சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம். மிக அற்புதமான தர்க்க வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம். எல்லாம் மறந்து போகிறது. வேறு சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம். அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன. நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன. நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது. ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல், வாங்கல் பொதிந்துள்ளது. ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான். ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்.
View More எழுமின் விழிமின் – 29Author: ஆசிரியர் குழு
வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!
குஜராத் மாபெரும் தலைவருக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி மாலை சூட்டியிருக்கிறது. நாளைய இந்தியா 2014-ல் தில்லியில் அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது…. நரேந்திர மோடியைப் போன்றதொரு தலைவர் நமக்கு அடிக்கடி வாய்ப்பதில்லை. ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில், அதன் கொந்தளிப்புகளின் ஊடாக, மக்களின் கனவுகளையும் அபேட்சைகளையும் சுமந்து, தங்கள் சுய உழைப்பாலும் தியாகத்தாலும் இலட்சியவாதத்தாலும் மேலேறி வருகிறார்கள் அவர்கள். அந்தத் தருணத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றுகிறார்கள். கனவுகளை விதைத்து, அவற்றை மெய்ப்படச் செய்கிறார்கள்…
View More வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!எழுமின் விழிமின் – 28
‘மகத்தான பணி ஒன்றைச் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்தும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பிவிடும்… பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனதுடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப்படாமல் இருக்க நாம் எப்போது தான் கற்றுக் கொள்வோமோ?….
View More எழுமின் விழிமின் – 28அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்
நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம்…
View More அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்பால் தாக்கரே – அஞ்சலி
சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17-நவம்பர் அன்று மரணமடைந்தார் காஷ்மீரம் முதல்…
View More பால் தாக்கரே – அஞ்சலிஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்
இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. … நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது. இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர்… 2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?…
View More இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்எழுமின் விழிமின் – 27
ஏதோ சில மதங்களுக்கு நான் விரோதி என்பது உண்மையல்ல. பாரதத்திலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு நான் எதிரி என்பதும் பொய் தான். ஆனால், அமெரிக்காவில் அவர்கள் பணம் திரட்டுவதற்காகக் கையாளும் முறைகளை நான் எதிர்த்து ஆட்சேபிக்கிறேன். ஹிந்துத் தாயானவள் தனது குழந்தைகளை கங்கையில் எறிவதாக ஒரு படம் சித்தரிக்கப்பட்டு, குழந்தைகளின் பள்ளிப் பாடப் புத்தகத்திலே வெளியாகி உள்ளது. இதன் அர்த்தம் என்ன?…. அரேபிய நாட்டு தேவதூதர் நிறுவிய மதத்தைப் போல, இந்தக் கொள்கைகளை தீவிரமாக இறுகக் கடைப்பிடித்து வருகிற மதம் உலகில் வேறெதுவும் இல்லை. இவ்வளவு ஏராளமாக ரத்தத்தைச் சிந்தி பிறரைக் கொடூரமாக நடத்திய மதம் வேறெதுவும் இல்லை….
View More எழுமின் விழிமின் – 27தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை
கலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது…. ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்… இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்…
View More தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறைஎழுமின் விழிமின் – 26
இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டே இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்… பாரதத்தின் மேல் வகுப்பு மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம் போல் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர்கள் வெறுத்து ஒதுக்கினார்களே, அப்படிப்பட்ட மக்களிடையேதான்…
View More எழுமின் விழிமின் – 26சக்தி வாழ்க! – மகாகவி பாரதி
குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்… உள்ளம் தெளிந்திருக்க, உயிர் வேகமும் சூடும் உடையதாக, உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க, மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம்.
View More சக்தி வாழ்க! – மகாகவி பாரதி