ஆம். ’ஜீவிக்கிறார்’ என கொக்ககோலா போல சந்தை பிரச்சாரம் செய்யப்படாமலே இந்த மண்ணின் தெய்வங்கள் உண்மையிலேயே ஜீவிக்கும் தெய்வங்கள். … விடுதலைக்கு பின்னான ஏறக்குறைய எழுபதாண்டு வரலாற்றில் மிகப் பெரிய சோகங்களிலெல்லாம் ஆறுதல் அளித்து பாரபட்சம் ஏதுமின்றி மானுட உயிர் காப்பாற்றும் பணியை செய்து வந்துள்ள ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களின் இந்த பணி அனுபவங்கள் அதிலிருந்து அவர்கள் பெற்ற அனுபவ படிப்பினைகள் ஆகியவை தேசிய பேரிடர் களையும் அமைப்புகளால் எந்த அளவு ஆராயப்பட்டுள்ளன? பயன்படுத்தப்பட்டுள்ளன?
View More மீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்Author: அரவிந்தன் நீலகண்டன்
குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா
உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் …
View More குஜராத்தின் இந்துத்துவ மகாராஜாகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்
எந்த அளவுக்கு நம் ஊடகங்கள், இயக்கவாதிகள், வெளிநாட்டு சக்திகள், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் ஒருவரோடொருவர் பின்னி பிணைந்து இந்துக்களுக்கும் இந்திய தேச நலனுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம் சஞ்சீவ் பட். மோடி எத்தகைய சூழலில் செயல்பட்டு வருகிறார் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியம் ஏற்படுகிறது. … இவருக்கு எதிராக தேசநலனை குறித்து கவலைப்படாத நம் விலை போன ஊடகங்கள், சுயநல அரசியல்வியாதிகள், மதவெறி பிடித்த அன்னிய சக்திகள் அவற்றின் உள்ளூர் தரகர்கள்… இவர்கள் வகுக்கும் வியூகங்கள்…
View More கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்மோடியின் வெற்றி
மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன.
View More மோடியின் வெற்றிஅவதூறுகளை எதிர்கொள்வது-2
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீதான இந்த அவதூறு ‘ஆராய்ச்சி’ நூல் வெளிவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் அதை தடை செய்வது குறித்த பேச்சு கூட எழுந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது. உட்துறை அமைச்சராக விளங்கிய லால் கிருஷ்ண அத்வானி இந்த நூலை தடை செய்ய முடியாது என கூறிவிட்டார். ஆக, இந்து ’வலதுசாரிகள்’ என முற்போக்குகளால் கரித்து கொட்டப்படுவோர் கூட ஹிந்து ஞான மரபின் ஒரு மகத்தான ஞானிக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறை ஜனநாயக ரீதியில் சந்திக்கவே முடிவு செய்தனர்….. ஒரு நவீன ஹிந்து அமைப்பு தனக்கு எதிராக மிக மோசமாக மிக விரிவாக மிக பெரிய நிறுவன பலத்துடன் சுமத்தப்படும் அவதூறுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான சரியான ஆதர்ச எதிர்வினையாக அது அமைந்தது.
View More அவதூறுகளை எதிர்கொள்வது-2அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து
அவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் …
View More அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்துநன்றி! சன் டிவி வீரபாண்டியன்…
ஆக வீரபாண்டியனின் மன பிறழ்ச்சி வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த பிறழ்ச்சி வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் – மரியாதையான தோற்றங்களில்.
View More நன்றி! சன் டிவி வீரபாண்டியன்…மோடி எனும் அபாயம்
எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்றே கூறப்படுகிறது.
View More மோடி எனும் அபாயம்புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2
கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்…. தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார்… இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது….
View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1
இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது… பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது… சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது….
View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1