எழுமின் விழிமின் – 36

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும்.  வீரன் தான் முக்தியை எளிதில் எட்டிப் பிடித்து எய்த முடியும்; கோழை அல்ல.  வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள்.  மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது.  ‘மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்’ என்பது உண்மை தான்; சந்தேகமில்லை.  இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும்.

மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் க்டக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள்.

‘அச்சமற்றிரு’ என்று வேதாந்தக் கொள்கை முரசடித்து உணர்த்துகிறது பாருங்கள்! கம்பீரமான அவ்வொலி உலகில் வாழ்கிற எல்லா மக்களுடைய உள்ளங்களிலுமுள்ள முடிச்சுச் செடுக்குகளை அவிழ்த்து விடட்டும்!

‘உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத’ – “எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நில்லாதே” என்று ஒவ்வொரு ஆத்மாவையும் அறைகூவி அழைப்போம்.

View More எழுமின் விழிமின் – 36

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது…. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. இந்தியா அதைக் கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இப்படி ஒரு திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது….

View More இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

எழுமின் விழிமின் – 35

…..பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது.

கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி நினைக்க வேண்டும். யாரிடமிருந்தாவது பரிசாக எதையாவது பெறவேண்டுமென்ற எண்ணம் எழுந்தால் அதற்கு எதிப்பான எண்ணத்தால் எண்ணத்தை மாற்றிவிட வேண்டும்.

…..மிக ஆழ்ந்த மௌனமாக இருக்கும்போது, தனிமை நிலையில் மூழ்கி இருக்கும்போது அந்த நேரத்தில் தீவிரமான நடவடிக்கையைக் கண்டுபிடித்துச் செய்யக்கூடியவன் லட்சிய மனிதனாவான். அவன் மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கிடையே பாலைவனத்திலுள்ளது போன்ற அமைதியையும் தனிமையையும் அனுபவிப்பான்.

View More எழுமின் விழிமின் – 35

எழுமின் விழிமின் – 34

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்…. உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும்,  நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும்.  நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது…. நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம்.  உதவியானது வெளியிலிருந்து வராது.  நமக்குள்ளிருந்தே தான் வரும்.

View More எழுமின் விழிமின் – 34

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின்…

View More ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் .. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்.. இழந்தவை…

View More ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

எழுமின் விழிமின் – 33

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை…. பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்…..

View More எழுமின் விழிமின் – 33

மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று…

View More மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

கும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு சிறப்பு விழா. பிப்ரவரி 3ம்…

View More கும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்

எழுமின் விழிமின் – 32

நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில், பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறி பிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது”….

View More எழுமின் விழிமின் – 32