பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1” என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள்.…
View More நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!Author: ஆசிரியர் குழு
வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி
நேற்று (செப்டம்பர் 19) டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார் காவல் துறை அதிகாரி மோகன் சந்த் ஷர்மா. இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்…. நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை…தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் தன்னை பலிதானமாக்கிய இந்த வீரத்திருமகனுக்கு அஞ்சலி செய்கிறது.
View More வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலிஇன்று மகாகவி பாரதி நினைவு தினம்!
தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.
அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.
ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.
View More இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி
பிகாரில் திசை திரும்பி கட்டுக்கடங்காமல் ஓடிய கோசி நதி, பல உயிர்களையும் உடைமைகளையும் மூழ்கடித்து அனைவரையும் வருத்தமடையச் செய்த அதே வேளையில் மத வேற்றுமைகளையும் மூழ்கடித்தது சற்று ஆறுதலான விஷயம். வெள்ள நிவாரண முகாம்களில் மத வேறுபாடு இன்றி எல்லா மதத்தினரும் ஒருவருக்கொருவர் உதவுவது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. சேவா பாரதி அமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாமில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரு வாரமாக தங்கி உள்ளனர். “எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர். நிவாரண முகாமில் இதைவிட வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியாது” என்று முகமது சலாலுதீன் கூறினார்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவிஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா
[உ.வே.சாவின் கட்டுரை, படங்களுடன்] “குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.”
View More ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சாதாய்ச் சமயம் திரும்பும் திருவிழா
தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
View More தாய்ச் சமயம் திரும்பும் திருவிழாமதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமிட்டு தெருவில் அழைத்துச் செல்லும் பர்தா அணிந்த முஸ்லிம் தாய்மார்கள்… ராதை-கண்ணனின் தெய்வீக அன்பையும், கீதைக் கண்ணனின் தெய்வீக உபதேசத்தையும் சித்திரங்களாகத் தீட்டும் ஓவியர் முகமது ஷகீல்..
View More மதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி
ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்…. கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்… மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள் அனைவரது ஆன்மாக்களும் நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறது தமிழ்இந்து.காம்.
View More சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலிஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2
வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. வேதங்களுக்கு மூலப் பொருளான அந்த பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன…..விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.
View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்! ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சுவாமி விவேகானந்தரின் அழகிய உரையை மகிழ்வுடன் அளிக்கிறோம். “அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தைக் குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதாரபுருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீகிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது … ‘நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்’ என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்?”
View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1