எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்… புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்… மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்….
View More ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணிAuthor: பேரா. என்.சுப்பிரமணியம்
இராமாயணத்தின் மூன்று தளங்கள்
ஜீவநதியின் பரமானந்தம் நோக்கிய நகர்வின் அழகிய சித்திரங்களே உலகின் உன்னதப் படைப்புகளில் ஒளிரும். இராமாயணம் ஒரு மகோன்னதப் படைப்பு… இராம வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் சீதா நலத்துக்கு அசோகவனம் நிச்சயம் உண்டு. இராவண அழிவிற்கும் ஸ்ரீராம ஜெயத்துக்கும அசோகவனத் திண்மை மிக முக்கியம்… உள்ளிருக்கும் தெய்வீகத்தை வாழ்க்கைப் பெருவெளியில் பிரகாசிக்கும் வண்ணம் வாழும் இலட்சிய வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணம் இராமசரிதம்…
View More இராமாயணத்தின் மூன்று தளங்கள்ஆண்டாள் மீது வக்கிர அவதூறு
ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப் பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை… உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப் படைப்புகள் தந்த பெண்ணை அவமானப் படுத்துவது தமிழினத்தை அவமானப் படுத்துவது ஆகும்.. இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா? அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம்… மாணவர் நலனும், பல்கலைக் கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கு பலியாகி விடக் கூடாது…
View More ஆண்டாள் மீது வக்கிர அவதூறுபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை
துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..
View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வைபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்
சத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது… ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.
View More பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்