கானக மண்ணிலேயே இயல்பாக உருவான காந்தாரா படத்தின் தொன்மம் போல அல்லாமல், அயோத்திதாசரின் கட்டற்ற கற்பனையில் எழுந்த இனவாத கட்டுமானம் கொண்ட டுமீல் புராணங்களிலிருந்து பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளது தங்கலானின் தொன்மம்.. இந்தப் படத்தின் அரசியல் வெறுப்பு ரீதியானது, இது முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல் பொய்யானது. அதற்கு சான்றாக, மதுரைப்பிள்ளை, சுவாமி சகஜானந்தர், எம்.சி.ராஜா, ஜி.எஸ்.லட்சுமண ஐயர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இவர்களின் வரலாறுகளை எல்லாம் நாம் திரைப்படமாக்காத வரை…
View More தங்கலான்: திரைப்பார்வைCategory: சினிமா
எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?
தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட – இத்தனை பேரின் – வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு – நிலம் பறிபோன பின்னும் – பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில் – நீ இருந்ததில்லை.. ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி – நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள் – அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?…
View More எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?தங்கலான்
உள்ளடக்கம் சார்ந்துமே ரஞ்சித்தின் அரசியல் நெடி அடிக்கும் காட்சிகள் நீங்கலாக படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த அரசியல் என்பது மலினமானதாக இருப்பதாலும் அது படுசெயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் இந்தப் படம் சுமார் என்ற தளத்துக்கு இறங்கிவிடுகிறது. மேல்பூச்சான கலை இனிப்பு கரைந்த பின் கசப்பு அரசியல்தானே.
View More தங்கலான்வழிநெடுக காட்டுமல்லி: இசைஞானியின் மாயம்
ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா. இந்த வழி நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில், இன்னொரு முல்லை நிலப்பாடல்.. எண்பது வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா…
View More வழிநெடுக காட்டுமல்லி: இசைஞானியின் மாயம்மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்
இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் இந்தப் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார்.. பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம்… இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்…
View More மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வை
இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் – அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தை காட்டுகிறது.. ‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மீக சக்தி,அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியை போட்டு தன் மக்களை காக்கிறது.. இதை திரையில் சாத்தியப்படுத்திய விதத்தை பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத் தன்மையை உணர முடிகிறது. படத்தின் இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது…
View More காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வைபொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை
ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய குழப்பத்தைக் களமாக்கி, ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை சிந்தித்தது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது.. ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், இந்த மூன்று பாத்திரங்களைத் தவிர்த்து மற்றவைஅவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான்…
View More பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வைராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை
ஒரு சராசரி திரைப்பட ரசிகரை மட்டுமல்லாது, இஸ்ரோவையும், விண்வெளித்துறையையும் பற்றிய பல செய்திகளை அறிந்து, நம்பி நாராயணன் எழுதிய Ready to Fire புத்தகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களையும் கூட “வாவ்” சொல்ல வைத்திருப்பது இந்தப் படத்தின் ஆகப்பெரிய வெற்றி. முயன்றால் இந்திய சினிமா தனது கைக்கு அடக்கமான பட்ஜெட்டிலும் எத்தகைய வீச்சை, உயரத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்திருக்கிறது. ‘ராக்கெட்ரி’ ஒவ்வொரு இந்திய இளைஞரும் பார்த்து உள்வாங்க வேண்டிய ஒரு திரைப்படம்…
View More ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வைதி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மை
பொய்யை ஏற்றுக்கொள்ள பயம் போதுமானது. உண்மையை ஏற்றுக்கொள்ள தைரியம் வேண்டும்.. புஷ்கர்நாத் இத்தனை நாளாக அவனிடம் அவன் பெற்றோரும் அண்ணனும் சாலை விபத்தில் இறந்ததாக சொல்லி மறைத்து வந்திருக்கிறார். உண்மையை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அவர் மனம் பிறழ்கிறது . சில நாட்களில இறக்கிறார். அவர் அஸ்தியை அவர் விருப்படி கரைக்க அவரின் பூர்விக வீட்டுக்கே செல்ல தயாராகிறான். எந்த வீட்டில் அவன் தந்தை சுட்டுகொல்லப் பட்டாரோ அதே வீடு… இந்த சினிமா வசனங்கள் மானமுள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்..
View More தி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மைகாஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்
பாரத தேசத்தில் ஒரு புயலை உருவாக்கிய படம் காஷ்மீர் பைல். படத்தின் மூலக்…
View More காஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்