நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதற்காக வாதாடும் அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா? ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்புக்கள் உள்ளன… ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன? தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?….
View More பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்Category: புத்தகம்
தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்
எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது…. இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச – சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு என கல்வியின் அடிப்படைகளாக சிலவற்றை முன்வைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் இவர்கள் முன் வைக்கும் சிந்தனைகளுக்கு எதிர் திசையில் ராட்சச வேகத்துடன் நகர்ந்துவருகிறது… எண் சாண் உடம்புக்கு சிரசுதானே பிரதானம். தமிழகக் கல்வி நல்ல நிலையை அடையவேண்டுமென்றால், இந்தச் சொற்பச் சிறுபான்மையினர் தமிழ்க் கல்வியின் சிரசாக வேண்டும்…
View More தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..
மாதொரு பாகன் நாவல் புத்தக எரிப்புக்கு கடும் கண்டனங்கள். எந்தப் புத்தகத்தையும் எரிப்பதோ, தடை செய்யக் கோருவதோ ஜனநாயக விரோதமான வழிமுறைகள்… தனிப்பட்ட அளவில், அந்த நாவலில் இந்து மத விரோதமாகவோ அவதூறாகவோ எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. ஆனால் சாதாரண திருச்செங்கோட்டுக் காரர்கள், அந்தக் கோயில் மீதும் தங்கள் சாதி சனங்களின் மரபுகளின் மீதும் தீவிர பிடிப்புள்ள சராசரியான மக்கள், இந்த நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தால், இத்தகைய கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் சமூகத்தையும் கலாசாரத்தையும் நாவல் அவதூறு செய்கிறது, அசிங்கப் படுத்துகிறது என்று தான் கருதுவார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… சராசரிகளின் முதிர்ச்சியின்மை அறியாமையால் வருவது. ஆனால், அறிவுக் கயவர்களின் திரிபுவாதம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டு பரப்பப் படுவது…
View More மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…
மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை… நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற புரிதலை இந்த வரலாற்றுப் பார்வைதான் உருவாக்க முடியும். நாவலில் இந்த நோக்குடன்தான் வரலாற்று உண்மைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன…
View More விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை
“அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்”… தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை…இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநாய்கள், மருந்துகள், மனதினைப் படிக்கும் கருவிகளைக் குறித்த தகவல்களும், வான மண்டலம் குறித்த தகவல்களும், நிறைந்திருந்தாலும், அதை நமக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் நிச்சயம் வென்றிருக்கிறார்…
View More “7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வைஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1
75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…
View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1வான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..
பல நல்ல மகாபாரத மறு ஆக்கங்கள் உண்டு; அவை ஒற்றைப் படையான குரல்களுடன், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நியாயங்களையும் தார்மீகங்களையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. பாரத காவியத்தின் பிரம்மாண்டத்தை அதன் முழுமையான நோக்கில் மீள் உரைக்க முற்படுவது என்பது வியாசன் சென்றடைந்திருக்கும் அதே உயரங்களுக்குத் தாவும் முயற்சி தான். வானோக்கித் துதிக்கை நீட்டிப் பறக்க எத்தனிக்கும் யானையின் முயற்சி. வெண்முரசு நாவலில் நெடுக அதைக் காண்கிறோம்… மூன்று விதங்களில் இந்த நாவலை வாசிக்கலாம். ஒரு நல்ல, சமநிலை கொண்ட வாசிப்பு என்பது இந்த மூன்று அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, அதே சமயம் அவற்றின் எல்லைகளையும் உணர்ந்ததாக இருக்கும்…. தீவிர படைப்பூக்கம் கொண்ட ஒரு கலைஞனின் அகம் என்பது தொடர்ந்து பிரவாகித்துக் கொண்டிருக்கும் நீரோட்டம் போல. அந்த பிரவாகத்தின் இயல்புகள் அதன் ஒவ்வொரு அலை மடிப்பிலும் தெரியவராவிட்டால் தான் ஆச்சரியம்…
View More வான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்
மோடியை நீங்கள் சந்திக்கச் சென்றீர்களானால் அவர் கவனம் முழுவதும் உங்களிடம் மட்டுமே தான் இருக்கும். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித இடையூறுக்கும் ஆட்பட மாட்டார். மோடி, மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வார். மற்றவர்களை விட தான் தான் உயர்ந்தவன் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார். மோடியுடன் உரையாடுவது ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போன்றது…. எஸ்.பி.,சொக்கலிங்கம் எழுதியுள்ள இந்த நூல் 2002 குஜராத் கலவரத்தின் பின்னணி, அது தொடர்பான பல்வேறு விசாரணை கமிஷன்கள், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் நூல் விலாவாரியான செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் குஜராத்தில் மோடியின் தலைமையில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் மாநில அரசின் செயல் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று தீண்டியிப்பதால் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது…
View More நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்
மோதியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை சுருக்கமாக ஆனால் முழுமையாகத் தொட்டுச் செல்கிறது அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல். “டீக்கடைப் பையன்” முதல் “பிரதம மந்திரி மோடி?” வரை பதினாறு அத்தியாயங்களில் மோடியின் தொடக்க காலம், ஆர் எஸ் எஸ் பிரசாரக்கிலிருந்து குஜராத் முதல்வர் வரை அவர் படிப்படியாக வளர்ந்து வந்த அரசியல் வரலாறு, அவரது சாதனைகள், மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச் சாட்டுகள், அதற்கான எதிர்வினைகள் என்று கச்சிதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியையும் சேர்த்தே சொல்லிச் செல்வது இளம் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமான ஆதாரபூர்வமான தரவுகளை உள்ளடக்கி, அதே சமயம் எல்லா விதமான வாசகர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் உள்ளது இந்த நூல்..
View More நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்தஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்
இந்த நாவலின் காரணமாகத் தான் தஸ்லிமா நஸ்ரின் பங்களாதேஷில் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டு நாட்டை விட்டே ஓடும் படியானது. இன்று வரை என்னேரமும் ஜிகாதிகள் அவரைக் கொலை செய்யலாம் என்ற நிலையில் உயிருக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்… இந்த நாவலில் இஸ்லாமைக் குறித்து ஒன்றூமே இல்லை. காலங்காலமாக தங்களுடன் வாழ்ந்து வந்த இந்துக்களை எப்படி இஸ்லாமிய மதவெறியூட்டப் பட்ட பங்களாதேஷிகள் கொடூரமாகக் கொன்று அழித்தார்கள், இந்துப் பெண்களை குரூரரமாக வன்புணர்ந்தார்கள், சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டார்கள், விரட்டியடித்தார்கள், பங்களாதேஷ அரசு, காவல் துறை, அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் எப்படி இந்தப் பேரழிவை ஆதரித்து அங்கீகரித்தார்கள் – இதைத் தான் பக்கம் பக்கமாக இந்த நாவலில் ஏறக்குறைய செய்திப் பத்திரிகையில் உள்ளது போன்ற நடையில் அவர் எழுதியிருக்கிறார்.. இந்த நிகழ்வுகள் பங்களாதேசிகளை அவமானத்தில் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன என்பதே நாவலின் செய்தி…
View More தஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்