணம் ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது போலும். அவருடைய பிரயாண விவரங்கள் உறுதி செய்யப்படாமல் கசிந்திருகின்றன. முதலில் அவர் ஸம்ஸ்க்ருத கல்லூரிக்கு எட்டாம் தேதி தான் வருவதாக சொல்லப் பட்டுள்ளது. நிகழ்ச்சியை யார்/ எந்த நிறுவனம் நடத்துகிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டுமே அழைப்பிதழ்கள் சென்ற போது தான், அதாவது மூன்றாம் தேதி வாக்கில், மைகேல் விட்சலின் நிகழ்ச்சி ஆறாம் தேதி மாலை என்பதும், அதை நடத்துகிறவர்கள் ஸம்ஸ்க்ருத கல்லூரியும் அதன் உள்ளேயே அமைந்திருக்கும் “குப்புஸ்வாமி சாஸ்த்திரி ஆராய்ச்சி நிறுவனம்” என்பதும், என்று தெரியவந்துள்ளது. சிந்துவெளி ஆராய்ச்சிகளில் பெரும் சாதனை படைத்த ஆய்வாளர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களும் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மைகேல் விட்சல் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களையும் முன்பு கடுமையாக விமரிசனம் செய்துள்ளார். “ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஒரு கற்றுணர்ந்த சான்றோர் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். இருந்தும் (கல்வி நெறிமுறைகளைக் கருதி??) மகாதேவன் அவர்களின் நூல் ஒன்றை ஹார்வார்ட் பல்கலை மூலமாக அமேரிக்காவில் வெளியிடவும் அவர் ஏற்பாடு செய்தார். மகாதேவனே இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தும் இருக்கிறார். தனது “Early Tamil Epigraphy: From the Earliest to the Sixth Century A. D” என்ற நூலின் அறிமுக மடலில், “I received an offer from Prof. Michael Witzel, the Department of Sanskrit and Indian Studies, Harvard University, USA, to have the work published in the Harvard Oriental Series (HOS). I thank him for honour and I am also grateful to my friend, Mr N. Ram, Frontline, Chennai, who had earlier introduced me to Prof. Witzel”, என்று பதிவு செய்துள்ளார். அதே கல்வி நெறிமுறைகளைக் கருதி, மகாதேவனும் விட்சல் அவர்களது சென்னை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாரோ என்னவோ?
ஆனால் விட்சலையும் அவருடைய ஹிந்து விரோத, இந்திய விரோத நடவடிக்கைகளையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் சில ஆர்வலர்கள், அவர் பழம்பெருமை வாய்ந்த ஸம்ஸ்க்ருத கல்லோரியிலேயே கால் வைக்கப் போகிறார் என்று அறிந்ததும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஒரு பாரம்பரிய மிக்க நிறுவனமே, ஒரு ஹிந்து விரோதியை அங்கீகரித்து பெருமை சேர்த்தது போலாகுமே என்று மனம் வருந்தியிருக்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார்கள். சரஸ்வதி நதி ஆராய்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் கல்யாணராமன், விஜில் (VIGIL) இணையதள ஆசிரியர் திருமதி ராதா ராஜன் மற்றும் கட்டுரையாளர் திரு பி ஆர் ஹரன் ஆகியோர் ஸம்ஸ்க்ருத கல்லூரி நிர்வாகிகளையும், ஐராவதம் மகாதேவனையும் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய கடைசி நிமிடம் வரை முயற்சி செய்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி ரத்து செய்யப் படவில்லை என்பது திங்கள் மாலை தெரிந்து விட்டது. ஒரு கல்வி சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிக்கு சிறிதும் பொருந்தாத வகையில் ஸம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் காவல் பாதுகாப்பு வேறு போடப் பட்டிருந்தது. எதிர்ப்புக் குழுவினரில் சிலர் ஸம்ஸ்கிருத கல்லூரி வளாகத்திற்கு உள்ளே சென்று மேற்குறிப்பிட்ட விவரங்கள் அடங்கிய ”தெரிந்து கொள்ளுங்கள் மைகேல் விட்சலை” (Know your Witsal) என்ற பிரசுரத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டனர்.
வேறு சிலர் வெளியில் வந்து மைகேல் விட்சலை எதிர்த்து எழுதப்பட்ட சில அட்டைகளை வைத்துக் கொண்டு வாசலில் நின்றபோது காவல் துறையினர் விசாரணை செய்ய, நடந்தவற்றை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். அப்போது அங்கே சென்று சேர்ந்து கொண்ட ஹரன் அவர்களும் தான் கையில் கொண்டு சென்ற நோட்டீஸ்களை நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் கொடுக்க முயன்றபோது, காவல் துறை அதிகாரிகள் நிகழ்ச்சி முடிந்து வந்திருந்தவர்கள் வெளியே போகும்போது கொடுங்கள் என்று சொன்னவுடன் சரி என்று நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து பின்னர் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் இருந்து மைகேல் விட்சலைப் பற்றிக் கேட்டறிந்த காவல் துறையினர் “இப்பேர்ப்பட்ட ஒருவரை கூப்பிட்டு இங்கு கௌரப்படுத்த வேண்டுமா!” என்று வியந்து, “சீருடையில் இல்லையென்றால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொண்டு நோட்டீஸ்களை கொடுத்திருப்போம்” என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
மைகேல் விட்சலின் வருகைக்கு ஆட்சேபம் தெரிவித்தவர்கள் சமூக விரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ, அல்லது தீவிரவாதிகளோ அல்ல. சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் அறிஞர்கள், படைப்பாளிகள் அந்தஸ்தில் உள்ளவர்கள். அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால், விட்சலுடன் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்க சில நிமிடங்கள் ஒதுக்கியிருந்தால், நிகழ்ச்சியை நடத்துகின்றவர்கள் பெரிதும் பாராட்டப் பட்டிருப்பார்கள். ஆனால் ஏதோ சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முயல்வதைப் போல காவல் துறைப் பாதுகாப்பு கேட்டதும், கருத்தரங்கத்தில் மைகேலிடம் கேள்விகள் கேட்க அனுமதிக்காததும், அவரின் “மேதா விலாசம்” வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்கான திட்டமிடலோ என்று சந்தேகப் படத் தோன்றுகிறது. சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட ஒரே அகாடமிக் நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும்!
நிகழ்ச்சி நிகழ்வுகளும், உரைகளும்
(நிகழ்ச்சிக்குச் சென்று கலந்துகொண்ட நண்பர், கட்டுரையாளர் மற்றும் வரலாற்று ஆர்வலர் திரு வேதப்ரகாஷ் அவர்களிடம் கேட்டுப்பெற்ற தகவல்களைத் தருகிறேன்).
நிகழ்ச்சியில் வரவேற்புரை அளித்த டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், “ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் சொற்பொழிவாற்ற மிகவும் பொருத்தமானவர் திரு மைகேல் விட்சல். ஜெர்மனியில் பிறந்து 29 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மைகேல் விட்சல் அவர்களுக்கு இப்போது 66 வயது ஆகிறது. இந்தியர்களாகிய நாம் ரிக் வேதத்தை மறந்து விட்டோம். ஆனால் விட்சல் தினமும் அதைப் பாராயணம் செய்கிறார் . ரிக் வேதம் 4,32,000 ஒலிகளை உடையது. அது 8000 ஆண்டுகள் பழமையானது என்று திலகர் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அதற்கும் முன்னதாக அதன் காலம் இருக்கும். ஆனால் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் அதை ஒத்துக் கொள்வதில்லை” என்று பேசினார்.
பின்னர் ராமர், கிருஷ்ணர் காலங்கள், தொல்காப்பியத்தின் பெருமை, ஸம்ஸ்க்ருத-தமிழ் மொழிகளின் பிணைப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசிய டாக்டர் மகாலிங்கம் அவர்கள், “தொலைந்து போன லெமூரிய கண்டத்தைப் பற்றிய விவரங்களையும் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அச்சமயத்தில் இருந்த மொழிகளைப் பற்றியும், மைகேல் விட்சல் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். மைகேல் விட்சலைப் பற்றி இணையத்தில் உள்ள தகவல்களை வைத்தும், ஹார்வார்ட் பல்கலையில் இருக்கிறார் என்கிற காரணத்தினாலும், அவர் “ரிக் வேதம் தோற்றுவித்த மொழி மற்றும் கலாசாரம்” என்கிற தலைப்பில் பேச வந்திருக்கிறார் என்கிற காரணத்தாலும், அவர் தினமும் ரிக் வேதம் பாராயணம் செய்கிறார் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாகப் பட்டது. மேலும் சற்றும் வரலாற்று ஆதாரம் இல்லாத லெமூரிய கண்டம் பற்றி பேசியதும் வியப்பாக இருந்தது. ஆதாரம் இல்லாத ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் சொன்னதும் ஆச்சரியம் தான்.
ஸம்ஸ்க்ருதக் கல்லூரியின் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் டாக்டர் S. சங்கரநாராயணன் அவர்கள் தலைமை உரையாற்றும்போது, “ரிக் வேதத்தின் காலம் 1000 BCE அல்லது 1500 BCE என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அது ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தையதா, ஹரப்பாவுடன் சேர்ந்ததா அல்லது ஹரப்பாவின் பின் வந்ததா என்றும் கூற இயலாது. 600 CE வருடம் வரை “சம்ஸ்க்ருதம்” என்ற வார்த்தை ஒரு மொழியைக் குறிப்பதற்காக உபயோகப்படுத்தப் படவில்லை. ஸம்ஸ்க்ருதக் கவிஞர் தண்டியின் காலத்திலிருந்து தான் அதை ஒரு மொழியாகக் குறிக்க ஆரம்பித்தனர். உண்மையில், “இங்கிலாந்து” மொழி “இங்கலிஷ்” என்றும் “பிரான்ஸ்” மொழி “பிரெஞ்சு” என்றும் இருப்பது போல பாரதத்தின் மொழி “பாரதி” என்று இருந்திருக்க வேண்டும். “ப்ரஹ்ம்மி பாரதி” என்றே அமரஸிம்ஹன் சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட யாகத்தில் “பாரதி” என்கிற வார்த்தை பல முறை உபயோகப் படுத்தப் படிக்கிறது. மேலும் பாரத தேசம் முழுவதும், மற்ற மொழிகளைப்போல் அல்லாமல் ஸம்ஸ்க்ருத மொழி பரந்துள்ளது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்” என்று சொன்னார்.
(BCE – Before Common Era, பொது சகாப்தத்திற்கு முன்பு. CE – Comman Era, பொது சகாப்தம். உலகம் முழுதும் வரலாற்றுப் புத்தகங்களில் இப்போது இந்த முறையைத் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இன்னமும் நாம் காலனிய வழக்கப்படி எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத கிறிஸ்துவை முன்வைத்து கி.மு, கி.பி என்று எழுதிக் கொண்டிருக்கிறோம்).
பின்பு அவர், “மைகேல் விட்சல் அவர்கள் “கதாரண்யகா” என்ற நூலை எழுதியுள்ளார்கள். அதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் ‘தைத்திரிய உபநிடதம்’ படிக்க வேண்டும். மேலும் இவர் ஹார்வார்ட் பல்கலையில் பேராசிரியராக இருப்பதாலும், இங்கே உரையாற்றுவதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவர்” என்றார். பிறகு மாக்ஸ் முல்லர் பெயரை ‘மோக்ஷ மூலர்’ என்று ஆக்கி அவரைப் புகழ்ந்து முன்பு எழுதப் பட்ட ஒரு ப்ழைய ஸ்லோகத்தில் அதற்குப் பதிலாக ”விருத்த சீலர்” (விட்சல்) என்ற பெயரைப் போட்டு அதே ஸ்லோகத்தைச் சொல்லி விட்சலைப் பாராட்டினார் !
பின்பு உரையாற்ற எழுந்த மைகேல் விட்சல், “எனக்கு இங்கு வந்ததில் மகிழ்ச்சி. நாளை குரு பூர்ணிமா தினம் ஆதலால் நாம் நம் ஆசிரியர்களை நினைத்து வணங்க வேண்டிய தினம். நான் இரண்டு வருடங்கள் அலகாபாத்தில் படித்துள்ளேன். அந்த ஆசிரியர்களை இப்போது நினைவு கூர்கிறேன். நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. நான் சொல்பவை உங்களுக்கு ஒத்துப் போகாமல் இருக்கலாம். நீங்கள் கேள்விகள் கேட்கலாம். நான் பதில் சொல்லாமலும் இருக்கலாம். உங்களுக்கு வேறு அபிப்பிராயங்களும் இருக்கலாம். இந்தியாவில் பல சம்ப்ரதாயங்கள் உள்ளன. என் பார்வையையும் ஒரு சம்ப்ரதாயமாகக் கொள்ளுங்கள். என்னுடன் நீங்கள் ஒத்துப் போகாவிட்டாலும் தயவு செய்து என் உரையைக் கேட்டுப் பின்னர் கேள்விகள் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்.
அவர், “ஆரியப் படையெடுப்பு பற்றி அரசியல் பேச நான் விரும்பவில்லை, என்னுடைய பேச்சு ரிக் வேதத்தைப் பற்றிய உண்மைகளைக் கொண்டதாக இருக்கும், அதில் உள்ள அறிவியல் தகவல்களைப் பற்றி என் உரை இருக்கும். இங்கே அந்த மாதிரியான அறிவியல் அறிஞர்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் ஒருமித்த கருத்திற்கு வரவேண்டும். ரிக் வேதம் பழைமையானது தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது உலோகக் காலத்தைச் (Bronze Age) சேர்ந்த படைப்பு தானே தவிர கற்காலமோ (Stone Age) அதற்கு முந்தைய காலமோ அல்ல. ரிக் வேதம் ஒரு குறிப்பிட்ட கவியலங்காரத் தன்மையுடன் ரிஷிகளால் இயற்றப் பட்டது. அதற்கு பூகோள எல்லையுள்ளது. அதில் உள்ளது பாணினி ஸம்ஸ்க்ருதமோ, காளிதாச ஸம்ஸ்க்ருதமோ அல்லது அதர்வண வேத ஸம்ஸ்க்ருதமோ அல்ல. காலப்போக்கில் மொழியியல் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அதற்கேற்றாற்போல் வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின் அர்த்தங்களும் கூட மாறுகின்றன. இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. இமயமலை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளும் கீழே நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய வார்த்தைகளும் வெவ்வேறானவை. கவியலங்காரத்தன்மையுடன் பேசப்பட்ட மொழிகள் கிரேக்க மொழியுடன் ஒற்றுமை காணும் பழைய மொழிகளை “வேதத்திற்கு முந்தைய , முந்து ஈரானிய மொழிகள்” (Before Vedic – Proto Iranian) என்றும், “ரிக் வேத – அவெஸ்தா காலத்திய மொழிகள்”’ (Rig Vedic – Avesthan) என்றும் இரண்டு வகைப் படுத்தலாம்” என்று கூறினார்.
பின்னர், “ரிக்வேத சோமபானச் சடங்கில் முக்கிய இடம் பெறும் “சோமா” செடி போன்றவைகள் மத்திய ஆசியாவில் கண்டுபிடிக்கப் பட்டு, பின்னர் ஈரானிலும், இந்தியாவிலும் கண்டு பிடிக்கப் பட்டன. மேலும் சில வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்கும் போது, மத்திய ஆசியாவிலிருந்து மக்கள் (ஆரியர்) குடிபெயர்ந்து, ஈரான் வழியாக இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. (ஆரியர் குடிபுகுதலைப் பற்றிப் பேச மாட்டேன் என்றவர் மெதுவாக அதைத் தன பேச்சில் புகுத்துவதைக் கவனிக்க வேண்டும்) – மதத்தின் உயர் கட்டத்தில் பிராம்மணர் / க்ஷத்திரியர் போன்ற மேன்குடி மக்கள் ஆளுமை செலுத்தினர். கீழே தாச-தசயூக்கள் வைக்கப் பட்டனர். நகரங்களும் அதற்கேற்றவாறே அமைக்கப் பட்டன. சமீபத்தில் ஹரியானாவில் நடந்த அகழ்வாராய்ச்சியும் இதையே காட்டுகின்றது. ஆகவே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குழுமங்களாக மக்கள் இருந்தனர். அவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசினர். திராவிடர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பேசினாலும் ஆரம்ப காலங்களில் திராவிட நிலப்பரப்பு என்பது மகாராஷ்ட்ரம் மற்றும் சிந்து நதி வரை பரவியிருந்தது. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஒரிஸ்ஸா ஆகியவை ‘ஆஸ்திரேலிய-ஆசிய’ (Austro-Asiatic) நிலப் பரப்புகளாக இருந்தன. ஸம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் (ஆரியர்) ஆடு மாடுகளுடன் ஒவ்வொரு இடத்திற்கும் நகர்ந்தனர். ஆங்காங்கே உள்ள மக்களுடன் பழகிக் கலந்தனர். அரசர்களின் பெயர்களைப் பார்த்தாலே நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். ரிக் வேதத்தின் கடைசி அத்தியாயங்களில் இவை சுவாரஸ்யமாக சொல்லப் பட்டுள்ளன” என்று பேசினார்.
மேலும், “சிவன், பசுபதி என்று நீங்கள் சொல்லக்கூடிய உருவங்கள் டென்மார்க் போன்ற இடங்களிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. எனவே அவை சிவன் என்ற கடவுள் இல்லை என்பது உறுதியாகிறது. இதே போல் தான் மகிஷாசுரமர்த்தினி உருவமும். பிற்காலங்களில் இந்த உருவம் ஹிந்து மதத்தில் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை! தற்போது மரபணு விஞானம் மூலம் தகவல்கள் சேகரிக்கப் படுகின்றன. ஒருவருடைய எச்சிலைக் கொண்டு அவரின் பெற்றோர்கள் உறுதி செய்யப் படுகின்றனர். உங்களில் எத்தனை பேர் மரபணு விஞானத்தைக் கவனித்து வருகிறீர்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் இந்திய விஞானிகள் கூட காஷ்மீர பண்டிட்களும், தென்னிந்திய மலை வாழ் மக்களும் ஒரே மரபணு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர். இருந்தாலும் அதற்கு அப்பாற்பட்டவர்கள் அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற இடங்களில் உள்ளார்கள் (!?). இத்துடன் என் உரையை நிறுத்திக் கொள்கிறேன். கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்” என்று முடித்தார்.
ராமகிருஷ்ண ராவ் என்பவர் வேத காலக் கடவுள்கள் பற்றியும், சம்ப்ரதாயங்கள் பற்றியும், அவற்றுக்கும் மொழி ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி ஆகியவையுடனான தொடர்பு பற்றியும் கேட்ட இரண்டு கேள்விகளில், ஒன்றிற்கு சொதப்பலான பதிலும், மற்றதிற்குப் பதில் சொல்லாமலும் இருந்தார் மைக் விட்சல். ராமகிருஷ்ண ராவ் மேலும் தொடர்ந்த போது, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குறுக்கிட்டு நேரமின்மை காரணமாக இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறியது, மைகேல் விட்சலைக் காப்பாற்றும் செயலாகவே இருந்ததாகத் தோன்றியது. பின்னர் ராமகிருஷ்ண ராவ் விட்சலின் முகவரி அட்டையை வாங்கிக் கொண்டார்.
ஸம்ஸ்க்ருத கல்லூரியின் முதல்வர் தேவி பிரசாத் அவர்கள் தன் நன்றியுரையில், “பாரத கலாச்சாரத்தையும் ரிக் வேத கலாச்சாரத்தையும் பிரிக்க முடியாது. தாவரங்களையும், மலைகளையும், நதிகளையும், குறிப்பிட்டுச் சொல்லி தெய்வங்களாக இயற்கையை வணங்குவது பாரத பாரம்பரியம். அவற்றை மைகேல் விட்சல் போன்ற மேற்கத்தியர்கள் எப்படி வேண்டுமானாலும் திருத்திப் பேசலாம். ஆனால் இங்கே கொடுக்கப் பட்டுள்ள தலைப்பில் பேசுவதை முடிக்க வேண்டுமானால் விட்சல் அவர்களுக்கு மேலும் சில மணிநேரங்கள் தேவைப்படும்” என்று ஆணியடித்தாற்போல் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் முப்பது பேர்கள் தான் இருப்பார்கள். பலருக்கு விட்சலின் ஆங்கிலம் புரியவில்லை. சிலர் பாதியிலேயே எழுந்து சென்று விட்டனர். ஓரளவிற்கு விவரம் அறிந்தவர்கள் அவர் உரையில் இருந்த தவறுகளையும், பேசும் பொருளைப் பற்றிய தெளிவின்மையையும், நன்றாகவே புரிந்து கொண்டு, “ரிக் வேதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல், நம் கடவுள்களை இல்லையென்று நம்மிடையே சொல்லும், காலாவதியாகிப்போன ஆரிய படையெடுப்பு மற்றும் இனவாதக் கோட்பாடுகளை கேட்பவர்களின் மேல் திணிக்க முயலும் ஒரு திறமையற்ற பேச்சாளரை ஸம்ஸ்க்ருத கல்லூரிக்கு கூட்டி வந்து பேச வைத்திருக்கிரார்களே” என்று நொந்து கொண்டனர்.
தலைமையுரை ஆற்றிய ஸம்ஸ்க்ருத பண்டிதர் டாக்டர் சங்கரநாராயணன் கூட, மைகேல் விட்சலின் உரையைக் கேட்டபின்னர், “சராசரிக்கும் மிகவும் கீழே தான் இந்த உரையை மதிப்பிட முடியும். ஹார்வார்ட் பல்கலையும் தரம் குறைந்து போய்விட்டது போலிருக்கிறது. இவரின் பேச்சைக் கேட்ட பின்னர், முன்னால் அவசரப்பட்டு இவரைப் பாராட்டிப் பேசிவிட்டோமே என்று வருத்தமுற்றேன்” என்று வருந்தினாராம்.
சென்னைப் பல்கலை நிகழ்வுகள்
மாமேதை மைகேல் விட்சலின் மதராஸ் விஜயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. எட்டாம் தேதி புதன் கிழமைக் காலை சென்னைப் பல்கலைக் கழக ஸம்ஸ்க்ருதத் துறையில் இதே போல் ஒரு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு நானும் நண்பர் வேதப்பிரகாஷ் அவர்களுடன் சென்றிருந்தேன். காலை பதினோரு மணிக்கு ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சிக்கு மொத்தம் “பதினைந்து” பேர்கள் வந்திருந்தினர். இதில் பத்து பேர்கள் துறை மாணவர்களே. மீதி ஐந்து பேர் (எங்களிருவரையும் சேர்த்து) தான் வெளியாட்கள். இவர்களை விட போலீசார்களின் எண்ணிக்கை அதிகம்.
சென்னைப் பல்கலையின் ஸம்ஸ்க்ருதத் துறைத் தலைவர் திரு தாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றும்போது, “மைகேல் விட்சல் அவர்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ஹார்வார்ட் பல்கலையிலிருந்து வந்திருக்கிறார் என்று சொன்னாலே போதுமானது. மேலும் அவர் ஏற்கனவே நம் நாட்டுக்கு வருகை தந்தவர் தான். நம் நாட்டின் நாகரிகங்களைப் பற்றியும் மொழிகளைப் பற்றியும் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்தவர். இங்கேயுள்ள நம் களஞ்சியத்தில் இருக்கும் நாம் சேகரித்துள்ள மூல ஓலைச் சுவடிகளைக் (original manuscripts) கண்டு செல்லவே வந்துள்ளார். இது தொடர்பான நம் செயல்முறைகளையும் காண ஆர்வம் கொண்டுள்ளார். நம்முடைய இந்தப் பணியானது 2012-ல் வெற்றிகரமாக முடிவடைந்துவிடும் என்று உறுதியளிக்கிறேன் – (இவர் நமக்கு உறுதியாளித்த்தாரா அல்லது மைகேலுக்கு உருதியளித்தாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு மைகேலின் காலில் விழாத குறையாக அவரை உயர்த்திப் பேசினார்) – இச்செயலை வெற்றிகரமாக முடிக்க பேராசிரியர் மைகேல் விட்சல் அவர்கள் நமக்கு வழி காண்பிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அவர் ரிக்வேதம், மொழியாராய்ச்சி ஆகிய முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசவிருக்கிறார். அதைக் கேட்டு புரிந்துகொண்டு நாம் நமது ஆராய்ச்சிகளைத் தொடர்வோம்” என்று கூறிமுடித்தார்.
ஐராவதம் மகாதேவன் சம்ஸ்க்ருதத்தில் குருவை வாழ்த்தும் பாடல் ஒன்றைச் சொல்லி ஆரம்பித்தார்.
திரு. தமிழ்ச் செல்வனின் கட்டுரை கிடைத்ததற்கு மறுநாள், திரு. ஐராவதம் மகாதேவன் ஆற்றிய உரையின் அதிகாரபூர்வ வடிவமும் எங்கள் பார்வைக்கு வந்தது. அந்த வடிவத்தில் கண்டபடி மகாதேவன் உரையின் சுருக்கம் இங்கே – ஆசிரியர் குழு.
.. பேராசிரியரின் உரை இதே நகரில் மற்றொரு இடத்தில் நடந்த போது, சில வழிதவறிய மக்கள் அந்தக் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கத் திட்டமிட்டிருந்தனர். காவல் துறையினர் பாதுகாப்பால், அந்தக் கூட்டம் அமைதியாக நடந்தேறியது. அங்கும் வெளியே நின்று சிலர் பிரசுரங்களை விநியோகித்தனர். அவர்களுக்கு என்ன பிரசினை? அவர்களுக்கு கருத்து ரீதியாக அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆனால் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள அதையே காரணம் காட்டுவது ஒருபோதும் சரியல்ல. நமது கலாசாரம் அதிதி தேவோ பவ என்று கூறுகிறது, அதாவது “விருந்தினரைக் கடவுள் போன்று போற்றுங்கள்”.
சிந்துவெளி எழுத்துக்கள் விஷயத்தில் எனக்கும், விட்சலுக்கும் உள்ள முரண்பாடு உலகம் அறிந்தது. சிந்துவெளி லிபி ஒரு எழுத்துமுறையே அல்ல என்று அவர் கருதுகிறார். ஆனால் அது ஒரு முந்திய திராவிட மொழியின் எழுத்துவடிவமே என்பது எனது உறுதியான கருத்து. அதற்காக ஒரு துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டு விடலாமா? கூடவே கூடாது. எனது எழுதுகோலை எடுத்து அவரது ஒவ்வொரு சொல்லையும் மறுத்து எழுதுகிறேன். அது தான் கற்றறிந்த ஒருவர் செய்யக் கூடியது.
இந்து மதத்தின் சர்வமத சமரசம் என்ற கொள்கையானது மேற்கத்திய உலகின் மதச்சார்பின்மை என்ற கொள்கையை விட மிக உயர்ந்தது என்று நான் உறுதிபடக் கூறுவேன். மேற்குலகில் சர்ச்சுக்கும், அரசுக்கும் இருந்த மோதலின் காரணமாக மதச்சார்பின்மை என்ற கருதுகோள் உருவானது. ஆனால் இந்தியாவின் கொள்கை அதை விட மிகவும் பழமையானது. புத்தரும், மகாவீரரும், வேதத்தை மறுத்தனர்; ஆயினும் நமது பன்முகப் பட்ட சமூகத்தில் அவர்களது மதங்களும் செழித்து வளரவே செய்தன.
தென்னகத்தின் சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று மகா ஆசாரியர்களும் மூன்றுவிதமான தத்துவக் கொள்கைகளை உருவாக்கினர். அவர்கள் ஒவ்வொருவரும் மூலநூல்களுக்கு பாஷ்யங்கள் எழுதித் தங்கள் கொள்கைகளை நாடு முழுவதும் சுதந்திரமாகப் பரப்பினர். இஸ்லாம் இங்கு வந்த பின்பு கூட கபீர்தாசர், குருநானக் என்று ஒருங்கிணைப்பு வழியில் குருமார்கள் தோன்றினர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கையில், இந்தப் பன்முகப் பட்ட சமுதாயத்தில் எதிர்த்தரப்பு மீது அவமரியாதையுடன் நடந்து கொள்பவர்கள் இந்த சமூகத்தின் ஒரு மிகச் சிறுபான்மையினர் தான், இந்தியாவின் இதயம் பத்திரமாக இருக்கிறது என்று மேன்மை தங்கிய விருந்தினருக்கு நான் கூறிக் கொள்கிறேன்.
2300 ஆண்டுகளுக்கு முன்பு அசோகன் பிராகிருத மொழியில் தன் கல்வெட்டில் கூறியதை நினைவு கூர்கிறேன் – ‘ எதிர்த் தரப்பு எப்போதும் மதிக்கப் பட வேண்டும். தன் தரப்பின் மீதுள்ள அதீத அன்பால் தனது தரப்பை வானளாவப் புகழ்ந்து பிறரது தரப்பை இழித்துரைப்பவன், கடைசியில் தனது தரப்பை வலுவிழக்கச் செய்கிறான். அதனால் சமன்வயம் (”ஸமவாயோ”) தான் உயர்வானது; இரு தரப்புகளும் மற்றவரது கொள்கைகளை மரியாதையுடன் கேட்டு ஆராய்வது தான் சிறந்தது.
அபிப்பிராய பேதங்கள் பற்றி இவ்வளவு பேசிய மகாதேவன் அவர்கள், எதற்காக விட்சலை சென்னைக்கு வரவழைத்துள்ளனர், யார் அல்லது எந்த நிறுவனம் சொல்லி இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன, என்பதைப் பற்றி மட்டும் ஏனோ வாய்திறக்காமல் இருந்து விட்டார்.
பின்பு ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஆற்றியது போலவே இங்கும் ஏனோ தானோவென்று ஒரு உரையாற்றினார் மைகேல் விட்சல் அவர்கள். உரையின் இடையே பல்கலையின் ஸம்ஸ்க்ருதத் துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி இரண்டு மூன்று சந்தேகங்கள் கேட்டார். பின்னர் உரை முடிந்த பின்னர் அதே பெண்மணி நன்றி உரையாற்றினார்.
அதன் பிறகு விரும்புபவர்கள் ஓரிரு கேள்விகள் கேட்கலாம் என்று சொல்லப் பட்டது. துறையைச் சேர்ந்த ஒருவர் மைகேலின் உரையை வானளாவப் புகழ்ந்து பேசினார். அதற்குப் பின்னர் ராமகிருஷ்ண ராவ் கேட்ட சில கேள்விகளுக்கு சரியான பதில்களை மைகேலால் தர இயலவில்லை. அந்தக் கேள்விகளுள் ஒன்று, “இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாக்ஸ் முல்லர் அவர்கள் சொல்லியதையே தான் நீங்களும் சொல்கிறீர்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இதையே சொல்லிகொண்டிருப்பீர்கள்?” என்பதாகும். அதற்கு விட்சல், “பத்தொன்பதாம் நூற்றாண்டு மேற்கோள்களை இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படி காட்ட முடியும்? அவ்வாறு காட்டுதல் எப்படி சரியாகும்?” என்று கூறி தான் மாக்ஸ் முல்லர் வழியில் செல்லவில்லை என்பது போல சாதிக்க முயன்றார். ஆனால் ராமகிருஷ்ண ராவைத் தடுக்கும் முயற்சியில் துறைத் தலைவர் தாஷ் அவர்களும், மேலும் சிலரும் ஈடுபட்டனர். திரு தாஷ் அவர்கள் ராமகிருஷ்ண ராவிடம், “தனியாக ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்து அதில் கேள்விகள் கேட்கலாம்” என்று கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார். அதன் பிறகு திரு ஸ்ரீனிவாசன் என்பவர், “அறிவியல் அறிஞர் டார்வின் அவர்களின் பரிணாமக் கோட்பாடுகளை உங்களின் பிலாலாஜி ஒத்துக் கொள்கிறதா?” என்று கேட்டதற்கும் மைகேல் சரியாகப் பதில் சொல்லவில்லை.
இதனிடையே நம் “தமிழ் இந்து” இணைய தளத்தில் கேட்கப்பட்ட்டுள்ள ஐந்து கேள்விகள் அடங்கிய தாளை எடுத்துக்கொண்டு நான் மைகேல் விட்சல் அவர்களை அணுகி என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, “என்னிடம் சில கேள்விகள் உள்ளன அவற்றிற்குப் பதில் வேண்டும்” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, மகாதேவன் “மதிய உணவிற்கு நேரம் ஆகிவிட்டது. நாம் செல்லலாம்” என்று சொல்ல, விட்சல் என்னிடம் தன்னுடைய கார்டு ஒன்றைக் கொடுத்து எனக்கு இ-மெயில் அனுப்புங்கள் என்று சொல்லிப்போனார். பிறகு ஸம்ஸ்க்ருதத் துறை ஆசிரியர்கள்/மாணவர்கள் விட்சலுடன் புகைப் படம் எடுத்துக்கொள்ள கூட்டம் முடிந்தது. அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் தங்களுக்கு ஜென்மசாபல்யம் கிட்டியது போல் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அன்று மாலை ரோஜா முத்தையா நூலகத்திற்கும் மைகேல் விட்சல் விஜயம் செய்துள்ளார்.
இதனிடையே ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று மைகேல் விட்சல் பாண்டிச்சேரி சென்று பிரெஞ்சு மொழியாராய்ச்சி நிலையத்தில் (French Institute of Indology) பல ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து பேசிவிட்டு வந்திருக்கிறார். சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முத்திரைகளும், கல் பட்டயங்களும் (tablets) ஹிந்து மத சம்பந்தம் இல்லாதவை; அவற்றில் மொழியின் வடிவங்களோ, எழுத்துக்களோ இல்லை; ரிக்வேதம் ஹிந்து மத சம்பந்தம் இல்லாதது; வேத நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; என்றெல்லாம் பேசியிருக்கிறார். அங்கிருந்து கிடைத்த செய்திகளின் படியும், இவரின் மொழியறிவும், மற்ற மொழியாராய்ச்சி விஷயங்கள் பற்றிய ஞானமும் அவ்வளவாக அவர்களை ஈர்க்கவில்லை என்பது தெரிந்தது.சென்னை வருவதற்கு முன்னால் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போய் வந்திருப்பதும் நமக்குத் தெரியவந்தது. ஒன்பதாம் தேதி புது டில்லி சென்றுள்ளார். அங்கு ஜவஹர்லால் நேரு பல்கலையிலும் (JNU), இந்திய சர்வதேச மையத்திலும் (India International Centre) “சொற்பொழிவு” ஆற்றியிருக்கிறார். ஆனால் அங்கு வருகை தந்தவர்களும் அதிருப்தியே அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக இந்திய சர்வதேச மையத்தில் தலைமை தாங்கிய கபிலா வாத்ஸ்யாயனன் மைகேலின் பல கோட்பாடுகளை ஒத்துக்கொள்ளவில்லையாம்.
1. மைகேல் விட்சலின் இந்தியப் பயணத்திற்குப் பின்னணி என்ன? இவருடைய பயணத் தகவல்கள் ஏன் ரகசியமாக வைக்கப் பட்டன? இவர் எதற்காக இப்படி ஒரு ரகசியமானப் பயணத்தை மேற்கொண்டார்?
2. இவர் அரசாங்க விருந்தினராக வந்துள்ளாரா? இல்லையென்றால் இவரை வரவழைத்த தனியார் நிறுவனம் எது? அல்லது இவரை வரவழைத்த தனி நபர்கள் யாவர்? எதற்காக இவரைப் போல் சராசரிக்கும் கீழான ஒருவரை “மேதை” என்று சொல்லி வரவழைக்க வேண்டும்?
3. சாதாரணமாக “வெளிநாட்டு அறிஞர்” என்கிற போர்வையில் யார் வந்தாலும் அவர்கள் பின்னே ஓடும் நம் ஊடகங்கள், குறிப்பாக இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக யார் பேசினாலும் பெரிதும் விவரிக்கின்ற ஊடகங்கள், ஏன் இவர் உரையாற்றியதை செய்தியாகவோ, விமரிசனமாகவோ மக்களுக்குத் தெரிவிக்கவில்லை?
4. மைகேல் விட்சல் தனியாக வந்திருக்கிறாரா? அல்லது ஒரு குழுவுடன் வந்திருக்கிறாரா? குழுவுடன் வந்திருந்தால் மற்றவர்கள் எங்கெல்லாம் சென்றனர்? என்ன மாதிரியான தகவல்களை சேகரித்தனர்? நம்முடைய பல்கலைகளில் உள்ள நூர்களஞ்சியங்களில் உள்ள பொக்கிஷங்கள் ஏதாவது இவருக்குக் கொடுக்கப் பட்டனவா? அல்லது விற்கப் பட்டனவா?
5. ஸம்ஸ்க்ருதக் கல்லூரி எதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டது? மத்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற கல்லூரி என்பதால் மத்திய அரசின் வற்புறுத்தல் இருந்ததா? அவ்வாறு வற்புறுத்தச்சொல்லி அமெரிக்க ஸ்தாபனங்கள் மத்திய அரசின் மீது அழுத்தம் தந்தனவா?
6. கிறிஸ்துவப் பாதிரிகள் சமீபத்தில் மும்பையில் ஹிந்து மத குருமார்களுடன் நடத்திய மத நல்லிணக்கப் பேச்சு வார்த்தையின் விளைவாக இவருடைய பயணம் மேற்கொள்ளப் பட்டதா? சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் சென்னை வந்து போன பிரான்சிஸ் க்ளூனி என்கிற ஏசுசபை பாதிரியார் அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறார். அவர் வைஷ்ணவா கல்லூரியில் பேச இருக்கிறார். இவர்கள் ஏன் லயோலா, ஸ்டெல்லா மேரி, ராணி மேரி, கிறிஸ்துவ மகளிர், போன்ற கிறிஸ்துவ கல்லூரிகளில் தங்கள் “சொற்பொழிவை” வைத்துக் கொள்ளாமல் ஹிந்து கல்லூரிகளாக தேர்ந்தெடுக்கின்றனர்? இந்து நிறுவனங்களில் உரையாற்றிவிட்டு, நாளை அமேரிக்கா சென்று சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தித்தேன் என்று பெருமை பீற்றவா? இந்த மாதிரியான அரை வேக்காட்டு அறிஞர்களுக்கு, தீய உள்நோக்கம் கொண்ட மனிதர்களுக்கு, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் ஏன் உதவுகின்றனர்?
7. மைகேல் விட்சல் நிதி திரட்டுவதற்காக இந்தியா வந்துள்ளாரா? தற்போது உலகப் பொருளாதாரம் அடிவாங்கிய சூழ்நிலையில், ஹார்வார்ட் பல்கலை கூட கிட்டத்தட்ட முப்பது சதவிகித சொத்துக்களை இழந்துள்ளதாகச் சொல்லப் படுகிறது. அங்கு விட்சலின் “திறமை” மீது மிகவும் அதிருப்தி நிலவுவதாகப் பேசப் படுகிறது. கலிபோர்னிய பாட நூல் வழக்கில் ஹிந்துக்களுக்கு எதிராக மைகேல் விட்சல் நடந்து கொண்டதில் ஹார்வார்ட் பல்கலையின் பெயர் மிகவும் கெட்டுப் போயுள்ளது. அமேரிக்கா வாழ் இந்திய மக்களிடையே ஹார்வார்ட் பல்கலையின் மேல் மிகவும் அதிருப்தி நிலவுவதால், ஹார்வார்ட் பல்கலை விட்சல் மீது கோபம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்கப் பலகலைகள் தங்கள் ஆசிரியர்களுக்கு சாதாரணமாக ஒன்பது மாதங்கள் தான் சம்பளம் வழங்குகின்றன. கோடை கால மூன்று மாதங்களுக்கான பயிற்சி வகுப்புகளையோ, அல்லது ஆராய்ச்சிக்கான நிதியையோ, அவர்களாகவே தான் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். ஹார்வார்ட் சம்ஸ்க்ருத துறை அம்மாதிரி எந்த ஏற்பாடும் செய்ய நிதி ஒதுக்கவில்லை. எனவே நிதி திரட்டுவதற்காக இவர் இந்தியா வந்துள்ளார் என்கிற பேச்சையும் ஒதுக்கி விடமுடியாது என்று விவரம் அறிந்தோர் கூறுகிறார்கள். மேலும் தன சுயலாபத்திற்காகவும் நிதி திரட்டக் கூடியவராக விமரிசிக்கப் படுகிறார் விட்சல். பாகிஸ்தானில் பிரசுரமாகும் “டான்” (DAWN) பத்திரிகையின் இணைய தளத்தில், தன்னை ஒரு “ஹிந்து-எதிரி” என்று கூறிக் கொண்டு தன “சேவைகளை” விளம்பரப் படுத்தியுள்ளார். எனவே, இவரை நம் நாட்டில் ஏன் உரையாற்ற அனுமதிக்கவேண்டும்?
8. கலிபோர்னிய பாட நூல் வழக்கில் மைகேல் விட்சல் ஹிந்துக்களுக்கு எதிராக வேலை செய்தபோது அவருக்கு ஆதரவாக Dalit Freedom Network (தலித் விடுதலை கூட்டமைப்பு) மற்றும் Dalit Solidarity Forum (தலித் ஒருங்கிணைப்பு மையம்) என்ற பெயரில் உலாவும் கிறிஸ்தவ முகமூடி அமைப்புகள் இயங்கின. தலித் ஒருங்கிணைப்பு மையயத்தின் தலைவர் பாதிரி ஜோசப் டிஸோஸா அகில இந்திய கிறிஸ்துவ சபையின் தலைவராகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதிலிருந்தே இந்தியாவில் தலித் மக்களை ஹிந்து சமூகத்திலிருந்து பிரித்தாள கிறிஸ்துவ சர்ச் சதி செய்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தலித்களிடையே மாபெரும் மதமாற்ற முயற்சிகளும், இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம் என்று பொய் சொல்லி மதம் மாற்றிய பிறகு தலித் கிறிஸ்துவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு ஷெட்யூல்ட் பிரிவு இந்துக்களின் இடங்களை கவரும் முயற்சிகளும் நடை பெறுவதும், இதன் தொடர்ச்சியான சதி தான். இம்மாதிரியான இந்தியாவிற்கு எதிரான சதிகளில் பங்கு வகிப்பவர் மைகேல் விட்சல், ஸ்டீவ் பார்மர், பிரான்சிஸ் க்ளூனி, போன்றவர்களாவர். அப்படி இல்லை என்றால் கலிபோர்னிய பாட நூல் வழக்கில் ஹிந்துக்களுக்கு எதிராக ஏன் தன்னை இணைத்துக் கொண்டார்? பதில் சொல்வாரா மைகேல் விட்சல்? உண்மையான விளக்கம் தருவாரா?
இந்த நாடு இந்து நாடு. இந்த நாட்டு மக்கள் இந்து மக்கள். இந்த நாட்டின் கலாசாரம் இந்து கலாசாரம். இந்த நாட்டின் தத்துவம் இந்துத்துவம். வேதங்களும், இதிதாசங்களும், உபநிடதங்களும், புராணங்களும் இந்த நாட்டின் பழம் பெருமைகளையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விளக்கிக் கூறுபவன. சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்பது நமது வேத நாகரிகமே. இங்கே ஆரிய-திராவிட இன வாதங்கள் வெள்ளையரால் ஏற்பாடு செய்யப் பட்ட பொய்யும் புளுகும் புனைச்சுருட்டும் கலந்த, சற்றும் ஆதாரம் இல்லாத கட்டுக் கதைகள் என்று நிரூபிக்கப் பட்டுவிட்டன.
மத மாற்றம் செய்ய கலாசாரக் களவில் (Inculturation) ஈடுபட்ட ராபெர்ட் நொபிலி போன்ற பாதிரிகளும், இந்துக்களை பிரித்தாள வழிவகை செய்த மாக்ஸ் முல்லர் போன்ற விஷமர்களும், காட்டிய வழியில் சிறிதும் வெட்கமோ தயக்கமோ இன்றி பயணிப்பவர் தான் மைகேல் விட்சல் போன்றோர். பண்பாட்டு ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி என்கிற போர்வையில் தங்களுடைய தீய கோட்பாடுகளை நம் மேல் திணித்து நம்மை மாற்றி, நம் நாட்டையும் கிறிஸ்துவ நாடாக மாற்றுவதே இவர்களின் ஒரே நோக்கம். இவர்களை அழைத்து வந்து நம்மிடையே உரையாற்ற வைத்தால் நாம் இவர்களுக்கு அங்கீகாரம் அளித்து விடுகிறோம் என்பதை உணர வேண்டும்.
நாம் செய்கின்ற மிகப் பெரிய தவறாகும் அது. இவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களாக வந்தால் வாதம் புரிந்து தோற்கடித்து இவர்களை விரட்ட வேண்டும். வாதம் புரிய முடியாதென்று இவர்கள் சொன்னால் இவர்களைப் பேச விடாமல் துரத்த வேண்டும். நம் வேதங்களைப் பற்றியும், மொழிகளைப் பற்றியும், கலாச்சாரப் பாரம்பரியம் பற்றியும் நம் பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே உரையாற்ற பல வேத விற்பன்னர்களும், மொழியாராய்ச்சியாளர்களும், சான்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர். நமக்கு மைகேல் விட்சல் போன்ற ஒரு அரைகுறையான வெளிநபர் தேவையில்லை.
தன்மானமும் தேசப்பற்றும் கொண்ட எந்த ஒரு இந்தியனும் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது. இனியாவது இந்துக்கள் தங்கள் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். தங்களைச் சுற்றிப் பின்னப்படும் மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, போன்ற வலைகளை கிழித்தெறியவேண்டும். இந்த தேசத்தின் ஹிந்து அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு பாரத மாதா அருள் புரியட்டும்.
கொசுறு: தமிழ் இந்து தளத்தில் கேட்ட ஐந்து கேள்விகளை நான் விட்சல் அவர்களுக்கு அவர் சொல்லியபடி இ-மெயில் செய்து ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இன்று வரை பதில் வரவில்லை. மீண்டும் ஞாபகப் படுத்தி ஒரு மெயில் அனுப்பப்படும். ஆனாலும் பதில் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இருந்தால் தானே வருவதற்கு?!
Hats off to you Mr Tamilselvan, another Vivekanda in the making!!, May Lord Sri Ram bless you with long life and good health to contiue your good work
//அபிப்பிராய பேதங்கள் பற்றி இவ்வளவு பேசிய மகாதேவன் அவர்கள், எதற்காக விட்சலை சென்னைக்கு வரவழைத்துள்ளனர், யார் அல்லது எந்த நிறுவனம் சொல்லி இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன, என்பதைப் பற்றி மட்டும் ஏனோ வாய்திறக்காமல் இருந்து விட்டார்.//
இந்தக் கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமலேயே இருக்கின்றன என நினைக்கிறேன். ஐராவதம் மகாதேவன் போன்ற ஒரு அறிஞர் எப்படி விட்சலை அழைத்தார்? தெரியாமல் விட்சலை அழைத்துவிட்டாரா? எதிர்த்தரப்பு எப்போதுமே மதிக்கப்படவேண்டும் என்று கூறும் பிராகிருத மொழி, அவர்களை அழைத்துவந்து மதிக்கவேண்டும் என்று சொல்கிறதா என்ன? ஐராவதம் ஏன் அழைத்துவரவேண்டும் என்பதற்கே பதில் கிடைத்ததா இல்லையா? அல்லது விட்சலைப் பற்றித் தெரியாமல் அழைத்துவந்துவிட்டதாக தற்போதாவது ஐராவதம் சொல்கிறாரா? ஐராவதம் போன்ற அறிஞர்கள் இப்படிச் செயல்படுவதற்கான காரணங்கள் பற்றித் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
dear sir,
kindly write the english version also and release it in the appropriate forum.your perseverance will pay.
yours
subbu
Please visit http://www.irffanclub.blogspot.com to know more about Witzel and his gang !
My Comments: This incident shows that 1. The Indian scholars who arranged a meeting with this gentleman are under instructions to do so, which they do not admit. 2. There are some powerful media in our country, who are conniving with those who arranged for this gentleman’s ( I use the word gentleman advisedly to describe this person) trip . 3. There is a predominent anti-Brahmin sentiment among the elite in the education field. 4. Indian scholars, particularly the Vedic scholars who have mastered the six Vedangas are quite few and they are not counted among the educational elite. 5. There is no Vedic research worth the name in any of our Indian Universities; nor are there any Vedic research publications from any of these. 6. The Heads of the Samskrit departments in most of these Universities do not have work worth their positions or the emoluments drawn by them.
S.Chidambaresa Iyer 16 July 2009
Sir,
Precise report. If you have the English report it can be posted on other groups too.
Well said, you have done a great job.
I am the member of hindujagruthi samiti. Do you have this document in English?
I would like to publish this document in HJS website. Please reply for this mail.
Thanks a lot for your seva… Keep doing…
Ever in the service of Bharat Matha,
Srikumar S
http://www.hindujagruti.org –
To Educate about Hindu Dharma & To stop denigration of Hindu Dharma
http://www.sanatan.org
To spread the science of Spirituality and guide seekers in their spiritual practice.
http://www.SpiritualResearchFoundation.org
To guide seekers with intense desire for God-realisation and help them achieve their goal
பின்னணியையும், நடந்த செய்திகளையும் தெளிவாக, விரிவாக எழுதியிருக்கிறார் தமிழ்செல்வன், பாராட்டுக்கள்..
தமிழ்ஹிந்து தளம் அனுப்பிய கேள்விகளை நேரடியாக யாரேனும் விட்சலிடம் கொடுத்திருப்பார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தமிழ்செல்வன் மிகவும் முயற்சி செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி. இவரைப் போன்று மேலும் பல செயல்வீரர்கள் தமிழ் இந்து அறிவியக்கத்தினைக் களத்தில் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்ற முன்வர வேண்டும்.
Thank you Tamilselvan, your account is quite exhaustive of that day’s happenings as well as of the Prof. But from what you have said of the Prof’s credentials and contributions, I don’t think any sensitive reader will have any respect for him. But then, why Prof. Mahadevan should have got himself tied up in knots with this person, passes my comprehension.
Thanks a lot, very few will have the talent and patience to give such an exhaustive account.
By the way, Is Tamilselvan is your real name or a pseudonym? Before knowing you, i have known another Tamilselvan, a good short story writer from Kovil patti, belonging to a very wellknown family of dramatists and writers. But the rub is, he is soaked in leftist ideology that makes him insufferable when he talks about anything mounting that platform. See the irony of things, two men of polar extremes bearing the same name.
I am a nationalist Hindu. I am eager to have the english translation published
jai bharath matha
Jai Sanathan Dharma
இந்த கட்டுரை மைகேல் விட்சலுக்கு unfair ஆகத்தான் உள்ளது.. ஆதாரமற்ற `குற்றச் சாட்டுகள்` வைக்கப் பட்டுள்ளன. சில உதாரணங்கள்: ~சம்ஸ்க்ருதத்தில் சுத்தமாகப் புலமை இல்லை என்று கூறப் படுகிறது~ யாரால் அப்படி கூறப்படுகிறது, அப்படி சொல்பவர் என்ன ஆதாரத்தில் சொல்கிறார்?. அடுத்தது “இவர் ஆரிய திராவிட இனவாதம், ஆரியப் படையெடுப்பு ஆகிய ஆதாரம் இல்லாத, அறிவியலுக்கு ஒவ்வாத கோட்பாடுகளில் (அவை பொய் என்று தெரிந்தும்) நம்பிக்கை கொண்டு அவற்றைப் பரப்புவதற்கு பெரிதும் முயன்று வருபவர்.” இதல்லாம் கொஞ்சம் கூட ஆதரமற்றவை.
விட்சலின் ஹோம்பேஜ் இதோ: https://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm
அங்குள்ள கட்டுரைகளை நன்றாக படித்து விட்டு , அவர கருத்துகளை கணக்கிடுங்கள். வதந்திகள் , மூன்றாம் வாய் வழியாக கேட்டவை (~என்று கூறப் படுகிறது~) முதலியவற்றை தவிற்பது நல்லது.
நான் அவருடைய கட்டுரைகளை படித்துள்ளேன். அவர் பொதுவாக ‘மேற்கத்திய மொழியியல்’ மரபில் வருபவர்; ஆனால் இந்த கட்டுரையில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சரியில்லை. முக்கியமாக Autochthonous Aryans? The Evidence from Old Indian and Iranian Texts என்று சமீபத்தில் எழுதிய கட்டுரையை முதலில் படியுங்கள்.
ஜிஞ்ஜர்
excellent article
அன்புள்ள ஜிஞ்ஜர்,
தாங்கள் சொல்லும் சிலவிஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் சில விஷயங்கள் தவறானவை. விட்ஸலுக்கு சமஸ்கிருதத்தில் சுத்தமாகப் புலமை இல்லை என கட்டுரையாளர் சொல்வது தவறு என்றே நினைக்கிறேன். அதற்கான ஆதாரங்களை அவர்தாம் தர வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு விஷயத்தை நாம் புரிந்து கொள்வது நல்லது. தன்னை எதிர்ப்பவர்களை வில்லன்களாக அரக்கர்களாக சித்தரிக்கும் போக்கை இந்தியவியலில் உருவாக்கியவர் மைக்கேல் விட்சல். குறிப்பாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் (ஐராவதம் மகாதேவன் உட்பட) நம்பத்தகுந்தவர்கள் அல்ல என எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர் வெளிப்படையாகவும் சூசகமாகவும் வலியுறுத்தி வருகிறார். இங்கு கட்டுரையாளர் தமிழ்செல்வன் பயன்படுத்திய வார்த்தைகளை போலல்லாமல் அநாகரிக அரசியல் சண்டை வார்த்தைகளை அறிவியக்க வட்டத்தில் பயன்படுத்த தயங்காதவர் விட்ஸல். விட்ஸல் வைக்கும் பல முக்கியமான அவருடைய ஒரிஜினல் தேற்றங்கள் அறிவுலகில் அடிபட்டு போயுள்ளன அல்லது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. முண்டா முதல் “எழுத்தறிவற்ற சிந்து பண்பாடு” வரை இதுதான் கதியாக உள்ளது. இந்நிலையில் அறிவியக்கத்துக்கு அப்பால் விவாதங்களை அரசியல்படுத்தி தம்மை ஒரு மேதையாகவும், இந்திய வெறியர்களால் எதிர்க்கப்பட்டும் மேற்கத்திய உலகின் அறிவொளிக் கொடி ஏந்திய வீரபுருஷனாகவும் தம்மை முன்வைக்க விட்ஸல் செய்யும் முயற்சிகளில் ஒன்றே விட்ஸலின் சென்னை விஜயம்.
// By the way, Is Tamilselvan is your real name or a pseudonym? Before knowing you, i have known another Tamilselvan, a good short story writer from Kovil patti, belonging to a very wellknown family of dramatists and writers. But the rub is, he is soaked in leftist ideology //
வெ.சா சார்,
அவர் “தமிழ்*ச்*செல்வன்”. சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவரது ஐடியாலஜி இடதுசாரி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இவர் “தமிழ்செல்வன்”. இலக்கணப் பிழையுள்ள *தனித்தமிழ்*ப் பெயர் வைத்திருக்கிறார் (இதை முன்பும் ஒருமுறை கமெண்டில் போட்டிருக்கிறேன்) . ஆனால் ஸம்ஸ்க்ருதம், யோக்யதாம்சங்கள் என்றெல்லாம் எழுதுகிறார். ஏதாவது ஐடியாலஜி உங்களுக்குப் புரிகிறதோ? :)))
அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்
நான் இந்த கட்டுரையில் விட்சல் என்ன உரை ஆற்றினார் என்பதை அறிந்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் கட்டுரை “நிகழ்சி பற்றிய ஒரு நிகழ்சி”யாக தமிழ்செல்வன் ஆக்கிவிட்டார். விட்சல் என்ன சொன்னார் என்பது 3 பத்திதான், மற்றதெல்லாம் விட்சல் நம்பகத்தன்மையை குறைக்கும் முயற்சிதான். அறிவு உலகில் மகாதேவன் போன்றவர்களையே விட்சல் இந்தியர் என்ற காரணத்தால் நம்பத்தகுந்தவர் இல்லை என்று சொன்னார் என்றால், ஏன் மகாதேவன் புத்தகத்தை ஹார்வார்டில் பிரசுரிப்பதற்கு அழைப்பு விட வேண்டும், ஏன் மகாதேவன் விட்சலை புகழ வேண்டும்.. It does not add up.
“எழுத்தறிவற்ற சிந்து பண்பாடு” என்ற தேற்றத்தை முன் வைப்பதால் அவர் இந்தியா/இந்து எதிரியாக ஆகிவிடமாட்டார். சிந்து குறிகளை இதுவரை – 90 ஆண்டுகள் ஆராய்சி பிறகும் – திருப்திகரமாக படிக்க முடியாத்தால் அவை எழுத்தே அல்ல என யூகிப்பது பெரிய தவறு அல்ல. விஞ்ஞனமே ஹைபாதெசிஸ் முன் வைத்து அதை நிஜம் அல்லது பொய் என நிரூபித்துதான் முன்னேறுகிரது. அதனால் ஹைபாதெசிஸ் வைப்பவர்களின் good faith ஐ சந்தேகிப்பது சரியல்ல.
” அறிவொளிக் கொடி ஏந்திய வீரபுருஷனாகவும் தம்மை முன்வைக்க விட்ஸல் செய்யும் முயற்சிகளில் ஒன்றே விட்ஸலின் சென்னை விஜயம்.” இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா ? வந்தார், பேசினார், போனார். இதற்கு மேல் எதற்கு நாம் அவருக்கு குதர்க புத்தி என குறைசொல்ல வேண்டும்? அவருடைய முக்கிய intellectual constituency பல்கலை கழகங்களும், மொழியியல், சமஸ்கிருதம் சார்ந்த ஆய்வாளர்களும், மாணவர்களும், விட்சல் தன் constituency யில் அமோக வெற்றி கண்டுள்ளார்.
ஜிஞ்சர்
பிகு: பாகிஸ்தானிய DAWN இணைய தளத்தில் மைகேல் விட்சலை பற்றி தேடினால் , ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தமிழ்செல்வன் ”பாகிஸ்தானில் பிரசுரமாகும் “டான்” (DAWN) பத்திரிகையின் இணைய தளத்தில் தன்னை ஒரு “ஹிந்து-எதிரி” என்று கூறிக் கொண்டு தன “சேவைகளை” விளம்பரப் படுத்தியுள்ளார்……………” என்று எந்த அடிப்படையில் சொன்னார் என தெரியவில்லை.
இப்போது நான் யாரை நோக்கிப் பேசட்டும்? சரி, இருவருமே கேளுங்கள்.
முதலில் தமிழ்ச்செல்வன் என்ற பெயரை இங்கு பார்த்தது, கோவில் பட்டி செஞ்சட்டை வீரர் இங்கு எப்படி வந்து சேர்ந்தார் என்று தான் எனக்கு யோசிக்கத் தோன்றியது. ஆனால் இந்த தமிழ்ச் செல்வன், கோவில் பட்டிக்காரருக்கு நேர் எதிரான ஆளாக இருந்தார். இப்படி இரண்டு தமிழ்ச் செல்வர்கள் இருந்தால் நாடு உருப்படுமா? ஆகையினால் தான், தமிழ்ஹிந்து தமிழ்ச் செல்வன் இதைத் தன் புனை பெயராகக் கொண்டிருந்தால் கோவில் பட்டிச் செஞ்சட்டை வீரரோடு ஆள் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க தன் புனை பெயரை மாற்றிக்கொள்ளலாமே என்று தோன்றிற்று. ஆனால் பெற்றோர் இட்ட பெயராக இருந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்போதும் கூட் ஒரு புனை பெயரை, வேறு யாரும் பதிவு செய்யாத பெயராகப் பார்த்து, (ஒரு ஸ்பானிஷ் பெயராகவோ இதாலியன் பெயராகவோ இருந்தால் நலம். அது தான் தமிழ் நாட்டில் இப்போது எல்லோரையும் கிறங்க வைக்கும் பெயர். அதிலும் ஒரு ஆபத்து. சாரு நிவெதிதா, ‘இதைப் படித்திருக்கிறாயா, அதைப் படித்திருக்கிறாயா? என்று கேட்கும் பட்டியலில் தமிழ்ச் செல்வன் புனைந்து கொள்ளும் இதாலியன் பெயரையும் சேர்த்துக் கொள்வார். எதற்கும் ஒரு நல்ல நேரம் பார்த்து பெயர் புதிதாக வைத்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் இது யார், கோவில் பட்டியிலிருந்து அவ்வப்போது சாமியாடுவாரே அவரா என்று குழ்ப்பம் ஏற்படும்.
சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். 1961-ல் எழுத்து பத்திரிகையில் நான் எழுதி வந்தபோது, வந்த கடிதங்கள் இரண்டு வகைப்பட்டன. ஒரு வகை, “ மூத்த தமிழ் எழுத்தாளரான், தமிழ் இலக்கிய பிதாமகரான, வெ. சாமிநாதன் அவர்களுக்கு:” என்றெல்லாம் விளித்து “நமஸ்காரம்” பண்ணி வரும் கடிதங்கள். இன்னொரு வகை, “என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு. வயசான காலத்திலே.? ப்ளேட்டோவின் அரசியல், சாக்ரடீஸ், ரூஸோ என்றெல்லாம் நிறைய நன்னா எழுதிண்டு இருந்தாரே. இப்போ என்னடானா….இப்படி முன்னாலே எழுதினதுக்கு சம்பந்தமே இல்லாமே…….” என்று. வெ.சாமிநாத சர்மா, செல்லப்பா(எழுத்து பத்திரிகை நடத்தி வந்தவர்)விட்ம் போய், “ முதல்லே அந்த சாமிநாதனை பேரை மாத்திக்க சொல்லுங்கோ செல்ல்ப்பா. எல்லாரும் எங்கிட்டே வந்து என்ன ஆயிடுத்து உங்களுக்குன்னு கேட்க ஆரம்பிச்சுட்டா” என்று புகார் செய்தாராம்.
இரண்டு நேர் எதிர் குணமுள்ள எழுத்துக்கள் ஒரே காலத்தில் ஒரே பெயரில் வந்தால் சங்கடம் தானே ஸ்வாமி? நல்ல எண்ணத்திலே தான் சொன்னேன்.
இந்தாளு மைக்கேல் விட்சல் நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் ஸ்டைலில் விவாதம் செய்யலாம். திரு. இஞ்சி அவர்கள் மைக்கேல் பற்றி ரொம்ப நல்ல கருத்து வைத்திருக்கார் என்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால், என் பார்வையில் இந்தாளு போகும் இடமெல்லாம் பிரச்சனைதான். அமெரிக்காவில் கொஞ்ச வருஷம் முந்தி பாடபுத்தகங்களில் பல அபத்தங்கள் இருந்ததை இந்து வரலாற்று அறிஞர்கள் எதிர்த்தபோது அதை திருத்தக்கூடாது என்று முண்டாசு கட்டி முன்னாடி வந்தார் இந்த மைக்கேல் மதனகாமராசன் ஐயா. செத்துப்போன ஆரிய படையெடுப்பை அமெரிக்க புத்தகங்களில் இருந்து எடுக்கக் கூடாது என்று எதிர்த்தவர் இவர். சூத்திரர்கள் மற்ற சாதி மக்களுக்கு அடிமை புரிந்தார்கள் என்றெல்லாம் எழுதச்சொன்னவர் இவர். இந்து மதம் என்பதையே பிராமணீயம் என்று எழுதவேண்டும் என்று வாதம் செய்தவர் இவர். இவர் இந்துமதத்திற்கு கேடு. இவரை உள்ளே விடாமல் இருப்பதே சமஸ்கிருத கல்லூரிக்கு நல்லது.
நன்றி
“எழுத்தறிவற்ற சிந்து பண்பாடு” எனும் தேற்றத்தை வைத்ததாலேயே அவர் இந்திய அல்லது இந்து எதிரி ஆகிவிடமாட்டார். என்னைப் பொறுத்தவரையில் அவர் இந்து அல்லது இந்திய எதிரி என்பதாலேயே அவர் கூறிய கருதுகோளை மறுக்க வேண்டும் என்பதும் அல்ல. ஆனால் அவர் தமது கருதுகோளை எதிர்ப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் பிரச்சனையே. ஸயின்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவை சாமர்த்தியமாக ஏமாற்றி இந்திய குழுவினர் தங்கள் ஆராய்ச்சியை பிரசுரித்துவிட்டார்கள் என்று சொல்வதுதான் பிரச்சனை. பிபிலால் குறித்தும் ஜிம் ஷாஃப்பர் குறித்தும் அவர் பயன்படுத்தும் மொழி நிச்சயமாக அகாடமிக் இல்லை. சமஸ்கிருதம் சார்ந்த துறையில் அவர் அமோக வெற்றி கண்டுள்ளார் என்று சொல்வது தவறானது. விட்ஸலின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை குறைத்துப் பார்க்காமலே அவரது முக்கிய ஒரிஜினல் பங்களிப்புகள் துறை நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.
Dear Thamizhselvan, Excellent reporting. I am really shocked to know that persons like Iravatham Mahadevan have gone this far to promote persons like Mickel Witzel to secure a ‘elite’ stamp for their dubious scholarship. No other country in the world will allow such persons with explicit anti majority stance to address meetings at prestigeous institutions. Eventhough if the persons behind organising these meetings have tried to tarnish the image of our Civilisation and great heritage, we should try to expose their ulterior motives and try hard for implementing a syllabus that will reflect the true picture of our Bharathvarsha in our schools and colleges.
I agree with Ginger partially.Whether Michael Witzel is a Sanskrit scholar or not need not be debated here now. But as Aravindan has pointed out his reaction to the criticism of his writings does not put him in any bright light. I remember his essays which appeared in The Hindu(open page) in which he put forth certain arguments about Aryans and their period in history. When his views were disputed by N.S.Rajaram and David Frawly he did not counter them pointwise but ridiculed their qualification to engage in the debate,further calling them “hindutva” vadis.Actually although he is only a Sanskrit professor he tries to project himself as a hitorian and a philologist.
I feel that he was set up by certain elements in India to take on the so called “Hindutva” elements. Readers can guess who was behind this
கடந்த நான்கு நாட்களாக கணினி செயலிழந்து போனதால் யாருக்கும் பதிலளிக்க முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
கட்டுரையைப் பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் ஆலோசனை சொன்னதைப் போல இதை விரைவில் ஆங்கிலத்திலும் எழுதப் போகிறேன்.
வெசா அய்யா! தாங்கள் குறிப்பிட்டுள்ள இடது சாரித் தமிழ்ச்செல்வனை நானும் கேள்விப் பட்டதுண்டு. நான் வேறு. நான் “தமிழ் இந்து” தமிழ்செல்வன்! :-)) இது எனக்குப் பிடித்த பெயர் ஆதலால் மாற்றும் உத்தேசம் இல்லை. :-))
அன்புள்ள ஜிஞ்ஜர்! மைகேல் விட்சலைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் நானாக புதியதாக ஏற்பாடு செய்தவையல்ல. நம் நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் பலருடன் அவர் செய்து வரும் வாதங்களைக் கவனித்து வருகிறேன். சில அறிஞர்களுடன் எனக்கு பழக்கமும் இருக்கிறது. அவர்கள் வலை தளங்களில் எழுதியதிலிருந்தும், என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிய விஷயங்களிலிருந்தும், அவர்கள் அனுமதியுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். மேலும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் வெளியே அன்று கொடுக்கப் பட்ட நோடீசுகளிலும் இதே போன்று பல தகவல்கள் உள்ளன.
கலிபோர்னியா பாட நூல் வழக்கில் அவர் நடந்து கொண்ட விதம் இந்தியாவின் பகைவன் என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியுள்ளது. வெகு சமீபத்தில் அவர் “Culture and Society” -யில் எழுதியுள்ள “The Hindutva View of History – Rewriting Textbooks in India and the United States” என்ற கட்டுரையில் கக்கியுள்ள விஷத்தைப் பாருங்கள். இது வரை அவர் எழுதியுள்ள புத்தகங்களில் எத்தனை புத்தகங்கள் வரவேற்பு பெற்றுள்ளன? எத்தனை பேர் படிக்கிறார்கள்? மேலும் அரவிந்தன் சொன்னது போல அவரது முக்கிய ஒரிஜினல் பங்களிப்புகள் துறை நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை
இவரைப் போன்றவர்களின் பின்னேயுள்ள கிறிஸ்துவ சதியை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் மாக்ஸ் முல்லரையும், மெகாலேவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் கட்டுரைக்கு “மாக்ஸ் முல்லர் வழியில் மைகேல் விட்சல் படையெடுப்பு” என்று தான் தலைப்பு கொடுத்திருந்தேன். அதை ஆசிரியர் குழு மாற்றியமைத்திருக்கிறது.
//அறிவு உலகில் மகாதேவன் போன்றவர்களையே விட்சல் இந்தியர் என்ற காரணத்தால் நம்பத்தகுந்தவர் இல்லை என்று சொன்னார் என்றால், ஏன் மகாதேவன் புத்தகத்தை ஹார்வார்டில் பிரசுரிப்பதற்கு அழைப்பு விட வேண்டும், ஏன் மகாதேவன் விட்சலை புகழ வேண்டும்.. It does not add up. //
It actually adds up! விட்சல் மகாதேவன் புத்தகத்தை ஹார்வார்டில் பிரசுரிப்பதற்கு அழைப்பு விட்டதையும், மகாதேவன் இங்கே செய்த ஏற்பாடுகளையும் கவனியுங்கள்!
ஹரன் பிரசன்னா அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் தான் விளக்க வேண்டும். மேலும் சென்னைப் பல்கலையில் அவர் பேசியதாக ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்புடன் வந்த வடிவத்தை ஆசிரியர் குழு இங்கே பிரசுரித்துள்ளது. நான் நேரில் சென்று கேட்டதை என் நினைவில் நின்ற படி எழுதியதை பிரசுரிக்கவில்லை.
அதை இங்கே இடுகிறேன்:
“ஐராவதம் மகாதேவன் அவர்கள் பேசும்போது சம்ஸ்க்ருதத்தில் ‘குரு பகவான் வாழ்த்து’ சொல்லி, “வேத ஆராய்ச்சியில் குறிப்பாக ரிக் வேதத்தில் சிறந்த வல்லுனரான மைகேல் விட்சல் அவர்களை ஆறு வருடங்கள் முன்னர் ஹார்வார்ட் பல்கலையில் என் நூல் ஒன்றின் பதிப்பிற்காக நான் சந்தித்தேன். அச்சமயத்தில் என்னை வரவேற்று, பலகலை மற்றும் நூலகம் ஆகிய இடங்களை நல்ல முறையில் சுற்றிக் காண்பித்தார் மைகேல். இவரைப் பற்றியும் இவருடைய ஆராய்ச்சிகள் பற்றியும் சில தவறான புரிதல்கள் இருக்கின்றன. இரண்டு தினங்கள் முன்னால் சம்ஸ்க்ருத கல்லூரியில் இவர் பேசவிருந்த நிகழ்ச்சியைத் தடைசெய்யவும், ரகளையில் ஈடுபடவும் சில “தவறாக நடத்தப்பட்ட” நபர்கள் முயற்சி செய்தனர். அவர்கள் முயற்சியைத் தடுப்பதற்காக நாங்கள் காவல் துறைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தோம். இருந்தும் அவர்கள் இவரைப் பற்றிய விமரிசனங்கள் அடங்கிய நோட்டீஸ்களை கல்லூரிக்கு வெளியில் வந்து போன மக்களிடம் அமைதியான முறையில் கொடுத்து விட்டு தங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டுச் சென்றனர். அவர்கள் நம் இந்தியப் பண்பாட்டிற்கு எதிரான முறையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும். ‘அதிதி தேவோ பவ’ என்ற பழமொழியின் படி, நம் நாட்டிற்கு வந்தவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவதே நம் இந்தியப் பண்பாடு. அப்பிப்பிராய பேதங்கள் இருக்கலாம். அதற்காக விருந்தினர்களை அவமதிக்கக் கூடாது. எனக்குக் கூட மைகேல் விட்சல் அவர்களிடம் பல அபிப்பிராய பேதங்கள் உண்டு. அதற்காக அவர் நம் நாட்டிற்கு வந்துள்ளபோது அவரை துப்பாக்கியால் சுடவா முடியும்? பலதரப் பட்ட சகிப்புத்தன்மை கொண்ட கலாசாரம் நம் கலாசாரம். ‘ஏகம் சத் பஹுதா வதந்தி’ என்கிற கொள்கையிலே நம்பிக்கை உடையவர்கள் நாம். மேற்கத்திய நாடுகளில் சர்ச்சுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் சண்டை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நம் நாட்டில், புத்தர், சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோர் நமக்கு வழி காண்பித்துள்ளனர். அவர்கள் வழியில் நடக்காமல் அன்றைய தினம் மைகேல் விட்சலுக்கு எத்ரிப்பு காண்பித்தவர்கள் நம் சமூகத்தில் ஒரு சிறிய அங்கமே ஆவார்கள்” என்று சொல்லி சம்ஸ்க்ருதத்தில்ஒரு சாந்தி ஸ்லோகம் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார்.
அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் என்றும், தனக்கும் மைகேலுக்கும் கூட பல அபிப்பிராய பேதங்கள் உண்டு என்றும் சொன்னவர், எதற்காக மைகேலை சென்னைக்கு வரவழைத்துள்ளார், யார் அல்லது எந்த நிறுவனம் சொல்லி இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன, என்பதைப் பற்றி மட்டும் ஏனோ வாய்திறக்காமல் இருந்து விட்டார்”.
பல்கலையில் பேசியவர்களின் பேச்சுகள் டேப் செய்யப் பட்டன. அதிகாரப் பூர்வமாக வெளியிடப் பட்ட பேச்சில் ஏன் ஐராவதம் சொன்ன சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இடம்பெறவில்லை? மேலும் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் தடை பெற முயன்றவர்களை “demonstrators” , “misguided elements” , “fanatic elements”, “lunatic fringe of our society” என்றெல்லாம் அவர் சொன்னதை ஏன் வெளியிடவில்லை?
டேப் செய்யப் பட்ட ஒலி நாடாக்களை சிலர் கேட்டபோது “டேப் செய்யப் படவில்லை” என்று ஸம்ஸ்க்ருதத் துறை சார்பில் சொல்லப் படுகிறது. ஆனால் மகாதேவனின் அதிகாரப் பூர்வப் பேச்சு அந்த டேப்பிலிருந்து தான் எடுத்து வழங்கப் பட்டிருக்கிறது. எதற்காக இந்த ஒளிவு மறைவு? ஒரு சான்றோர், அறிஞர், என்று போற்றப் படுபவர் எதற்காக தான் பேசிய ஒரு ஐந்து நிமிடப் பேச்சைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டும்? கருத்தரங்கம் முடிந்து அடுத்த நாள் எதற்காகத் தேவையில்லாமல் ஒரு “official version” ஐக் கொண்டு வரவேண்டும்?
மேலும் கட்டுரையில் நான் சுட்டிக் காண்பித்துள்ள “விடைதெரியா கேள்விகள்” – க்கு விடை கண்டுபிடிக்க உதவுங்கள் ஜிஞ்ஜர். நன்றியுள்ளவனாயிருப்பேன்.
அன்புடன்
தமிழ்செல்வன்.
பி.கு: இன்னும் தமிழ் இந்துவின் கேள்விகளுக்கு மைகேல் விட்சல் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.
Please also read the article in Vijayvaani:
https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=715
ALL HINDU SHOULD KNOWS THIS. IT IS PETTY OUR OWN PEOPLE DO THIS TYPE OF WORK
I regurlarly read your articles sh.tamizhselvan. Since I am not able to type the message in tamizh, i am typing out this in english. sorry for that. A well presented and articulative write up. hats off. Scholar in Sh.witzel is yet to be known to the world. May be known to his friends like “Sh.Iravatham.Mahadevan”. The scholarship of people like “Sh.Iravatham.Mahadevan and Sh.Veezhinathan” are but known to tamizh people. To that extent they are known for their scholarship they are also known for their connections. To the question as to who has arranged the meeting, you have already partly answered. If, The (“anti”) Hindu fame N.Ram could be the connecting link between Sh.Mahadevan and Sh.Witzel, what one should hope about the outcome of the so called scholarly exercise. A payasyam made of bitterguard and chilly can not be sweet. “poovudan sernda naarum mankkum”. “Anaal sila samayam naarudan sernda poo naarippogum”. This exercise is the best example.